Category Archives: 10

Top 3, 10, 20 in உரையாடல் போட்டிக்கான கதைகள்: Quick Reviews

‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்’ சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன.

போட்டி குறித்த பதிவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன: Snap Judgement: Uraiyadal: Jyovram Sundar & Paithiyakkaaran Short Story Contests: Tamil Bloggers Fiction Competition Results

இனி வென்றதிலும் கலந்து கொண்டதிலும் நான் படித்த சில கதைகளும் கருத்துகளும்:

  • யோசிப்பவர்: பிரசன்னம்: கதை பிடித்திருக்கிறது; தலை பத்தில் இடம்பெற வேண்டும் என்று சொல்லுமளவு பிடித்திருக்கிறது. அறிவியல் இருந்தது. மாயாஜாலம் இருந்தாலும் நம்பக்கூடிய, அசர வைக்கும் முடிவு.
  • அம்மாவுக்குப் புரியாது – RV « கூட்டாஞ்சோறு: ஆர்.வி. நிறைய வாசிப்பவர். அவ்வளவு பரந்த வாசிப்பு, நல்ல சிறுகதையைத் தரும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என்பதற்கு இந்தக் கதை ஒர் உதாரணம். (உரிமைதுறப்பு: நானும் நிறைய இலக்கியம் படிப்பவன்; சிறுகதை எழுத வரவில்லை 😦 முடிவை மட்டும் நம்பும் புனைவு. தட்டையான விவரிப்பு. சுவாரசியமான வாசிப்பு என்பதாலும் இதை விட மோசமான கதைகள் கூட தலை 20ல் இடம் பிடித்திருப்ப்பதாலும், 250க்குள் பெஸ்ட் ஆக இருந்திருக்கும்!?
  • கவிதா | Kavitha: அப்பா வருவாரா?: வலையில் எழுதுபவர்களில் பெண் பதிவர்கள் வெகு குறைவு. எனவே, இட ஒதுக்கீடு என்னும் எண்ணத்தில் இந்தக் கதை தெர்ந்தெடுக்கப்படலாம். பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தவிர இந்த ஆக்கத்தில் கரு கிடையாது; முடிச்சு கிடையாது; ரொம்ப மேலோட்டமான விவரிப்பு. கிழக்கு பதிப்பகம் புத்தகம் போட்டு, இணைய அறிமுகம் இல்லாதவர் இந்த மாதிரி கதைகள்தான் இணையத்தில் வலம் வருகிறது என்று எண்ண நினைத்தால், அது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். நான் ஆதவன்’ மறுமொழி அவசியம் வாசிக்க வேண்டும்.
  • நல்ல கதை என்பது பாஸ்டன் நகரத்து Deciduous மரம் போன்ற தன்மையுடையது. படிக்கும் போது பூப் பூக்கும் வசந்த காலம். முடிவு நெருங்க நெருங்க வண்ணம் மாறி மாறிக் காட்சியளிக்கும் இலையுதிர் காலம். பனிக்காலமாக கதை முடிந்த பிறகும், அந்த மரமாகிய புனைவு மனதில் நிற்க வேண்டும். வேறெங்கோ பச்சை பாசியைப் பார்க்கும் போதோ, சூரியோதய ஆரஞ்சை கவனித்தாலோ, அந்த மரம் உதிக்கும். கதையும் அது மாதிரி நிறம் பலகாட்டி நிலைத்து நிற்க வேண்டும்.

  • சேரல்: கருப்பு வெள்ளை: நீர் வழிப்படூஉம் புணை: எழுத்து என்றால் அப்படியே உள்ளே இழுக்கணும். இந்தக் கதை கொக்கி போட்டு கதையினுள் மூழ்க வைக்கிறது. தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க ஆக்கம். தெரிந்த பின்னணியைக் கூட வித்தியாசமான சித்தரிப்புகளும் விலாவாரியான விவரணைகளும் கொண்டு படம்பிடிக்கிறார். மேற்கோள் காட்ட தூண்டும் நடை:
  • வேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்ததில் கால்களிரண்டும், எலும்பும் தோலுமாகச் சப்பிப்போட்டது போல் தெரிந்தன.

