Category Archives: Suggestions

மாற்று – ஆலோசனை (aka) விழைப்பட்டியல் (aka) அடுத்த கட்டம்

தமிழில் எழுதும் பதிவுகளில் சுவையானதை மாற்று தவறாமல் சேமித்து வருகிறது. பல விஷயங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை இப்போது பட்டியல் போடும் எண்ணம் இல்லை.

மாற்று அல்லது மாற்று போன்ற புதிய தளங்கள் எதை நிறைவேற்றலாம்?

1. மாற்று! குறித்து, கொள்கைகள் போன்றவை ‘வலைப்பக்கம் காணக்கிடைக்கவில்லை‘ என்று பிழை காட்டுகிறது. வலையகத்திற்கு முதன்முறையாக வருபவர்கள் ‘about us’ படிக்க விரும்புவார்கள்.

2. பங்களிப்பாளர்களின் இடுகைகளைக் குறிப்பிடாமல் தவிர்க்கிறார்கள். ‘பரஸ்பர முதுகு சொறிதலை இந்த கொள்கை தவிர்க்கிறது‘ என்பதற்காக இருக்கலாம். இருந்தாலும், ஏதோ இடறுகிறது. பதிவை எழுதியவரே, சுட்டிக் கிடங்கில் சேர்த்தால் கூட பொருத்தமானதாக இருந்தால்தான் சேர்ப்பார் என்னும் நம்பிக்கை வேண்டும்.

3. சுட்டியின் மேல் எலியைக் கொஞ்ச நேரம் உட்காரவிட்டால், எந்த ‘வகை’யில் சேர்த்திருக்கிறார்கள் (டூல்டிப்ஸ்) என்பதை அறிய முடிகிறது. அதனுடன் பதிவின் முதல் வரிகளையும் கூட சேர்த்து காண்பித்தால், முன்னோட்டமாக இருக்கும். இதன் மேர்சென்று விருப்பங்களைத் தேர்வு செய்து பயனர் கணக்கு (preferences, personalization & customization) கொணரலாம்.

4. ‘சூடான இடுகைகள்‘ போல் எத்தனை பேர் மேற்சென்று க்ளிக் செய்து, படித்தார்கள் என்பதை அறியத் தரலாம். ‘நட்சத்திர தாரகைகள்’ என்பது பகிர்பவரின் விருப்பம் என்றால், மெய்யாலுமே வாசகரின் மவுஸ் எங்கே செல்கிறது என்பதை அறிய முடியும்.

5. புகைப்படங்கள்: பதிவுகளில் வந்த நிழற்படங்களின் சுருக் வடிவத்தைக் கொடுத்து தூண்டில் இட வேண்டும்.

6. கடந்த முறை நான் வந்தபோது கடைசியாக வந்திருந்த பதிவு எது? நினைவில் வைத்திருந்து வேறுபடுத்தி காட்டினால் பயனாக இருக்கும்.

7. திண்ணை, நிலாச்சாரல், தென்றல், ஆறாம்திணை, தமிழோவியம், பதிவுகள், பூங்கா எக்ஸ்க்ளூசிவ்கள், கீற்று, அப்புசாமி ஆகிய இதழ்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். (ஏற்கனவே வரலாறு.காம் போன்றவை அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.)

8. வகைவாரியாக பார்க்க முடிவது போல், தேதிவாரியாக புரட்ட வசதி செய்து தரலாம். அன்றாட வாரத்தின் தாரகைகளுக்கு முகப்பு பக்கத்தில் இடம் கொடுக்கலாம். மாதம்/வாரம்/நாள்வாரியாக #4 கணக்கை காட்டி, வாசகரின் தானியங்கித் தேர்வுகளை காட்டலாம்.

9. தேடலை விரிவாக்குதல்: பதிவர் பெயர் தவிர, தலைப்பு, குறிச்சொற்கள் ஊடாக தேடுவது, உரலைப் பொறுத்து தேடுவது என்று ஆடம்பர (அட்வான்ஸ்ட்) வசதிகள் செய்து தரலாம்.

10. விளம்பரங்கள்: எம்.எஸ்.என். தமிழ், யாஹூ தமிழ், தினமலர் போன்ற தளங்களில் விளம்பரம் தந்து மாற்று.காம் முகவரியை பிரபலப்படுத்தலாம்.

