Tag Archives: SMS

இந்தியத் தேர்தல்: தேவையான மாற்றங்கள்

இந்தியத் தேர்தல் முறை காலத்திற்கேற்ப மாறலாம். தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவராக இருப்பது தவறு; பிரதம மந்திரி வேட்பாளரை அறிவிப்பது இழுக்கு என்று சாடுவது எல்லாம் தனி காமெடி. அதை விட்டுவிடலாம்.

வாக்களிப்பு முடிய 48 மணி நேரம் இருக்கிறபோது பிரச்சாரத்தை முடிப்பது விநோதமான அந்தக் கால வழக்கம். தொலைக்காட்சி, இணையம், தொலைபேசி போன்ற தொடர்பு சாதனங்கள் இல்லாத தரைவழி அஞ்சல் மட்டுமே உள்ள காலத்திற்கு ஏற்ற வழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் பிரச்சாரம், குறுஞ்செய்தியில் தகவல், கட்சி டிவியில் விளம்பரம் என்றான பிறகு கடைசி நிமிட பொதுக்கூட்டத்திற்கு மட்டும் தடை போடுவதை விட்டு விடலாம்.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பது அடுத்த ஹைதர் அலி கால பழக்கம். எந்த ஊரில் இருக்கிறோமோ, அந்த ஊரில் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். பெங்களூரில் படிக்கிறோமா… அங்கேயே வாக்களியுங்கள். பம்பாயில் பணிபுரிகிறீர்களா… அங்கேயே வோட்டுப் போடுங்கள். சொந்த ஊருக்கு பஸ் பிடித்து, அந்தத் தொகுதியில் யார் நிற்கிறார் என்று சாதி பார்த்து, கட்சி பார்த்து வாக்களிப்பதை விட, வசிக்கும் இடத்திற்குப் பொருத்தமான வாக்காளரைத் தேர்ந்தெடுப்பது காலத்திற்கேற்ற நடைமுறை.

வாக்களிப்பது என்பது சலுகை அல்ல. கடமை. வாக்குப் போடுவதை உரிமையாக நினைப்பவர்கள் வேலை நாளன்றும் வாக்களிப்பார்கள். வாக்களிப்பதை சிறப்பு தள்ளுபடியாக நினைப்பவர்களுக்குத்தான் லீவு கொடுக்க வேண்டும். மாலையில் எட்டு மணி வரை வாக்குப் போடும் நேரத்தை நீட்டிக்கலாம். மதிய உணவிற்கு செல்வது போல், ஊழிய நாளின் நடுவே வாக்குச்சாவடிக்கு சென்று வரலாம். தேர்தல் நாளுக்காக அரசு விடுமுறை விடுவது சோம்பேறித்தனத்தின் உச்ச எடுத்துக்காட்டு.

கடைசியாக வாக்குப் போடும் போது பிறர் பார்க்க, தன் வாக்கை செலுத்துவது. இதுவும் ஒன்றும் கொலைக் குற்றமல்ல. குழந்தைகளை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று, எவ்வாறு வாக்களிப்பது, எந்த பொத்தானை அழுத்துவது என செயல்முறை விளக்கம் செய்ய உதவலாம். என்னைப் போன்ற சந்தேகப் பிராணிகளுக்கு இறுதி கட்ட சோதனையாக, இந்த இன்னொருவரின் துணை உதவலாம். ரகசிய காப்பு விதிமுறை மீறல் எல்லாம் பத்தாம்பசலித்தனத்தின் வெளிப்பாடு.

இவ்வளவும் மாறினால் கூட என்ன… ஒரு மண்டலம் கூட பொறுப்பு வகிக்க திறனில்லாதவர்கள் கூட பிரதம மனிதிரியாகப் போட்டியிடும் சுதந்திர நாடாக இருப்பது மகிழ்ச்சியான கொண்டாட்டம்

டிஜிட்டல் கொலையாளிகள்: 66A – ITAct

இன்றைய தேதியில் கசாப்களை விட இணையத்தில் கொலை செய்பவர்கள்தான் அதிகம்.

சின்மயிக்கு @ போட்டு ராகிங் செய்பவர்கள், கார்த்தி சிதம்பரத்தை கிண்டல் அடித்து வெறுப்பேற்றுபவர்கள், பெங்களூர் பிகாரி வன்முறை, ரோஜா செல்வமணி கருத்து காவலர்கள், பால் தாக்கரே என்று யாரை விமர்சித்தாலும் காவல்துறையும் சட்டம்+ஒழுங்கும் துள்ளி எழுகிறதே… ஏன்?

இந்த மாதிரி கோபக்கார புரபசர்களுக்கும் பகிடி புரொகிராமர்களுக்கும் யார் முன்னோடி?

கென்னடியை சுட்டது யார் என்று தெரியும். ஆனால், எதற்காக என்பது அமெரிக்கர்களுக்கு புரியாத புதிர். மூன்று திரைப்படங்கள், பதினேழு புத்தகங்களாவது ஜே.எஃப்.கே. கொலைவழக்கு குறித்து அலசி ஆராய்ந்திருக்கிறது. இதெல்லாம் நடந்து முடிந்த மே 2005, நாஷ்வில் நகரத்தில் இருந்து விக்கிப்பீடியாவில் ஒருவன் எழுதுகிறான்:

1960களில் அட்டர்னி ஜெனரலாக இருந்த கென்னடியின் உதவியளாராக ஜான் செய்காந்தளர் பணியாற்றினார். ஜான் எஃப் கென்னடியும் அவரின் சகோதரர் பாபி கென்னடியும் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அவர் மேல் சில காலம் சந்தேகம் இருந்தது. ஆனால், அவை நிரூபிக்கப்படவில்லை. 1971ல் ஜான் செய்காந்தார் சோவியத் ருசியாவிற்கு இடம் மாறினார். 1984ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.