  • நந்தவேரன் :: அவளாக இருந்திருக்கலாம் « Associated Directors of Tamil Movies: சும்மா துள்ளிக் கொண்டு போகிறது. நெஞ்சை லபக்கும் ஒயில் ஓட்டம். இராஜேஷ் குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் கலந்தாலோசித்து எழுதிய கதையின் முடிவை சுஜாதா கொடுத்தால் எப்படி இருக்கும். தலை பத்து நம்ம சாய்ஸ்.
  • பட்டாம்பூச்சி விற்பவன் » Rejovasan » பெண்கள் இல்லாத ஊரின் கதை …: தலைப்பில் கதை சொல்லக் கூடாது என்பது எல்.கே.ஜி பாடம். அதுவும் இந்த , ¹ ‘??’ அடுக்கு கேள்விகளினால் தொக்கி நிற்கும் வினா, ² Ellipsis ‘…’, ³ ‘ஏதோ ஒரு உணர்வு’ போன்ற ஃபீலிங்ஸ் சிதறல், ஆகியவை தவிர்த்து, விரிவாக்கவேண்டும் என்பது அரிச்சுவடி. புதியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இந்த மாதிரி சின்ன விஷயங்களை விட்டுவிடலாம். மிக நல்ல முஸ்தீபு. அதை விட சிறப்பான premise. ஆனால், சொல்வதற்கு தடுமாறுகிறார். வார்த்தை தேர்வுக்கு அகராதியைத் துணைக்கழைக்கலாம்; அல்லது வாசிப்பை விரிவாக்கலாம். மிக மிக அருமையான முயற்சி. முயற்சி மட்டுமே.

பார்ப்பதற்கு பளபளவென்றிருக்கும் பழுதாகிப்போன பார்க்கர் பேனாவை விட, படபடவென் எழுதும் பால்பாயின்ட் பேனாவே மேல். திறமை இருக்கிறது. ஆசை இருக்கிறது. அவசரமும் நிறையவே இருக்கிறது. உழைக்கத் தெம்பில்லை. உங்களுக்கு இராமநாதன் கிருஷ்ணன் தெரிந்திருக்கும். அமிர்தராஜ் சகோதரர்கள் கூட அறிந்திருப்பீர்கள். திறமை என்பது கஷ்டப்படுவதாலும், வாய்ப்பு கிடைப்பதாலும் மட்டும் எட்டப்படுவதில்லை.

  • ஸ்ரீதர் நாராயணன் :: ஒருபக்கம்: காதோரமாய்: எனக்கு நரசிம்ம ராவைத் தெரியும் என்று பீற்றிக் கொள்வது மாதிரி, நான் orupakkam அறிவேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட வைக்குமாறு கதைகள் எழுதுபவர். ‘என்னமா எழுதறாரு?!’ என்னும் மலைப்பிலேயே ஒட்டக்கூத்தராய், என் கதைகளை ட்ராஃப்டிலேயே வைத்திருக்க வைப்பவர். இது தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க கரு + விவரிப்பு + முடிவு.
  • வெட்டிப் பயல்: வாழையடி வாழை: சென்ற ஆசிரியரின் இடுகை போலவே எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட கதை. வெட்டி பாலாஜியின் குட்டிப் பாப்பா இதை விட சிறந்த ஆக்கம். விவாதப் பொருள் தரும் அழுத்தம், புதுமையான தற்காலச் சூழல் போன்றவற்றில் மேலும் சிறப்பானதால், அதுதான் தலை பத்தில் இடம்பிடிக்கும் என்று கணித்திருந்தேன். ஜெயகாந்தன் காலத்து சித்திரத்தை, இந்த இணையக் காலத்தில் எவரும் இவ்வளவு நேர்த்தியாய் தரவில்லை என்றாலும், ஃப்ரெஷ்னெஸ் லேது.
  • இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: வெளியானவுடன் வாசித்தது. அப்போதைக்கு இதுதான் #1. இப்போதைய வாசிப்பிலும் தலை மூன்றில் ஒன்று. மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
  • நுனிப்புல்: அவள் பத்தினி ஆனாள்- ராமச்சந்திரன் உஷா: நான் ரா.கா.கி., தமிழோவியம் எழுத ஆரம்பித்தபோது இவரும் திண்ணை, கல்கி என்று சூறாவளியாக நுழைந்ததால், ‘என்னோடு எழுத வந்தவர்’ என்று சொல்லிக் கொள்ளப் பிரியப்படுபவர். ஆனால், நான் இன்னும் ஆங்காங்கே எழுதிக்கொண்டிருக்க, இவரோ அமெரிக்காவின் ஆக்ரோஷத்தோடு புதிய எல்லைகளைத் தொட்டு, பன்னாட்டு இதயங்களைத் தொட்டு, பல எல்லைக்கோடுகளைத் தாண்டி எங்கும் ஆக்கிரமிக்கும் ஆற்றலுடையவர் என்பதற்கான ஒரு பதம், இந்த ஆக்கம். தலை மூன்று இடம்பிடிக்க வேண்டும்.
  • மைய விலக்கு « இன்று – Today :: சத்யராஜ்குமார்: பரிந்துரை முன்பே எழுதியாச்சு
  • அகநாழிகை: தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் – அகநாழிகை வாசுதேவன் : நான் கூட எதையாவது கிறுக்கியிருந்தால், பேரை வைத்து மிரட்டியே தலை இருபதிற்குள் இடம்பிடித்திருக்கலாம் என்னும் நப்பாசையைத் தூண்டிய புனைவு. அச்சுப் புத்தகத்தில் இடம்பெறும் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுட்டோம் என்னும் வருத்தம் மட்டுமே இந்தப் புனைவைப் படித்தவுடன் மேலோங்கியது.
  • ட்விட்டரில் சொன்னது: Tht piece lacked freshness, was more adjective oriented, pretentious & preachy.

