Daily Archives: நவம்பர் 17, 2008

வாரணம் ஆயிரம்: எதிர்பார்ப்பும் மசாலாவும்

படம் பார்த்த கதை

  • நாலைந்து பேர்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்; கிட்டத்தட்ட 150 பேராவது வந்திருந்தார்கள். (பாஸ்டன் பக்கத்தில் மட்டும் மொத்தம் பத்து காட்சிகள்)
  • இணையமில்லாத பாலாஜியாக போதை சூர்யா துடித்து முடிந்த திரையரங்கு நிசப்தத்தில், பின் இருக்கை சிறுமி கேட்ட கேள்வி: “What happened to him ma? Why is he acting up like that?’
  • முஸாஃபிர்இல் சமீராவை பார்த்தவுடனேயே பூமிகா மாதிரி பொறுமை, நதியாவின் ஆளுமை, பானுப்ரியாவின் அழகு எல்லாம் சேர்ந்திருக்கும் இவரை தமிழுக்கு அழைக்க வேண்டாமோ என்று பொருமியது.
  • மூகாம்பிகா, மெக்கானிகல், மியூசிக் என்று ‘மின்னலே – 2’வாக இல்லாமல் இருந்தாலும், இடைச்செருகலாய் ஆங்காங்கே ஆசுவாசப்படுத்தியதாக வந்த விமர்சனங்கள் குழப்பியிருந்தது.

படம் எப்படி?

பார்வையாளர் வட்டம் யார்:

  1. நாற்பதைத் தாண்டி ‘நான் சின்னப் பையனாக இருந்தப்ப…’ என்று தொடங்குபவர்கள்.
  2. ‘நமக்குக் கிடைக்கும் நல்ல கணவன், கடைத்தேறும் காலம் வரை மெல்லிய மனங்கவர் காதலனாக இருப்பான்’ என்பதை நம்பும் மணமாகாத பெண்கள்.
  3. காக்க காக்க’வின் மிடுக்கையும் ‘மாயாவி‘யின் துடுக்கையும் ‘பேரழகன்‘ அமரிக்கையும் கொண்டாடும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்.
  4. ‘Chick flick பார்க்கணும்; ஆனா, தமிழில் இருக்கணும்’ என்றெண்ணும் ஆங்கிலேயர்கள்.
  5. ‘எனக்கு கமல் படம் பிடிக்கும்; ஆனா, அம்மா மட்டுமே ஆக்கிரமிக்கும் தசாவதார அதிமுக மாதிரி இல்லாமல், கலைஞர் குடும்ப அங்கத்தினர் போல் பலர் நிறைந்த திமுக வேண்டும்’ என்று ஆசைப்படும் சினிமா ரசிகர்கள்.

கதை:

என் மகள் எனக்கு நேற்று சொல்லியது: He meets this friend first. She dies. He marries another girl later. Now, his father dies.

அப்புறம்?

  • மிகக் குறைவான எதிர்பார்ப்புகளுடன் செல்ல வேண்டும்.
  • நான் சிறுவனாக இருந்தபோது என் பெற்றோர் ‘திரிசூலம்‘ இழுத்து சென்றார்கள். ‘இமயம்‘ போன்ற ‘எத்தனையோ தாங்கிட்டோம்! இதையும் பார்த்துட மாட்டோமா?’ என்பதை தவிடுபொடியாக்கிய சிவாஜி சாரின் நடிப்பு அங்கே எனக்கு கிடைத்தது. உங்களுக்கு இது இன்றைய சிவாஜியாகிய சூர்யாவின் நடிப்புக்கு திலகமாகவும், அடுத்த தலைமுறைக்கு மொக்கை அழுகையாகவும் தோன்றும்.

மொத்தத்தில்?

  • சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் கிடைக்கவில்லை. ஆனால், தொட்டுக்க சிக்கன் விங்ஸ் இருப்பதால் நெஞ்சில் பறக்கிறது.

வீடியோ பேட்டி


பதிவுகளும் பதில்களும்

சரித்திரம்

இதுவரை வந்த இவரின் எந்த படமும் சோடை போகவில்லை, ஏமாற்றியதில்லை. வாரணம் ஆயிரமும், ஏமாற்றவில்லை.

ஆனா என்ன ஒரே வித்யாசம்னா, கௌதம் மேனனின், மற்ற படங்களெல்லாம், டிவிடி வாங்கி வச்சுக்கிட்டு, மூணு நாலு மாசத்துக்கு ஒரு தரம், திரும்ப பாத்தாலும் போரடிக்காத வகையைச் சேர்ந்தவை. வாரணத்தை, அப்படியெல்லாம் திரும்ப திரும்ப பாக்கமுடியாது.