உண்மையில் ஜான் செய்காந்தளர் மார்ட்டின் லூதர் கிங்குடன் போராடியவர். கென்னடிக்காக ஊழியம் செய்தவர். கருப்பின போராட்டத்தில் பங்கு பெற்றவர்.

அவரிடம் இந்த விஷயம் பற்றி விசாரித்தபோது, “என்னப் பற்றி எதற்கு தவறாக எழுதணும்? அதில் எள்ளளவு மட்டுமே உண்மை இருக்கிறது. அவருடைய செயலாளராக இருந்திருக்கிறேன். கென்னடியின் இறுதி ஊர்வலத்தில் அவரை தூக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இந்த எழுபத்தெட்டு வயதில் விக்கிப்பிடியாவைக் கற்றுக் கொண்டு, இந்த அவதூறை நீக்குவது எப்படி?” என்று சோர்வும் வருத்தமும் சேறடித்தவர் எவர் என்று கூட தெரியாத அச்சமும் கலந்து பேசியிருக்கிறார்.

கென்னடி குறித்த விக்கி பக்கத்தில் இந்த வடிகட்டின பொய் நூற்றி முப்பத்திரண்டு நாள்கள் நிலைத்து லட்சக்கணக்கானோர் பார்வைக்கு சென்றுள்ளது. வழக்கம் போல் இதை ஆதாரமாகக் கொண்டு ஆன்ஸ்வர்ஸ்.காம், கூகில், ரெபரன்ஸ்.கொம் போன்ற கல்லூரி மாணவர்களும் பள்ளிச் சிறுவர்களும் பயன்படுத்தும் தளங்களும் ததாஸ்து சொல்லி திக்கெட்டும் தகவலைப் பரப்பி இருக்கிறது.

நீங்கள் சுடப்பட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் கேரக்டர் கொலையுண்டதை ஊரார் அறிந்திருப்பார்கள். நம் குணச்சித்திரம் சின்னாபின்னமானது நோர்வே முதல் நமீபியா வரை பரவியிருக்க நமக்கு ரொம்பவே பொறுமையாக அறிவிக்கப்படும். அதுவும் நாமே கண்டுபிடித்தால் மட்டுமே சாத்தியம்.

இந்த மாதிரி இழுக்குகளில் இருந்து சாமானியர்களைக் காப்பாற்றவே சட்டமும் ஒழுங்கும் செகஷன் அறுப்பத்தி ஆறு ஏ-வை உண்டாக்கி இருக்கிறது.

ஆனால், 66ஏ நியாயமாக உபயோகமாகிறதா என்றால், இந்தியாவின் எல்லா சட்டமீறல்கள் போலவே அதுவும் மக்களுக்கு பிரயோசனமின்றி போகும் உபத்திரவ பட்டியலில் +1

A for Apple – Tag version for Twitter IDs

சென்ற வருடத்தில் A for Apple tagஐ ரவி உபயத்தில் போட்டிருந்தேன். அவ்வாறே ட்விட்டர்.காம் பயனர் பெயர்களில், எவர் பெயர் என்னுடைய பட்டியலில் வந்து நிற்கிறது என்னும் கேள்விக்கான விடை:

செய்முறை:
1. ஃபயர் ஃபாக்ஸ் திறக்கவும்
2. http://twitter.com/ தட்டச்சவும்
3. ‘ஏ’ விசையைத் தட்டியவுடன் எந்த முகவர் ஐடி வந்து நிற்கிறது?

A for anathai
B for bseshadri
C for cvalex
D for dynobuoy
E for elavasam

F for twitter.com favorites
G for gchandra
H for hemanth
I for ivansivan
J for joe_milton

K for ksrk
L for lazygeek
M for msathia
N for narain
O for ommachi

P for peyarili
Q for யாருமில்லை
R for ravidreams
S for srikan2
T for TamilDiaspora

U for யாருமில்லை
V for valarmathi2008
W for writerpara
X for யாருமில்லை
Y for yathirigan

Z for யாருமில்லை

தொடர்புள்ள பட்டியல் பதிவுகள்:

1. Top Tamil Twitter users (by status update numbers) « 10 Hot

2. Top 16 Tamil Twitter Users (by influence) « Snap Judgment

ஜெயமோகனை சந்தித்த கதை

beto_frota-cashews-Colors-nose-cool-flickr-photos-imagesஇதற்குப் பெயர் சீமான் ஜோக்காம்.

எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்த குறிப்புகளை இயக்குநர் சீமானின் நகைச்சுவையைக் கொண்டு துவங்க வேண்டாம்தான். இருந்தாலும் எங்கேயாவது ஆரம்பிக்க வேண்டுமே!

இன்னொன்றும் இருக்கிறது. ஜெமோ சொன்னதில், என் மனதில் என்ன ஏறி நிலைத்து நிற்கிறது என்பதை இதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அல்லது இப்படியும் வைத்துக் கொள்ளலாம். ஜெமோவிற்கு ஆளை எடைபோட்டு எவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் எனலாம்.

