How to evaluate Twitter/Microblog Influence?
Top Tamil Twitter users (by status update numbers) பதிவுக்கு ட்விட்டர் பதில்கள்:
TamilDiaspora — re:Top Tamil Twits, following/followers ratio & followcost should be the prime factors in ranking the users,status update is plus
ரவி — a combination of Number of followers, following Vs followers ratio, google page rank would be a good way to rank.
TamilDiaspora — But I want quality Tweets as well, following/follower ratio (sans celebrities) &followcost will give some idea about the user
இன்னாரின் தமிழ் வலைப்பதிவுக்கு எவ்வளவு மவுசு என்று கணக்கிடுவது போலவே, ஒருவரின் ட்விட்டர் தகவல்களுக்கு எவ்வளவு கிராக்கி என்பதை கணிக்கலாம்.
சில புள்ளிகள்:
- ரவி சொல்வது போல் கூகிள் பேஜ்ரேங்க் எண் என்ன?
- எத்தனை பேர் இவரை பின் தொடர்கிறார்கள்?
- இவரை பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா?
- இவர் பின் தொடர்பவர்களில் முக்கியஸ்தர்கள் இருக்கிறார்களா? அவர்களிடமிருந்து வரும் சுவாரசியங்களைப் போதிய இடைவெளியில் ரீ ட்வீட்டுகிறாரா?
- தலையுமில்லாமல், வாலுமில்லாமல் ட்வீட்டாமல், கொஞ்சம் இடஞ்சுட்டி, பொருள் விளக்கி, முழுச்செய்தியைக் குறுக்கித் தருகிறாரா?
- அடர்த்தி (அ) பல்சுவை: ஒரே தலைப்பில் வரும் விஷயங்களைக் கொடுக்கிறாரா? அந்தப் பொருள் அலுக்கும்போது, சாமர்த்தியமாக சொந்த வாழ்க்கை, பிற செய்தி அலசல் என்று வித்தியாசங்காட்டுகிறாரா?
- முகத்தைக் காட்ட வேண்டாம். கேரக்டர் தெரியுமாறு, பின்னாலிருக்கும் இரத்தமும் சதையும் கொஞ்சமாவது உருப்பெறுமாறு இயங்குகிறாரா?
- ஏற்கனவே வலையில் இயங்கியவரா? புகழ்பெற்றவரா? நில, புலம், அந்தஸ்து மாதிரி இணையபட்டா பெற்றவரா?
- தன்னிடம் வினா கேட்பவரிடம் பதில் கொடுக்கிறாரா?
- சும்மா கீச்சு, கீச்சு என்று தான் மட்டும் கத்திக் கொண்டிராமல், உரையாடலில் ஈடுபடுகிறாரா?
- தன் ஸ்டேட்டஸ்களை பாதுகாத்து வைத்துள்ளாரா? (பின் தொடரும் கூட்டத்தைவிட, பின் தொடர்பவர்களின் அறிமுகம் கோருபவரா?)
- ரஜினி படம் போல் அத்தி பூக்கும். அந்த மாதிரி எப்பொழுதாவதுதான் டிவிட்டுகிறாரா?
- அவரைத் தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத தகவல்களை, உங்களின் கேள்விகளுக்குப் பொருத்தமான விடையாக்கித் தருகிறாரா?
- யாரைப் படிக்காவிட்டால், தலைவெடித்துவிடும்?
- கடைசியாக, சொல்லும் அப்டேட்களினால் ஏதாச்சும் நேரடி பலன் எனக்குக் கிடைக்கிறதா?
ஒவ்வொன்றுக்கும் இன்னாரைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது அவரவருக்குத் தெரியும் என்பதால், நோ பட்டியல். இருந்தாலும், எனக்கே காலப்போக்கில் இந்தப் பதிவு புரியாமல் போகும் அபாயம் இருப்பதால்:
(எண்கள் ஒரு வசதிக்காகத்தான்… எந்த வரிசையிலுமில்லை)
- வளர்மதி (valarmathi2008)
- ஆர் செல்வராஜ் (rselvaraj)
- பரத் (barath)
- ரோசாவசந்த் (rozavasanth)
- எழுத்தாளர் பாரா (writerpara)
- சிவராமன் ஜி (sivaramang)
- அரவிந்தன் கே (Aravindank)
- சஜீக் (sajeek)
- விக்கி (vickydotin)
- கேப்ஸ் (kaps_)
- இரா முருகன் (eramurukan)
- வெங்கட் (donion)
- செந்தில் (chenthil)
- அனாதை (anathai)
- சஞ்சய் சுப்ரமணியன் (sanjaysub)
- -/பெயரிலி. (peyarili)
பிங்குபாக்: A for Apple – Tag version for Twitter IDs « Snap Judgment