சர்வேசன்

லா அன்ட் ஆர்டர் பார்ப்பவருக்கு வேட்டையாடு விளையாடு அரிச்சுவடி என்றால் ப.கி.மு.ச.த்திலும் ஜெனிஃபர் ஆனிஸ்டனே வியாபித்திருந்தார். ‘மின்னலே‘வில் 80 ஹாக்கி அணியாக தங்கம் வென்று ‘காக்க காக்க’வில் 83 கிரிக்கெட் கபில் தேவாக இருந்த கவுதம், முந்தைய இரண்டில் மேட்ச் ஃபிக்சிங் கபில் தேவாக சறுக்கியதை, வாரணமாயிரத்தில் மீட்டெடுத்திருக்கிறார்.


கல்யாணம் செய்தால் திரையில் காட்டித்தான் ஆக வேண்டுமா?

ஒரு சந்தேகம்.

சூர்யா BE முடிக்கும் போது 22 வயசு.

அப்றொம், பிசினஸ் பண்ணி, வீடு கட்டி முடிக்க ஒரு ரெண்டு வருஷம் -> 24 வயசு.

அப்றொம் US visa + US visit ஒரு ஒரு வருஷம்? -> 25 வயசு.

அதுக்கு அப்றொம், போதை, டில்லி பயணம் ஒரு வருஷம்னு வெச்சிக்கலாம். -> 26 வயசு.

Armyல major ஆகறதுக்கு ஒரு 5 வருஷம்? (எனக்கு தெரில) -> 31 வயசு.

அதுக்கு அப்றொம், கல்யாணம் பண்ணி குழந்தை பொறந்து, குழந்தைக்கு 3 வயசு ஆகற மாதிரி காட்றாங்க. சோ இன்னொரு 4 வருஷம் அதுக்கு. ஆக க்ளைமேக்ஸ் அப்போ சூர்யாக்கு 35 வயசு ஆகுது.

குத்து ரம்யா ஒரு சீன்ல சூர்யாவ பாத்து, “உனக்கு 17 வயசு எனக்கு 15 வயசு, அப்போவே உன்ன எனக்கு புடிச்சுது” அப்டீன்னு சொல்றா. சோ படம் முடியும் போது குத்து ரம்யாக்கு 33 வயசு.

வெற ஒரு சீன்ல, குத்து ரம்யாவும், சூர்யாவோட தங்கையும் ஒரே க்லாஸ்னு சொல்றாங்க. ஆக தங்கைக்கும் படம் முடியும் போது 33 வயசு. ஆனா கல்யாணமே நடக்கல? தங்கைக்கு என்ன ப்ரச்சனனு எங்கயாச்சும் சொன்னாக்களா? நான் மிஸ் பண்ணிடேனா?

Truth

ஃபிகர் ஃப்ரீயா இருக்கா என்பதை எவ்வளவு டீசண்ட்டா கேட்கிறார்? தங்கைக்கு கல்யாணமாகவில்லை என்றும் சொல்லவில்லை.


ஆவக்கா பிரியாணி

வேல பாக்கிற கம்பெனி பசங்க எல்லாமா சேந்து வாரணம் ஆயிரம் படம் போறதுக்கு முடிவு பண்ணி இண்டெர்னெட்ல டிக்கெட் புக் பண்ண முடிவு பண்ணிருக்காங்க, அதுல இருந்த ஒரு தெலுகுப்பையன் அந்த குரூப்புக்கு எங்க நமக்கும் வாரணம் ஆயிரம் புக் பண்ணிருவாங்களோன்னு பயந்து எனக்கு ஒரு ஆவக்கா பிரியாணி புக் பண்ணிருங்கன்னு ஒரு முன்னெச்சரிக்கை மெயில் அனுப்பிருக்காரு, அந்த மெயில் லிஸ்ட்ல இருந்த தமிழ்ப்பையன் ஒருத்தரு எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.

குடுகுடுப்பை

🙂 😀 😛


Is it an adaptation?

The film was believed to be based on the Best Foreign Film Oscar Winner, ‘Character‘ Directed by Mike van Diem, The Netherlands.

Mohana Krishna

இந்தப் படத்தின் கதையைப் படித்தால் அப்படித் தெரியவில்லை!


மெதுவடை

அப்பா சூர்யா பரிதாபமாக இருக்கிறார்.

கோவி. கண்ணன்

ரஜினி ‘பாபா’ மாதிரி இருக்கார்னு சொல்லாமல் செய்துவிட்டாரே?!


