அமெரிக்காவில் கொஞ்ச காலமாக நிஜத்தை நாடகமாக்கி தொலைக்காட்சியில் ரியாலிட்டியைப் பார்க்கும் ஆர்வம். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு சாகசங்கள் புரிவதை Fear Factor, Survivor என்றார்கள். பெண்களும் பார்க்கவேண்டும் என்று சுயம்வரத்தை Bachelor, Fantasy Island ஆக்கினார்கள். Who wants to be a Millionaire, Are you smarter than a Fifth Grader என்று தொடர்ச்சியாக வினா விடை நேரங்களும் வந்தது.
பரிணாம வளர்ச்சியில் வந்த இன்னொரு நிகழ்ச்சி Dancing With the Stars. பெனலப் க்ரூசும் டாம் ப்ரேடியும் வருவார்கள் போல என்று தடுக்கி விழுந்ததில், ஐம்பதிலும் ஆசை வந்தவர்கள் ஆடல் கலை பழகினார்கள்.
கிட்டத்தட்ட அதே போல், விஜய் டிவியில் ‘ஜோடி #1’ துவங்க, சன் டிவியும் தொன்றுதொட்டு காப்பியடிக்கும் மரபில், சீரியல்களில் வளைய வருபவர்களை வைத்து ‘மஸ்தானா… மஸ்தானா‘ தொடங்கியிருக்கிறார்கள்.
தெரிந்த முகமாக இருவர். ‘செல்வி’ தேவிப்ரியா & ‘நினைவுகள்’ அம்மு.
நிகழ்ச்சி தேவலாம் என்பது ஒரு வரி விமர்சனம்.
என்றாலும்…
சன் டிவி தன் பார்வையாளர்கள் யார் என்பதைத் தெளிவாக புரிந்து, அவர்களை மட்டுமே எதிர்நோக்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை ‘அரசி’, கோலங்கள் பார்ப்பவர்களை நிலை நிறுத்த மட்டுமே பாடுபடுகிறது. நடன நிகழ்ச்சி என்றவுடன் கல்லூரியில் ஜாஸ், ஜைவ், டாங்கோ, வால்ஸ் பயில ஆரம்பித்தது பலருக்கும் நினைவுக்கு வந்து போகும்.
அதன் தொடர்ச்சியாக, ‘ஊ…ல.லா…’வின் நீட்சியாக மாணவர்களை, இளைஞர்களைக் கொண்டு நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்திருக்கலாம். இந்த மாதிரி மூச்சு வாங்கும் பாட்டன்களையும் குண்டு கத்தரிக்காய் வில்லிகளையும் கலந்து, மும்தாஜ் ஆட்டங்களைத் தொட்டு, சன் டிவி சீரியலில் வரும் ஜோடிகளின் வார இறுதியைப் பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக, புதுமைக்கு கால்கோள் இட்டிருக்கலாம்.
‘மஸ்தானா… மஸ்தானா’ ஆடல் அமைப்பில் வித்தியாசம் எதுவும் இல்லை. புகழ் பெற்ற பாடல்கள். தொப்புள் காட்டிய நாயகிகளுக்கு பதிலாக, விரசம் இல்லாத ஆடைகள். அதற்கு பரிதோஷமாக அபிநயங்களில் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் உரசல்கள்.
‘ஊ…ல…லா‘விற்கும் மஸ்தானாவிற்கும் ஆக்கபூர்வமான வேறுபாடு என்று பார்த்தால் நடுவர்கள்.
மீனாவாகட்டும்; தருண் மாஸ்டராகட்டும். பளிச்சென்று பட்டதை, மனம் புண்படாமல், நகைச்சுவை உணர்வோடு போட்டு உடைக்கிறார்கள்.
சிவமணி போல் ‘ஆல் தி பெஸ்ட்’ தவிர உங்களுக்கு சொல்வளமே கிடையாதா என்று பெருமூச்ச விடாமல், குறைகளை உள்ளங்கோணாத வண்ணமும், பிறர் பின்பற்ற வேண்டிய நிறைகளைப் பாராட்டியும் மிக சிறப்பாக செய்கிறார்கள்.
