Aishwarya Rai gets attacked by Anonymous Mail


ஹாலந்தில் இருந்து ஐஷ்வர்யா ராய்க்கு 23,000 யூரோக்கள் தாங்கிய தபால் வந்திருக்கிறது.

Aishwarya quizzed over cash in parcel

நான் இந்தியாவில் இருந்து ஒவ்வொரு முறை அமெரிக்கா வரும்போதும், ‘லக்கேஜில் என்ன இருக்கிறது‘ என்று சுங்க அதிகாரிகள் வினவினால், பதவிசாக, ‘துணிமணி இருக்குங்க சாமீயோவ்! அப்பால கொஞ்சம் பொஸ்தவம் கூட இருக்குங்க!’ என்று உட்டாலக்கடி விடுவது போல் ‘மின் சாதனங்கள் மட்டுமே இருக்கிறது’ என்று அனுப்பியவர் டபாய்த்திருக்கிறார்.

இந்த மாதிரி புதையல்கள் அஞ்சலில் வந்தால் என்ன செய்வது? தப்பித்தால் தப்பில்லை.

முகம் தெரியாத ஒருவர், எனக்கு இவ்வாறு பொன்முடிப்பு கொடுத்தால் ‘கடவுளாப் பார்த்து பிச்சை போட்டது‘ என்று வைத்துக் கொள்ளவே தோன்றும். Reserve Bank of Indiaவோ எஃப்.பி.ஐ.யோ கதவைத் தட்டி ‘5,000 ரூபாய்க்கு மேல் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டினால், மாட்டிக் கொள்வாய்’ என்று விசாரிக்காதவரை லாபமே!

DNA – Mumbai – Aishwarya quizzed over cash in parcel – Daily News & Analysis: “Bollywood actress Aishwarya Rai is being quizzed by customs officers after a parcel from a man in the Netherlands sent to her former address was found to contain 23,000 euros ($29,500).”


| |

13 responses to “Aishwarya Rai gets attacked by Anonymous Mail

 1. நாகை சிவா

  மஞ்ச துண்டு தானா, நல்ல வேலை எனக்கு காவி துண்டு மாதிரி தெரிந்தது. அப்ப ஐஸ் எஸ்கேப்பா?

 2. வெட்டிப்பயல்

  இவ்வளவு பணம் இலவசமாவா? 😉

 3. Given a chance to whom you would send money like this:
  Asin or Trisha
  or to both 🙂

 4. //முகம் தெரியாத ஒருவர், எனக்கு இவ்வாறு பொன்முடிப்பு கொடுத்தால் ‘கடவுளாப் பார்த்து பிச்சை போட்டது’ என்று வைத்துக் கொள்ளவே தோன்றும்.//

  உங்களுக்கு எப்படி நிச்சயமாகத் தெரிந்தது ?

 5. @நாகை
  —அப்ப ஐஸ் எஸ்கேப்பா?—

  இது அமிதாப் பச்சனின் சதி ; )

  காதலரைப் பிரிக்க திட்டம்!

  அன்று ஸ்வீடன்.. இன்று நெதர்லாண்ட்ஸ்
  போஃபர்ஸுக்கும் ஐஸுக்கும் சம்பந்தமுண்டா?!

 6. @வி.பி
  —இவ்வளவு பணம் இலவசமாவா—

  TANSTAAFL – “There Ain’t No Such Thing As A Free Lunch”. ; )

 7. @மணியன்
  —உங்களுக்கு எப்படி நிச்சயமாகத் தெரிந்தது—

  Presumption of innocence – குற்றம் புரிந்தவர் தப்பித்துவிடும்வரை குற்றமற்றவரே ; )

 8. @விளிப்பிலி
  —Asin or Trisha—

  த்ரிசாவா… அவர்கள் கமலா காமேஷுக்கு அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறாரா என்று சொல்ல சொல்லுங்கள். ஒரு கோடி கொடுத்து விடுவேன். : P

 9. பத்மா அர்விந்த்

  பாலா, உங்களுக்கு அமிதாப் மேல என்ன கோபமோ. ஐஸ்வர்யா ராய்க்கு பணம் அனுப்பினா திருப்பதி உண்டியலுக்கு அனுப்பின மாதிரின்னு யாராவது சொல்லி இருப்பாங்களா இருக்கும். ஐஸ்வர்யம் கூட லக்ஷிமாதானே.

 10. போட்டோவ பாத்தா வயசானா மாதிரி தெரியுதுன்னு சொல்ல வந்தேன், அப்புறம் மக்கள் எல்லாம் பொங்கி எழுந்துருவாங்க, எதுக்கு வம்பு 🙂

 11. த்ரிசாவா… அவர்கள் கமலா காமேஷுக்கு அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறாரா என்று சொல்ல சொல்லுங்கள். ஒரு கோடி கொடுத்து விடுவேன். : P

  I know one Kamala Kamesh.She is
  just 2 years old.So be careful :).
  Thanks for revealing that you can
  afford to give one crore to Trisha
  :).

 12. $5000(Around 2 Laks Rs) per year is permitted by RBI. But source of income must provided if Bank asks.

 13. பார்சலில் வந்த வெளிநாட்டு பணம்: ஐஸ்வர்யாராயிடம் மீண்டும் விசாரணை

  புதுடெல்லி, டிச. 6-

  நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து தபாலில் ஒரு பார்சல் வந்தது. அதில் டி.வி.டி. பிளேயர், பைனாகுலர், 2 செல்போன் ஆகிய வற்றுடன் ரூ.13 லட்சம் வெளிநாட்டு பணமும் மறைத்து அனுப்பப்பட்டு இருந்தது.

  இதை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றி விசா ரணை நடத்தினார்கள். ஐஸ் வர்யா ராயிடம் இதுபற்றி விசாரணை நடத்தினார்கள். அவர் இதை யார் அனுப்பியது என்றே தெரியாது என்று கூறினார். இதனால் அவரை இந்த வழக்கில் இருந்து விடு வித்தனர்.

  இதை அனுப்பியது யார் என்று விசாரித்தபோது நெதர் லாந்தை சேர்ந்த அவினேஷ்வர் என்பவர் ரோட்டர்டம் நகரில் இருந்து அனுப்பி இருப்பது தெரியவந்தது.

  அவரிடம் விசாரணை நடத்துவதற்கு இந்திய வருவாய் புலனாய்வு துறை நெதர்லாந்து தூதரகம் மூலம் முயற்சித்து வருகிறது.

  இதற்கிடையே சுங்க இலாகா ஐஸ்வர்யா ராயை விடுவித்தாலும் அமலாக் கப்பிரிவு இப்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

  வெளிநாட்டில் இருந்து அரசுக்கு முறைப்படி தெரி விக்காமல் பணம் கொண்டு வருவது கருப்பு பணம், தடுப்பு சட்டம் மற்றும் அன்னிய செலாவணி, மேலாண்மை சட்டம் ஆகியவற்றின்படி குற்றமாகும். எனவே இந்த சட்டத்தின்படி விதிமீறல் நடந்துள்ளதாப என்று விசாரணை நடத்துகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் ஐஸ் வர்யா ராயிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

  அமலாக்கப்பிரிவு மும்பை பிரிவு துணை இயக்குனர் அதுல்வர்மா, சிறப்பு இயக் குனர் நாகேஸ்வரராவ் ஆகி யோர் விசாரிக்க உள்ளனர்.

  இதில் ஐஸ்வர்யா ராய் குற்றவாளி என்று தெரிந்தால் அவர் மீது வழக்கு தொடரப்படும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.