டைனோ: எல்லோரும் துப்பாக்கி சுட கற்றிருக்கணும்


டைனோ Says:
நவம்பர் 29, 2008 at 2:04 பிற்பகல்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டது, துப்பாக்கி வைத்திருப்பனெல்லாம் கன்சர்வேட்டிவ் என்று கட்டியம் கூறி வெறுப்பை உமிழ்பவர்கள் இதையும் படிக்கவேண்டும்! NRAவின் பக்கத்து நியாயங்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். Right to self-defense!

அனைவருக்கு துப்பாக்கியும் தோட்டாவும் கொடுப்பதால் கிடைக்கும் நன்மை பயக்கும் திட்ட வரைவுகள்:

  1. மீசை இருந்தால் ஆம்பளை என்பது பழமொழி. துப்பாக்கி வைத்திருப்பவர் வீரர். அத்துமீறி உள்ளே வருபவர்களை துப்பாக்கியை வைத்து சுட குறி பார்ப்பதற்குள், அவர்கள் உங்களிடமிருந்து ஆயுதத்தைப் பறிப்பார்கள். ‘ஏழைகளுக்கும் தோட்டா‘ என்று இந்தத் திட்டத்திற்கு நாமகரணமிடலாம்.
  2. பாஸ்டன் பக்கம் மாதத்திற்கு இரண்டு குழந்தை (சமீபத்திய இறப்பில் பத்து மாசம் ஒன்றும் மூன்று வயது சிறுவனும்) இறக்கிறார்கள். இந்த மாதிரி துப்பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டில், விளையாட்டாக எடுத்து சுட்டுப் பார்த்து ‘மக்கள் தொகையை மட்டுப்படுத்தல் திட்டம்‘ வெற்றிகரமாக என்.ஆர்.ஏ வினால் நடத்தப்படுகிறது.
  3. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதாக காய்கறி கத்தியைக் கூட ஸ்திரமாக பிடிக்கத் தெரியாதவர்கள் கையில் துப்பாக்கியை திணித்து, ‘புல்லாங்குழல் அடுப்பூதும் திட்டம்‘ என நடுநடுங்க வைக்கலாம்.
  4. வீழ்ந்து கிடக்கும் நிதிநிலையை நிலைநிறுத்த, துப்பாக்கி விற்பனையை அதிகரித்து, அதனால் புல்லட் ப்ரூஃப் மேலணி மேனியாவை முடுக்கி, தொடர்ச்சியாக தோட்ட புகமுடியா கார்கள் என்று ‘சந்தைப்படுத்தி சதை துப்பும் திட்டம்’ வரவைக்கும்.
  5. பள்ளிகளில் கடந்த மாதம் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை. (Timeline: US shooting sprees – History of school shootings). இது அமெரிக்க கலாச்சாரத்திற்கு மிகப் பெரிய இழுக்கு. இதைப் போக்க ‘வாசகசாலை சிறார்களை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளும் திட்டம்‘ அறிமுகம்.
  6. நத்தார் தினம் நெருங்குகிறது. விரும்பிய டிஃபனி பரிசையும் லெக்சஸையும் கொடுக்க முடியாத வறியவர்கள் (பார்க்க #1 ‘ஏழைகளுக்கும் தோட்டா’) கையில் துப்பாக்கியை கொடுத்து அங்காடிகளையும் கடைகளையும் பாதுகாப்பற்றதாக ஆக்கி, பனி விழாத புவிவெப்ப சூழலின் இறுக்கத்தைக் குறைத்து ‘சடலம் விழும் காலம்’ வருகிறது.
  7. மான்களும் மூஸ்களும் இன்னும் கொஞ்ச காலமே காடுகளில் காணக்கிடைக்கும். அதற்குள் பாக்கி இருக்கும் ஒன்றிரண்டையும் ஒழித்துவிட ‘சாரா பேலின் சகாயம்’ உதயம்.
  8. தீவிரவாதி கையில் மட்டும் ஏகே-47 இருக்கிறதே? சஞ்சய் தத் ஆசைப்பட்டதும் இதுதானே! உங்களிடமும் வெடிகுண்டும், ஏவுகணைகளும் கிடைத்தால் ‘பக்கத்து விட்டு பரமசிவத்துடன் பஞ்சாயத்துக்கு செல்லேல்’ என சடக்கென்று பாயும்.