கடைசியாக, கடந்த சந்திப்பில் மாற்று குறித்த விமர்சனமாக நண்பர்கள் சொன்னது:

அதிகம் அறியப்பட்ட, குறிப்பிட்ட சில பதிவர்கள்தான் திரும்பத் திரும்ப தேர்ந்தெடுக்கப்பட்டு பகிரப்படுகிறார்கள். இதுதான் வரும் என்பது போல் கணிக்கமுடிந்ததையே வெளியிடுகிறார்கள்.

இதற்கு பதிலாக இரண்டு வழிகளை சொன்னேன்:

(i) தற்போது உள்ளது போலவே தொடர்வது: ஆனால், தமிழ்மணம்/தேன்கூடு/வோர்ட்பிரெஸ் மூலமாக புதிதாக எழுத ஆரம்பித்த பதிவர்களை இன்னும் நிறைய கோர்க்கலாம்.

(ii) சற்றுமுன்னின் ‘அறிவியல் இன்று’, மா சிவக்குமார், மதி, பத்ரி போன்ற எப்போதும் வருபவர்களை பாப் யூரெல்ஸ்ஸில் வருவது போல (quickies என்னும் தலைப்பில்) இணைப்பது. தவறவிடக்கூடாதவர்களுக்கு இந்த செமி-நிரந்தர இடம். ஓடையைப் பொறுத்து தீர்மானிக்கும்படி செய்யலாம்.் க்வாலிடி குறைந்தால், மற்றவர்கள் போல் ஆக்கிவிடலாம்.

தொடர்புள்ள ஆங்கில வலையகங்கள், திரட்டிகள், சேமிப்புக் கிடங்குகள், பரிந்துரை பக்கங்கள், வலைப்பதிவுக் களங்கள்:

எந்த கருத்துக் கணிப்பு நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவையானது?

1. சட்டத்தை பொதுமக்கள் கையிலெடுப்பது குறித்து?

அ) நீதிமன்றங்களை அவமதிக்கும் செயல்
ஆ) மக்களுக்காகத்தானே சட்டம்?
இ) சட்டத்தை மீறுபவர்களுக்கு இடனடி பலன்
ஈ) அரசின் மெத்தனத்தை நிவர்த்திக்கும் குறியீடு
உ) ‘சட்டம் என் கையில்’ என்று கமல் படம் வந்துச்சே?

தொடர்புள்ள செய்தி

2. பொருளீட்ட நாடு விட்டு நாடு செல்வது

அ) குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்தால் சரி
ஆ) மொத்தமாக வெளிநாட்டில் தங்கினாலும் ஒகேதான்
இ) தாய்நாட்டுக்கு பணியாற்றாமல், அயல்நாட்டில் வசிப்பது தவறு
ஈ) தமிழ்நாட்டை விட்டு வயநாட்டுக்கு செல்வதைக் கேக்கறீங்களா?

தொடர்புள்ள செய்தி

3. சேலம் இருவுள் வாயில் கோட்டம் போராட்டம் குறித்து…

அ) மாநில அமைச்சர் இதுபோல் மத்திய அரசை எதிர்க்கக் கூடாது
ஆ) காந்தி பிறந்த மண்ணில் அறப்போராட்டங்கள் அவசியம்
இ) பொதுச் சொத்துக்களுக்கு சேதம்
ஈ) இந்திய தேசியத்தில் தமிழ்நாட்டில் அமைந்தாலும், கேரளாவில் இருந்தாலும் வித்தியாசம் கிடையாது.
உ) வள்ளுவர் கோட்டம் சென்னையில்தானே இருக்கு?

தொடர்புள்ள செய்தி

4. ஆர்குட் தளத்தில் போலி மாயாவதி

அ) போலிகளை களையெடுக்கவேண்டும்
ஆ) இதெல்லாம் கட்டுப்படுத்த முடியாது
இ) போலி முலாயம், போலி ராகுல் துவக்குவதுதான் சரியான வழி
ஈ) நான் ஃபேஸ்புக் விசிறி
உ) இது தேர்தலில் மண்ணக் கவ்விய எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி

தொடர்புள்ள செய்தி

Tamilveli.com – Some UI Thoughts

தமிழ்வெளி – இன் user interface குறித்து பயனராகத் தோன்றியவை:

1. உரல் (http://www.tamilveli.com/) ரொம்ப எளிதில் தட்டி்சி செல்லும்விதமாக இருக்கிறது. +1

2. எழுத்துக்களுக்கிடையே போதிய இடைவெளி இல்லை. வார்த்தை, வரி, பத்தி என்று எல்லாவற்றுக்கும் இடையே வெள்ளை நிறம் நிறைய வேண்டும். தற்போதைக்கு பார்த்தவுடன் மயக்கமா… கலக்கமா… குழப்பமா! -1

