சென்ற வருட நினைவுகூர்தல்: Tamil Film Songs – Best of 2007 Movie Music | 2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்
இந்த வருடம் – தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்
என்னுடைய திரைப்பட பட்டியல்:
பேயறைய வைத்த பத்து:
- அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்.
- குருவி – ஆளுங்கட்சி தயாரித்தால் ப்ரொடக்ஷன் க்வாலிடி கியாரண்டி; படத்தின் க்வாலிடி பணால்.
- பீமா – டாம் க்ரூய்ஸ் மாதிரி ஆகிட்டு வருகிறார் விக்ரம். த்ரிஷாவைத் தேய்ச்சால் மட்டும் போதுமா?
- பழனி – குரங்கு கையில் பூமாலை என்றால் பழமொழி; பேரரசு கையில் படம் என்றால் அதே மொழி புதுசாயிடும்.
- உளியின் ஓசை – அமெரிக்க அதிபர்களுக்கு ஓய்வெடுத்தபின் அருங்காட்சியகமோ நூலகமோ வைப்பது பொழுதுபோக்கு; அதே போல் தமிழினத் தலைவருக்கு திரைவசனம் எழுதுவது கொடும்போக்கு.
- நெஞ்சத்தைக் கிள்ளாதே – நடிக்கத் தெரிந்த நடிகையை கொண்டு நல்ல தலைப்பை நாறடித்த அகத்தியன்.
- வல்லமை தாராயோ – தன்னைத்தானே மூத்தப் பதிவராக நினைத்துக் கொண்டு சூடான இடுகைக்கும் சொந்தக்காரராய் பாவித்து படுத்தியெடுக்கும் தமிழ்ப்பதிவராக ரோல் தேவைப்பட்டால் சொல்லுங்க; பார்த்திபன் வருவார்; அவர் வந்தாலே தானியங்கியாக அகம்பாவ நிறைகுடம் ரொம்பும்.
- வைத்தீஸ்வரன் – தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு காசு கேட்கும் கழைக்கூத்தாடிக்கு கிடைக்கும் காசு கூட அதிகமாக இருக்கும். சரத்திற்கு ஏன் இந்த மசாக்கிஸ்ட் மனப்பான்மை? சமத்துவமாக ‘அரசி’யில் நடிக்க வரணும்.
- பசும்பொன் தேவர் வரலாறு: இட ஒதுக்கீடு
- அய்யாவழி: இட ஒதுக்கீடு
கொசுறு: சக்கரக்கட்டி: காசிருந்தா சேமநல உண்டியலில் நிதியாக்குங்க; அருணாச்சலத்தில் ரஜினி செஞ்ச மாதிரி ‘செந்திலை’ இயக்குநராக வைத்து படமெடுக்கவா செய்யணும்?
விமர்சகரின் விருப்ப பத்து:
- காஞ்சிவரம் – அவசியம் பாருங்க.
- பூ – புஷ்பமாரி பொழிகிறது; ஆளுயர பூமாலை குவிகிறது. வாசம் இன்னும் மோப்பம் பிடிக்காததால் நோ காமென்ட்ஸ்.
- சுப்ரமணியபுரம் – Difference between a quality movie & exploitative film: ‘Revolutionary Road’ uses 50s backdrop to define its characters. இங்கே எண்பதுகளைக் காட்டி மயக்கி சாதா சொக்குகிறது.
- தசாவதாரம் – Bolt ஆங்கிலப் படத்தில் அசகாய சூரனாக நாய் தன்னைத் தானே கற்பனை செய்து கொண்டு உலாவும். கமலும் கேயெஸ் ரவிக்குமாரும் அந்த உலகநாயக நாய்க்குட்டியாக (கவனிக்க போல் அல்ல) சஞ்சரித்ததாக வித்தகப் பதிவர்கள் எழுதி மாய்ந்த படம்.
- வாரணம் ஆயிரம் – இரண்டு விமர்சனம் எழுதியிருக்கோம்ல 🙂
- அரசாங்கம் – ஐந்து வயதுக்குட்பட்டோருக்குத்தானே விஜய்காந்த் படம் எடுப்பார் என்னும் நம்பிக்கையை பொய்யாக்கி, பத்து வயது மிகாதோரும் புளகாங்கிதமடைந்தனராம்!
