அ.முத்துலிங்கம் கதைகள்: http://noolaham.net/project/01/46/46.pdf
அக்கா: http://www.noolaham.net/project/13/1210/1210.pdf
அங்க இப்ப என்ன நேரம்: http://noolaham.net/project/01/47/47.pdf
திகட சக்கரம்: http://noolaham.net/project/01/85/85.pdf
மகாராஜாவின் ரயில்வண்டி: http://noolaham.net/project/02/132/132.pdf
வடக்குவீதி: http://noolaham.net/project/01/87/87.htm
வம்சவிருத்தி: http://noolaham.net/project/01/86/86.pdf
இவற்றை நூலகம்.நெட்டில் வைத்திருப்பது நல்ல விஷயம். ஏன்?
1. இணைய வாசகர்கள் எதையும், எந்தக் காலத்திலும் காசு கொடுத்து வாங்கப் போவதில்லை. அங்கொரு சண்டை, இங்கொரு பின்னூட்டம் இட்டவரின் கதை, சுஜாதா புத்தகம் என்று நின்றுவிடுபவர்கள். அவர்கள் ஹார்ம்லெஸ். டவுன்லோடுவார்கள்; வினியோகிப்பார்கள். முன்னுரையின் முதல் அட்சரம் கூட வாசிக்க மாட்டார்கள். Downloaders are non-readers; book-keepers.
2. அ. முத்துலிங்கம்னு ஒருத்தர் இருக்கிறார். அவருடைய கதைகள் நமக்குப் பிடிக்கிறது. வாசிக்க உகந்ததாக இருக்கிறது என்று தெரியவரும். Evaluation and expectation leads to buying books with money.
3. திருட்டு விசிடி, தமிழ்ட்யூப், டெக் சதீஷ் என்று உலா வருபவர்கள்தான் அதிகம். அதையே இன்னும் பன்மடங்கு பலம் கொண்ட தமிழ் சினிமா தயாரிப்பாளர்களாலும் விநியோகஸ்தளர்களாலும் நிறுத்த முடியவில்லை. Stealing is inevitable.
4. விஷயதானம் தருவது இன்றைய நாகரிகம். மேற்கத்திய ஊடகங்களில் பல சிந்தனையாளர்கள் இந்தக் கருத்தை முன்வைத்து ஆதாரபூர்வமாக நியு யார்க்கரில் எழுதி வெளியிட்டதை இங்கே i, ii, iii என்று மேற்கோளிடலாம். ஜெயமோகன் 3K+ கட்டுரைகளை வலையகத்தில் தருவதாகட்டும், சாரு நிவேதிதாவின் பெரும்பாலான புதுத்தகங்கள் அவருடைய பதிவில் இட்டுவிட்டு பின் அச்சாவதாகட்டும், இந்தக் கருத்தியலை முன் வைத்துதான். சேமிக்க வேண்டும் என்று எண்ணமிருப்பவர்களும், அவரின் பிற புத்தகங்கள் (இவ்வாறு கிடைக்காத நூல்) வேண்டுமென்பவர்களும் காசு கொடுத்து வாங்கும் தூண்டில். Serves as a gentle reminder to habitual readers and real bookworm.
அருமை.
பிரகாஷ் __/\__
//Downloaders are non-readers; book-keepers//
ரொம்பச் சரியாகச் சொன்னீர்கள். நான் மிகவும் ஆசைப்பட்டு (Legal Or Illegal) டவுன்லோட் செய்யும் பல விஷயங்களைப் படிப்பதே இல்லை. “READ THIS IMMEDIATELY” என்று கேபிடல் எழுத்துகளில் ஒரு ஃபோல்டர் வைத்து எல்லா ஃபைல்களையும் அதற்குள் போட்டுவைத்திருக்கிறேன் – கிட்டத்தட்ட 200+ கோப்புகள் சேர்ந்துவிட்டன, இதில் எதை முதலில் படிப்பது, எப்போது முடிப்பது? சுத்தப் பைத்தியக்காரத்தனம் 🙂
– என். சொக்கன்,
பெங்களூர்.
சொக்கன்,
—டவுன்லோட் செய்யும் பல விஷயங்களைப் படிப்பதே இல்லை. —-
நீங்கதானே…. நம்பிட்டோம் 😛
மேலும், சில ஆய்வு புத்தகங்கள், பிடிஎஃப் கோப்புகள் உடனடியாக வாசிப்பதற்காக இறக்குவதில்லை. எப்பொழுதாவது உதவும், என்றாவது மேற்கோள் காட்டலாம் என்னும் எண்ணத்துடன் சேமிப்புக் கிடங்கில் ஓய்வெடுக்கும்?
I am reading a book called Free by Chris Anderson, which talks about this in details. The book, of course, is available for free in google books, scribd and other places! 🙂
கொத்ஸ், மிக சரியான நெத்தியடி 🙂
என்னைப் போல் தப்பித்தவறி டவுண்லொட் செய்வதுடன் படிப்பவகள் word of mouth recommendations எழுத்தாளரை புதியவர்களிடம் கொண்டு சேர்க்க உதவலாம்.
முரளி,
—புதியவர்களிடம் கொண்டு சேர்க்க உதவலாம்.—-
இது #5. வாய் வார்த்தை, வைரல் மார்க்கெடிங்குக்கு ஈடேது!