3. ‘அச்சு மாதிரி‘ அமர்க்களம். வேண்டிய பதிவுகளை தேர்ந்தெடுத்து, ஹாயாக பக்கங்களைப் புரட்டலாம். +1

4. சுட்டி செல்லாமல், அங்கேயே காட்டும் தேடல் அருமை +1ஆனால், ‘முன்னோட்டம் மட்டும்‘ அல்லது ‘முழுமையான இடுகை‘ என்று இரண்டு தேர்வுகளை வாசகர்களிடமே விடலாம். மொத்தமாக் காட்டுவதால், தேடல் முடிவுகள் வருவதற்கு தாமதமாகிறது. -1

பழையதிலிருந்து புதிதுக்கு‘ & ‘புதியதிலிருந்து பழையதற்கு‘ மக்கர் செய்வதால் -1.

5. திடீரென்று மாமல்லபுர ஓவியம் எட்டிப் பார்க்கிறது. பல பக்கங்களில் வேறு இலச்சினைகள் வருகிறது. இடைமுகத்தை நிலையாக நிறுத்தலாம். (0)

6. உரல்களை சுட்டினால், தேன்கூடு, தமிழ்மணம் போல் இங்கும் புத்தம்புதிய சாளரங்களை (அல்லது tabs) திறந்து, இடுகையைக் காண்பிக்கிறார்கள். அதே சாளரத்தில் வலைப்பதிவை படிக்கும் வசதி வேண்டும். பயனரே விருப்பப்பட்டால், தனியாக திறந்து கொள்வார் என்று அவரின் இச்சைக்கே விட்டுவிடும் இடைமுகம் வேண்டும். (0)

7. பக்கத்தின் முடிவுக்கு சென்றவுடன் ‘முந்தைய இடுகைகள்‘ என்றோ, ‘பழைய பதிவுகள்‘ என்றோ, ப்ளாக்ஸ்பாட் (அல்லது) வோர்ட்பிரெஸ்.காம் தளத்தில் ‘Older Posts‘ என்று தூண்டில் இழுப்பது போல் போட்டு வைக்கலாம். மீண்டும் மவுசைத் தூக்கிக் கொண்டு, ஹோம் செல்ல நேரிடுவதால் -1

8. ‘இதர வகை பதிவுகள்‘ என்று சோத்தாங்கைப் பக்கம் வருவது எந்த வகை? எப்படி அங்கு இடுகைகள் இடம்பிடிக்கின்றன? (0)

9. ‘பின்னூட்டங்கள்‘ என்னும் பகுதியில் பழைய மறுமொழிகளின் நிலவரங்களை எவ்வாறு பார்ப்பது? பின்னூட்ட எண்ணிக்கைக்கு பக்கத்தில் – 0, 1, 2 என்று எண்கள் வருகிறதே… அது எதைக் குறிக்கிறது?

(எத்தனை பேர் அழுத்தி உள்ளே சென்றார்கள் என்னும் எண்ணிக்கை என்றால், பின்னூட்டங்களில் இந்த எண்ணைத் தவிர்த்து விடலாம். இடுகைகளிலும் இந்த எண் காணப்படுவது, பரபரப்பான பதிவுக்கு செல்ல வழிகாட்டுவது வசதிதான் என்றாலும், மறுமொழிப் பட்டியலில் குழப்பம் கொடுக்கலாம்.)

10. #8, #9 போல் எழும் வழமையாக கேட்கும் கேள்விகளுக்கு FAQ போட்டு, உதவிப் பக்கங்களைப் பார்க்க சொல்லலாம்.

 • தேன்கூடு என்றால் ‘பல மரம் கண்ட தச்சன்‘ போல் அகரமுதலி, சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ற personalization + customization;
 • தமிழ்மணம் என்றால் ‘சூடான இடுகைகள்’, பூங்கா தேர்ந்தெடுப்புகள்;
 • என்பது போல் தற்போதைக்கு தமிழ்வெளிக்கு அடையாளங்கள், USP இல்லாதது மீண்டும் மீண்டும் வரத் தூண்டாமல், எப்பொழுதோ மட்டுமே வரவைக்கிறது.

ஏற்கனவே இருப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளாமல் தமிழ்ப்ளாக்ஸ்.காம் போல் புதியவை வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. மாற்று முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் தமிழ்வெளிக்கு பாராட்டு கலந்த வாழ்த்துக்கள்.