  • இவள் என்பது பெயர்ச்சொல்: வழியனுப்பிய ரயில் – உமாசக்தி: வாசித்து ரொம்ப நாளாகி விட்டது. தேர்வாகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஓரளவு நல்ல கதை. ஆனாலும், முழுமை உணர்வு கிட்டவில்லை. ரொம்ப அவசரப்படுத்தும் அவஸ்தை. இன்னும் கொஞ்சமாவது காரண காரியங்களின் அஸ்திவாரம் இல்லாததால் ஆட்டம் கண்ட கதை.
  • தமிழன் – காதல் கறுப்பி...: மலைகளில் காணாமல்போன தேவதைகள்…: இது மெஜிக்கல் ரியலிஸம் என்பதை விட உள்மன கிடக்கையை எழுத்தில் கொணரும் முயற்சி. வித்தியாசமான பெயர்கள், அதிகம் அறிந்திராத தலம் போன்றவற்றிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். மற்றபடிக்கு ‘பாய்ஸ்’ படத்தில் ஃபேண்டசி கதைகளை அவிழ்த்துவிடும் குண்டுப் பையனிடம் ஜொள்ளொழுக கேட்பதையொத்த அனுபவம்.
  • நீரோடையில் தக்கை…: வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் – புபட்டியன்: பதின்ம வயதினரின் பருவக் கோளாறையும் ஃபேன்டசியையும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ முன்னோட்டத்தையும் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதை.
  • நந்தாவிளக்கு: நான் அல்லது நான் – நந்தா குமாரன்: அசத்தலான ஆரம்பம். அடைப்புக்குறி ஆரம்பத்தில் கடுப்பேற்றினாலும், போகப் போக சுவாரசியத்தைக் கூட்டியது. ஆனால், தமிழ்ப்படத்தில் இரு வேடம் தரிப்பது போல் இரண்டு ‘நான்’களுக்கும் போதிய கதாபாத்திர வடிவமைப்பு இல்லாமை அலுக்க வைக்கிறது. முடிவில் கொஞ்சம் தட்டி கொட்டி மேலும் உருப்படியாக கொணர்ந்திருக்கலாம். என்னுடைய தலை இருபதில் நிச்சயம் இடம் உண்டு.
  • வெண்ணிலா பக்கங்கள்: நீரும் நெருப்பும்: பிடித்திருந்தது. ஏற்கனவே இது போன்று பல ஆக்கங்கள் வாசித்திருந்தாலும், போட்டிக்கு வந்ததில் இது போல் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுவது வெகு பொருத்தம். தலை பத்து.
  • GURU: காத்திருத்தல் – சரவணன்.P: எளிமையான வடிவம்; உள்ளடக்கம். அதைக் கொணர்ந்த விதம் சிறப்பு. நடுவர்கள் தீர்ப்பளித்திருக்காவிட்டால் தவறவிட்டிருப்பேன். தலை பத்து.
  • கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் – நிலா ரசிகன் :: சிறுகதைகள் & பாடல்கள: நிறைய கதை இருப்பதால் நிறைந்த உணர்வைக் கொணர முடியாது. வாய் முழுக்க தண்ணீரை வைத்துக் கொண்டு பேச முடியுமா? ‘அச்சமில்லை… அச்சமில்லை’ ஆரம்பித்து பார்த்த ஆதிகால ஆதிச்சநல்லூர் கருவின் அத்தியாய சுருக்கங்கள்.
  • எண்ணச் சிதறல்கள்: அம்மாவின் மோதிரம் – எம் ரிஷான் ஷெரீப் : பிடித்திருந்தது. வித்தியாசமான பொறுமையான நடை. தலை பத்து.

