Category Archives: Template

Pathbreaking ‘Sivaji – The Boss’ – Societal Changes & Impact on the Blahdom

‘சிவாஜி’ கொண்டு வரப்போகும் மாற்றங்கள்:

– ஸ்ரேயா தன்னை இரசிகர்கள் ‘அண்ணி’ எனக் கூப்பிடுவதை ஒரு தமிழ் பத்திரிக்கையில் புளங்காகிப்பார்.

– விகடனில் மதனின் அசட்டுக் கேள்விகளுக்கு ரஜினி பொறுமையாகப் பதிலளிப்பார்.

– குமுதத்தில் அடுத்த வாரம் அதே கேள்விகள் கேட்க்கப்படும்.

– தவறாமல் ‘அடுத்தப் படம் எப்போ?’ என்ற இந்தியப் பொருளாதாரத்தையே அசைக்கப் போகும் கேள்விக் கேட்கப்படும்.

– தவறாமல் ரஜினியும் ‘அது ஆண்டவன் செயல்’ என்பார்.

– கலைஞர் இப்போது வாரிசுகளைத் தயார் செய்துக் கொண்டிருப்பதால் ‘ரெக்கார்டை உடையப்பா’ வாழ்த்தெல்லாம் இருக்காது.

– வைரமுத்து இப் படத்திற்கு எழுதியப் பாடல்களை அவர் தாயின் கர்ப்பத்தில் இருந்த போதே ரஜினிக்கு எழுதி வைத்து விட்டேன்..இதை நோபலுக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பார்.

– படத்தை மக்கள் கண்டித்தால், சுஜாதா ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில், ‘தமிழ் சனங்களுக்கு நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லை.  இதை ஏற்கனவே சங்கரிடம் எழுதிக் கொடுத்து விட்டேன்’ என்று ‘உண்மை’ விளம்புவார்.

– படத்தில் அரசியல் இருந்தால் டி. இராசேந்தர் படப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடுவார் (பா.ம.க.வுக்கு இப்போது அலுத்து விட்டதாம்).

– படக்கலக்ஷனைப் பொறுத்து, ரஜினி இமயமலைக்கோ இல்லை திருவேங்கிநாதர் மலைக்கோ 2000 வருஷம் வாழும் சித்தர்களைச் சந்திக்க செல்வார்.  அதை ஒரு பத்திரிக்கை தெடராக எழுதும்.

– தமிழ்மணத்தில் கலைப் படங்கள் எழுதுவோர் திட்டி எழுதி தங்களின் பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

– சங்கர் அடுத்து எந்த சமூகப் பிரச்சனைக்கு சுண்டல் பாக்கெட் அளவில் தீர்வு கண்டு அதை பிரம்மாண்டமாக எடுக்கலாம் என திட்டம் போடுவார்.  வசனம்: சுஜாதா.

– கே. எஸ். இரவிக்குமார் தனக்குதான் அடுத்த ரஜினிப் படம் என்பார்.  தவறினால்…இருக்கவே இருக்கிறார் கமல்…ஏதாவது ஏமாந்த ஹாலிவுட் காமெடி இல்லாமலா போகும்?

– இரசிகர்கள்? நீங்களே இந்த வரியை எழுதிக் கொள்ளுங்கள்.

நான் எழுதவில்லை. முன்னாள் தமிழ் வலைப்பதிவர், இந்நாள் நண்பர், நாளை ??? எழுதியது 🙂

யார் என்று சரியான விடை சொல்பவருக்கு ஈசானிய மூலயில் ஃபெங்ஷுய் சாஸ்திரப்படி கட்-அவுட் உன்டு

New Blogger – Acknowledgements

என்னை புதிய ப்ளாகருக்கு மாற உதவியவர்கள்

பாலபாடம் (அ) அரிச்சுவடி:

உணர்வு (அதாவது இன்ஸ்பிரேசன்): விடுபட்டவை: NEW BLOGGER புதிய ஓர் அனுபவம்
ஆக்கம் (அதாவது பிட் ஒட்டுவது): அடியேன்

அனைவருக்கும் நன்றி 🙂