- வெள்ளித்திரை – தெலுங்கில் அசல் பார்த்த ‘ரசிகர்்’ மீண்டும் விஜய்/’ரீமேக்’ ரவியை சகித்துக் கொள்வார். ஆனால், இந்த மலையாளத்தில் பார்த்தவரின் அங்கசேஷ்டையும் கலாரசனையும் இருக்கே! என்னத்த சொல்லுவேன்?
- தனம் – அதிகம் பேசப்படாததை எடுத்தாண்டதற்கான பொலிடிகலி கரெக்ட் ஒதுக்கீடு.
- இராமன் தேடிய சீதை – அந்த பசுபதி பிட் இன்னொரு முழுப்படமா இருந்திருக்கலாம்.
- பொம்மலாட்டம் – ‘கல்லுக்குள் ஈரம்’ இயக்குநர் சிகப்பு ரோஜாக்களாக டிக்..டிக்…டிக்!?
ரசிகரின் ரசனைக்கு பத்து:
- அஞ்சாதே – மற்ற படம் எல்லாம் டெட்ராய்ட்டின் மும்மூர்த்தி அமெரிக்க ஆட்டோ நிறுவனங்கள் போல் தத்தி தத்தி நடக்கும் சாலையில் லம்போர்கினியாக ஊர்வலம் காட்டி மிரட்டியது.
- பிரிவோம் சந்திப்போம் – அமெரிக்காவில் மனைவியை இட்டாண்டு வந்திருக்கீங்களா? எங்கோ கிள்ளி, நெளியவைக்கும்.
- கண்ணும் கண்ணும் – நம்பமுடியாத விஷயங்களை நம்பக்கூடிய முறையில் நடைகோணாத பாணியில் சொன்னது.
- யாரடி நீ மோகினி – என்னுடைய மேனசரை நான் டாவடித்த ஞாபகம் வந்து ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் லோக்கல்ஸ் ஆயிடுச்சுபா!
- சரோஜா – சுப்ரமணியபுரத்தை எல்லாம் கொண்டாடும் சிற்றிதழ் இந்த மாதிரி முயற்சிகளை புறந்தள்ளும் கபடவேடம் ஏனோ?
- ஜெயங்கொண்டான் – அதிகாரமும் உரிமையும் மருட்சியும் சமவிகிதத்தில் கலந்த சகோதர பாசத்தையும் சூட்டிகையான காதலும் சிவாஜிக்கு தங்கச்சியாக ஓவர்-ஆக்டிங் தந்துவிடும் அபாயமுள்ள பாவ்னாவிடம் அமரிக்கையும் தந்தற்காக ஷொட்டு.
- சந்தோஷ் சுப்ரமணியம் – சித்தார்த்தை சின்னப் பையனாகவும், ஜெனீலியாவை இன்னும் கொஞ்சம் க்யூட்டாகவும் கண்டிருந்தாலும், ஆங்கில மொழியாக்கம் படிக்காமல், பார்க்க வைத்தது.
- பொய் சொல்லப் போறோம் – ஹிந்தியில் பார்த்திருதாலும், கதையை நம்பி கதாநாயக பிம்பங்களை உதறிய படம் என்ற வகையில் நல்ல படம்.
- குசேலன் – வடிவேலுவை மட்டும் நீக்கிவிட்டால் படம் சூப்பர்.
- ஆயுதம் செய்வோம் – ‘எனக்கு நடிக்க வராது; நடனம் தெரியாது; கையையும் காலையும் சுத்துவேன்; நல்ல நகைச்சுவை ட்ராக்கை படம் நெடுக்க வைப்பேன்’ என்று சத்தியப் பிரமாணம் எடுத்து இருக்கும் சுந்தர் சியை மறப்பவர்களுக்கு ஈரேழு பிறப்பிலும் நற்கதி கிடைக்காது.
விமர்சனத்திலும் பார்க்காத ஐந்து:
- அபியும் நானும் – இன்னொரு வாரணம் ஆயிரம் இல்லியே?
- சில நேரங்களில் – நல்லா இருந்ததாம். வின்சென்ட் அசோகன் எப்படி இருக்கார்?
- சாது மிரண்டா – எப்படி இருக்கு?
- நேபாளி – மோசமில்லை என்கிறார்கள்; இனிமேல்தான் சன் டிவியில் தர்ம தரிசனம் ஆவணும்
- காதலில் விழுந்தேன் – சன் டிவி சந்தைப்படுத்தல் மட்டும்தான் USPஓ?
உங்க படம் இங்கே இடம்பிடித்திருக்கிறதா?