அப்பன் பூஜையில் நுழைந்த கரடி மகன்

இந்தியத் திரைப்படம் ஒன்றுக்கு அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தும் கதை என்ற ஒன்று இல்லாததால் திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி படம் எங்கெங்கோ அலைபாய்கிறது.
:::
தசாவதாரத்தை மிஞ்சிய தொழில்நுட்ப சாத்தியங்கள் சில இரட்டை வேடம் என்பதால் இப்படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. துரதிருஷ்டவசமாக சராசரி சினிமா ரசிகன் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளப் போவதில்லை.

லக்கிலுக்

Bug testing என்பது கிடைக்கவே முடியாத தவறும் கண்டுபிடிக்குமாறு அமைய வேண்டும். அது போல் ‘நல்லா நடிச்சிருக்கான்யா!’, அருமையான மேக்கப், என்ன மாதிரி கேமிரா என்றெல்லாம் வெளிப்படையாக ஜிகினா ஒட்டாமல்; அதே சமயம் ‘வெள்ளித்திரைபிரகாஷ்ராஜ் சொல்வது போல் தலை வாழை இலையில் பொரியல், வடை, அப்பளம், லட்டு, காரக்குழம்பு என்று ரகரகமாகவும் கொட்டியிருக்கிறார் கவுதம்.


ஆறும் அது ஆழமில்ல

காதலனின் ஒப்புதலைப் பெற டெல்லி வரை வந்திருந்தவளை பிடித்திருக்கின்றது பிடிக்கவில்லை என்று ஒரு முடிவாக சொல்லாத முன் தொட முயற்சிக்கும் சூர்யாவிடம் அவர் காட்டும் கோபமும் கேள்விகளும் அற்புதம். எனக்கும் உன்னோட தோள்ல சாய்ந்துக்கனும் உன்னை கிஸ் பண்ணனும்னு ஆசைதான் ஆனால் என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்றதையே சொல்லாமல் தொட பார்க்கிற நீ என்ன மாதிரியான மனுஷன் என்கிற அவருடைய கேள்வி ஏனோ என்னை மிகவும் இம்சித்தது.

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்


தனயனைக் காத்த தந்தை

மகனின் வாழ்க்கை வழியாக தந்தையின் வாழ்க்கையை சொல்லும் விதம் புதிது. ஒரு இளைஞன் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டுமானால் அவனுக்கு அவன் தந்தையிடம் இருந்து கிடைக்கும் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும், சுதந்திரமும் முக்கியம்.

வீரசுந்தர்


சிறுவர்களுக்கான திரைப்படம் அல்ல

படம் நகர நகர நம்மோடு கதைச் சொல்லியும் கூட வந்து நம்மை அவர்களோடு இணைத்துக் கொண்டு படத்தை மெல்ல நகர்த்தும் திறனை கவுதமிடம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் நம் தமிழ் இரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விரைவு, ஒரு நகைச்சுவை தடம் என்று எல்லாமும் கலந்த மசாலாவையே சுவைத்து பழகிவிட்டார்கள். அதுவே தமிழ் இரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று தெரிந்தும் கூட இப்படிப்பட்ட சிகிச்சையை தைரியமாகத் தந்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘கவிதை’. ஏனெனில் சிலருக்கு படம் புரியாமலுமிருக்கலாம். குழந்தைகள் நீதிக் கதையின் முடிவில் அப்ப ‘கதை என்ன சொல்ல வருது’ என்று கேட்பது போல் படத்தைப் பார்த்து முடித்த பிறகு என்ன சொல்ல முயற்சியிருக்காங்க என்று கேட்பவர்களுக்குச் சொல்ல எந்த நீதியும் இல்லை.

ஜெஸிலா


வாழ்க்கை என்ன? வாழ்ந்து பார்க்கலாம் அப்பாவும், வாழ்ந்து காட்டலாம் மகனும்

பதின்ம சூர்யா, கல்லூரி சூர்யா, காதல் சூர்யா, பொறுப்பான சூர்யா, தடுமாறும் சூர்யா, அலையும் சூர்யா, திரும்பும் சூர்யா, உழைக்கும் சூர்யா, சாகச சூர்யா, குடும்ப சூர்யா,அப்பா சூர்யா,சந்தோஷமாய் மரணிக்கும் சூர்யா. ஒவ்வொரு காட்சியிலும் புதிய சூர்யாவை பார்க்க முடிகிறது.
:::
சுயசரிதை படங்கள் கசாமுசா வென இருப்பது தான் எனக்குப் பிடித்திருக்கிறது. நேர்கோட்டில் எவரின் வாழ்வும் இல்லை.

அய்யனார்


🙂

நான்: படம் ஆரம்பித்ததுமே அப்பா சூர்யா சிரித்த முகமாகவே சாகிறார்! ஏன்?