ஏதோ ஒன்று… சங்கதிக்குப் போயிடலாம்.

இது இஞ்சினீயரிங் முடித்துவிட்டு மணிரத்னத்திற்கு அசிஸ்டென்ட் டைரக்டராக போக விரும்பியவனின் கதை. விதி விளையாட, இராம நாராயணனின் உதவி இயக்குநராகிறான்.

பாம்பு சேஸ்.

Sylvan_Flickr-Snakes-Green-Rama-Narayanan-Moviesஜிகுஜிகுவென்ற பச்சை சட்டைக்காரனை பாம்பு துரத்தோ துரத்தென்று ஓட்டுகிறது. புல் தடுக்கி சகதியில் விழுந்து விடுகிறான். இது திரைக்கதையில் இல்லை. அம்மன் கோவில் வரை சென்றடைய வேண்டும்.

சட்டை மாற்ற அனுப்பி வைக்கிறார் நெறியாளுநர்.

பார்த்தால், இன்னொரு பச்சை சட்டையைக் காணோம். க்ரூப் டான்சுக்கு வாங்கிய மஞ்சள் இராமராஜன் மட்டுமே நிறைய இருக்கிறது. காஸ்ட்யூம்காரருக்கு இயக்குநர் டெக்னிக் தெரியும். பச்சைக்கு பதிலாக மஞ்சள் போட்டு அனுப்பிவிடுகிறார்.

நம்ம அசிஸ்டென்ட் மணிக்கு இராவணன் ஆக வேண்டியவர். விடுவாரா! கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கன்டினியூட்டி பார்ப்பவர். ‘சுரேகா! சுலேகா!! ஷிமோகா!!!’ என்று கத்தி முறையிடுகிறார்.

இராமநாராயணன் அவரை ஆற்றுப்படுத்தி, கடகடவென்று காட்சியை சுட்டு முடிக்கிறார்.

“என்னங்க இது… இப்படி பண்ணிட்டீங்க? ஆரம்பத்துல துரத்தறப்ப பச்சை கலரு. இப்போ மஞ்சள். சனங்க லாஜிக்கா கேள்வி கேப்பாங்களே! திரும்ப இன்னொரு நாள் ஷூட்டிங் செஞ்சரணும்”

“அதெல்லாம் டப்பிங்கில பார்த்துப்பேன்”. இது இயக்குநர் சொன்னதாக சீமான் சகபாடிகளிடம் சொல்வது.

வெறுத்துப் போன அசிஸ்டென்ட் தன் வேலையைத் துறந்து இமயமலைக்கு செல்லும் வழியில் அக்ஷர்தாமில் ஐமேக்ஸ் பார்த்துவிட்டு, பட ரிலீஸன்று சென்னை திரும்பி விடுகிறார்.

அந்தக் காட்சியில் டைரக்டர் எப்படி சமாளித்தார் என்னும் ஆவல். பார்க்கிறார். அந்த சேஸிங் சீனும் வருகிறது.

பச்சை சட்டை. துரத்தல்.

“டேய்… நீ சட்டை மாத்தினேனா எனக்குத் தெரியாதுன்னு நெனக்கிறியா!? பச்சசட்டக்காரந்தானே நீயு!” பாம்பு பேசிவிட்டது. மஞ்சள் சட்டை துரத்தல் தொடர்கிறது.

இதுதான் சீமானின் ராமநாராயணன் ஜோக் என்று ஜெயமோகனால் சொல்லப்பட்டதின் பாபாக்கம்.

Top 16 Tamil Twitter Users (by influence)

How to evaluate Twitter/Microblog Influence?

Top Tamil Twitter users (by status update numbers) பதிவுக்கு ட்விட்டர் பதில்கள்:

TamilDiaspora — re:Top Tamil Twits, following/followers ratio & followcost should be the prime factors in ranking the users,status update is plus

ரவி — a combination of Number of followers, following Vs followers ratio, google page rank would be a good way to rank.

TamilDiaspora — But I want quality Tweets as well, following/follower ratio (sans celebrities) &followcost will give some idea about the user


இன்னாரின் தமிழ் வலைப்பதிவுக்கு எவ்வளவு மவுசு என்று கணக்கிடுவது போலவே, ஒருவரின் ட்விட்டர் தகவல்களுக்கு எவ்வளவு கிராக்கி என்பதை கணிக்கலாம்.

சில புள்ளிகள்:

