Daily Archives: ஜனவரி 10, 2006

பொங்கல் திரைப்படங்கள்

சன் டிவியின் டிரெய்லர் நேரமான ‘புத்தம் புதுசு‘ பார்த்தால் எல்லாப் படமும் ஒரே மாதிரிதான் பயமுறுத்துகிறது. ‘காதலன்‘ ஸ்டைலில் பறக்கும் கார்கள், கேப்டன் ரேஞ்சுக்கு நெருப்புக்குள் இருந்து வெளிவரும் சட்டை போட்டுக் கொண்டிருக்கும் பொத்தான் போடாத ஹீரோ, நாலைந்து ஹீரோயின்கள், விஷ்ஷ்க் என்று 120 டெசிபலுக்கு எகிறும் தலைப்புகள், அநேக படங்களில் மீண்டும் விவேக்.

Pongal Tamil Movies Preview:

1. பரமசிவன்: அஜீத் இளைத்து துரும்பாகியிருக்கிறார். ரஜினியால்தான் ‘சந்திரமுகி‘ ஓடியது என்பதை பி. வாசுவுக்கு உணர்த்தும் அபாயம் இருக்கிறது. அஜீத்துக்கு ‘காட்ஃபாதர்‘ வரும் வரை பொறுமை காக்க வேண்டியதுதான்.

2. ஆதி: ‘திருமலை‘, ‘சுள்ளான்‘ என்னும் புஸ்வாணங்கள் கொடுத்த ரமணாவின் அடுத்த படம். பிரகாஷ் ராஜ், மணிவண்ணன் என்று விஜய்யின் ஆஸ்தான சகாக்கள். பாடல்கள் எதுவுமே ஜனரஞ்சகமாக இல்லை.

3. இதயத் திருடன்: நுவ்வொஸ்தநந்தே நெனொதந்ந்தன (‘Nuvvostanante Nenoddantana’)-வின் மொழியாக்கமான ‘சம்திங் சம்திங்‘தான் ஜெயம் ‘ரவி’யின் அடுத்த படம். அப்பாவின் தயாரிப்பு, அண்ணனின் இயக்கம் என்று அந்தப்படம் வரும்வரை ரவியை விட்டு சௌந்த்ர்யா ரஜ்னிகாந்த் கூட தள்ளியே இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். சரண் இயக்கம், கவிதாலயா தயாரிப்பு என்பதால் படத்தை எப்படியாவது ஹிட்டாகி விடுவார்கள்.

4. கலாபக் காதலன்: சொவ்வறை வல்லுநராக ஆர்யா. மனைவியாக ஓவர் ஆக்ட் க்வீன் ரேணுகா மேனன். புதுமுக இயக்குநர் என்பதால் ஃப்ரெஷ்ஷாக இருக்கலாம்.

5. சரவணா: தெலுங்கு ரீமேக் என்பதாலும் ‘மன்மதன்‘ சிம்பு நாயகன் என்பதாலும் பத்து மேற்பட்ட பெண்கள் நாயகியாக நடிப்பார்கள். படத்தைக் குறித்து சிம்பு

“மன்மதன், தொட்டி ஜெயா போன்ற காத்திரமான (ஹெவி) குணாபாத்திரங்களுக்குப் பிறகு இந்த மாதிரி ஒரு வெகுஜன (கமர்ஷியல்) படம் செய்வது புத்துணர்ச்சி தருகிறது”

என்று சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி டயலாக் படத்தில் பேசினாலே போதும்; கே.எஸ். ரவிக்குமாருக்கு நகைச்சுவை பஞ்சமே ஏற்படாது.

6. பாசக் கிளிகள்: அமெரிக்காவில் வரி விதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக நிறுவனங்கள் பல கிளைகளைக் கொண்டு விதவிதமாக நஷ்டத்தில் இயங்கும். கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் இந்த வருட ‘கண்ணம்மா‘வாக இராம நாராயணனின் அழுவாச்சி காவியம்.

7. சுதேசி: விஜய்காந்தின் ‘பேரரசு‘வையே தவறவிட்டு விட்டேன். வித்தியாசமான சிரிப்பம்சங்கள், மாயாவாத எதார்த்தம், பொருந்தாக்காதல் என்று எப்போதும் போல இந்த முறையும் கேப்டன் ஏமாற்ற மாட்டார் என்றே நம்புகிறேன்.