அனானிகள் போலி முகம் கொண்டு அடுத்தவரைத் திட்டுவது போல் அசட்டு தைரியம் கொடுக்க துப்பாக்கி உதவுகிறது.

18 responses to “டைனோ: எல்லோரும் துப்பாக்கி சுட கற்றிருக்கணும்

  1. Well, Since I have nothing much to add, let me quote someone many respect –

    University of Chicago economist Steven Levitt in his book “Freakonomics” :

    “In a given year, there is one drowning of a child for every 11,000 residential pools in the United States. In a country with 6 million pools, this means that roughly 550 children under the age of ten drown each year. Meanwhile, there is 1 child killed by a gun for every 1 million-plus guns. In a country with an estimated 200 million guns, this means that roughly 175 children under ten die each year from guns. The likelihood of death by pool (1 in 11,000) versus death by gun (1 in a million plus) isn’t even close: Molly is roughly 100 times more likely to die in a swimming pool accident at Suzy’s house than in gunplay at Rick’s.”

    “Compare the four hundred lives that a few swimming pool precautions might save to the number of lives saved by far noisier crusades: child-resistant packaging (an estimated fifty lives a year), flame-retardant pajamas (ten lives), keeping children away from airbags in cars (fewer than five young children a year have been killed by airbags since their introduction), and safety drawstrings on children’s clothing (two lives).”

    “Risks that you control are much less a source of outrage than risks that are out of your control,” Sandman said.

    “When hazard is high and outrage is low, people underreact. And when hazard is low and outrage is high, they overreact.”

    ****

    Amen!

  2. //‘பக்கத்து விட்டு பரமசிவத்துடன் பஞ்சாயத்துக்கு செல்லேல்’ //

    இலவசம் வீட்டில் பஞ்ச் கமெண்ட் போடும் பரமசிவத்தையா சொல்கிறீர்கள்?

    – அப்பாவி ஆறுச்சாமி

  3. ஒரு உயிர் கூட *ஒரு* உயிர் என்று பார்த்தால், அதைக் காப்பாற்றும் (அல்லது இக்கு பாதுகாப்பற்ற சூழலைத் தவிர்க்கும்) செயல் எதுவும் செய்ய வேண்டும் அல்லவா?

    கிணற்றில் விழுந்து வருடத்திற்கு இருவர் மட்டுமே இறக்கிறார்கள்; ஆனால், சாலை விபத்தில் நால்வர் சாகிறார்கள். எனவே கிணற்றை மூட வேண்டாம்; சாலையை மூடலாம் என்போமா?

  4. ரொம்ப நாளா ஆளைக் காணோமேன்னு காப்புரிமையை அபேஸ் செய்ய பார்த்தத்தை கண்டுபிடிச்சீட்டீங்களா! 🙂

  5. உங்க கேள்விக்கு பதிலும் முந்தைய பின்னூட்டத்திலயே இருக்கே –

    “When hazard is high and outrage is low, people underreact. And when hazard is low and outrage is high, they overreact.”

    துப்பாக்கிக்கு எதிரான outrage என்பது உங்கள் பதிவைப்போல அர்த்தமில்லாத பயத்தினால் விளையும் knee jerk reaction. வீட்டில் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னால் அதை extrapolate செய்து தமிழக முதலமைச்சரைப்போல இலவச தோட்டா நிலமைக்கு யோசிக்கும் அர்த்தமில்லாத outrage ;).

    2:4 இல்லை விகிதம் – death by pool (1 in 11,000) versus death by gun (1 in a million plus)
    அதாவது 11000:1000000 அதாவது 1:91 ன்னு இருக்கும் போது சாலையை சரிசெய்வதைக்காட்டிலும் குடிக்க தண்ணீர் கொடுக்கும் கிணற்றை மூட போராடுவதுதான் உங்கள் நியாயமா?