  1. ரவி சொல்வது போல் கூகிள் பேஜ்ரேங்க் எண் என்ன?
  2. எத்தனை பேர் இவரை பின் தொடர்கிறார்கள்?
  3. இவரை பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா?
  4. இவர் பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா? அவர்களிடமிருந்து வரும் சுவாரசியங்களைப் போதிய இடைவெளியில் ரீ ட்வீட்டுகிறாரா?
  5. தலையுமில்லாமல், வாலுமில்லாமல் ட்வீட்டாமல், கொஞ்சம் இடஞ்சுட்டி, பொருள் விளக்கி, முழுச்செய்தியைக் குறுக்கித் தருகிறாரா?
  6. அடர்த்தி (அ) பல்சுவை: ஒரே தலைப்பில் வரும் விஷயங்களைக் கொடுக்கிறாரா? அந்தப் பொருள் அலுக்கும்போது, சாமர்த்தியமாக சொந்த வாழ்க்கை, பிற செய்தி அலசல் என்று வித்தியாசங்காட்டுகிறாரா?
  7. முகத்தைக் காட்ட வேண்டாம். கேரக்டர் தெரியுமாறு, பின்னாலிருக்கும் இரத்தமும் சதையும் கொஞ்சமாவது உருப்பெறுமாறு இயங்குகிறாரா?
  8. ஏற்கனவே வலையில் இயங்கியவரா? புகழ்பெற்றவரா? நில, புலம், அந்தஸ்து மாதிரி இணையபட்டா பெற்றவரா?
  9. தன்னிடம் வினா கேட்பவரிடம் பதில் கொடுக்கிறாரா?
  10. சும்மா கீச்சு, கீச்சு என்று தான் மட்டும் கத்திக் கொண்டிராமல், உரையாடலில் ஈடுபடுகிறாரா?
  11. தன் ஸ்டேட்டஸ்களை பாதுகாத்து வைத்துள்ளாரா? (பின் தொடரும் கூட்டத்தைவிட, பின் தொடர்பவர்களின் அறிமுகம் கோருபவரா?)
  12. ரஜினி படம் போல் அத்தி பூக்கும். அந்த மாதிரி எப்பொழுதாவதுதான் டிவிட்டுகிறாரா?
  13. அவரைத் தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத தகவல்களை, உங்களின் கேள்விகளுக்குப் பொருத்தமான விடையாக்கித் தருகிறாரா?
  14. யாரைப் படிக்காவிட்டால், தலைவெடித்துவிடும்?
  15. கடைசியாக, சொல்லும் அப்டேட்களினால் ஏதாச்சும் நேரடி பலன் எனக்குக் கிடைக்கிறதா?

ஒவ்வொன்றுக்கும் இன்னாரைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது அவரவருக்குத் தெரியும் என்பதால், நோ பட்டியல். இருந்தாலும், எனக்கே காலப்போக்கில் இந்தப் பதிவு புரியாமல் போகும் அபாயம் இருப்பதால்:

(எண்கள் ஒரு வசதிக்காகத்தான்… எந்த வரிசையிலுமில்லை)

  1. வளர்மதி (valarmathi2008)
  2. ஆர் செல்வராஜ் (rselvaraj)
  3. பரத் (barath)
  4. ரோசாவசந்த் (rozavasanth)
  5. எழுத்தாளர் பாரா (writerpara)
  6. சிவராமன் ஜி (sivaramang)
  7. அரவிந்தன் கே (Aravindank)
  8. சஜீக் (sajeek)
  9. விக்கி (vickydotin)
  10. கேப்ஸ் (kaps_)
  11. இரா முருகன் (eramurukan)
  12. வெங்கட் (donion)
  13. செந்தில் (chenthil)
  14. அனாதை (anathai)
  15. சஞ்சய் சுப்ரமணியன் (sanjaysub)
  16. -/பெயரிலி. (peyarili)

ட்விட்டர் குறித்த முந்தைய பதிவு:

1. ட்விட்டர்: எளிய அறிமுகம்

2. அடுத்த யுகப் புரட்சிக்குள் நுழைய நீங்கள் தயாரா? A Concise Introduction to Twitter.com and Why you should join there?

கொடூர மொக்கை

Irrestible-billboard-Ads-Banners-Posters-Glade-detergent-scent-Catchyநன்றி: குங்குமம்

ஒருத்தருக்கு பெரிய வயறு.

அதுக்காக டாக்டர்கிட்ட போறாரு.

டாக்டர் அவரை சொட்டுநீலம் குடிக்கச் சொல்றாரு.

ஏன்? ஏன்? ஏன்?

ஏன்னா சொட்டு நீலம் குடிச்சா, பல் எல்லாம் நீலமா மாறும். அதாவது ப்ளூடூத்!

ப்ளூடூத்ங்கறது ‘வயர்’லெஸ் ஆச்சே!

State of the Communications with Obama

Obama-Facebook-Twitter-Message-E-Mail-Tech-Clemency

‘ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் பயன்படுத்தாதே!’

Harry Lewis: “Blown to Bits: Your Life, Liberty, and Happiness After the Digital Explosion.”

Almost everything we now do on a regular basis, from sending emails, taking photographs, writing text messages, calling on our cell phones, downloading music, typing on our computers, and using our credit and ATM cards, all of it generates information. And every single day the endless information generated by our ever-expanding digital footprints is recorded, tracked, searched through, sold, analyzed, and saved forever.

Some might call this hyper-networked digital explosion and its potential for collaboration and innovation a kind of utopia. But others warn that it also raises important concerns about privacy, identity, freedom of expression, accountability, and the future of democracy.

1. செல்பேசியை அணைத்து விட்டாலும் ஒட்டு கேட்கலாம்.

அந்தக் காலத்தில் வீட்டுக்குள் புகுந்து, வேவு பார்க்கும் கருவியை நிறுவினார்கள். ஆனால், இன்றோ, மிகவும் சுளுவாக சாஃப்ட்வேரை உங்களின் செல்பேசிக்கு அனுப்பி விடுகிறார்கள்.

அதன் பிறகு உங்களின் ஒவ்வொரு பேச்சையும் ஒட்டுக் கேட்கலாம்.

இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மாஃபியா தலைவர்களின் குற்றத்தை நிரூபித்து இருக்கிறார்கள்.

எஸ்.வி சேகருக்கு குளிராடி போட்டது நதியா காலம். எஃப்.பி.ஐ. செல்பேசி மூலம் உங்களைப் பார்ப்பது இந்தக்காலம்!