இதுகாறும் பிணக்குகளை பிலாக்கணம் செய்ய வைத்து ஐந்து நாள்களை ஓட்டியவர்கள், நெடுந்தொடர் ஜோடிகளை பின்னிப் பிணைய வைத்து ஞாயிற்றுக்கிழமையை ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
I think Vijay TV is really having creative ideas – Be it “Coffee with Anu” or “Jodi No.1” or “Lollu Sabha” or “Kalakka povadhu yaru?” etc…
Sun TV has a “professional team” that without any shame just starts copying the idea and makes a mockery of itself.
தாங்கள் இடுகைகளுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதற்கு எதாவது காரணமிருக்கிறதா?
ஸ்ரீகாந்த்,
—Vijay TV is really having creative ideas—
காபி வித் அனு என்பது தூசி தட்டிய ‘மலரும் நினைவுகள்’
விவேக்/வடிவேலு நகைச்சுவகளும் Whose line is it anyway போன்றவைகளும் லொள்ளு சபாவாக, ‘கலக்கப் போவது யாரா’க மாறியது
ஒரிஜினல் ஐடியா, first mover என்பதை விட, ஏற்கனவே இருப்பதை எப்படி மேம்படுத்துகிறார்கள் (அல்லது ஜஸ்ட் படுத்துகிறார்கள்) என்பதுதான் வினா 🙂
—இடுகைகளுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதற்கு—
SEO, கூகிள் தேடல் பிச்சையில் மேம்பட வாய்ப்பு என்பவை முதன்மை.
எனக்கே, பிற்காலத்தில் தேடுவதற்கு வசதியாக இருக்கும் என்பது இரண்டாவது.
தமிழ் கலந்த ஆங்கிலம்தான் சென்னையின் மொழி என்று அனுமாணிப்பதற்கும் 😉 இதற்கும் சம்பந்தமில்லை
Pingback: Sun TV - Ganesh Chathurthi special programs « Snap Judgment
பார்த்துத் தொலைப்போம்!! « இன்று – Today
எந்த மாதிரி ஆடியன்ஸ் வேணும் என்று எண்ணுவதில்தான் இருக்கிறது.
ஷில்பா ஷெட்டி கலந்து கொண்ட பிக் பிரதர், அமெரிக்க எம்.டிவியின் நிஜ நாடகங்களில், இந்த ‘ரியாலிடி’யை சிறப்பாகவே அரங்கேற்றுகிறார்கள். பதின்ம வயதினரையும் கட்டிப்போட்டு பார்க்க வைக்கிறது.
சன்/விஜய்- கள் இன்னும் இந்த ஒத்திகை பார்க்கப்பட ‘அதிரடி நிஜ’ நிகழ்வுகளை எடிட் செய்வதில் தேறவில்லை. சினிமா வெளியாகும் முன் எஸ்.ஜே சூர்யாவிற்கும் மீரா ஜாஸ்மினுக்கும் திருமணம் போன்ற வதந்திகளைக் கிளப்பி விருவது போல், டிவி கிசுகிசுக்களில் ப்ரொஃபஷனலிஸம் போதவில்லை.
hi
Masthana… Masthana’s tharun master’s judgment is worst.. Last week Neepa and Mahendarn had rocked the stage.. Actually, they dance very well comparetively to other participants. But They have rejected… I shocked… Lots of politics has been done there…. and there is only a single judge. Is he a superior to all who has gave the rights he is not a god.. this is not fair. He might wrong… and Devipreya she dance in black like a potato… but he appraised her…. what the f**k is that….. Sun TV Masthana… Masthana is worst program. Actually, this makes me bad feeling. He is so arugant. He is parising all the participate but he always dumping them.. Meena she is a transplator of Tharun…. she is coping what he says.. She is not a good judge at all.. Overall, I fed up with their judgment..
Jodi No. 1 session 2. is a nice program… Good to watch…
No politics, no aruguent, prompt and optimistic and reality show…
Kalkjar Channel Mannada Majiada….. It is almost like a flim song. But they growing show like bubblegum… Oh god! I like to mention one thing… In kamal and Rajin Hits song.. First participate, wear one costume in red and second half he changed to red.. that was nice but he shirt was open we can clear see is bunion… suddently shirt was well fit and suddently shirt was open… what was that they run a show like a film song… That was not a reality show.. They actually cheating us… There jugment was also not quite impressive… All judgment are ladies… that was one big negative…. all are saying samething only…
விவரங்களுக்கு நன்றி பார்த்தி
—there is only a single judge—
உண்மைதான்!