Top Tamil Bloggers in 2008

சென்ற வருடத்தில் தமிழ்ப்பதிவுகளைக் கலக்கியது யார்?

கடந்த வருடத்தில் 1500+ பதிவுகள் தமிழ்மணத்தில் இணைந்துள்ளன. (துவக்கம் – 2008 இறுதி)

குறிப்பிடத் தகுந்த பதிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியில் இறங்காவிட்டால், இந்தத் தகவல் எனக்கு தெரிந்திருக்காது. இத்தனை புதியவர்களில் நான் வாசிக்க ஆரம்பித்தது மிகமிகக் குறைவு. முதல் நான்கு வருடத்தில் 2500 பதிவுகளும், கடந்த வருடம் மட்டும் 60% வளர்ச்சி கண்டிருப்பதும் மிக ஆரோக்கியமான சூழல்.

கவனிக்க மறந்திருப்பீர். தமிழ்ப்பதிவும் பதிவரும் கடந்த வருடத்தில் 60+ சதவீதம் (1500 new Tamil Blogs) எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

எனவே, நான் புலம்பியதை வாபஸ் வாங்க வேண்டிய நிலை?!

இதே போல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளின் புள்ளிவிவரம் என்ன? எத்தனை ஜாஸ்தி ஆகியிருக்கும்? மொத்தம் எவ்வளவு?

புதிய வலைப்பூ ஒவ்வொருவரையும் சொடுக்கி, மேலோட்டமாகவாது மேய்ந்து, தலை பத்து பட்டியலிடுவது என்னும் முடிவில் மாற்றம். 1500+ஐயும் படித்து முடிக்க மூன்று மாதமாவது ஆகும். அதற்குள் ‘சூடான இடுகை’, சீமான், பாலஸ்தீனம், தமிழ்மண விருது எல்லாமே ஆறிப் போகும்.

முதற்கண் முக்கியஸ்தர் கவனிப்பு

(அதாவது புதிதாக எதுவும் எழுதாமல், வேறெங்கோ இட்டதை மீள்பதிவு செய்யும் பத்து பட்டியல்)

  1. கவிதை & பேட்டி
  2. தமிழச்சி தங்கபாண்டியன்

  3. creations
  4. நீல பத்மநாபன்

  5. Revathy | PassionForCinema
  6. ரேவதி

  7. பேசுகிறார்
  8. பாலகுமாரன்

  9. துணிவே துணை :: கல்கண்டு
  10. லேனா தமிழ்வாணன்

  11. வாழ்க தமிழுடன் !
  12. நெல்லை கண்ணன்

  13. எழுத்துகள்
  14. அ.ராமசாமி

  15. Pamaran
  16. பாமரன்

  17. சாரு ஆன்லைன்
  18. சாருநிவேதிதா

  19. Era murugan
  20. இரா முருகன்

உடனடியாக நினைவுக்கு வருபவர், நண்பரின் பரிந்துரை, சூடான இடுகையில் அடிக்கடி உலா வந்தவர், ட்விட்டரில் என்னைப் பின் தொடர்பவர், துறைசார்ந்து எழுதுபவர், திரட்டி சாராமல் இயங்குபவர், மாற்று(.நெட்) திரட்டியில் தொடர்ந்து கவனிக்கப்பட்டவர், என்னை கவனிப்பவர், கிழக்கு பதிப்பகத்தில் இருந்து கிளம்பிய கூட்டம், வோர்ட்ப்ரெஸ்.காம்-இல் அடிக்கடி தென்பட்டவர் என்றெல்லாம் ரொம்ப யோசித்து என்னுடைய பட்டியல்.