~oOo~

2. தான்யா ரைடரின் சம்பவம்:

மனைவியைக் காணவில்லை என்று கணவன் போலீசை நாடுகிறார். காவல்துறையோ, ‘உங்கள் மனைவி சுதந்திரத்தை நாடி, பிறிதொரு துணையைத் தேடி சென்றிருக்கலாம். எனவே, அவரைத் தேட மாட்டோம். தேடவும் கூடாது!’ என்று மறுத்து திருப்பியனுப்பி விடுகிறது.

ஒரு வாரம் கழிகிறது.

ஒரு வேளை கணவனே, தன் மனைவியைத் தீர்த்துக் கட்டியிருப்பாரோ என்று காவலர்களுக்கு சந்தேகம் வருகிறது. அதனால் அவரை குற்றஞ்சாட்டுவதற்காக தான்யாவைத் தேடத் துவங்கினார்கள்.

கார் விபத்தில் சிக்கிய தான்யா குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு வாரப் பட்டினியில் சேதமடைந்த காரில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப் பட்டார்.

பெண் சுதந்திரம் வேண்டுந்தான்! குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க வேண்டுந்தான்!!

அதற்காக, கணவன் புகார் தந்தால் எஃப்.ஐ.ஆர். போட மறுக்கலாமா?

~oOo~

3. நீங்கள் நல்ல தந்தையா? பொறுப்பான தாய்?

இது விவாகரத்து கேஸ்.

கடுமையாக உழைக்கும் மனைவி சொல்கிறாள், ‘நான் என் குழந்தையை மிக சிறப்பாக கவனித்துக் கொள்வேன்’.

கணவனின் வக்கீல் தன் பக்க சாட்சியாக சுங்கச்சாவடிகளில் கட்டும் வரி ரசீதுகளை கொண்டு வரலாம். முன்னாளில் நீங்கள் எப்பொழுது அலுவலில் இருந்து வீட்டுக்கு வந்தீர்கள், எத்தனை நேரம் குழந்தையோடு செலவழித்தீர்கள் என்றெல்லாம் கண்டுபிடிக்க இயலாது.

ஆனால், இன்றோ, நாற்சக்கர சாலைகளில் இருக்கும் toll boothகளைக் கொண்டு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவதை சொல்லி, மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு வாதிட்டு வென்றும் விடலாம்.

சௌகரியமாக இருக்கிறது என்பதற்காக EZ-Pass போட்டு வைக்கிறோம். அதைக் கொண்டு, எங்கே, எப்போது, எத்தனை மணி நேரம் செலவழிக்கிறோம் என்பதை நாம் விரும்பாமலே உலகுக்கு சொல்கிறோம்.

~oOo~

4. வாடிக்கையாளர் அட்டை

ஷாப்-ரைட் ஆரம்பித்து சிவியெஸ் வரை எல்லோரும் தங்களின் நுகர்வோருக்கு ‘தள்ளுபடிக்கான அடையாள அட்டை’ தருகிறார்கள்.

என்ன சரக்கு அடிப்பீர்கள், அந்த சரக்கு அடித்தால் என்ன நோய் வருகிறது, நோய் வந்தால் என்ன வாங்குவீர்கள் என்றெல்லாம் இதன் மூலம் அறிய முடியும்.

~oOo~

5. விமான நிலையத்தில் CLEAR முறை

ஒசாமா பின் லாடனின் வேலையை அமெரிக்கா எளிதாக்கி இருக்கிறது. தீவிரவாதி விமானத்திற்குள் நுழைய வேண்டுமா?

வெறும் 80 டாலர் போதும் ஜென்டில்மேன்.

உங்களுக்கு சோதனையில் இருந்து விலக்குத் தரப்படும். பாதுகாப்பாக நீங்கள் ‘பாதுகாப்பு சோதனை’யை தவிர்க்கலாம்.

ஆல் க்ளியர்!

~oOo~

6. கூகிள் சக்தி

உடம்பு சரியில்லை என்றால் என்ன செய்கிறீர்கள்?

“மூக்கொழுகல் AND காதடைப்பு” என்று கூகிள் செய்வோம். உங்களை மாதிரியே பக்கத்து தெரு பங்கஜம், அதே பேட்டையில் வசிக்கும் பேட்ரிக் என்று பன்மடங்காக ஒரே மாதிரியான தேடல் வர ஆரம்பிக்கிறது.

மருத்துவமனைக்கு செல்வதற்கு முன், அரசாங்கத்திற்கு தகவல் போவதற்கு முன், இன்டெலிஜென்ஸ் அறிந்துகொள்வதற்கு முன் கூகிளுக்கு ‘இந்த நோய், இப்படிப்பட்ட இடத்தில்’ பரவ ஆரம்பித்துள்ளது.

நோய் சரியாகாத படசத்தில் ஓரிரண்டு நாள் கழித்துதான் டாக்டரை நாடுவோம். ஆனால், எல்லா தகவலையும் அதற்கு பல மணி நேரம் முன்பே கூகிள் கணித்துவிடுகிறது.

இன்ஃபோர்மேசன் இஸ் பவர்!