How to bring change in Bureaucracy

அரசின் கவனத்திற்கு

எண்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சேர்ந்து நிர்வாக சீர்திருத்தக் கமிஷனுக்கும் ஆறாவது சம்பளக் கமிஷனுக்கும் சில யோசனைகளை முன்வைக்கிறார்கள்.

1. அதிகாரிகள் சிறப்பாக செயல்பட

 • மூத்த பதவிகளுக்கு வெளியிலிருந்து ஆளெடுக்க வேண்டும்
 • குறிப்பிட்ட வேலைக்குத் தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும்
 • பதவிக்காலத்தின் மத்தியில் மீண்டும் அந்தப் பதவிக்கு ஆள்கேட்டு விளம்பரம் செய்யவேண்டும். அதே பதவியிலிருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.

2. சிறப்பான செயல்பாட்டிற்கு

 • பொதுப்பணம் சரியாக செலவழிக்கப்பட்டதா என அறிய கள அறிக்கைகளைப் பெற வேண்டும்.
 • உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர்களை நியமிக்க வேண்டும்
 • தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சிப் பிரமுகர்கள் மேயர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நன்றி: இந்தியா டுடே

Social Networking – Tamil Blogs, Thamizmanam, Poongaa

தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா?விற்கு, பிரகாஷின் பின்னூட்டத்தைப் பின் தொடர்ந்து…

1. —தமிழிலே மட்டும் தான், இது போன்ற சேவைகளைத் தரும் திரட்டி உண்டு. blogger என்ற மெகா வலைப்பதிவுச் சேவையில் கூட பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி கிடையாது.—

ப்ளாகரில் இல்லாவிட்டால் என்ன? Commentful அல்லது co.mments என்று பல்வேறு இடங்களில் (ப்ளாகர் போலவே ஆங்கில இடைமுகம் கொண்டு) பின்னூட்ட திரட்டி இருக்கிறதே. புழங்குகிற இடத்தில் (தமிழிலே கதைப்பதால்)தானே கேள்வி கேட்கத் தோன்றும்?

இங்கே ஒரு காட்டு காட்டிக்கறேன் 🙂 (அதாவது எடுத்துக்காட்டு). செனகலில் வாழ்ந்தால் Wolof-இல் இருக்கும் திரட்டி குறித்து கவலைப்படுவார்கள். தமிழில் எழுதுவதால் தமிழ் திரட்டி குறித்த சந்தேகங்கள்.

தலைவர் ஸ்டைலில் ஒரு பாடல்: ம்யூசிக்

2. —தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகள் இல்லாத ஒரு சூழ்நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.—

தமிழ்மணம்/தேன்கூடு இருப்பதால் மட்டுமே வலைப்பதிவில் பின்னூட்டங்கள் கரை புரண்டோடுகிறது என்பது ஜாதி மட்டுமே இட ஒதுக்கீடைத் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்வதைப் போல (அப்பாடா… க்ரீமி லேயரையும் உள்ளே இட்டாந்தாச்சு 😉 (ஜி.ரா.வின் ‘நீ கிரீமி லேயர். புரிஞ்சதா?’ ஒத்து ஊதிக்கறேன் )

பத்ரி, துளசி போன்ற பதிவர்களில் பின்னூட்டம் இட்டுத் தொடங்குவார்கள். இன்னும் விவகாரமானத் தலைப்புகளில் எழுது கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த வேண்டும். தமிழ் திரட்டிகளின் இலவச சேவை இந்த தகிடுதத்தங்களைப் பெருமளவில் தடுத்து, ஆக்கபூர்வமாக புதியவரை வழிநடத்துகிறது.

—உங்க பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும்—
—வலைப்பபதிவுகளுக்கு டிராஃபிக் வரவெக்கிறது எவ்ளோ சிரமமான காரியம்னு..—

தமிழ்மணம்/தேன்கூடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் பதிவுக்கு வாசகரைத் திரட்டுவதற்கு ஒரே டெக்னிக்தானோ…?

3. —பத்தாயிரம் பதிவுகளாகப் பெருகி விட்டால், தமிழ்மணம் உயரெல்லை கட்டுப்பாடு விதித்தாலும் விதிக்காவிட்டாலும், பதிவு செய்யும் frequency அதிமாகும் என்பதால் உங்க பதிவு தோன்றிய சில விநாடிகளிலேயே தொபுக்கடீர் என்று கீழே இறங்கிவிடும்—

அப்ப சைடில் ‘அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்’-இல் மணிக்கொன்றாகப் போட்டு இடம் பிடிச்சுடலாம் 😉 நாற்பது எல்லை இல்லாவிட்டால், கீழே இறங்கும் போதெல்லாம், இன்னொன்று, ‘லிஃப்ட் கராதோ’தான்.

