Tag Archives: Rajini

சொல்வனம் தளத்தின் மீது செம காண்டில் இருக்கிறேன்

சொல்வனம் பத்திரிகைக்கு என் கண்டனங்கள்!

தமிழரின் நாயகன், தமிழ் மக்களின் இதயத் துடிப்பான ரஜினியை புகைக்கு அடிமையானவர் போல் சித்தரித்து அதை அவர்களின் சிகரெட் கட்டுரைக்கு படமாகப் போட்டிருக்கிறார்கள்.

ரஜினி இப்பொழுதெல்லாம் பொதுவில் புகை பிடிப்பதே இல்லை. சினிமாவில் கூட எந்திரனாக நடிக்க ஆரம்பித்து விட்டதால் அவரிடம் இருந்து புகை வந்தால் அது மின் கோளாறினால் மட்டுமே.

நடிகனையும் கதாபாத்திரத்தையும் நாம் நிஜத்தோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. ராணி முகர்ஜியை முத்தம் கொடுக்கிறான் என்று பார்க்காமல், தன் மனைவியை சாகேத் ராம் உதட்டோடு உதடு கவ்வுகிறான் என்று பார்க்க வேண்டும். இது எப்போது தமிழ இலக்கியகர்த்தாக்களுக்கு உதயமாகி மனதில் நிலை நிற்குமோ?

எம் எஸ் சுப்புலஷ்மி வாயில் தம் வைத்துக் கொண்டிருப்பதாக காட்சியளித்தாரே… சிவாஜி எத்தனை படங்களில் இப்படி வந்தார்! அதை எல்லாம் முன்னுதாரணமாக இந்தப் பத்தியின் ஆசிரியர் துணை கொள்ளவில்லை. இதற்கு ஆசிரியர் குழு முழு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வ்வொரு படத்திற்கு அடியிலும், எந்த வருடன் வந்த திரைப்படம், யாராக நடித்த படம் என்று போட வேண்டும்.

மேலும் இந்தப் பதிவில் “எலி” போன்ற சமீபத்திய படங்கள் குறித்த பதிவுகளும் இல்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது. அதில் வடிவேலு சிகரெட் கடத்தல்காரர்களை எம்ஜியார் போல் துரத்திப் பிடிப்பார். அது தமிழ் சினிமாவின் மைல்கல். கருத்தும் சித்தாந்தமும் கொண்ட கோலிவுட் காவியம். அதை ஏன் ஆசிரியர் இருட்டடிக்கிறார்?

”பத்த வச்சுட்டியே பரட்ட” என்பவர் கவுண்டமணி.

மாணிக்கம் புகை பிடித்ததில்லை; பாட்ஷா என்பது அவரின் மாற்று உருவம்; அதாவது இருமுனை சீர்குலைவு.பந்தயத்திற்காக வெறுமனே வாயில் பத்து முறை தூக்கிப் போட்டு பிடித்தவர் ”நினைத்தாலே இனிக்கும்” Roald Dahl – அதைக் காப்பியடித்த கே பாலச்சந்தர்.பொங்குவோம்! பொங்க வைப்போம்!!

அது கூட மற்றவர்கள் கேட்டுக் கொண்டதற்காக மட்டுமே: “சார்… நீங்க அந்த வெண்குழல் சாம்பல் கூட்டை உதிர்ப்பதே அழகு”னு சொல்பவர்களுக்காக மட்டுமே – அவர் உதட்டை வத்தி தொடுவதில்லை. போதையும் உள்ளே செல்வதில்லை.

சுருக்கமாக பரமானந்தம்! பரபிரும்மம்!!

எண்பதுகளில் வறுமையின் காரணமாக பீடி பிடிப்பவரை குறிவைக்காதது ஏன்?

ரஜினி என்பவர் காசுக்காக புகை பிடிப்பவர்! காசு கொடுத்து புகை பிடிக்கும் ஒபாமாவை ஏன் சொல்லவில்லை?

சார்மினார், வில்ஸ் என்று விளம்பரத்திற்காக ஆடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்களை ஏன் குறிவைக்கவில்லை…

கண்டிப்போம்!

கதாநாயகிகள் கால் மீது கால் போட்டுக் கொண்டு புகை பிடிப்பதை “லைட்ஸ் ஆன்” வினோத் என்றோ எழுதியிருக்கிறார். இந்த மாதிரி சரித்திர துணுக்குகளும் இந்தப் பதிவில் இல்லை. இப்பொழுதே இந்தத் தொடர் நிறுத்தப்பட வேண்டும். என் வக்கீல்களை உசுப்பி விட்டிருக்கிறேன். அவர்கள் உங்கள் சார்பாக ஒவ்வொரு நாட்டிலும் இப்பொழுதே மானநஷ்டம் கோருவார்கள்.