குங்குமம் பிட்ஸ்

1. ‘காஞ்சிவரம்‘ படத்தில் கம்யூனிஸ்ட்களை கொச்சைப்படுத்தியுள்ளதாக குமுறுகிறார்கள் தோழர்கள். நெசவாளர்களின் வாழ்க்கையை பேசும் இந்தப் படத்தில் கம்யூனிஸ்டாக வரும் பிரகாஷ்ராஜூம், அவரது தோழர்களும் சுயநலமிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனராம். ‘திரையிடட்டும், ஒரு கை பார்க்கிறோம்’ என்று காத்திருக்கிறார்கள் காம்ரேட்டுகள்.

2. டிக்சனரி

  • டவரு – வளர்ந்து கெட்டவன்
  • புளிப்பு மிட்டாய் – சீரியசாக லவ்வும் அப்பாவி
  • கலக்கல் கலா – ஓவர் மேக்கப் பார்ட்டி
  • அபி – உம்மணாமூஞ்சி
  • கபாலிகான் – ஓவர் சீன் போடுறவன்
  • அஞ்சு பிளேடு – அறுவை பார்ட்டி

3. கே: ஏன் நடக்கமுடியாத கன்னுக்குட்டியை தலைவர்கிட்ட கொண்டு வந்துருக்கீங்க?

ப: அரசியல்ல ‘எதுவும் நடக்கலாம்’னு ஒரு நம்பிக்கைதான்!


4. கே: என்னது? உன் பையனை நடுத்தெருவில் நிக்க வைக்கறதுக்கு ஒரு லட்ச ரூபா லஞ்சம் கொடுத்தியா?

ப: ஆமா! டிராபிக் போலீஸ் வேலை ஆச்சே!


5. கே: எதுக்கு அவரோட வாட்சைத் திருடினே?

ப: அவரோட டயம் நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன்!


முழுவதும் வாசிக்க: குங்குமம்தினகரன்

சமீபத்தில் கவர்ந்த ட்விட்கள்

வை. கபிலன்

nchokkan 60களில்தான் கம்ப்யூட்டர் மவுஸ் கண்டறியப்பட்டதாம், ஆனால் நீயோ 60 வருடமாக மவுஸோடு இருக்கும் கம்ப்யூட்டர் … யார் யாரைப் புகழ்ந்தது, guess 😉
writerpara இன்னும் கொஞ்சம் இம்சை: நீ ஒரு கணினி, இலக்கியம் உன் மென்பொருள், அரசியல் உன் வன்பொருள். [அதே வை.கபிலன்]
nchokkan வை. கபிலன்(?) எழுதிய இன்னொண்ணு – கலைஞர் கல் எடுத்துக் கொடுத்தது டைடல் பூங்கா, சொல் எடுத்துக் கொடுத்தது தொல்காப்பியப் பூங்கா
writerpara ஸ்டாலினுக்கு: த்ரிஷா காணும் தமிழரிடையே மிசா கண்ட நாயகனே!

nchokkan கனிமொழி: சேலை கட்டிய இலக்கியமே, டெல்லி சென்ற தமிழகமே … ஓகேயா?

writerpara கனிமொழிக்கு: கவிதை உனக்குக் கைக்குட்டை. சிந்தித்தாலும் அழகு. சிந்தினாலும் அழகு.
nchokkan விஜய்காந்துக்கோ, நாளை விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கோ பொருத்தமாக ஒரு டூஇன்ஒன் கவிதை – புள்ளிவிவரப் புலி நீ, சொல்லி அடிக்கும் கில்லி நீ
writerpara கனிமொழிக்கு: கவிதை உனக்குக் கைக்குட்டை. சிந்தித்தாலும் அழகு. சிந்தினாலும் அழகு.
nchokkan உதயநிதி ஸ்டாலின்: காக்கா பிடிக்கும் தமிழர் மத்தியில், குருவி பிடித்த குணக் குன்றே, தாத்தாவின் பெயர் காக்கும் தமிழ்க் கன்றே … 😉
writerpara வடிவேலு: அடிமகனே!நல்ல தமிழ்க் குடிமகனே! தமிழுக்கு விடிவெள்ளியாய் முளைத்த கடிமகனே, விஜயகாந்துக்கு வெடி வைக்கும் திருமகனே வாழி.
writerpara @nchokkan வைரமுத்துவின் மகன் கலைஞரைப் பற்றி;-)
nchokkan கரெக்ட், அப்பாவுக்குத் தப்பாத மகன்

பொய் சொல்லப் போறோம்

vickydotin நான் சொன்னது ஒரே பொய்தான். அது தாய் பொய். மத்ததெல்லாம் அது போட்ட குட்டிப்பொய். அண்ணன் தம்பிங்க மாதிரி !!

KishoreK சிலம்பாட்டம் பட ட்ரெய்லர், ம்யூட் செய்து பார்க்கும்போது ஜிம்னாஸ்டிக்ஸ் போல தெரிகின்றது