இதற்காகத்தான் QOTD : Scobleized – “semantic” Web பரிந்துரைக்கிறார்கள்: எழுதியதை அப்படியே புரிந்து கொள்வதற்கு பதிலாக, காலத்துக்குத் தக்கவாறு, வினாவிற்கேற்ற விடையாக, ஜெஜெ x கேகே அரசுக்கு ஏற்றவாறு பொருத்தமாக மாற்றுவது எப்படி? இணையத்தின் அடுத்த கட்டம்.

இவ்வளவு உயர்ந்த நுட்பம் இல்லாவிட்டாலும், மறுமொழிகளுக்கும் செய்தியோடை இருக்கும் இந்தக் காலத்தில், அதை உபயோகித்து, முன்னோட்டங்கள் + பின்னூட்டியவர் பெயர் கொண்ட திரட்டி என்று மேம்படுத்தலாமே. மூன்றாண்டுக்கு முந்தைய நுட்பம், இன்றும் பொருத்தமா?

4. —feed reader, google reader போன்ற சேவைகள் இல்லாத நேரத்தில், —

இது எந்த காலகட்டம் ;)) Kinja, ப்ளாக்லைன்ஸ் போன்ற பல சேவைகள் அன்றும் இருந்துச்சே!

தமிழ்மணம் is a trendsetter. டக்கென்று பலரின் பதிவுகளையும் வகையாகத் தொகுத்து எளிதாகப் படிக்க வைத்தது.

—தனிப்பட்ட வலைப்பதிவாளர்களின் பாப்புலாரிட்டியை அதிகரிக்கும் நோக்கத்தில் அல்ல.—

ஆமாம்.

அட்வைஸ் (தமிழ் திரட்டிகளுக்கு) செய்யாமல் என் பதிவு நிறைவுறாது என்பதால் 😉

௧) ‘நோ ஸ்மோகிங்’ முத்திரை மாதிரி, இடுகை பூங்காவுக்கு சமர்ப்பிக்க பட்டதா/இல்லையா என்று குறிப்பால் உணர்த்த icon போடலாம்.

௨) ‘நட்சத்திரமா இருக்க விருப்பமா’ என்று பொட்டி கொடுத்து, சுய/வெளி பரிந்துரை கொடுக்க வைக்கலாம். (முன்பு எப்பொழுதோ எழுதியிருந்தவாறு, தமிழ்மணத்தின் பயனராக பதிந்திருப்பது அவசியம்.)

௩) வோர்ட்ப்ரெஸ்.காம் இரண்டு முறை எனக்கு மக்கர் செய்திருக்கிறது. ஒரு தடவை ‘நன்றியறிவித்தல்’ விடுமுறை சமயம். இரண்டு தடவையும் ‘என்னாச்சு?’ என்று மின்மடல் தட்டியவுடன், இரண்டு மணி நேரத்துக்குள் பதில் கொடுத்தார்கள். அவர்களும் தானம் கொடுக்கிறார்கள். மாட்டுக்கு பல் பிடித்து பார்க்கவும் சங்கோஜமின்றி அழைக்கிறார்கள்.

௪) Poonga – Web Design & Feedback ஆகியவற்றை பூங்காவில் வெளியிடுவதை விட, செயல்படுத்தலாம்.

௫) பூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் – Contact-இல் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கலாம்.

௬) பூங்கா – இணையத் தமிழின் முதல் வலைப்பதிவு இதழ் – வறட்டி தட்டுவது எப்படி?? போன்ற இடுகைகளை நகைச்சுவை என்று வகைப்படுத்தாமல் சரியாக பொருத்தலாம்.

௭) ‘தமிழ்மணம் திரட்டும் வலைப்பதிவுகளிலிருந்து, வாரந்தோறும் சிறந்தவையென அடையாளம் காணப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு’ (பூங்கா அறிவிப்புகள் » Blog Archive » பூங்கா வலையிதழ் பற்றிய விரிவான அறிவிப்பு) போன்ற பொலிடிகலி இன்கரெக்ட் அறிவிப்புகளால்தான் பாதி சலசலப்பு உருவாகிறது.