ரவி நடராஜன் இவ்வாறு பரிந்துரைத்தார் என்றால் அவருக்கும் என் கண்டனங்கள். ரஜினி ரசிகர் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். அனைவரும் பொங்குங்கள். கொதித்தெழுங்கள். கறுப்புக் கொடி காட்டுங்கள். எங்கே சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்? வாருங்கள்.

Kochadaiyaan – கோச்சடையான் விமர்சனம்

தமிழராக இருப்பதற்காக இரண்டு பேரை மரியாதையுடன் பாராட்டத் தோன்றும். ஒருவர் சாங் முதற்கொண்டு எல்லாவற்றிலும் பரிபூரணமாய் இயக்கும் சாங்கர் எனப்படும் இயக்குநர் ஷங்கர். இவரோடு ரஜினிகாந்த் இரண்டு படம் செய்திருக்கிறார். இரண்டாவது விமர்சனத்தில் கறார்தன்மையும் அந்த மாதிரி விமர்சனம் தன்னிடம் வராமல் இருக்க செதுக்கும் ஸ்வச்ச எழுத்துக்காரர் ஜெயமோகன். இவருடன் மணிரத்னம் படம் செய்திருக்கிறார்.

அதன் பிறகு “கோச்சடையான்” போன்ற ஆக்கங்களும் தமிழ்ச்சூழலில் இயங்குகின்றன.

கதை மட்டும் வெகு சிரத்தையாக முழுமையாக உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கதைக்கு எந்த மாதிரி காட்சிகள் வைத்தால் அசைப்படம் (அனிமேஷன்) சிறப்பாக இருக்கும் என்பதையும் அறிந்தே இருக்கிறார்கள். ஆனால், அந்த நுட்பம் ஓரளவாவது பார்க்க சகிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறதா என்பதில் அசிரத்தையா? அலட்சியப் போக்கா? அறியாமையா? என விவாதிக்க வைக்கிறார்கள்.

“வேட்டையாடு விளையாடு” படம் பார்த்தவுடன் அமெரிக்கத் தொலைக்காட்சியில் வாராவாரம் ஒளிபரப்பாகும் சி.எஸ்.ஐ. போன்ற எந்த போலீஸ் சீரியலும் நம்பகத்தன்மையிலும் கதாம்சத்திலும் பரபரப்பிலும் “வே… வி.”ட்டை விட பன்மடங்கு சிறப்பாக இருக்குமே என தமிழ்ப்படங்களின் நிலையை எண்ணி வருத்தப்பட வைத்தது. அதே போல் சாதாரண டிவி அனிமேஷன் கூட உயிர்ப்போடும் உள்வாங்க வைக்கும் விவரங்களோடும் சூழலின் தீர்க்கமான துல்லியமான விவரணைகளுடனும் அமைந்திருக்கும். அந்த அளவு தர உந்துதல் கூட இல்லாத அசிரத்தை ஒவ்வொரு ஃப்ரேமிலும் கோச்சடையானில் மின்னுகிறது.

வெறும் ரஜினிகாந்த் பெயரை வைத்து கல்லா கட்டலாம் என மகள் நினைக்கிறார். அதற்கேற்ப அரங்குகளும் அகிலமெங்கும் நிறைகிறது. எவருக்கும் மோசமானப் படைப்பை பார்க்கிறோம் என தர்மசங்கடம் எழவில்லை. படம் உருவாக்கியவருக்கும் அல்ப பவிஷுடன் பழுதான பொருளை சந்தையில் தள்ளுகிறோம் என்னும் மனக்கிலேசமும் எழவில்லை. இப்படியான அரசியல், கலை, விளையாட்டு, சூழலில் இயங்க இந்தியாப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒன்றரைக்கண். அவர்களின் பின்புலத்தில் படு கேவலமான கிராபிக்ஸ். நடுவில் சலனப் பதிவு சல்லியடிப்பு. தீபிகா படுகோனேயை ஒரு கோணத்தில் பார்த்தால் ஐஷ்வர்யா ராயைப் போல் இருக்கிறார். சண்டைக் காட்சியிலும் சிரிக்கும் முகபாவனை. காதலனை சிறையில் போட்டாலும் அதே சிரிக்கும் முகபாவம். அசப்பில் ரானா (ரஜினி கதாபாத்திர)த்தின் தங்கையைப் போலவே இருக்கிறார். இருவருக்கும் ஆடை மட்டுமே வித்தியாசம்.

