அங்கே வரும் பெண்களைப் பார்க்கவே வாரத்தில் இரண்டு முறை அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் பெருமாள். நிச்சயமாக அந்தப் பெண்கள் யாரும் தமிழ்ப் பெண்கள் அல்ல. தமிழர்களுக்கு பழம் சாப்பிடும் வழக்கம் இல்லையோ என்னவோ.
பெருமாளுக்கு அதைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை. அவன் கவலை அவன் மூலம்.
அப்பர் மிடில் க்ளாஸ் மற்றும் அப்பர் க்ளாஸைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வட இந்திய முகங்களையே அங்கு காண முடிந்தது. தமிழ் இரண்டு சதவிகிதம் இருக்கலாம். இப்படி இது ஒரு பூர்ஷ்வா கடையாக இருந்தாலும் விலை என்னவோ மற்ற இடங்களை விட மலிவுதான்.
மேலும் இந்தக் கடையில் பெருமாள் அவதானித்த ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இங்குள்ள பணிப்பெண்கள் யாவருக்கும் முலைகளே இல்லை என்பது. தய்வுசெய்து இதைப் பாலியல் பிரச்சினை ஆக்காதீர்கள். இது முழுக்க முழுக்க வர்க்க முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.
அந்தப் பணிப்பெண்கள் ஏன் இப்படி நறுங்கிப் போய் கிடக்கிறார்கள் என்பதை Communist Manifestoவையும் மக்ஸீம் கார்க்கியின் தாயையும் படித்துவிட்டு யோசியுங்கள்.
அந்தக் கடையின் அண்ணா நகர் பிராஞ்ச்சில் மட்டும் அப்படியில்லை. மைலாப்பூர் பிராஞ்ச்சிலும் இதே நிலைமைதான். ஆனால் இந்தக் கடையில் பழங்களும் காய்கறிகளும் வாங்க வரும்பெண்களுக்கோ முலைகள் கறவை மாட்டு மடிகளைப் போல் இருக்க காரணம் என்ன?
அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் பெருமாளுக்கு ரோஜா படத்தில் மனீஷா கொய்ராலா அர்விந்த் சாமியைப் பார்க்க ஓடி வருவாளே அந்த ஸீன்தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. பெர்க்மெனையும் ஃபெலினியையும் கோதாரையும் பார்த்து என்ன ரோஜாவில் அந்த ஸீனில் மனீஷா கொய்ராலா ஓடி வரும்போது தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறதே…
அந்த ரசிகர்களுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருகணம் நினைத்துப் பார்ப்பான் பெருமாள்.
மறுகணமே கலையைக் காமம்வென்றுவிடும். காமமும் கலைதானே என்கிறீர்களா? அப்படியானால் இப்படி மாற்றிக் கொள்ளலாம். கலையை ஆபாசம் வென்றுவிடும்.
//அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் பெருமாளுக்கு ரோஜா படத்தில் மனீஷா கொய்ராலா அர்விந்த் சாமியைப் பார்க்க ஓடி வருவாளே அந்த ஸீன்தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது.//
“பம்பாய்” இப்போ “மும்பை”யாகி போனாதே…மனீஷா மயக்கத்தில் பெருமாளுக்கு “ரோஜா” முள் குத்தியதோ?
க்ரேட் காட்ச்.
வாசிப்பு லயத்தில் நான் இதை கவனிக்கவேயில்லை 😛
பெருமாளுக்கு தெரிவது பால் சுரப்பிகளும்,அவை இருக்கும் உடல்களும், நினைவில் இருப்பதும்
அவையே, பெயர்களல்ல.
‘இங்குள்ள பணிப்பெண்கள் யாவருக்கும் முலைகளே இல்லை என்பது. தய்வுசெய்து இதைப் பாலியல் பிரச்சினை ஆக்காதீர்கள். இது முழுக்க முழுக்க வர்க்க முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.
அந்தப் பணிப்பெண்கள் ஏன் இப்படி நறுங்கிப் போய் கிடக்கிறார்கள் என்பதை Communist Manifestoவையும் மக்ஸீம் கார்க்கியின் தாயையும் படித்துவிட்டு யோசியுங்கள்.’
நான் கண்டுபிடித்துவிட்டேன்,
கார்ல் மார்க்ஸ்,எங்கெல்ஸ்,
மற்றும் மாக்ஸிம் கார்க்கிக்கு
முலைகளே இல்லை!.
எக்ஸலென்ட் அப்சர்வேசன் :)))
பிங்குபாக்: 2008 - Tamil Books « Snap Judgment
பிங்குபாக்: சாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம் « Snap Judgment