தலை பத்து(+1) 2008

  1. யாழிசை ஓர் இலக்கிய பயணம்
  2. லேகா

  3. பயணங்கள்
  4. மரு. ஜா. மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

  5. வினவு, வினை செய்!
  6. மக்கள் கலை இலக்கியக் கழகம்

  7. மனம் போன போக்கில்
  8. என். சொக்கன்

  9. ச்சின்னப் பையன் பார்வையில்
  10. பூச்சாண்டி

  11. ஏ ஃபார் Athisha
  12. அதிஷா

  13. பரிசல்காரன்
  14. கிருஷ்ணகுமார்

  15. இந்திய மக்களாகிய நாம்….
  16. சுந்தரராஜன்

  17. Pennin(g) Thoughts
  18. ரம்யா ரமணி

  19. மணியின் பக்கம்
  20. பழமைபேசி

  21. தமிழில்
  22. டாக்டர் ஷாலினி

விஐபி, பழம்பதிவர், நான் அதிகம் வாசிக்காத பத்து(+1) உப பட்டியல்:

  1. R P Rajanayahem
  2. ஆர் பி ராஜநாயஹம்

  3. தங்கள் அன்புள்ள
  4. முரளிகண்ணன்

  5. சிதைவுகள்…
  6. பைத்தியக்காரன்

  7. சூர்யா – மும்பை
  8. சுரேஷ்குமார்

  9. mathimaran
  10. வே. மதிமாறன்

  11. வெட்டிவம்பு
  12. விஜய் குமார்

  13. ஓவியக்கூடம்
  14. ஜீவா

  15. முத்துச்சரம்
  16. ராமலக்ஷ்மி

  17. மொழி விளையாட்டு
  18. ஜ்யோவ்ராம் சுந்தர்

  19. US President 08 :: அமெரிக்க அதிபர் தேர்தல்
  20. குழுப்பதிவு

  21. writerpara.net | பேப்பர்
  22. பா ராகவன்

நிறைய அடிபடுகிறார்

(அ)

இவர்களும் இருக்கிறார் 13

தொடர்புள்ள சில:

1. Happening Tamil Blogs – Must Read 30: Index

2. தமிழ்ப்பதிவுகள் – குறிப்பிடத்தக்க முகமூடிகள்

3. வலைப்பதிவுகள் – அடுத்த கட்டம

Superhit Songs in Tamil Cinema – 2008 Year in Review

நினைவுகூர்தல்: 1. Tamil Film Songs – Best of 2007 :: திரைப்பட இசை வரிசை

2. 2008 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

3. தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்

தமிழ்ப்பட பாடல் பட்டியல்:

என்றும் கேட்கலாம் பத்து

  1. ஆழியிலே முக்குளிக்கும் அழகே தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிச்சரண்
  2. சூச்சூ மாரி பூ :: எஸ் எஸ் குமரன் – மிருதுளா எஸ், பார்த்தசாரதி, ஸ்ரீமதி
  3. அனல் மேலே பனித்துளி வாரணம் ஆயிரம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – சுதா ரகுநாதன்: தாமரை
  4. சொல் சொல்லு சொல்லம்மா குசேலன் :: ஜிவி பிரகாஷ்குமார் – ஹரிஹரன், பூஜா, ரஞ்சனி, சுஜாதா: பா விஜய்
  5. அன்பே அன்பேதான் வாழ்க்கையே – கண்ணும் கண்ணும் :: தினா – தினா
  6. எப்போ நீ – காளை :: ஜீவி பிரகாஷ் – மதுஸ்ரீ
  7. சின்னச் சின்ன கனவுகள் – வாழ்த்துகள் :: யுவன் சங்கர் ராஜா – ஸ்வேதா
  8. இரு விழியோ – பிரிவோம் சந்திப்போம் :: வித்யாசாகர் – சைந்தவி, வினீத் ஸ்ரீனிவாசன்: ஜெயந்தா
  9. அபிநயம் காட்டுகின்ற ஆரணங்கே – உளியின் ஓசை :: இளையராஜா – பாம்பே ஜெயஸ்ரீ, சுதா இரகுநாதன்
  10. அய்யாரே! மனம் தய்யார்ரே (ஆவாரம்பூவுக்கும்) – அறை எண் 305இல் கடவுள் :: வித்யாசாகர் – ஷ்ரேயா கோஸல்