“அரவான்” ஆதியைப் பார்த்தால் ராம்ராஜ் வேட்டிகள் விளம்பரத்தில் வரும் நட்சத்திரங்கள் போல் முகமற்று சொரணையற்று பாவமற்று பூசி மெழுகின களிமண் சிற்பம் போல் இருக்கிறது. டிஸ்னி படங்களில் வரும் வர்ணஜாலம் வேண்டாம். டோரா போல் கொஞ்சமாவது மினுக்கியிருக்கலாம்.

இவ்வளவு சிரமப்பட்டு சலனப் பதிவு அசைவூட்டப் படம் எடுப்பதற்கு பதிலாக அசல் ரஜினியை வைத்து எடுத்திருந்தாலே படம் பாந்தமாயிருந்திருக்கும்.

சஞ்சலம் நீக்க சிறந்த உபாயம்: ரஜினியா? கமலா?

மன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.

ரஜினி படம் பிடிக்குமா? கமல் படம் பிடிக்குமா? என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.

’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்‌ஷன் இருக்கும்.

அந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.

கமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.

ரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.

நீங்க ரஜினி விசிறியா? கமல் ஃபேனா?

S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

’உலக நாயகன்’ விஸ்வரூபம் எடுக்கும் பத்மஸ்ரீ கமல் தோழர் கு ஞானசம்பந்தன் உரை

கவிப்பேரரசு வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு

இரண்டாம் பாகம் (தொடர்ச்சி)

எஸ் ராமகிருஷ்ணன் ஏற்புரை

Rajinikanth Interview on ‘Endhiran’ The Robot on Sun TV

முந்தைய ரஜினி பதிவு: Happy Birthday to Rajni: ’ராஜாதிராஜா’வின் உரை

On Director Shankar:

On Actress and Heroine Aishwarya Rai:

On his Spiritual Journeys to Kedarnath and Badrinath:

Why Rajni is so successful? What makes him tick?

Rajnikanth’s dance movements and Next Projects:

Happy Birthday to Rajni: ’ராஜாதிராஜா’வின் உரை

தமிழ் இந்தியா டுடே - ரஜினிகாந்த் சிறப்பிதழ்நான் ரஜினியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் நிழலாடுகிறார்.

ராஜாதி ராஜா. அவரின் ஒவ்வொரு சொல்லும் இ.பி.கோ. சட்டமாக பின்பற்றும் அடிப்பொடிகள் கொண்ட இராஜாங்கம். ’ஏதாவது முத்து உதிர்க்க மாட்டாரா?’ என்று ஏங்கும் கூட்டம். அவருக்கு திக்குவாய்.

இந்தியாவின் ஜனாதிபதியை விட ஒப்புக்கு சப்பாணியான இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு எதிராக ஒலித்த குரலாக இருந்தவர். மாட மாளிகையில் வசித்தாலும் போர் வீரனின் சின்னமாக பாட்டாளியின் குறியீடாக முன்னிறுத்தப்பட்டவர். பட்டதரசராக சாமுத்ரிகா லட்சணங்கள் கொண்ட அண்ணன் இருந்தும் ராஜாதி ராஜா ஆனவர்.

ரஜினியை விட திறமையான நடிகர்கள் இருந்தும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆனவர். வெறுமனே திரையில் தோன்றும் ஹீரோவிற்கு ‘ரஜினி வாய்ஸ்’ பிராண்ட் கொடுத்து, ராஷ்டிரபதியின் ராஜாங்கமாக தமிழகத் தேர்தலை மாற்றிய பெருமை பிபிசி ஊடகங்களுக்கு உண்டு. சமயத்திற்கேற்ப ஹிட்லர் ஜெயலலிதா, ஸ்டாலின் கருணாநிதி என்று முழங்குவதும் உண்டு.

பிரித்தானியப் பேரரசின் நிலப்பரப்புகளுக்கும் முப்படைகளுக்கும் அரசராக இருந்தவருக்கு திக்கு காட்ட இயலாத இயல்பு; ரேடியோவில் பேசுவதற்கான மைக்ரோஃபோனைப் பார்த்தாலே பயந்து நடுங்குவார் என்பதை ‘தி கிங்ஸ் ஸ்பீச்’ திரைப்படம் சித்தரிக்கிறது.