8. புதுப்பேட்டை: வருதா?

படங்கள் குறித்த பின்னணித் தகவல்களுக்கு கோலிவுட் டாக்-கும் உதவியது.


| |

இன்றைய நாளேடுகளில் இருந்து – 10/01/2006

மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் – தலைமைத் தேர்தல் ஆணையர் சூசகம்
கோவை – எட்டு மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் கோவையில் ஆலோசனை நடத்திய பின் மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டன் இதனை சூசகமாத் தெரிவித்தார்.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20060109103833&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0

இந்தச் சுவர் எனக்கு.இந்தச் சுவர் எனக்கே எனக்கு…
சென்னை – சட்டசபைத் தேர்தல் ஜூரம் கட்சிகளைத் தாக்க ஆரம்பித்து விட்டது.இப்போதே விளம்பரம் செய்வதற்காக சுவர்களைப் பிடிக்க கட்சிகளிடையே போட்டி ஆரம்பித்து விட்டது.
http://thatstamil.indiainfo.com/news/2006/01/09/election.html

பயனர் அனுபவங்கள்

(ஸ்விக்கி தேடல் பொறிக்கும், ஐபிஎன் டிவிக்கும் பயனராக,வாசகர் கடிதம் எழுதுகிறேன். விருப்பங்களைப் பட்டியல் போட்டு சில சமயம் அனுப்புகிறேன். குறைகளை அடுக்கி பல சமயங்களில் மடலிடுகிறேன்.

அதே போல், தமிழ் வலைப்பதிவு சூழலில் பரவலாக உபயோகிக்கும் தமிழ்மணம் மற்றும் தேன்கூடு, இரண்டிலும் எனகுப் பிடித்த பயன்கள்; ஆசையான மாற்றங்கள்; இன்ன பிற.)

தேன்கூடு

 • ‘தேன்கூடு’-இல் மிகவும் பிடித்த அம்சம்: ‘பாபுலாரிட்டி போட்டி’யான தரப்படுத்தல் இல்லாதது. ‘அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகள்‘ இதற்கு மாற்றாக, ரேட்டிங் செய்வதற்கு ஈடானதுதான் என்றாலும், இன்னும் தேன்கூடு அவ்வளவாக புகழ் பெறாததால், abuse-க்கு உள்ளாகவில்லை. இதே போல் மற்ற புள்ளி விவரங்களையும் (தேஸி பண்டிட்டில் வருவது போல்) எத்தனை முறை, என்றைக்கு க்ளிக் செய்தார்கள் போன்றவற்றையும் கொடுக்கலாம். நாளடைவில், இந்த விவரங்களும் நட்சத்திர குறியீட்டுக்கு எழும் விமர்சனம் போல், ஒருவரே பல முறை க்ளிக்கி, பெருக்கினால், மவுசு குறையும். ஆனால், குறிப்பிட்டவரின் பதிவுகள், எவராலும் க்ளிக்கவே படவில்லை போன்ற கணக்குகளைப் பார்த்தால், வலைப்பதிவர் மனச்சோர்வடைந்து, தமிழ்மணம் முன் வைக்கப்பட்ட விமர்சனங்களை தேன்கூட்டுக்கும் முன்வைக்கலாம்.
 • உதவிப் பக்கங்களில் நேர்த்தி இல்லை. சாதாரண மக்களுக்கு சென்றடையுமாறு முன்பொருமுறை காசி, ‘படம் போட்டு பாகம் பிரித்து’ வலைப்பதிவின் கூறுகளை அலசியிருப்பார். அது போல் மாற்றினால், எல்லாருக்கும் எளிதில் புரியும்.
 • ‘DISPASSIONATED DJ’ அல்லது பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ போன்ற வலைப்பதிவர்களின் தலைப்புகள், சுட்டிகளாக மாறலாம். இதன் மூலம், ஒரே பதிவர் நாலைந்து புது இடுகைகளைக் கொடுக்கும்போது, டக்கென்று அவரின் இல்லத்துக்கு சென்று அனைத்தையும் ஒரே க்ளிக்கில் படிக்கும் வாய்ப்பு அமையும்.
 • இடத்தை அடைத்துக் கொண்டு இடைஞ்சலாக இருக்கிறது என்று தனிமனிதன் நினைக்கும் பதிவுகளை ‘-‘ போட்டு நீக்கிக் கொள்வது வசதியாக இருக்கிறது.
 • அதே போல், சனி/ஞாயிறுகளில் மேலோட்டமாக தலைப்பைப் பார்த்து படிக்க வேண்டும் என்று நினைப்பதை, ‘புத்தகக்குறி’யாக சேமித்து வைத்துக் கொண்டு, திங்கள் அன்று அலுவலுக்கு வந்தபிறகு மேய்வதும் வரப்பிரசாதம். அதன் மேல் சென்று del.icio.us-க்கு கூட புக்மார்க் போடும் வசதி பிரமாதம்.
 • தமிழ்மணத்தின் opml போலவே, ஆனால், இன்னும் மற்ற சில பதிவுகளையும் உள்ளடக்கிய ஓபிஎம்எல் வசதி கிடைக்கிறது.
 • புகைப்படங்கள் சரியாகத் தெரியாமல், அனேக நிழற்படங்களுக்கு குசும்பனின் ‘பெரியவன்’ default-ஆக தெரிகிறது.
 • ஒரே பக்கத்தில் ஐம்பது இடுகைகளை ஒரே ஷாட்டில் பார்த்து அறிய முடிகிறது.

