Get Cash for your used Computers, Cell phones: Electronics Recycling Guide


சேலையைப் போட்டு எவர்சில்வர் பாத்திரம் கொடுத்தது அந்தக் காலம். மின் பொருளை மறு சுழற்சி செய்து நோட்டு எண்ணுவது இந்தக்காலம். உங்களின் தொழில்நுட்ப சாதனங்களை தள்ளுபடியாக விற்க, வாங்க:

Did you know?

 • The average lifespan of computers in developed countries has dropped from six years in 1997 to just two years in 2005.
 • Mobile phones have a lifecycle of less than two years in developed countries.
 • 183 million computers were sold worldwide in 2004 – 11.6 percent more than in 2003.
 • 674 million mobile phones were sold worldwide in 2004 – 30 percent more than in 2003.
 • By 2010, there will be 716 million new computers in use. There will be 178 million new computer users in China, 80 million new users in India.

1. CollectiveGood

 • உங்களின் வெள்ளித்திரை மானிட்டர், மடிக்கணினி, வீ/ப்ளேஸ்டேஷன்/எக்ஸ் பாக்ஸ் போன்ற விளையாட்டுப் பெட்டி, கேமிரா, ப்ரின்டர், எம்பி3 ப்ளேயர், ஐபாட், செல்பேசி என்று சகலத்தையும் மறுசுழற்சி செய்து, அதற்கான பணமும் தருகிறார்.
 • பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு தானமாகவும் அளித்துவிடும் வாய்ப்பும் அளிக்கிறார்.
 • 45 நாளுக்குள் எல்லா பணமும் பைசல் செய்யப்பட்டு பரிமாற்ற பட்டுவாடாவும் முடிந்துவிடும்.

2. Flipswap » Get Paid for Recycling Your Phone

 • வருடத்திற்கு வருடம் செல் போன் மாற்றும் ஆசாமியா? அல்லது மாதத்திற்கு மாதம் புது டெக்னாலாஜி வாங்கிப் பழசு மக்கிப் போகிறதா? பழசை இவர்களிடம் அனுப்பினால் கைமேல் காசு கிடைக்கும்.
 • அனுப்பிய பொருளை ரிப்பேர் செய்வார்; பழுது பார்த்தபின் ஓடத்துவங்கி விட்டால் அதை பயன்படுத்த விழைவோரிடம் விற்றுவிடுவார்.
 • செப்பனிட முடியவில்லை என்றால் சுற்றுச்சூழலை மாசு படுத்தாத நிலையில் ரிசைக்கிள் ஆகி விடும்.

who-gets-the-trash-e-waste-electronics-waste-recycle-greenpeace
3. Buy and Sell Electronics, Sell Cell Phone, Recycle Electronics – gazelle.com

 • சராசரியாக 115 அமெரிக்க டாலர்கள் உங்களின் பழைய தட்டுமுட்டு சமாச்சாரத்திற்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?
 • வஸ்துவை நீங்கள் தபாலில் அனுப்புவதற்கான உறை முதற்கொண்டு அனுப்பி வைப்பார். தபால் தலை, கொடுக்கல்/வாங்கலில் நசுங்குதல் என்றெல்லாம் கவலைப்படவே தேவையில்லை.

cell-phone-life-cycle-reuse-throw-sell-buy-money-cash

4. Home | MyBoneYard Recycle

 • விசா தவணை அட்டையாக கொடுக்கிறார்.

2 responses to “Get Cash for your used Computers, Cell phones: Electronics Recycling Guide

 1. Searching for riches in electronic trash – International Herald Tribune: The millions of discarded mobile phones and computers contain tons of gold that can be melted out of the discarded circuitry. Refiners are beefing up their capacity as electronics makers improve their recycling efforts.

 2. Wednesday March 11 2009 00:00 IST

  Thinamani.com – தலையங்கம் :: புரிந்துகொள்ளுமா அரசு?

  நடுத்தரக் குடும்பங்களிலும் அகலத்திரை தொலைக்காட்சிப் பெட்டிகள், சிறு அலுவலகங்களிலும் நவீன கம்ப்யூட்டர்கள், சாதாரண மக்களின் கைகளிலும் விலையுயர்ந்த செல்போன்கள் -இவையெல்லாம் நமது தொழில்நுட்ப வளர்ச்சியின் அறிகுறிகள். இந்த வளர்ச்சியால், ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.