writerpara காலை 8.45க்கு வெங்கட்ரமணா போளி ஸ்டாலில் அதிரசம் வாங்கி, நின்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருப்போருக்கு எவ்வளவு ஷுகர் இருக்கும்?
writerpara 83 வயது ரெஹ்மான் ரஹி என்கிற காஷ்மீரக் கவிஞர் ஞானபீட விருது பெற்றிருக்கிறார். பீடம் ஏறும் முதல் காஷ்மீரி இவரே. கேள்விப்பட்டிருக்கிறோமா?
writerpara ஜிக்மே நம்கியல் வேங்க்சுக் என்கிற 28 வயதுப் பையன் பூடானின் மன்னராகியிருக்கிறான். ட்விட்டருக்கு இது தெரியுமா?
writerpara யுவராஜ் சிங் என்பவர் மன்மோகன் சிங்குக்கு உறவா?
writerpara அலுவலகம் முழுதும் க்ரிகின்ஃபோ தளத்து ஸ்கோர் போர்டிலேயே வசிக்கிறது. எரிச்சலாக இருக்கிறது. கிரிக்கெட்டை ஒழிக்க என்ன செய்யலாம்?
penathal அது கோல் இல்லைங்க.. செட், கேம்னு சொல்லுவாங்க. இங்கிலாந்து 10 செட்லே 240 கேம்!
elavasam தேன்மொழி இதைச் செஞ்ச பொழுது அதில் அவ முடி இருந்திச்சாம். அப்போ யாரோ என்னதுன்னு கேட்க நம்ம ஆளு தேன்குழல்ன்னு சொல்லி இருக்கான். ok?


ஹிட்டாகுமா?

hotdogsladies The new frontier in web metrics will involve quantifying how often we check stats.

அஞ்சலி இடுகை

anbudan_BALA சாதனையாளர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டு பிரியும் காலமிது-ஜெமினி,சுஜாதா,பூர்ணம்,குன்னக்குடி,ஸ்ரீதர், Kசங்கர்,நம்பியார். இது தான் இயற்கை நியதி


சட்டம் என் கையில்

srikan2 சட்டக்கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பதன் அதிர்ச்சியை விட, போலீசார் செயலிழந்து பார்த்துக்கொண்டிருந்தனர்..என்பதன் அதிர்ச்சி மிகப் பெரிதாக இருப்பதாக (anecdotally) நினைக்கிறேன். இதற்கு எந்த சாதி/சாதியற்ற பார்வையும் தேவையில்லை. contd

உங்கள் பொன்னான வாக்கை ரகசியமாகப் போடுங்க

mohandoss அன்புள்ள ஐயா அம்மாக்களே உங்கள் விமர்சனங்களை மீறியும் படம் பார்ப்பவர்கள் இருப்பார்கள், உங்கள் விமர்சனங்களை தனியாகப் போட்டுத் தொலைக்கலாமே! டிவிட்டரில் தேவையில்லாமல் கண்ணில் படுகிறதே! விமர்சனம்னு போட்டு பதிவில் போட்டிக்கிட்டு லிங்க் அடிக்கலாம் தேவையில்லாதவர்கள் படிக்க மாட்டார்கள்


ajinomotto RP ராஜநாயஹம் என்ன தொழில் தான் பண்றார்? சினிமா, சாராயக்கடை, எழுத்தாளர், வாத்தியார்? பலபேரோட வாழ்க்கைய தெரிஞ்ச ஏகம்பரமா எழுதுறார் அதான் கே …
ilavanji ப்ரட் ஆம்லெட்டுக்கு அப்பறம் காபி குடிச்சா ஏங்க கொமட்டிக்கிட்டே இருக்கு!? 😦


ஈழம்

suratha முதன் முதலாக தமிழ் ப்ளொக்கர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார்.என்ன பண்ணலாம்.ஒண்ணும் பண்ணமுடியாது.
suratha புலிகள் உண்மையில் தோற்கிறார்களா அல்லது தோற்பது போல் நடிக்கிறார்களா? மில்லியன் டாலர் கேள்வி
suratha பிரபாகரன், அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். -அனிதா பிரதாப் – ஞாபகத்திற்கு வந்த பழைய செய்தி ஒன்று
rozavasanth கலைஞர், ஜெ, ராமதாஸ், சோனியா, லாலு, மாயாவதிகளை விட பிரபாகரன் பலமடங்கு சுயநலமில்லாத மனிதர் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை -ஞாநி
rozavasanth ஒரு அதிர்ச்சிக்காவாவது ராமேஸ்வர மீன்வர் சமூகங்கள் இந்தியாவில் இருந்து பிரிந்து குடியரசாவதாக அறிவிக்க வேண்டும்.
solitaryreaper 1.Attacks on The Hindu 2.Rajiv Gandhi statue Damaged 3.Srilankan Mission stoned 4. Swamy office vandalized 5.Two Rail Bogies set on fire ..


இலக்கணம் மாறுதோ?

SridharNarayana >இல் பொருள் உவமையணி< in short டுபாக்கூர் அணி :))

nchokkan //Laptop bag compatible with PC & Mac// ’இங்கு எல்லா மொழிகளிலும் ஃபேக்ஸ் அனுப்பப்படும்’ன்னு ஒருத்தன் எழுதிவெச்சதா சுஜாதா சொன்னாரே

nchokkan தோனி இன்னிக்கு பேட் செய்யப் போகும்போது பாக்கெட்லயே D-L Calculation Sheet வெச்சிருந்தாராம், Impressive


bseshadri International investors have already pulled out 1,00,000 crore Rs. in the last year out of Indian stock market. Which is the main reason behind 1 USD = 50+ INR

rarunach Stephen Colbert:”Arguing that regulation is not required because banks have self-interest is like arguing traffic signals are not required.”

rselvaraj I was NOT worried until the banks+401Ks started sending mail not to worry!

nchokkan ஒரு டிஷர்ட்டில் பார்த்தது: Prove Me That Money Doesn’t Bring Happiness


ajinomotto நான் எழுதிய warehouse job ஓடியது ஓடியது செர்வரின் எல்லைக்கே ஓடியது.ஓடுவதை பார்த்த எல்லோரும் என்னை கும்மி எடுக்கின்றனர்.