ஒளிப்பதிவு பத்து (பாடல் அருமை என்றால், வெள்ளித்திரை படமாக்கலில் பின்னி அமர்க்களப்படுத்திய பத்து கானங்கள்)

  1. கத்தாழக் கண்ணால அஞ்சாதே :: சுந்தர் சி பாபு – நவீன் மாதவ்: கபிலன்
  2. அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல வாரணம் ஆயிரம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – கார்த்திக் & வி பிரசன்னா: தாமரை
  3. கண்கள் இரண்டால் சுப்ரமணியபுரம் :: ஜேம்ஸ் வசந்தன் – பெல்லிராஜ், தீபா மரியம்
  4. தோழியா? என் காதலியா? காதலில் விழுந்தேன் :: விஜய் ஆன்டனி – ஹரீஷ் ராகவேந்திரா, மேகா, ஸ்ரீசரண்: பிவி பிரசாத்
  5. குட்டிப் பிசாசே – காளை :: ஜீவி பிரகாஷ் – சிலம்பரசன், சுசித்ரா
  6. ரகசியக் கனவுகள் ஜல் ஜல் – பீமா :: ஹாரிஸ் ஜெயராஜ் – ஹரிஹரன் & மதுஸ்ரீ: யுகபாரதி
  7. வெண்மேகம் பெண்ணாகி – யாரடி நீ மோகினி :: யுவன் சங்கர் ராசா – ஹரிஹரன்
  8. மெதுவா மெதுவா – பிரிவோம் சந்திப்போம் :: வித்யாசாகர் – ஹரிணி & கார்த்திக்: கபிலன்
  9. அட கடகட டம்டம் அதிரடி பிம்பம் – சத்யம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – ப்ரேம்ஜி
  10. அடடா… என்னை ஏதோ செய்கிறாய் – சந்தோஷ் சுப்ரமணியம் :: தேவி ஸ்ரீப்ரசாத் – சித்தார்த்: நா முத்துக்குமார்

துள்ளிசை பத்து

  1. நாக்க முக்க காதலில் விழுந்தேன் :: விஜய் ஆன்டனி – சின்னப்பொண்ணு: பிவி பிரசாத்
  2. வேர் இஸ் தி பார்டி? – சிலம்பாட்டம் ::  யுவன் ஷங்கர் ராஜா – முகேஷ், ப்ரியதர்ஷினி
  3. டாக்ஸி டேக்சி – சக்கரக்கட்டி :: ஏ ஆர் ரெஹ்மான் – பென்னி தயால், ப்ளேஸ், ஜாவெத் அலி, விவியன் Chaix: ப்ளேஸ், நா முத்துக்குமார், விவியன் Chaix
  4. உலக நாயகனே – தசாவதாரம் :: ஹிமேஷ் ரேஷம்மயா – வினீத்
  5. உய்யாலாலோ – தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் – கைலாஷ் கெர், சுஜாதா
  6. கட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்கமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு :: வித்யாசாகர் – மாலதி லஷ்மண், ஜெயமூர்த்தி: வைரமுத்து
  7. கட்டிலுக்கு மட்டும்தானா பொம்பள – தனம் :: இளையராஜா – இளையராஜா: முத்துலிங்கம்
  8. கிச்சு கிச்சு – ஏகன் :: யுவன் சங்கர் ராஜா – வசுந்தரா தாஸ் & யுவன் ஷங்கர்ராஜா
  9. ஆடியடங்கும் உலகத்தில் ஆட வந்திருக்கேன் – பாண்டி :: ஸ்ரீகாந்த் தேவா – கிரேஸ் கருணாஸ், செந்தில் தாஸ்: அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
  10. திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு/நகரு நகருடா – திண்டுக்கல் சாரதி :: தினா

What were the notable & forgettable Tamil Movies in 2008: Thamil Cinema

சென்ற வருட நினைவுகூர்தல்: Tamil Film Songs – Best of 2007 Movie Music | 2007 – பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

இந்த வருடம் – தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்

என்னுடைய திரைப்பட பட்டியல்:

பேயறைய வைத்த பத்து:

