உலகத்தரமும் இந்திய மசாலாவும்
தீபாவளிக்கு வெடி வெடிப்பது போல்… கிறிஸ்துமசுக்கு பரிசு பரிமாற்றம் போல்… ரஜினி சினிமாவை முதல் நாள் பார்ப்பது போல்… சனிக்கிழமைதோறும் கிளாசிக் திரைப்படம் போடுவது வழக்கம். மகளுக்கு உலக சினிமா பரிச்சயத்தை விட, தமிழ் கலாச்சாரத்தை திரைப்படம் மூலமாகவே சொல்லிவிடுவது என சபதம்.
‘அன்பே சிவம்’ ஓடுகிறது. குலத்தில் கல்லெறிகிறார். பாலா வருகிறார். மகள் உடனே கேட்கிறாள்: ‘இவளை கல்யாணம் செய்து கொள்ளத்தான் மாதவன் செல்கிறாரா?’
தமிழ் சினிமா இவ்வளவு எளிமையான புரிதலுடன் இயங்குகிறது என்பதை அறிந்து கொண்ட மகிழ்ச்சி அதிர்ச்சியா? அல்லது தென்னகத்தின் ஆஸ்கார் நாயகன் ஆக்கமே ஸ்டீரியோடைப் வார்ப்புருவில் அடைபட்டதை தெரிவித்த வருத்தமா?
“பேசாமல் படம் பாரு”
வீட்டிலிருந்தே வேலை
பி.பி.எஸ். நிகழ்ச்சியின் முன்னோட்டம் டிவியில் ஓடுகிறது. எனக்குப் பிடித்த ஃப்ரன்ட்லைன். அவளுக்குப் பிடிக்காத போஸ்ட் மார்ட்டம்.
டாக்டர் பற்றாக்குறை அறிந்த தகவல். Forensic pathologist கிடைக்காமல் இருப்பது புதிய தகவல்.
‘கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதற்கு பதில் இந்த மாதிரி தொழில் மாத்திக்க ஏதாவது கத்துக்கலாம். புதுசாகத் தெரிஞ்சுக்கற ஆர்வமும் இருக்கும்; நிலையான சம்பாத்தியமும் வரும்போலத் தோணுது.”
“என்ன வேணா செய் அப்பா… Snow Dayன்னு சொல்லிட்டு, வீட்டுக்கு மட்டும் பொணத்த எடுத்துண்டு வந்துடாதே!”
முந்தைய பதிவு: அமெரிக்காவில் தமிழ் வாத்தியாரும் தேஸி மாணவரும்