சூர்யா: மீதி படம் பாக்க போகும் உங்களை நினைச்சா பாவமா இருக்கு என்று! நினைச்சு பார்த்து இருப்பார்!

குசும்பன்


மிகை நாடும் கலை குறித்த மாற்றுப் பார்வை

தவமாய்த்தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற சேரன் படங்களை உயர் மத்தியதர வர்க்கக் குடும்பத்திற்குப் பொருத்தி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஆனால் தவமாய்த்தவமிருந்து, ஒன்பது ரூபாய் நோட்டில் இருக்கும் ஒரிஜினாலிட்டியும் பார்வையாளனின் மீதான தாக்கமும் வாரணத்திற்குக் கிடையாது. மணிரத்னம், ஷங்கர், மேனன் போன்ற வலதுசாரிச் சினிமா இயக்குனர்களின் படங்களிலிருந்து கேமிரா, இசை, அழகியல் போன்ற சமாச்சாரங்களைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் அடிப்படை அறிவும் தர்க்கமும் கூட இல்லாது அம்மணமாய் நிற்பது தெரியும்

சுகுணாதிவாகர்


படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல..
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல..
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல..
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில..

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா..
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா..
அவ ஒத்த வார்த்த சொன்னா..
அது மின்னும் மின்னும் பொன்னா..
உன் எண்ணம் சொல்லி என்னா..
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்கா குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே..
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே..
படுத்தா தூக்கமும் இல்ல..என் கனவுல தொல்ல..
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

எதுவோ எங்கள சேர்க்க,
இருக்கு கயித்தில..தோக்க,
ஓ.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே!!

துணியால் கண்ணையும் கட்டி,
கைய காற்றில நீட்டி,
இன்னும் தேடறன். அவள..
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!

வாழ்க்க ராட்டிணம் தான் டா,தினம் சுத்துது ஜோரா,
அது மேல கீழ மேல கீழ காட்டுது, தோடா!!
மொத நாள் உச்சத்திலிருந்தேன், நான் பொத்துனு விழுந்தேன்..
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்,
அது யாருயென்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே!!
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளை இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!
தனியா.. எங்கே போனாளோ!!


நான் படம் பார்க்க போகலாமா?

நீண்ட நாவலைப் படிப்பது போல சில சமயங்களில் சுவாரஸ்யமகாவும் சில சமயங்களில் அயர்ச்சியூட்டுவதாகவும் சில சமயங்களில் போதை தருவதாகவும் சில சமயங்களில் வடுவேற்படுத்துவதாகவும், சில சமயங்களில் மென்முறுவல் பூக்க வைப்பதாகவும் இருந்த போதிலும் படிக்காமல் கீழே வைக்க முடியாத அளவுக்கு ஒன்றிப்போக முடிவதாக இருப்பது படத்தின் சிறப்பு.

ஆசிப் மீரான்


உள்ளங்கவர் கதாநாயகி

குத்துரம்யா கொஞ்சம் பப்ளியாய் இப்ப அழகாகவே இருக்கிறார். பெங்களூர் பக்கத்தில் ரம்யாவை ‘கிழவி’ என்று சொல்வார்கள் என்றாலும் – பள்ளிக் கூட மாணவி உடையிலும் அருமையாக இருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேல், கேம்பிற்கு வரும் பொழுது புடவையில் ம்ம்ம் பிரம்மாதம்.

ஆனால் எனக்கு சமீரா ரெட்டியைப் பிடித்துப் போனது, அதற்கு மிகமுக்கிய காரணம் அந்தக் காதலாய்த் தான் இருக்க வேண்டும். RECயில் படித்த அமேரிக்காவில் MS Computers படிக்கும் பிகர் அப்படித்தான் இருக்கும்.

அந்தப் பொண்ணு பேசுற மாதிரி, அந்தப் பொண்ணு நடக்குற மாதிரி தான் இருக்கும். கௌதம் அதை உணர்ந்து செய்திருக்கிறார்.

அந்தப் பெண் சுகி(சுடிதாரில்)யில் வரும் எல்லா சமயங்களிலும் ஷால் அணிந்திருப்பதை கவனித்தீர்களா?

டிரெயினில் சூர்யா அவளிடம் சேட்டை செய்யும் பொழுது சமீராவின் ரியாக்‌ஷன் மனதைக் கவர்வதாக இருந்தது. இந்தப் பொண்ணும் கொஞ்சம் பப்ளியாய், சிரிக்கும் பொழுது அவள் முகமே சிரிக்கிறது.

மோகன்தாஸ்