  1. அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்.
  2. குருவி – ஆளுங்கட்சி தயாரித்தால் ப்ரொடக்ஷன் க்வாலிடி கியாரண்டி; படத்தின் க்வாலிடி பணால்.
  3. பீமா – டாம் க்ரூய்ஸ் மாதிரி ஆகிட்டு வருகிறார் விக்ரம். த்ரிஷாவைத் தேய்ச்சால் மட்டும் போதுமா?
  4. பழனி – குரங்கு கையில் பூமாலை என்றால் பழமொழி; பேரரசு கையில் படம் என்றால் அதே மொழி புதுசாயிடும்.
  5. உளியின் ஓசை – அமெரிக்க அதிபர்களுக்கு ஓய்வெடுத்தபின் அருங்காட்சியகமோ நூலகமோ வைப்பது பொழுதுபோக்கு; அதே போல் தமிழினத் தலைவருக்கு திரைவசனம் எழுதுவது கொடும்போக்கு.
  6. நெஞ்சத்தைக் கிள்ளாதே – நடிக்கத் தெரிந்த நடிகையை கொண்டு நல்ல தலைப்பை நாறடித்த அகத்தியன்.
  7. வல்லமை தாராயோ – தன்னைத்தானே மூத்தப் பதிவராக நினைத்துக் கொண்டு சூடான இடுகைக்கும் சொந்தக்காரராய் பாவித்து படுத்தியெடுக்கும் தமிழ்ப்பதிவராக ரோல் தேவைப்பட்டால் சொல்லுங்க; பார்த்திபன் வருவார்; அவர் வந்தாலே தானியங்கியாக அகம்பாவ நிறைகுடம் ரொம்பும்.
  8. வைத்தீஸ்வரன் – தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு காசு கேட்கும் கழைக்கூத்தாடிக்கு கிடைக்கும் காசு கூட அதிகமாக இருக்கும். சரத்திற்கு ஏன் இந்த மசாக்கிஸ்ட் மனப்பான்மை? சமத்துவமாக ‘அரசி’யில் நடிக்க வரணும்.
  9. பசும்பொன் தேவர் வரலாறு: இட ஒதுக்கீடு
  10. அய்யாவழி: இட ஒதுக்கீடு

கொசுறு: சக்கரக்கட்டி: காசிருந்தா சேமநல உண்டியலில் நிதியாக்குங்க; அருணாச்சலத்தில் ரஜினி செஞ்ச மாதிரி ‘செந்திலை’ இயக்குநராக வைத்து படமெடுக்கவா செய்யணும்?

விமர்சகரின் விருப்ப பத்து:

  1. காஞ்சிவரம் – அவசியம் பாருங்க.
  2. பூ – புஷ்பமாரி பொழிகிறது; ஆளுயர பூமாலை குவிகிறது. வாசம் இன்னும் மோப்பம் பிடிக்காததால் நோ காமென்ட்ஸ்.
  3. சுப்ரமணியபுரம் – Difference between a quality movie & exploitative film: ‘Revolutionary Road’ uses 50s backdrop to define its characters. இங்கே எண்பதுகளைக் காட்டி மயக்கி சாதா சொக்குகிறது.
  4. தசாவதாரம் – Bolt ஆங்கிலப் படத்தில் அசகாய சூரனாக நாய் தன்னைத் தானே கற்பனை செய்து கொண்டு உலாவும். கமலும் கேயெஸ் ரவிக்குமாரும் அந்த உலகநாயக நாய்க்குட்டியாக (கவனிக்க போல் அல்ல) சஞ்சரித்ததாக வித்தகப் பதிவர்கள் எழுதி மாய்ந்த படம்.
  5. வாரணம் ஆயிரம் – இரண்டு விமர்சனம் எழுதியிருக்கோம்ல 🙂
  6. அரசாங்கம் – ஐந்து வயதுக்குட்பட்டோருக்குத்தானே விஜய்காந்த் படம் எடுப்பார் என்னும் நம்பிக்கையை பொய்யாக்கி, பத்து வயது மிகாதோரும் புளகாங்கிதமடைந்தனராம்!
  7. வெள்ளித்திரை – தெலுங்கில் அசல் பார்த்த ‘ரசிகர்்’ மீண்டும் விஜய்/’ரீமேக்’ ரவியை சகித்துக் கொள்வார். ஆனால், இந்த மலையாளத்தில் பார்த்தவரின் அங்கசேஷ்டையும் கலாரசனையும் இருக்கே! என்னத்த சொல்லுவேன்?
  8. தனம் – அதிகம் பேசப்படாததை எடுத்தாண்டதற்கான பொலிடிகலி கரெக்ட் ஒதுக்கீடு.
  9. இராமன் தேடிய சீதை – அந்த பசுபதி பிட் இன்னொரு முழுப்படமா இருந்திருக்கலாம்.
  10. பொம்மலாட்டம் – ‘கல்லுக்குள் ஈரம்’ இயக்குநர் சிகப்பு ரோஜாக்களாக டிக்..டிக்…டிக்!?