பிங்குபாக்: குங்குமம் பிட்ஸ் « Snap Judgment
பிங்குபாக்: Superhit Songs in Tamil Cinema - 2008 Year in Review « Snap Judgment
Vote for Best Film 2008
Dasavatharam 30% [ 26 ]
Anjathe 19% [ 17 ]
Subramaniyapuram 13% [ 12 ]
Santhosh Subramaniam 12% [ 11 ]
Varanam Aayiram 10% [ 9 ]
Abhiyum Naanum 5% [ 5 ]
Saroja 3% [ 3 ]
Poo 3% [ 3 ]
Bommalattam 0% [ 0 ]
Jayam Kondan 0% [ 0 ]
Total Votes : 86
Vote for Best Debut 2008
Parvathy (Poo) 24% [ 14 ]
Swathy (Subramaniapuram) 24% [ 14 ]
Sameera Reddy (Varanam Aayiram) 22% [ 13 ]
Ajmal (Anjadhe) 10% [ 6 ]
Lekha Washinton (Jayam Kondan) 8% [ 5 ]
Saranya Mohan (Yaaradi Nee Mohini) 5% [ 3 ]
Shantanu (Sakkarakatti) 3% [ 2 ]
Seril Brindo (Arasangam) 1% [ 1 ]
Piya (Poi solla porom) 0% [ 0 ]
Poonam Bajwa (Seval) 0% [ 0 ]
Total Votes : 58
Vote for Best Director 2008
Mysskin (Anjathe) 31% [ 21 ]
Sasikumar (Subramanyapuram) 19% [ 13 ]
Gautam Menon (Varanam Ayiram) 14% [ 10 ]
Venkat Prabhu (Saroja) 10% [ 7 ]
Sasi (Poo) 8% [ 6 ]
Bharathiraja (Bommalaattam) 7% [ 5 ]
KS Ravikumar (Dasavatharam) 4% [ 3 ]
Radha Mohan (Abhiyum Naanum) 2% [ 2 ]
Simbu Devan (Arai en 302-il Kadavul) 0% [ 0 ]
Jeeva (Dhaam dhoom) 0% [ 0 ]
Total Votes : 67
Vote for Best Cinematographer 2008
Ravivarman (Dasavatharam) 44% [ 27 ]
Rathnavelu (Varanam Aayiram) 32% [ 20 ]
Mahesh Muthusamy (Anjadhe) 8% [ 5 ]
SS Kadhir (Subramaniyapuram) 8% [ 5 ]
Jeeva (Dhaam Dhoom) 4% [ 3 ]
Muthiah (Poo) 1% [ 1 ]
Total Votes : 61
Vote for Best Comedian 2008
Premji Amaran 31% [ 20 ]
Vadivelu 25% [ 16 ]
Vivek 14% [ 9 ]
Mirchi Siva 14% [ 9 ]
Santhanam 9% [ 6 ]
Ganja Karuppu 3% [ 2 ]
Karunas 1% [ 1 ]
Total Votes : 63
Vote for Best Supporting Actor 2008
Prakash Raj (Santhosh Subramaniam, etc.) 36% [ 21 ]
Sasikumar (Subrapuramaniam) 20% [ 12 ]
Ajmal (Anjadhe) 13% [ 8 ]
Pasupathy (Raman Thediya Seethai, etc.) 8% [ 5 ]
Raghuvaran (Yaradi Nee Mohini, etc) 8% [ 5 ]
Samuthrakani (Subramanyapuram) 5% [ 3 ]
Prasanna (Anjadhe) 5% [ 3 ]
Sampath (Saroja) 1% [ 1 ]
Jayaram (Saroja, Dhaam Dhoom) 0% [ 0 ]
Kishore Kumar (Jayam Kondan) 0% [ 0 ]
Total Votes : 58
Vote for Best Supporting Actress 2008
Simran (Varanam Aayiram) 53% [ 34 ]
Lekha Washington (Jayam Kondan) 20% [ 13 ]
Lakshmi Rai (Dhaam Dhoom) 6% [ 4 ]
Vimala Raman (Raman Thediya Seethai) 4% [ 3 ]
Mallika Sherawat (Dasavatharam) 4% [ 3 ]
Nayanthara (Kuselan) 3% [ 2 ]
Navya Nair (Raman Thediya Seethai) 3% [ 2 ]
Aishwariya (Nayagan, etc) 3% [ 2 ]
Divya Spandana (Varanam Aayiram) 0% [ 0 ]
Meena (Kuselan) 0% [ 0 ]
Total Votes : 63
Lots of people write about this issue but you said some true words!