//3. திருட்டு விசிடி, தமிழ்ட்யூப், டெக் சதீஷ் என்று உலா வருபவர்கள்தான் அதிகம். அதையே இன்னும் பன்மடங்கு பலம் கொண்ட தமிழ் சினிமா தயாரிப்பாளர்களாலும் விநியோகஸ்தளர்களாலும் நிறுத்த முடியவில்லை. Stealing is inevitable.//
திருடனிடம் திருடுவது…தப்பா…………???
🙂
—திருடனிடம் திருடுவது…தப்பா—
அரசாங்கம் வரி செலுத்துமா?
IMHO most writing in tamil is useless even if offered free :). How many of the articles by JM and CN are really worth saving in the hard disk after a quick read?. An astute reader will prefer
not to buy them if published as books as they are available for download or to read for free. Anyday I would prefer a good second hand book from Amazon for 3$ than wasting that money on the mediocre Tamil books.
தமிழ் டாம்,
அமேசானில் 3 டாலருக்கு ஏது புத்தகம். ஷிப்பிங் & ஹான்ட்லிங் சேர்த்தால் இரட்டிப்பாகிடுமே!
நீங்க சொல்வது அ-புனைவுக்கு பொருந்தும். கதை, நாவல் எல்லாம் அச்சில் படிப்பது சுகம். அதுவும், அறிந்த எழுத்தாளர் என்றால் வாங்கிப் படிக்கவே தோன்றும்.
கட்டுரைத் தொகுப்புக்கும், டவுன்லோட் எழுத்துக்கும் external hard drive கூட காசுக்குப் பிடித்த கேடுதான்.
அண்ணன் பாபா அவர்களுக்கு
‘ஆயிரம் கதைகளை டவுன்லோட் செய்த அபூர்வ தமிழர்’ என்ற பட்டத்தினை அன்போடு வழங்குகிறோம் 🙂
ஐ எம் நாட் காட்,
1000 தானா 😦 😉
பில்லியன் புத்தகம் பதிவிறக்கிய பாபா’ 😀
‘திருடனிடம் திருடுவது…தப்பா’
டபுள் தப்பு :).
ஐ எம் நாட் காட்,
—டபுள் தப்பு—
காம்ப்ளெக்சா இருக்கிறதே…
i * i == -1
அ. முத்துலிங்கம் மிகவும் நேர்மையாக, சுவையாக எழுதுபவர். கண்ணை மூடிக்கொண்டு வாங்கிப் படிக்கலாம். சில எழுத்தாளர்கள் பத்திரிகைகளில் எழுதும் தொடர்களை ஸ்கேன் செய்து இணையத்தில் ஏற்றினால் எடுத்ததை மீண்டும் அதே இடத்தில் வைப்பது போலிருக்கும்.
நான் டவுன்லோடு செய்து படித்த புத்தகங்கள் பலதைக் காசு கொடுத்து வாங்கியிருக்கிறேன். சிலவற்றை இணையத்திலேயே. நான் கூட ஒரு நாவலைப் புத்தகமாகக் கொண்டுவருவதற்கு முன் இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். 😉
சாத்தான், நன்றி!
—சில எழுத்தாளர்கள் பத்திரிகைகளில் எழுதும் தொடர்களை ஸ்கேன் செய்து இணையத்தில் ஏற்றினால் எடுத்ததை மீண்டும் அதே இடத்தில் வைப்பது போலிருக்கும்.—
😉 😛
—நான் கூட ஒரு நாவலைப் புத்தகமாகக் கொண்டுவருவதற்கு முன் இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன்—
படிச்சுட்டு ‘இதப் போய் வாங்குவானா’ன்னு விட்டுட்டுப் போகும் அபாயமுண்டு 😀
அந்தக் கருமத்தை யார் அதே பெயரில் பதிப்பிக்கப் போகிறார்கள்? பெயரை மாற்ற வேண்டியதுதான். 😀
சாத்தான்,
விவரமாத்தான் ஸ்ட்ரெடீஜி போடுறீங்க :))
//நான் டவுன்லோடு செய்து படித்த புத்தகங்கள் பலதைக் காசு கொடுத்து வாங்கியிருக்கிறேன்//
நானும் அப்படியே. என்னதான் கம்ப்யூட்டரில் படித்தாலும், புத்தக அலமாரியில் ஓர் அச்சுப் பிரதி இல்லாவிட்டால் மனசு ஒப்பாது – கூடவே, திருடிப் படித்த குற்றவுணர்ச்சி + எழுதியவருக்குப் போய்ச் சேரவேண்டிய ராயல்டியில் கை வைக்கிறோமே என்கிற உறுத்தல்
இதனாலேயே நான் எல்லா சுஜாதா புத்தகத்தையும் writersujatha விலிருந்து வாங்கி விடுகிறேன்.
சுஜாதா,ஜெமோ, எஸ்.ரா போன்றோரை வாங்கி வைத்தால்,நான் வெளியே நிற்க வேண்டியதுதான்- இவர்களெல்லாரையும் மின்வடிவில் வைத்து தேவையானபோது படித்துக்கொள்ளலாம்.
ரா கிரி, மின்வடிவில் தேடுவது மிக எளிதாக இருக்கிறது!
பிங்குபாக்: My experiences with A Muttulingam « Snap Judgment
பிங்குபாக்: முத்துலிங்கம் கொடுத்த ட்ரீட் | Snap Judgment