தமிழ்மண மின்மடல் அறிவிப்பு:
அன்புள்ள பதிவருக்கு,
தமிழ்மணத்தின் வணக்கங்கள்.
இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளைத் தெரிவுசெய்யும் தமிழ்மணம் விருதுகள்-2008 வழியாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.
இவ்விருது பற்றிய அறிவிப்புகள், ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தன. தற்சமயம் இத்தெரிவு பற்றிய முழுமையான விபரங்கள் தமிழ்மணம் வலைப்பதிவில் வெளியிடப்படிருக்கின்றது.
இப்பொழுதிலிருந்து 2009-01-05 11:59 PM வரை, இவ்விருதுத் தெரிவிற்கென அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புப் பக்கத்தில் இவ்வாண்டில் (2008) எழுதப்பட்டவற்றுள் மிகச்சிறந்ததாக நீங்கள் கருதும் உங்களது இடுகைகளை பரிந்துரைக்கலாம்.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புத் தளத்தில் உள்நுழைவதற்கான தொடுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு மட்டுமேயான தனித் தொடுப்பாகும்.
இத்தெரிவுத் தளத்தில் இவ்வாண்டில் நீங்கள் எழுதிய அனைத்து இடுகைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதில் பிரிவுக்கு ஒன்றாக உங்களது சிறப்பான இடுகைகளை சமர்ப்பிக்க இயலும்.
இப்பக்கத்திற்கு நியமனங்கள் வரவேற்கப்படும் கால இடைவெளியில் எத்தனை முறை வேண்டுமானாலும் உட்செல்லலாம்.
இச்செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு எழும் கேள்விகளை/ஐயங்களை தமிழ்மணம் வலைப்பக்கத்தில் பின்னூட்டமாக எழுப்பலாம்.
இவ்விருதுகள் சிறக்க உங்களின் பங்களிப்பை ஆர்வமுடன் எதிர்நோக்குகின்றோம்.
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி.
வாழ்த்துக்களுடன்
தமிழ்மணம்.நெட் – விருதுக்குழு::2008
குறிப்பு: இம்மின்னஞ்சல் தானியங்கியாக அனுப்பப்படுவதால், இம்முகவரியை எவ்விதத்திலும் உபயோகிக்க இயலாது.
இப்போது மேம்படுத்த சில ஆலோசனை + கருத்து:
- இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் 7-இல் சரியாகத் தெரியவில்லை. பக்கவாட்டில் உள்ளது போல் தெரிகிறது.
- ‘ஏன் இவ்வாறு தெரிகிறது? என்ன நிவர்த்தி?’ என்பதை எல்லாம் தீர்த்துவைக்க மின்னஞ்சல் முகவரி கொடுத்து உதவலாம். தொடர்பு கொள்ள ட்விட்டர் முதற்கொண்டு பல்வேறு தொழில் நுட்ப கருவிகள் இருக்கும் யுகத்தில் Contact Form, அரட்டை ஐடி என்று எதுவும் இல்லாமல் இருப்பது வசதி அளிக்கவில்லை.
- ‘ஐயங்களை தமிழ்மணம் வலைப்பக்கத்தில் பின்னூட்டமாக எழுப்பலாம்’ என்பது சிரமமான வசதி. மறுமொழி ஒழுங்காக சென்றதா? ஸ்பாம், எரிதத் தடுப்பானில் கபளீகரம் ஆனதா? விவகாரமான கேள்வி என்பதால் மட்டுறுத்தப் பட்டு மறுக்கப்பட்டதா? என்று கதங்கதங்கென்று கதி கலங்காவிட்டாலும், ஏதுவாக இல்லை.
- ‘தெரிவுத் தளத்தில் இவ்வாண்டில் நீங்கள் எழுதிய அனைத்து இடுகைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.’ என்கிறார்கள்: ஆனால், 2006இலிருந்து நான் எழுதிய அனைத்துப் பதிவுகளும் இடம்பிடித்துள்ளன.
- ஒரு வருடத்துக்கு ஏறக்குறைய 400+ பதிவுகள். எல்லாவற்றையும் மூன்று முறை இடம்பிடிக்க வைக்கும் பக்கத்திற்கு பதிலாக மேட்ரிக்ஸ் கொடுத்து சுலபமான இடைமுகம் ஆக்கி இருக்கலாம். பிரிவு-1, பிரிவு-2 என்று எளிதாக செல்லுமாறு வடிவமைத்து, ஸ்க்ரால் செய்து தவறவிடுவதை இந்த மாதிரி புத்திசாலித்தனமான லிஸ்ட் தவிர்க்கும்.
- தேர்வு செய்த்தை வாபஸ் வாங்கும் வசதியும், போட்டிக்கான இடுகையை மாற்றி அமைத்துக் கொள்ளும் மறுவாய்ப்பும் தூள்.
- எதைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதை மிகவும் சுலபமாக (Can you confirm your selections? என்பது போல்) வைக்கலாம். மீண்டும் சிறப்புத் தளத்தில் உள்நுழைவதற்கான தொடுப்பு கொண்டு நம்முடைய தேர்வு பக்கத்திற்கு சென்றால் சட்டென்று மூன்று விழைவுகளையும் முகப்பில், பக்கத்தின் மேலே பளிச்சென்று காட்டவேண்டும்.
- இதுவரை நாமினேட் ஆனவர்கள் பட்டியல் எங்கே கிடைக்கிறது?
- போட்டி வெற்றிகரமாக நடக்க மகிழ்ச்சி கலந்த வாழ்த்துகள்.
- நீங்க கலந்து கொண்டாச்சா?
தொடர்புள்ள இடுகை: தமிழ்மணம் விருதுகள் 2008 – இடுகைப் பரிந்துரைகள் துவக்கம்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 2008, Awards, அனுபவம், நிகழ்வுகள், Blogs, Contests, Events, Posts, Suggestions, Thamilamanam, Thamizmanam, TM, TMI, UI