  6. இப்போ எதுக்கு இவ்வளவு துப்பாக்கி சத்தம்?

    ஆனாலும் அண்ணன் பரமசிவத்தை அபேஸ் பண்ணுவது அநியாயம்! 🙂

  7. டைனோ,

    கத்தியையே ஒழுங்காப் பிடிக்க தெரியாதவர் துப்பாக்கியை வைத்து என்ன கிழிப்பார்?

    சடாரென்று தாக்குதலுக்கு உள்ளாகும்போது துப்பாக்கி உதவாது.

    அவசரத்தில் சடாரென்று துப்பாக்கியை எடுத்து குறி பார்த்தாலும், அந்த ஆயுதம் எதிராளியின் கைக்கு செல்வதற்கே வாய்ப்பு அதிகம்.

    நல்ல திடகாத்திரமான உடல்; அதற்கேற்ப தேகப்பயிற்சி; தொடர்ந்த தோட்டா சுடல், குறிபார்த்தல்; என்று வழக்கப்படுத்திக் கொள்ளாவிட்டால், இந்த மாதிரி ‘துப்பாக்கி’ வீராவேசம் அனர்த்தத்திற்கு இட்டுச் செல்லும்.

    என்.ஆர்.ஏ குறிபார்க்கும் சாதாரணர்களுக்கு துப்பாக்கியினால் எந்தவித பாதுகாப்பும் கிடைக்கப் போவதில்லை.

    இராணுவத்தில் இருந்து ஓய்வடைந்தவர்கள்; துப்பாக்கி சுட வாராவாரம் சென்று தோட்டா ஆடிப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே பயன்படும்.

    தோட்டாவைக் கழற்றி வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பாக எட்டாத தூரத்தில் இருக்க வேண்டும். அசட்டையாக இருந்தால் கோவிந்தா!

    அப்படியும் துப்பாக்கி வீட்டில் இருப்பதால் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தான சூழலையே உண்டாக்குகிறது.

    கத்தி ரத்தம் சிந்தவைக்கும்; உடனடியாக மரணம் நிகழும் வாய்ப்பு குறைவு.

    வீட்டிலேயே இருக்கும், நொடியில் உயிர் பறிக்கும் ஆயுதத்தை எடுத்து எதிராளிக்கு தாரை வார்க்க ஆயுதம் வாங்க அழைப்பு விடுக்கிறது NRA.

  8. கொத்ஸ்,
    எல்லாரும் அட்டைக்கத்தி என்கிறார்கள். அதான் டைனோ அடுத்த கட்டத்துக்கு பதிவை நகர்த்துகிறார் 😛

  9. >>>>கத்தியையே ஒழுங்காப் பிடிக்க தெரியாதவர் துப்பாக்கியை வைத்து என்ன கிழிப்பார்?

    உங்க குழந்தைகளை கராத்தே கத்துக்க அனுபறதில்லையா? அதப்போல துப்பாக்கிக் சுடவும் கத்துக்கொடுங்க – முடிஞ்சா குடும்பத்தில் உள்ள எல்லோரும் கத்துக்கோங்க. எதிரிதான் ஆயுதத்த தீர்மானிக்கிறான் – அவங்கிட்ட கராத்தே பப்பு வேகதோல்லையோ?

    ஒரு திருடன் விட்டை உடைத்து உள்ளே நுழைய 5 நிமிடங்கள் வரை ஆகலாம் – that’s enough time to load and aim. And most of the time a empty firing in the air or other place would be sufficient to scare the intruder.

    >>>>கத்தி ரத்தம் சிந்தவைக்கும்; உடனடியாக மரணம் நிகழும் வாய்ப்பு குறைவு.

    அதுக்காக அறுவாமனையவா தூக்கிட்டு போக முடியும்? Think about that incident happening in your own home – Would you prefer that your loved ones had a gun at their disposal or அறுவாமனை. What if the intruder was able to break into the house in a matter of minutes?