கொசுறு: OpenYou: The Limits of Privacy on the Social Web: இத்தனையும் இருந்தும் ஆய பயன் என்ன என்பதை சுருங்க சொல்லும் டக்கர் மேட்டர். இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

100 Days of Kindergarten – Final Project Details

பத்து பொருட்களை எடுத்துக் கொள்வது. ஒவ்வொன்றிலும் பத்து பத்தாக சேர்ப்பது என்று முடிவானது. சாப்பாடு அயிட்டங்கள் முன்னிலை வகித்து, சாக்லேட், cereal என்று தொடங்கியது. திடீரென்று பாதை மாறி விளையாட்டு காய்களைக் கோர்க்கலாம் என்று முடிவானது.

முதலில் செட் சேர்க்கும் சீட்டாட்டம்

இன்னொரு வகை சீட்டுக்கட்டு – ஃபிஷ் என்னும் கண்டுபிடிப்பு விளையாட்டு

சிறிய பொம்மை பலூன்கள்

குட்டி அடுக்குமாடி கட்டிட செங்கல்

அலைபாயுதே படப்பாடல் ஞாபகத்துக்கு வரலாம்

ஜெம் என்பதற்கு அகரமுதலியைப் புரட்டி அர்த்தம் பார்க்க வைத்தாள்

வண்ண வண்னக் கோலங்கள்

செக்கர்ஸ் காய்கள்

சதுரங்கம் இல்லை… அது மாதிரி இன்னொரு ஆட்டம்

எல்லாவற்றையும் ஒட்டும் படலம்

வெற்றிகரமான நூறாவது நாள்

முந்தைய பதிவு: E – T a m i l : ஈ – தமிழ்: Help – 100 days of Kindergarten : Ideas Required

எண்ண மழையாகக் குவித்து எங்களுக்கு உதவிய இலவசக்கொத்தனாருக்கும், ஆதிரை, சிந்தாநதி, பொன்ஸ், செந்தழல் ரவி, பாலராஜன்கீதா, சர்வேசன், ஜி, பத்மா அர்விந்த், சேதுக்கரசி & மற்றவர்களுக்கும் வணக்கங்கள்.

Help – 100 days of Kindergarten : Ideas Required

உதவி தேவை

மகள் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்ததன் நூறாவது நாள் நெருங்குகிறது. ஆசிரியர் ‘நூறை வைத்து ஏதாவது வித்தியாசமாக செய்து வா!‘ என்று கேட்டிருக்கிறார்.

‘நீதான் பார்த்திபன் மாதிரி யோசிப்பியே… அதை விட்டுட்டு உருப்படியா நூறு என்பதை எண்ணிக்கையிலும் வடிவத்திலும் கொண்டு வா’ – இது மனைவி.

‘நூறு சாக்லேட் கொண்டு போகலாம்ப்பா. எல்லாருக்கும் பிடிக்கும். நமக்கும் ஈஸி’ – இது மகள்.

சாதாரணமாக ‘நீ இதுவரை கற்றுக் கொண்ட நூறு விஷயங்களைப் பட்டியலிட்டு, அதற்குப் போதிய குறிச்சொற்களை கொடுத்து, ஆங்கிலத் தலைப்பிட்டு கொடுத்துவிடு’ என்பது என்னுடைய ஆலோசனையாக இருக்கும்.

1 முதல் 100 வரை எழுதிக் கையில் கொடுத்து விடுவாள்.

ஃபெப்ரவரி 14 ‘அன்பர் தினம்’ வருகிறது. இந்த வாரத்திலேயே க்ரௌண்ட் ஹாக் (Groundhog Day) தினம் உண்டு. இந்தியப் பின்னணியில் யோசிக்க குடியரசு தினம் சென்றிருக்கிறது.

யோசனை சொல்ல வாங்க…

கீழ்க்கண்ட நெருக்கடிகளை மனதில் வைத்துக் கொள்ளலாம்:

 • குழந்தைகளுக்கு உகந்ததாக இருக்கணும்.
 • அமெரிக்காவில் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டிருக்கணும்.
 • ஆறு வயதினரே முழுவதுமாக (பெரும்பாலும் பெரியோரின் உதவியின்றி) செய்து முடிக்கணும்.
 • காசை ரொம்பக் கரியாக்கக் கூடாது.
 • என் மகளுக்கு ஓவியம், வரைதல், ஒட்டுதல், வெட்டுதல், வண்ணம் தீட்டல் போன்றவற்றில் ஆர்வம் அதிகம்.

ஏதாவது தோன்றுகிறதா?