  தமிழ்மணம் / நந்தவனம்

 • பழக்கப்பட்ட இடம்; எது எப்படி எங்கே இருக்கும் என்று கண்களுக்கு எளிதாக விளங்கும். நிறைய whitespace.
 • ‘இந்த வார நட்சத்திரம்’ என்று வலைப்பதிவர்களுக்கு அரங்கு, மறுமொழிகள் நிலவரம் ஆகிய இரண்டுமே தமிழ்மணத்தை தவறவிடக்கூடாத ஒன்றாக ஆக்குகிறது.
 • ‘வாசகர் பரிந்துரை’-யில் எந்த தொழில் நுட்ப மாற்றமும் இல்லாமல், அவ்வண்ணமே புதிய 2.0-விலும் தொடர்வது, அதன் நம்பகத்தன்மையை தொடர்ந்து குறைத்து மதிப்பிட வைக்கிறது.
 • ‘Pathivu Toolbar ©2005’ மற்றும் தமிழ்மணத்தின் சுட்டி போன்றவற்றை பயனரின் விழைவாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
 • தமிழ்மணம் தளமோ, server-ஓ தொய்ந்திருந்தால், வலைப்பதிவரின் தளமும் உலாவியில் தோன்றுவதற்கு நேரம் எடுக்கும். அதற்கு பதிலாக ஜாவாஸ்க்ரிப்ட், லோக்கலாக செயல்பட்டால், தமிழ்மணம் தளத்துடன் இருக்கும் இறுக்கம் சற்று குறையும்.
 • பதிவை இட்டவுடன் வகை செய்யாவிட்டால், எவர் வேண்டுமானாலும், வலைப்பதிவரின் இடுகையை தங்கள் விருப்பம் போல் மாற்றியமைக்கலாம்.
 • வலைப்பதிவை ஒரு category-இல்தான் சேர்க்க முடிகிறது. சினிமா புத்தகம் குறித்து எழுதினால், சினிமா + புத்தகம் என்று வகைப்படுத்த முடியாது. வலைப்பதிவின் அடுத்த தலைமுறை நுட்பமான ‘tags’ ஆகியவற்றை பயன்படுத்தி இருக்கலாம்.
 • வகைகளின் தலைப்பை சுட்டிகளாக கொடுக்கலாம்.
 • தற்போது பயன்ருக்கு கொடுத்திருக்கும் செக் பாக்ஸ் intuitive-ஆக இல்லை; அல்லது எனக்கு ஒழுங்காக வேலை செய்யவில்லை.

  இன்னொம் கொஞ்சம் திரிசமன் செய்துவிட்டு, அனுபவம் இருந்தால் பகிர்வேன்


  | |