ரசிகரின் ரசனைக்கு பத்து:

  1. அஞ்சாதே – மற்ற படம் எல்லாம் டெட்ராய்ட்டின் மும்மூர்த்தி அமெரிக்க ஆட்டோ நிறுவனங்கள் போல் தத்தி தத்தி நடக்கும் சாலையில் லம்போர்கினியாக ஊர்வலம் காட்டி மிரட்டியது.
  2. பிரிவோம் சந்திப்போம் – அமெரிக்காவில் மனைவியை இட்டாண்டு வந்திருக்கீங்களா? எங்கோ கிள்ளி, நெளியவைக்கும்.
  3. கண்ணும் கண்ணும் – நம்பமுடியாத விஷயங்களை நம்பக்கூடிய முறையில் நடைகோணாத பாணியில் சொன்னது.
  4. யாரடி நீ மோகினி – என்னுடைய மேனசரை நான் டாவடித்த ஞாபகம் வந்து ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் லோக்கல்ஸ் ஆயிடுச்சுபா!
  5. சரோஜா சுப்ரமணியபுரத்தை எல்லாம் கொண்டாடும் சிற்றிதழ் இந்த மாதிரி முயற்சிகளை புறந்தள்ளும் கபடவேடம் ஏனோ?
  6. ஜெயங்கொண்டான் – அதிகாரமும் உரிமையும் மருட்சியும் சமவிகிதத்தில் கலந்த சகோதர பாசத்தையும் சூட்டிகையான காதலும் சிவாஜிக்கு தங்கச்சியாக ஓவர்-ஆக்டிங் தந்துவிடும் அபாயமுள்ள பாவ்னாவிடம் அமரிக்கையும் தந்தற்காக ஷொட்டு.
  7. சந்தோஷ் சுப்ரமணியம் – சித்தார்த்தை சின்னப் பையனாகவும், ஜெனீலியாவை இன்னும் கொஞ்சம் க்யூட்டாகவும் கண்டிருந்தாலும், ஆங்கில மொழியாக்கம் படிக்காமல், பார்க்க வைத்தது.
  8. பொய் சொல்லப் போறோம் ஹிந்தியில் பார்த்திருதாலும், கதையை நம்பி கதாநாயக பிம்பங்களை உதறிய படம் என்ற வகையில் நல்ல படம்.
  9. குசேலன் வடிவேலுவை மட்டும் நீக்கிவிட்டால் படம் சூப்பர்.
  10. ஆயுதம் செய்வோம் – ‘எனக்கு நடிக்க வராது; நடனம் தெரியாது; கையையும் காலையும் சுத்துவேன்; நல்ல நகைச்சுவை ட்ராக்கை படம் நெடுக்க வைப்பேன்’ என்று சத்தியப் பிரமாணம் எடுத்து இருக்கும் சுந்தர் சியை மறப்பவர்களுக்கு ஈரேழு பிறப்பிலும் நற்கதி கிடைக்காது.

விமர்சனத்திலும் பார்க்காத ஐந்து:

  1. அபியும் நானும் – இன்னொரு வாரணம் ஆயிரம் இல்லியே?
  2. சில நேரங்களில் – நல்லா இருந்ததாம். வின்சென்ட் அசோகன் எப்படி இருக்கார்?
  3. சாது மிரண்டா – எப்படி இருக்கு?
  4. நேபாளி – மோசமில்லை என்கிறார்கள்; இனிமேல்தான் சன் டிவியில் தர்ம தரிசனம் ஆவணும்
  5. காதலில் விழுந்தேன் – சன் டிவி சந்தைப்படுத்தல் மட்டும்தான் USPஓ?

உங்க படம் இங்கே இடம்பிடித்திருக்கிறதா?

மீண்டும் பத்து கட்டளைகள்: கடவுள்களின் பள்ளத்தாக்கு – சுஜாதா

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

நன்றி: தர்மா