ராகுல் காந்தி | ரஜினிகாந்த் |
---|---|
தளபதிக்கு பிரதம மந்திரியாகும் வயசு | ஹீராவாக நடிக்கும் வயசு |
இத்தாலி நாட்டு குடும்பத்தில் பிறந்தவர் | மகாராஷ்டிர குடும்பத்தில் கர்நாடகத்தில் பிறந்தவர் |
இந்திய அரசியலை மறுத்து, வெளிநாடு சென்றதாக செய்தி வந்ததுண்டு | தமிழ் சினிமாவை வெறுத்து, மருத்துவமனையில் ஓய்வெடுத்ததாக செய்தி உண்டு |
சொந்தமாக முனைந்ததில் பிகார் போல் பின்னடைவுகள் எக்கச்சக்கம். | சொந்தத் தயாரிப்பில் ‘வள்ளி‘ ஃப்ளாப் |
‘கரீபி ஹடாவோ’ கோஷங்கள் ரீமேக் செய்கிறார் | அமிதாப் படங்களை தமிழ் சினிமாவுக்கு ரீமேக் செய்தார் |
கொள்ளுத் தாத்தாவைப் போல் ரஷியாவின், சீனாவின் நண்பர் | ஜாக்கி சானை விட ஜப்பானின் புகழ்பெற்ற நடிகர் |
ஞாநி, மாலன் போன்ற அறிவிஜீவிகளின் பழக்கமுண்டு | துக்ளக் ‘சோ‘ போன்ற அரசியல்வாதிகளின் சகவாசமுண்டு |
ஸ்பெட்ரம் 2ஜி, ஆதர்ஷ், ஐபிஎல் இருந்தாலும் மீடியா திரையில் மிஸ்டர் க்ளீன் இமேஜ் | எந்திரனுக்கு ஐம்பது கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும், கருப்பு பணம் தகர்க்கும் சிவாஜி வெள்ளித்திரை இமேஜ் |
ஏழையின் குடிசைக்கு விசிட் அடிப்பார் | சாமியாரின் இமயமலைக்கு போய் வருகிறார் |
திமுக, அதிமுக – எந்தப் பக்கம் சாய்வார் என்று யாருக்கும் தெரியாது | அமலா பால், ஹன்ஸிகா மொட்வானி – எந்த ஹீரோயின் தேர்ந்தெடுப்பார்? |
முந்தைய ஒப்புமை:
10 Similes between Writer Charu Nivethitha & Actor Kamalhasan
ராகுலுடன் கம்பேர் செய்து ரஜினியை கேவலப்படுத்தவேண்டாம்.