தமிழ் நாட்டின் முடிசூடா மன்னர், முரட்டுக் காளை, ஊர்க்காவலன் என்று போஸ்டரில் ரசிகர்கள் உறுமும் தளபதியும்; தனிக்காட்டு ராஜாவாக, பாயும் புலியாக அதிகாரத்தை நோக்கி சொடக்குப் போட்டு கேள்வி கேட்கும் இராணுவன் வீரனும் தனி மனிதராக பேப்பர் புலியாக இருந்திருக்கிறார். ‘முதல்வன்’ படத்தில் நடிக்கும் தில்லு கூட இல்லாத பயந்தாங்கொள்ளியாக அடங்கிப் போயிருக்கிறார். திருமண மண்டபத்திற்காக சகல சக்திகளிடமும் சரணாகதி அடைந்திருக்கிறார்.

பண்ணையாரை எதிர்க்க எனக்கு திராணி கிடையாது. பணக்காரர்களை எதிர்கொள்ள அன்னா ஹசாரேவாக, அன்று எனக்கு ரஜினி கிடைத்தார்.

படிக்காதவனாக வாழும் ஓட்டை வீட்டுக்காரர்களுக்கு ராஜா வாழ்க்கை கிடைக்காது. எங்களையும் ரஜினி ஓவர்நைட்டில் பணக்காரன் ஆக்கினார்.

இன்றைய தேதியில் ‘சிவில் டிஸ் ஒபீடியன்ஸ்’ என்று காந்தி முழங்கினால் கூட கேட்க ஆளில்லாத முன்னெடுக்க முடியாத முன்னாபாய் சமூகத்தின் சின்னமாக ரஜினி இருக்கிறார். எனவே, நானும் ரஜினிதான்.

Tamil India Today - Rajni Special Issue

 

10 Similes between Politician Rahul Gandhi & Actor Rajinikanth

ராகுல் காந்தி ரஜினிகாந்த்
தளபதிக்கு பிரதம மந்திரியாகும் வயசு ஹீராவாக நடிக்கும் வயசு
இத்தாலி நாட்டு குடும்பத்தில் பிறந்தவர் மகாராஷ்டிர குடும்பத்தில் கர்நாடகத்தில் பிறந்தவர்
இந்திய அரசியலை மறுத்து, வெளிநாடு சென்றதாக செய்தி வந்ததுண்டு தமிழ் சினிமாவை வெறுத்து, மருத்துவமனையில் ஓய்வெடுத்ததாக செய்தி உண்டு
சொந்தமாக முனைந்ததில் பிகார் போல் பின்னடைவுகள் எக்கச்சக்கம். சொந்தத் தயாரிப்பில் ‘வள்ளி‘ ஃப்ளாப்
‘கரீபி ஹடாவோ’ கோஷங்கள் ரீமேக் செய்கிறார் அமிதாப் படங்களை தமிழ் சினிமாவுக்கு ரீமேக் செய்தார்
கொள்ளுத் தாத்தாவைப் போல் ரஷியாவின், சீனாவின் நண்பர் ஜாக்கி சானை விட ஜப்பானின் புகழ்பெற்ற நடிகர்
ஞாநி, மாலன் போன்ற அறிவிஜீவிகளின் பழக்கமுண்டு துக்ளக் ‘சோ‘ போன்ற அரசியல்வாதிகளின் சகவாசமுண்டு
ஸ்பெட்ரம் 2ஜி, ஆதர்ஷ், ஐபிஎல் இருந்தாலும் மீடியா திரையில் மிஸ்டர் க்ளீன் இமேஜ் எந்திரனுக்கு ஐம்பது கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும், கருப்பு பணம் தகர்க்கும் சிவாஜி வெள்ளித்திரை இமேஜ்
ஏழையின் குடிசைக்கு விசிட் அடிப்பார் சாமியாரின் இமயமலைக்கு போய் வருகிறார்
திமுக, அதிமுக – எந்தப் பக்கம் சாய்வார் என்று யாருக்கும் தெரியாது அமலா பால், ஹன்ஸிகா மொட்வானி – எந்த ஹீரோயின் தேர்ந்தெடுப்பார்?

முந்தைய ஒப்புமை:
10 Similes between Writer Charu Nivethitha & Actor Kamalhasan

2010 in review

The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health:

Healthy blog!

The Blog-Health-o-Meter™ reads Wow.

Crunchy numbers

Featured image

The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 160,000 times in 2010. If it were an exhibit at The Louvre Museum, it would take 7 days for that many people to see it.

