பத்ரி: எண்ணங்கள்: எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை:
தடை செய்யப்பட்ட இயக்கத்தை (விடுதலைப் புலிகள்) ஆதரித்ததாக அல்லது இந்தியத் தலைவர்களை (உயிருடன் இருப்பவர்களை அல்லது இறந்தவர்களை) அவமரியாதை செய்ததாக அல்லது அவர்களது உருவ பொம்மைகளை எரித்ததாகக் குற்றம் சாட்டி சிலர் கடுமையான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
இது மிகவும் அபாயகரமானது. எமெர்ஜென்சி காலத்தைய நிலையைப் போன்றது.
கறுப்புக்கொடி காண்பித்தல், உருவ பொம்மையை எரித்தல் ஆகியவை ஒருவருக்கு எதிராக தங்களது கோபத்தைக் காண்பித்தல். இதனால் யாருடைய உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தில்லை. குறிப்பிட்ட இடத்தை இதற்கென ஒதுக்கி, அங்கே மட்டும் இதனைச் செய்துவிட்டுப் போகுமாறு அனுமதி அளித்துவிட்டுப் போய்விடலாம் காவல்துறை.
மனிதனுக்கு frustration என்பது ஏற்படுவது இல்லையா? இந்த அரசாங்க மெஷினரியால் எத்தனை முறை சாதாரண மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்? கோபத்தில் வெகுண்டு, ஒருவர் “ஒனக்கெல்லாம் நல்ல சாவே வராது!” என்று சபிக்கும்போது அரசாங்க அதிகாரியைத் திட்டிய குற்றத்துக்காக சிறையில் போடுவேன் என்று சொல்லலாமா?
எதிர்ப்பை அனுமதிக்காத குடியாட்சி, குடியாட்சியே அல்ல.
காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம். இது மாறவேண்டும்.
தீவிரவாதம் பற்றி முணுமுணிப்பை வெளியிட்டதற்கு முட்டிக்கு முட்டி தட்டிய கதை:
“The Statesman” republished an op-ed from “The Independent,” Britain – “Why should I respect these oppressive religions?”. Some Muslims in Calcutta went berserk like they did in the case of Taslima Nasreen. A case was filed against editor – Ravindra Kumar, and the publisher – Anand Sinha, and they were arrested./blockquote>
இப்பொழுது சமீபத்திய (பழைய!?) செய்தி:
கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி ஸ்டேட்ஸ்மேன் (The Statesman) நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் இன்று (ஃபெப்ரவரி 11) கைது செய்யப் பட்டனர்.
இஸ்லாம் மதத்தினை தாக்கும் விதமாக எழுதியதாக ஆங்காங்கே நடந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து இந்த நாளிதழின் ஆசிரியர் ரவீந்திர குமார் மற்றும் வெளியீட்டாளர் ஆனந்த் சின்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை இணை ஆய்வாளர் பிரதீப் சட்டர்ஜி கூறினார்.
முகமது சகீது என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், இந்திய குற்றவியல் சட்டம் 295A மற்றும் 34 ஆகியவற்றின் அடிப்படையில் புகார் அளிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
எதை அச்சில் இட்டார் என்று இவ்வளவு கொந்தளித்தார்கள்?
All people deserve respect, but not all ideas do. I don’t respect the idea that a man was born of a virgin, walked on water and rose from the dead. I don’t respect the idea that we should follow a “Prophet” who at the age of 53 had sex with a nine-year old girl, and ordered the murder of whole villages of Jews because they wouldn’t follow him.