Tag Archives: உற்சாகம்

இமையிலி மக்களும் கிழிமுறி பண்பாடும்

ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய “ஒருவேளை” புத்தாண்டு வாழ்த்தாகக் கிடைத்தது:

ஒருவேளை

தங்களுடையதை இழந்து உங்கள் மீது பழி சுமத்தும் சமயத்தில்,
உங்களை ஒருநிலையாக வைத்திருக்க முடிந்தால்
எல்லா மனிதர்களும் உங்களை சந்தேகிக்கும்போது உங்களை நீங்கள் நம்பினால்,
எனினும் அவர்களின் சந்தேகத்திற்கும் அனுமதி கொடுத்திருங்கள்;
காத்திருக்கும் காலங்களில் சோர்வடையாமல் காத்திருந்தால்,
அல்லது பொய்கள் சொல்லப்பட்டாலும், அந்தப் பொய்களை கையாளாதீர்கள்,
அல்லது வெறுக்கப்பட்டாலும், வெறுப்புக்கு வழி விடாதீர்கள்,
இன்னும் அழகாகத் தோன்றாதே, புத்திசாலித்தனமாகப் பேசாதே:

உன்னால் கனவு காண முடிந்தால் – கனவுகளை உன்னுடைய எஜமானனாக ஆக்காமல் இருந்தால்;
உங்களால் சிந்திக்க முடிந்தால் – எண்ணங்களை உங்கள் குறிக்கோளாக ஆக்காமல் இருந்தால்;
நீங்கள் ஜயகோஷத்தையும் பேரழிவையும் சந்திக்க முடிந்தால்
அந்த இரண்டு ஏமாற்றுக்காரர்களையும் ஒரே மாதிரியாக நடத்துங்கள்;
நீங்கள் சொன்ன உண்மையை உரைக்குமாறு கேட்க உங்களால் முடிந்தால்
முறுக்கப்பட்ட கத்திகளால் முட்டாள்களுக்கான ஒரு பொறியை உருவாக்க,
அல்லது உங்கள் வாழ்க்கையை நீங்கள் அர்ப்பணித்து, அதன் பின்னும் நொறுங்கிய விஷயங்களைப் பாருங்கள்
மேலும் தேய்ந்து போன கருவிகளைக் கொண்டு குனிந்து அவற்றை மீட்டெழுப்பி உருவாக்குங்கள்:

உங்கள் எல்லா வெற்றிகளிளையும் ஒரேயொரு பந்துக் குவியலாக உருவாக்க முடிந்தால்
மொத்தத்தையும் சுண்டிப் போட்டுப் பார்த்து இடருக்கு உள்ளாக்கி
இழக்கவும், உங்கள் தொடக்கத்தில் மீண்டும் தொடங்கவும்
உங்களின் பழைய இழப்பைப் பற்றி மீண்டும் ஒருபோதும் மூச்சுவிடாதீர்கள்;
உங்கள் இதயத்தையும் நாடி நரம்புகளையும் நீங்கள் கட்டாயப்படுத்தினால்
அவை தேய்ந்து மறைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகும் உங்களுக்கு சேவை செய்ய,
உங்களிடம் எதுவும் இல்லாதபோது பிடித்துக் கொள்ளுங்கள்
அவற்றிடம் சொல்லும் மனத்திட்பத்தைத் தவிர: ‘பொறுங்கள்!’

பெருங்கூட்டத்தினரோடு பேசி உங்கள் நற்பண்புகளைக் கடைப்பிடித்தால்,
அல்லது அரசர்களுடன் உலாவி நடந்தாலும் – சாதாரணத் தொடர்பை இழக்காதீர்கள்,
எதிரிகளோ அல்லது அன்பான நண்பர்களோ உங்களை காயப்படுத்த முடியாது என்றால்,
எல்லா மனிதர்களும் உங்களை நம்பகமாக எண்ணினாலும், எவரும் அளவுக்கதிகமாக சார்ந்தும் இல்லாமல்;
மன்னிக்காத நிமிடத்தை உங்களால் நிரப்ப முடிந்தால்
அறுபது வினாடிகள் மதிப்புள்ள தூர ஓட்டத்துடன்,
பூமியும் அதில் உள்ள அனைத்தும் உன்னுடையது,
மேலும்-அது அதிகம் – நீ ஒரு மனிதனாக இருப்பாய், மகனே!