  10. ///நல்ல திடகாத்திரமான உடல்; அதற்கேற்ப தேகப்பயிற்சி; தொடர்ந்த தோட்டா சுடல், குறிபார்த்தல்;///

    இந்த மூன்றும் இல்லாதவர் துப்பாக்கி வைத்துக் கொள்வது அருமையான திர்த்தவாரிக்குப் பிறகு வாரணம் தன் தலையில் தன் தலையில் தானே மண் (திருமண் அல்ல 🙂 இட்டு புழுதியை வரவழைப்பதற்கு சமானம்.

    —கராத்தே கத்துக்க அனுபறதில்லையா? —

    கராத்தே கற்றவர்களுக்குத்தான் துப்பாக்கி உரிமம் தரப்படும் என்றிருந்தால் பாராட்டத்தக்கது.

    மனநிலை பிழற்ந்தவர்களுக்கும், சமீபத்திய/முன்னாள் குற்றவாளிகளுக்கும் எண்ணற்ற துப்பாக்கிகளை வாங்கிக் குவித்து வைத்துக் கொள்ளும் உரிமையை தருவதில் பிரச்சினைக்கு கால்கோள் இடும் என்.ஆர்.ஏ, அதன் தொடர்ச்சியாக சிறிதும் லாயக்கற்ற — கைத்துப்பாக்கி கூட ஏந்தத் தெரியாதவர்களுக்கும் உரிமம் தந்து போலி பாதுகாப்பு தந்திருக்கிறது.

  11. >>>>கராத்தே கற்றவர்களுக்குத்தான் துப்பாக்கி உரிமம்

    ஆமாம் அப்புறம் ஞானி – ‘வயிற்றுக்கு உணவில்லாதவர்களால் கராத்தே கத்துக்க முடியுமா? ஏழைகளை அமுக்க பார்க்கிறது இந்த மக்கள் விரோத அரசு’ன்னு இன்னொரு கொட்டுரை எழுதி டெரரக்கெளப்புவாரு!

  12. //கொத்ஸ்,
    எல்லாரும் அட்டைக்கத்தி என்கிறார்கள்.//

    சண்டை போடும் டைனோவை விட்டுவிட்டு என்னை அட்டைக்கத்தி எனச் சொல்லும் நுண்ணரசியல் பிரமிக்க வைக்கிறது!

  13. டைனோ, கொட்டுரை 😉 🙂

    கொத்ஸ்,
    சந்தடி சாக்கில் டைனோ சண்டை போடுகிறார் என்றும் விட்டால் துப்பாக்கி எடுத்து சுட்டுவிடுவார் என்றும் சித்தரிக்கும் உங்கள் உள்குத்து அரசியல் கண்டு மிரண்டிருக்கிறேன்.

  14. யோவ் கொத்ஸ் – நான் சண்டை போடறேனா? ஏன்யா ஒன்னுமில்லாத ஒரு ஜுஜுபி துப்பாக்கிக்கு என்னை சண்டைக்காரன் ஆக்குறீங்க? ஏனிந்த கொலை வெறி?

    (நீங்கதான் நிஜெ ல இருங்கீங்க எனக்கு 15 நிமிச driveதான் , பாபா பாஸ்டனில் என்பதை சற்றே கவனத்தில் இருத்திக்’கொல்’ளுங்கள்!)

  15. நான் ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு துப்பாக்கி, மாததிற்கு 4 தோட்டா
    இலவசம் என்று அறிவித்து டைனோ
    தேர்தலில் நிற்பார் 🙂

  16. தமிழ்மணத்தில் ஸ்நாப்நீதிபதியை சேர்க்கவில்லையா ?

  17. தமிழ்மணத்தில் ‘கேளிர்’ பக்கத்தில் வருகிறது. அங்கே தெரிவதால் visibility அதிகம் 😉

    அதாவது, நெடுநேரம் அங்கேயே பதிவு நீடித்து நிற்கும். நிறைய பேர் உரலைச் சுட்டும் வாய்ப்பு அதிகரிக்கிறது 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.