 

In 2010, there were 39 new posts, growing the total archive of this blog to 4509 posts. There were 50 pictures uploaded, taking up a total of 13mb. That’s about 4 pictures per month.

The busiest day of the year was June 16th with 961 views. The most popular post that day was ரஜினியின் எந்திரன்- தி ரோபோ .

Where did they come from?

The top referring sites in 2010 were digg.com, snapjudge.blogspot.com, iphone5g.net, who-will-win-fifa-worldcup-2010.com, and legal5ounds.com.

Some visitors came searching, mostly for எந்திரன் தி ரோபோ, பலான படங்கள், பொது அறிவு வினா விடை, யூ ட்யூப், and பலான.

Attractions in 2010

These are the posts and pages that got the most views in 2010.

1

ரஜினியின் எந்திரன்- தி ரோபோ July 2009
51 comments

2

யூ ட்யூப் x பலான படம் – தீவினையின் தோற்றுவாய் எது? April 2008
4 comments

3

செக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள் August 2009
20 comments

4

வினாடி வினா: உலகமயமாக்கல் பொது அறிவு கேள்விகள் March 2009
8 comments

5

செத்தான் பிரபாகரன் September 2009
53 comments

எந்திரனும் நானும்

ரொம்ப நாள் கழித்து ‘மச்சீ’ என்றழைக்கும் உரிமையை கல்லூரி செஷன்ஸ் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்த தோழர் அழைத்திருந்தார்.

“எந்திரன் பார்த்தாச்சாடா?”

“இனிமேல் ‘பாபா’ குறித்த பயம் போயாச்சு. அப்படியே ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’னு பல்லவி பாடும் ஷாஜி பிள்ளையாண்டர்களுக்கும் புதுசா ஒண்ணு சேர்ந்துகிடுச்சு.”

எந்திரன் பிரச்சாரங்களை பட்டியல் போட்டால்:

  1. சன் டிவி அராஜகம்: மாறன் சகோதரர்களின் அசுர பலம்
  2. ஐஸ்வர்யா ராஜ் சிலாகிப்பு: எப்பொழுது, எங்கே முத்தம்
  3. சூப்பர் ஸ்டார் பன்ச்: ரோபோ நடிக்கும் அற்புதம்
  4. ஷங்கர் அரசியல்: பெண்ணியம் முதல் காறியுமிழும் புணர்ச்சி
  5. சுஜாதா சுட்டார்: அறிபுனை கதை அணிவகுப்பு ஜெராக்ஸ்
  6. ரெஹ்மான் நாதம்: டமார மொழி
  7. பெரும் பொருட்செலவு: சிறுவியாபாரிகளை நசுக்கும் பட்ஜெட்
  8. ரசிகரடிப்பொடி மனநிலை: பா.ம.க., பாஜக + தமிழக அரசியல்

இப்படியாக தமிழிலிருந்தே தமிழுக்கு காப்பியடிக்கும் விமர்சகச் சூழலில் எந்திரமயமான பயம் தொற்றிக் கொண்டது.

  1. சன் டிவி ரோபாட்: சீரியலுக்கு வசனம் முதல் சீரிய சிந்தனை வரை
  2. ஐஸ்வர்யா ராஜ் எந்திரம்: நாட்டுக் கட்டை
  3. சூப்பர் ஸ்டார் சக்கரம்: தன்னைத் தானே எறித்துக் கொள்ளும் சூரியன்
  4. ஷங்கர் பொறி: பணம் செய்யும் மெஷின்
  5. சுஜாதா சூத்திரம்: ஏற்கனவே தமிழ் எழுத்துலகத்தை ஆக்கிரமிக்கும் எழுத்து சுனாமி
  6. ரெஹ்மான் கருவி: இயந்திரமே இயந்திரத்தை இயற்றும் மீட்டும்
  7. பொருட்செலவு விறிசு: என் இனிய இயந்திராவிற்கு அடுத்து ஜீனோ
  8. ரசிகரடிப்பொடி உபகரணம்: இது மட்டும் ரோபோ அல்ல

எந்திரம் பத்திரம். கூடிய சீக்கிரமே எந்திரக் குழந்தையும் ‘இந்தப் பாடலைப் பாடுபவர் உங்கள் எந்திரனின் வாரிசு’ என்று வெள்ளித்திரையில் வலம் வரும்.

சற்றே தொடர்பிருந்திருக்கக் கூடிய குரல் பதிவு: Conquering A Fear Of Robots : NPR

Party with Superstar Rajinikanth: 80s Actor, Actress Alumini Meet