Category Archives: Shreya

Pathbreaking ‘Sivaji – The Boss’ – Societal Changes & Impact on the Blahdom

‘சிவாஜி’ கொண்டு வரப்போகும் மாற்றங்கள்:

ஸ்ரேயா தன்னை இரசிகர்கள் ‘அண்ணி’ எனக் கூப்பிடுவதை ஒரு தமிழ் பத்திரிக்கையில் புளங்காகிப்பார்.

– விகடனில் மதனின் அசட்டுக் கேள்விகளுக்கு ரஜினி பொறுமையாகப் பதிலளிப்பார்.

குமுதத்தில் அடுத்த வாரம் அதே கேள்விகள் கேட்க்கப்படும்.

– தவறாமல் ‘அடுத்தப் படம் எப்போ?’ என்ற இந்தியப் பொருளாதாரத்தையே அசைக்கப் போகும் கேள்விக் கேட்கப்படும்.

– தவறாமல் ரஜினியும் ‘அது ஆண்டவன் செயல்’ என்பார்.

கலைஞர் இப்போது வாரிசுகளைத் தயார் செய்துக் கொண்டிருப்பதால் ‘ரெக்கார்டை உடையப்பா’ வாழ்த்தெல்லாம் இருக்காது.

வைரமுத்து இப் படத்திற்கு எழுதியப் பாடல்களை அவர் தாயின் கர்ப்பத்தில் இருந்த போதே ரஜினிக்கு எழுதி வைத்து விட்டேன்..இதை நோபலுக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பார்.

– படத்தை மக்கள் கண்டித்தால், சுஜாதா ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில், ‘தமிழ் சனங்களுக்கு நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லை.  இதை ஏற்கனவே சங்கரிடம் எழுதிக் கொடுத்து விட்டேன்’ என்று ‘உண்மை’ விளம்புவார்.

– படத்தில் அரசியல் இருந்தால் டி. இராசேந்தர் படப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடுவார் (பா.ம.க.வுக்கு இப்போது அலுத்து விட்டதாம்).

– படக்கலக்ஷனைப் பொறுத்து, ரஜினி இமயமலைக்கோ இல்லை திருவேங்கிநாதர் மலைக்கோ 2000 வருஷம் வாழும் சித்தர்களைச் சந்திக்க செல்வார்.  அதை ஒரு பத்திரிக்கை தெடராக எழுதும்.

– தமிழ்மணத்தில் கலைப் படங்கள் எழுதுவோர் திட்டி எழுதி தங்களின் பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

சங்கர் அடுத்து எந்த சமூகப் பிரச்சனைக்கு சுண்டல் பாக்கெட் அளவில் தீர்வு கண்டு அதை பிரம்மாண்டமாக எடுக்கலாம் என திட்டம் போடுவார்.  வசனம்: சுஜாதா.

கே. எஸ். இரவிக்குமார் தனக்குதான் அடுத்த ரஜினிப் படம் என்பார்.  தவறினால்…இருக்கவே இருக்கிறார் கமல்…ஏதாவது ஏமாந்த ஹாலிவுட் காமெடி இல்லாமலா போகும்?

– இரசிகர்கள்? நீங்களே இந்த வரியை எழுதிக் கொள்ளுங்கள்.

நான் எழுதவில்லை. முன்னாள் தமிழ் வலைப்பதிவர், இந்நாள் நண்பர், நாளை ??? எழுதியது 🙂

யார் என்று சரியான விடை சொல்பவருக்கு ஈசானிய மூலயில் ஃபெங்ஷுய் சாஸ்திரப்படி கட்-அவுட் உன்டு

திருவிளையாடல் ஆரம்பம்

படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. வேற எதுவும் சொல்லத் தோன்றவில்லை. பார்த்தேன்; கேட்டேன்; ரசித்தேன்.

ஒரு துளி வசனம்:

‘அம்மா… எல்லாரும் ஹார்லிக்ஸ் போட்டு பையனை வளர்ப்பாங்க!
நீதான் போலீஸ்கிட்ட போட்டுக் கொடுத்து பையனை வளர்க்கிறே.’

படம் முழுக்கவே பளிச் மயம்.

விமர்சனம் அவசியம் படிக்க வேண்டும் என்றால் கூகிளை நாடவும். இந்த சுட்டியையும் தட்டலாம்: Arunkumar: திருவிளையாடல் ஆரம்பம் – 1