If— by Rudyard Kipling | Poetry Foundation

இன்று கிழிமுறி – ‘கேன்சல்’ கலாச்சாரம் (Cancel Culture). இமையிலி — “விழித்திரு” (Woke) அறைகூவல் காலம்.

1941-இலேயே கிப்ளிங்-கை ஜார்ஜ் ஆர்வெல் ஒரு கை பார்த்து இருக்கிறார்:

கிப்ளிங் ஒரு ஏகாதிபத்திய போர் வெறியர். அவர் தார்மீக ரீதியாக உணர்ச்சியற்றவர் மற்றும் அழகியல் ரீதியாக அருவருப்பானவர். அதை ஒப்புக்கொண்டு தொடங்குவது நல்லது,

மிகவும் தொழில்மயமான நாடுகளில் உள்ள அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் ஒரு ஏமாற்று நிலையில் உள்ளன. ஏனென்றால் அவர்கள் உண்மையில் அழிக்க விரும்பாத ஒன்றை எதிர்த்துப் போராடுவதைத் தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்கள் சர்வதேசிய நோக்கங்களைக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் அந்த நோக்கங்கள் பொருந்தாத வாழ்க்கைத் தரத்தைத் தக்கவைக்க அவர்கள் போராடுகிறார்கள். நாம் அனைவரும் ஆசியக் கூலிகளைக் கொள்ளையடிப்பதன் மூலம் வாழ்கிறோம், மேலும் ‘அறிவொளி’ பெற்றவர்கள் அனைவரும் அந்தக் கூலியாட்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம்; ஆனால் நமது வாழ்க்கைத் தரம், அதனால் நமது ‘அறிவொளி’, கொள்ளை தொடர வேண்டும் என்று கோருகிறது.

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் அவருக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும், கிப்ளிங் ஒரு பழமைவாதவாதி, இது இப்போதெல்லாம் இல்லை. இப்போது தங்களை பழமைவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் லிபரல், பாசிஸ்டுகள் அல்லது பாசிஸ்டுகளின் கூட்டாளிகள். அவர் தன்னை ஆளும் அதிகாரத்துடன் அடையாளப்படுத்தினார், எதிர்க்கட்சியுடன் அல்ல. ஒரு திறமையான எழுத்தாளருக்கு இது நமக்கு விசித்திரமாகவும் அருவருப்பாகவும் தோன்றுகிறது, ஆனால் கிப்ளிங்கிற்கு யதார்த்தத்தின் மீது ஒரு குறிப்பிட்ட பிடியைக் கொடுப்பதற்கு இது உதவுகிறது.

Rudyard Kipling | The Orwell Foundation

இந்த ஆர்வெல் கட்டுரையின் துவக்கத்தில் டி.எஸ். எலியட் என்பவரும் ஃபாஸிஸ்ட் ஆகவும் யூத எதிர்ப்பாளராகவும் அடையாளம் ஆகிறார்.

தமிழிலும் எக்கச்சக்கமான பேர்கள், எழுத்தாளர்கள் தடை செய்யப்பட்டு, அவர்களின் எதிர்தரப்பினாரால் ப்ளாக் ஆகி, கருத்துக்களைக் கேட்காமல் விட்டுவிடுகிறார்கள்.