ajinomotto டெவலப்மெண்ட்ல நீ எவ்ளோ பெரிய smart ass -ஆ இருந்தாலும் UAT -ல உனக்கு ஆப்பு நிச்சயம்.

ajinomotto ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கி தான் குடிக்கும். செர்வர் நிறைய CPU இருந்தாலும் பழைய ப்ரோகிராம் ஒரு CPU-ல தான் ஓடும்


anathai Icon_red_lock What is right? – Dogmatic, preserve status co, exclusive, less govt, for corporate, believe birth, survival of fittest, believe subjucation
anathai Icon_red_lock what is left? – Free, equaletarian, liberal, progressive, inclusive, for govt , anti corporate, green, believe nurture, support powerless

vikrambkumar I met an african-american who voted for McCain yesterday and a Microsoft corp strategist using gmail/ipod today. Will I see an elf 2mro?

தலித் அரசியல்

rozavasanth அவர்களை துப்புரவு தொழிலாளர்களாக நிரந்தரப்படுத்துவதை சாதனை பட்டியலில் மாயவதி அடுக்குவது தலித் அரசியலுக்கான மிக பெரிய துரோகம்.(என் கருத்து)

தமிழக அரசியல்

nchokkan இன்று அண்ணாவின் 100வது பிறந்தநாள், தினசரி காலண்டரில் அவருடைய ஓவியம் பார்த்தேன், அவர் முதுகில் குத்தி மார்பு வழியே ஓர் ஆணி வெளிவந்திருந்தது

சினிமா அரசியல்

mohandoss “மதுர எரியுது அணைங்கடா” – நாக்க முக்க பாட்டு வரிகள் தான் மாறன் ‘காதலில் விழுந்தேன்’ படத்தை வாங்க காரணமா?

இலக்கிய அரசியல்

marudhan ராஜம் கிருஷ்ணன் இடது சாரி சிந்தனையாளர்னு இப்போதான் தெரிஞ்சுது

நிதி அரசியல்

nchokkan நண்பர் சொன்ன ஜோக்(?): ஃபயர் அலார்ம் வாங்க வசதியில்லாதவன், விட்டத்தில் ஒரு ரெடிமேட் பாப்கார்ன் பொட்டலத்தைக் கட்டித் தொங்கவிட்டானாம் 😉


அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு

Aravindank தமிழக டிவிட்டர்கள் ஆங்கிலத்திலும் அமெரிக்க டிவிட்டர்கள் தமிழிலும் டிவிட்டுவது அதிகரித்துள்ளதே…என்ன காரணம்..?

ajinomotto DB Psychlgy:லைஃபில் கமிட்மெண்ட் இல்லாதவன் SQL ஓட்டிய பிறகு கமிட் செய்வதே இல்லை.Auto Commit-ஐ நம்பி வாழ்க்கையை ஓட்டுபவன் நிறைய கஷ்டப்படுவான்


elavasam அங்க துகிலுரிந்ததால் கண்ணன் மும்மலம் துடைத்தான். நீர் உம்மலம் துடைச்சீரு!! 🙂 in reply to snapjudge
elavasam வித்தாரம் – விக்காட்டி ஜின்?
ev Email: “Your domain name (twitter.com) has been found online. Please let us know your price.” (And people say we can’t make money!)
ev Dear coffee shops of America: Let’s just assume no one needs a receipt, unless we’re told otherwise.


நகைச்சுவை

gchandra A Tamilian call up sardar and asks ” tamil therima??” Sardar got mad, angrily replied…. “Hindi tera baap!!!”

கவிதை

arunsundar It rains & my friend asks an old lady if she needs an umbrella. She smiles & replies “Thanks honey, I can walk between the rain drops!”
neotamizhan பெட்ரோமாக்ஸ் லைட் கொளுத்து ஃபங்ஷன் மூடு கெடைக்குண்டா… மெழுகுவத்திய ஏத்தி வையி பர்த்டே போல இருக்குண்டா! ஜுவியில் ”பவர் கட்” கவிதை. 🙂
solitaryreaper I reiterate that Chess Positions are like poetry. When u understand them, you get the same ecstacy as understanding the sub-text of a poetry


பயணங்கள் முடிவதில்லை

rozavasanth முன்பு பெங்களூரில் இறங்கி குளிர்காற்றில் நடப்பது பிரிந்த காதலியை அணைப்பது போல்;இன்று ஆட்டோ புகை, ட்ராஃபிக் ஜாம் வெப்பத்தில் நகர்ந்தது நரகம்.

மடப்பள்ளி

nithyas Falling in love with Brazilian coffee and drinking several cups every dayy.
nithyas I got a recommendation for a brand called Cafe du Pont to buy.


சொந்தக் கதை

solitaryreaper As soon as I returned from gym,I sat on the couch&requested my wife 2 bring dinner&water saying I cant walk.Consequence of exercising:-))
chenthil Play school fees – Rs. 7500.00 admission fee and Rs. 5500.00 term fees for a 9.00 AM-12.00 PM Montessory school. Need a loan for school fees


கிசுகிசு

gchandra Vettaiyadu Kamal peyar konda ‘theevira’ vaatha ezhuthalar, sontha kathai adikadi ezhudhararae.. ‘kanaga vel’ avarai ‘kakka’ varaliya. ippadi