Daily Archives: திசெம்பர் 2, 2008

Cartoons on Mumbai Attacks: India, Pakistan & Terrorism

நன்றி: Terror In India

அமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்

அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவுள்ள தனது குழுவை அறிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க நடைபெற்ற தேர்தலில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஹில்லரி கிளிண்டனை அரசுத்துறைச் செயலராக அவர் நியமித்துள்ளார்.

செனட்டர் ஹில்லரி கிளிண்டன் பெரும் ஆளுமை கொண்டவர் என்று ஒபாமா கூறியுள்ளார்.

தற்போது இராணுவ அமைச்சராக உள்ள ராபர்ட் கேட்ஸ் அவர்களை தொடர்ந்து பணியில் இருக்குமாறு ஒபாமா வேண்டியுள்ளார்.

நாட்டில் நிலவிவரும் நிதி நெருக்கடி போலவே, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சவால்களும் பெருமளவில் இருக்கின்றன என்று ஷிகாகோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்கவுள்ள ஒபாமா அவர்கள், தற்போது அரிசோனா மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ஜேனட் நேபோலிட்டானோ அவர்களை உள்நாட்டு பாதுகாப்புதுறை செயலராகவும், நேட்டோவின் ஓய்வு பெற்ற தலைமை தளபதியான ஜேம்ஸ் ஜோன்ஸ் அவர்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்துள்ளார்.

அவரது நீண்ட கால ஆலோசகரான சூசன் ரைஸ், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நன்றி: பிபிசி

மும்பை தாக்குதல்: இரு பதிவுகள்

பாம்பே தீவிரவாதி

பாம்பே தீவிரவாதி

பதிவு ஒன்று: உள்ளூர் வார இதழில் அகஸ்மாத்தாக மும்பை குண்டுவெடிப்பு ஆரம்பம் ஆன அன்று வெளியான பாஸ்டன் ஃபீனிக்சில் வெளியாகிய சீதா நாரயணின் கட்டுரை:

The Phoenix > Features > Terror masala: “Bollywood’s colorful, multi-genre musicals serve up their most interesting character yet: the singing, dancing terrorist.”

As such, writers have recently begun to experiment with realism, to introduce region and dialect into the story, to present more nuanced explanations of characters’ motives, and to dare to depict social problems like political corruption, drug trafficking, gang violence, poverty, and, yes, terrorism. These are depressing problems, so what better way to present them than with a dash of Bollywood élan? Which brings us to an unusual movie protagonist: the singing, romancing, family-loving, dancing, emotionally open . . . terrorist.


பதிவு இரண்டு: என்ன நடக்கும் என்பதை சொல்லும் ப்ளாகேஸ்வரியின் இடுகை.

Blogeswari: நாளை?: ராம் கோபால் வர்மா எப்படி திரையாக்குவார் என்பதையும் மகேஷ் பட் கதை எவ்வாறு இருக்கும் என்று சொல்லியிருக்கிறது.

அவரின் முந்தைய அனுபவங்கள்: Blogeswari: நேற்று…. & மீடியாவிற்கு ஒரு வேண்டுகோள்

டைனோ: எல்லோரும் துப்பாக்கி சுட கற்றிருக்கணும்

டைனோ Says:
நவம்பர் 29, 2008 at 2:04 பிற்பகல்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டது, துப்பாக்கி வைத்திருப்பனெல்லாம் கன்சர்வேட்டிவ் என்று கட்டியம் கூறி வெறுப்பை உமிழ்பவர்கள் இதையும் படிக்கவேண்டும்! NRAவின் பக்கத்து நியாயங்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். Right to self-defense!

அனைவருக்கு துப்பாக்கியும் தோட்டாவும் கொடுப்பதால் கிடைக்கும் நன்மை பயக்கும் திட்ட வரைவுகள்:

  1. மீசை இருந்தால் ஆம்பளை என்பது பழமொழி. துப்பாக்கி வைத்திருப்பவர் வீரர். அத்துமீறி உள்ளே வருபவர்களை துப்பாக்கியை வைத்து சுட குறி பார்ப்பதற்குள், அவர்கள் உங்களிடமிருந்து ஆயுதத்தைப் பறிப்பார்கள். ‘ஏழைகளுக்கும் தோட்டா‘ என்று இந்தத் திட்டத்திற்கு நாமகரணமிடலாம்.
  2. பாஸ்டன் பக்கம் மாதத்திற்கு இரண்டு குழந்தை (சமீபத்திய இறப்பில் பத்து மாசம் ஒன்றும் மூன்று வயது சிறுவனும்) இறக்கிறார்கள். இந்த மாதிரி துப்பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டில், விளையாட்டாக எடுத்து சுட்டுப் பார்த்து ‘மக்கள் தொகையை மட்டுப்படுத்தல் திட்டம்‘ வெற்றிகரமாக என்.ஆர்.ஏ வினால் நடத்தப்படுகிறது.
  3. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதாக காய்கறி கத்தியைக் கூட ஸ்திரமாக பிடிக்கத் தெரியாதவர்கள் கையில் துப்பாக்கியை திணித்து, ‘புல்லாங்குழல் அடுப்பூதும் திட்டம்‘ என நடுநடுங்க வைக்கலாம்.
  4. வீழ்ந்து கிடக்கும் நிதிநிலையை நிலைநிறுத்த, துப்பாக்கி விற்பனையை அதிகரித்து, அதனால் புல்லட் ப்ரூஃப் மேலணி மேனியாவை முடுக்கி, தொடர்ச்சியாக தோட்ட புகமுடியா கார்கள் என்று ‘சந்தைப்படுத்தி சதை துப்பும் திட்டம்’ வரவைக்கும்.
  5. பள்ளிகளில் கடந்த மாதம் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை. (Timeline: US shooting sprees – History of school shootings). இது அமெரிக்க கலாச்சாரத்திற்கு மிகப் பெரிய இழுக்கு. இதைப் போக்க ‘வாசகசாலை சிறார்களை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளும் திட்டம்‘ அறிமுகம்.
  6. நத்தார் தினம் நெருங்குகிறது. விரும்பிய டிஃபனி பரிசையும் லெக்சஸையும் கொடுக்க முடியாத வறியவர்கள் (பார்க்க #1 ‘ஏழைகளுக்கும் தோட்டா’) கையில் துப்பாக்கியை கொடுத்து அங்காடிகளையும் கடைகளையும் பாதுகாப்பற்றதாக ஆக்கி, பனி விழாத புவிவெப்ப சூழலின் இறுக்கத்தைக் குறைத்து ‘சடலம் விழும் காலம்’ வருகிறது.
  7. மான்களும் மூஸ்களும் இன்னும் கொஞ்ச காலமே காடுகளில் காணக்கிடைக்கும். அதற்குள் பாக்கி இருக்கும் ஒன்றிரண்டையும் ஒழித்துவிட ‘சாரா பேலின் சகாயம்’ உதயம்.
  8. தீவிரவாதி கையில் மட்டும் ஏகே-47 இருக்கிறதே? சஞ்சய் தத் ஆசைப்பட்டதும் இதுதானே! உங்களிடமும் வெடிகுண்டும், ஏவுகணைகளும் கிடைத்தால் ‘பக்கத்து விட்டு பரமசிவத்துடன் பஞ்சாயத்துக்கு செல்லேல்’ என சடக்கென்று பாயும்.

அனானிகள் போலி முகம் கொண்டு அடுத்தவரைத் திட்டுவது போல் அசட்டு தைரியம் கொடுக்க துப்பாக்கி உதவுகிறது.