கேள்விகள்:

  1. ”படைப்பாளியைப் பார்க்காதே. படைப்பைப் பார்!” – என்று வாசிக்க வேண்டுமா?
  2. கோபத்தில் வரும் தகாத வார்த்தை வெளிப்பாடு என்பது ஆழ்மனதில் பொதிந்திருக்கும் வெறுப்பை பொதுவிற்குக் கொணர்கிறதா?
  3. ஒவ்வொரு பிரயோகத்தையும் எவ்விதமான கருத்தையும் – இது யார் மனத்தை புண்படுத்தும்? எந்தச் சமூகத்தை பாதிக்கும்? எவருடைய இனத்தை, மதத்தை, குறியிட்டு இழிபடுத்தும்? :: என்று கவனித்து, யோசித்து, கத்திரி போட்டு, அதன் பின் இன்னும் ஆறப்போட்டு, வெட்டி, சரி செய்த பிறகே ஃபேஸ்புக் / டிவிட்டரில் இட வேண்டுமா?
  4. அந்தக் கால விழுமியங்கள், அப்போதைய கலாச்சாரம் என எல்லாவற்றையும் கருத்தில் இடஞ்சுட்டி பொருள் விளக்க வேண்டுமா?
  5. விக்கிரமாதித்தன் என்னும் மனிதரை விவரிக்க வேண்டுமா அல்லது விக்கி அண்ணாச்சியின் கவிதைகள் எவ்வாறு, அடு எவ்வகை உணர்வுகள் எழுப்புகின்றன என விஷ்ணுபுரம் மேடையில் உரையாற்ற வேண்டுமா?

சஞ்சலம் நீக்க சிறந்த உபாயம்: ரஜினியா? கமலா?

மன அழுத்தம் நீங்க நான் மூன்று உபாயங்களை பின்பற்றுகிறேன். எல்லோரும் சொல்கிற உடற்பயிற்சியை விட வீட்டை சுத்தம் செய்கிற பராமரிப்பு. அமைதியான இசையின் பின்னணியில் தியானம் என்பதை விட நிசப்தமான புத்தக அறையில் பூனையுடன் தஞ்சம். உளவியலாளரிடம் பகிர்வதை விட நாலு ஃபேஸ்புக் கருத்தாளர்களுக்கு கேள்வியாக பதில் போடுவது.

ரஜினி படம் பிடிக்குமா? கமல் படம் பிடிக்குமா? என்னுடைய இடையீடு சுணக்கங்களை களைவதற்குப் பின்னால் இந்தக் காரணமும் இருக்கிறது.

’நான் சிவப்பு மனிதன்’ அதிரடியாக இறங்குவார். ‘ராமன் ஆண்டாலும்’னு வாழ்க்கையை கொண்டாடுவார். ’நல்லவனுக்கு நல்லவ’னாக நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துவார். ’பில்லா’ மாதிரி உளவாளியாக சென்றால் கூட ஆக்‌ஷன் இருக்கும்.

அந்த ஜென்மத்திலேயே பழிவாங்காமல் இன்னொருவரை எதிர்நோக்கும் ‘கல்யாணராமன்’. சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் எல்லாமே நம்பக்கூடிய முகங்களின் பிரதிபலிப்பு. ’வாழ்வே மாயம்’ போல் உண்மையைப் போட்டு உடைக்க சஞ்சலப்படும் மனிதன். சகல கலா வல்லவன் முதல் விஸ்வரூபம் வரை கமல்ஹாசன் ஒற்றராக செல்வது கூட லாஜிக் நிறைந்ததாக இருக்கும்.

கமல் கதாபாத்திரங்கள் சாதுவானவை. நான் அன்றாடம் எதிர்கொள்கிறவர்கள். தொண்ணூறு சதவிகிதத்தினர் இவ்வாறே தங்கள் குணாதிசயங்கள வைத்திருக்கிறார்கள்.

ரஜினி நட்சத்திரம். கண்டிப்பு நிறைந்தவர். வாட்டத்தைப் போக்க நம்ப இயலாதவற்றை சாதிக்கிறார். என் கலக்கங்களை நீக்க முடியும் என உறுதியான உற்சாகம் தருகிறார்.

நீங்க ரஜினி விசிறியா? கமல் ஃபேனா?