  மின் மற்றும் மின்னணுச் சாதனங்கள் அனைத்தும் வாங்கிய சில மாதங்களிலேயே விரும்பத்தகாத, பழைய பொருள்களாகிவிடுகின்றன. இப்படிப்பட்ட பயன்படாத மின்னணு சாதனங்கள் வழக்கமான குப்பைகளுடன் வீசியெறியப்படுகின்றன அல்லது பழைய பொருள்களைச் சேகரிக்க வருபவரிடம் சொற்பமாக விலைபோகின்றன. பழைய மின் சாதனங்களைச் சேகரிப்பவர்கள் அவற்றில் உள்ள சில விலையுயர்ந்த பொருள்களை எடுத்துக் கொண்டு மீதியைக் குப்பையோடு குப்பையாக வீசிவிடுகிறார்கள்.

  மின்னணு சாதனங்களில் ஆர்சனிக், ஆன்டிமணி, பாதரசம், காரீயம் போன்ற அபாயகரமான நச்சுப் பொருள்கள் இருப்பதால், அவை பூமியில் வீசப்படும்போது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பல ஆண்டுகளாகவே தன்னார்வ அமைப்புகள் எச்சரித்து வருகின்றன.

  இந்த விஷயத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகள் அக்கறையுடன் செயல்பட்டு, மின்னணுக் குப்பைகள் பூமியில் கொட்டப்படுவதைத் தடுப்பதற்காகக் கடுமையான சட்டங்களை இயற்றியிருக்கின்றன. மின்னணு சாதனங்களை விற்கும் நிறுவனங்களே அவற்றைத் திரும்பப் பெற்று, மறுசுழற்சி செய்வதற்கான வசதியை வைத்திருக்க வேண்டும் என்பதை பல நாடுகள் கட்டாயமாக்கியிருக்கின்றன.

  சில வளர்ந்த நாடுகள் தங்களது மின்னணுக் குப்பைகளை நன்கொடை மற்றும் இரண்டாவது விற்பனை என்கிற போர்வையில் வளரும் நாடுகளுக்கு அனுப்பிவிடுகின்றன. குறைந்த விலையில் அல்லது இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக இந்தக் குப்பைகளை வளரும் நாடுகளிலுள்ள நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. இப்படி வரும் பொருள்களை மறுசுழற்சி செய்வதற்காகவே பல தொழிற்சாலைகள் இருக்கின்றன.

  மறு சுழற்சி செய்ய முடியாத கழிவுப் பொருள்கள் குப்பைகளாகத் தேங்குகின்றன. இந்த நடவடிக்கைக்கு மின் குப்பைகள் தொடர்பான “பேசல்’ சர்வதேச உடன்படிக்கையும் அனுமதி அளிக்கிறது என்பதுதான் வேதனை. இப்படி வளர்ந்த நாடுகளின் குப்பைத் தொட்டிகளாக மாறிவரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

  இந்தியாவைப் பொருத்தவரை, தில்லி, பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களில்தான் மின்னணுப் பொருள்கள் அதிக அளவில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன; மின்னணுக் குப்பைகளும் மலைமலையாகத் தேங்கிக் கிடக்கின்றன. இந்தப் பொருள்களை மறுசுழற்சி செய்வதற்கு நவீன தொழிற்சாலைகள் இல்லை என்பதால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், மறுசுழற்சியில் ஈடுபடும் தொழிலாளர்களின் உடல் நலமும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளிலும், கணினித் திரைகளிலும் உள்ள சிஆர்டி எனப்படும் கேதோட் கதிர் குழாய் உள்ளிட்டவற்றை மறு சுழற்சி செய்யும்போது அதில் உள்ள நச்சுப் பொருள்களால் உயிருக்கேகூட ஆபத்து ஏற்படலாம். ஆனால், வருவாய் கிடைக்கிறது என்பதற்காக இந்த ஆபத்துகளைப் பற்றியெல்லாம் மறுசுழற்சி செய்வோர் கவலைப்படுவதில்லை.

  இந்தியாவில் மின்னணுக் குப்பைகளின் அளவு ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், அவற்றில் கிட்டத்தட்ட 95 சதவீதம்வரை நகரக் குடிசைப் பகுதிகளில் தேங்குவதாகவும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித்துறை அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு 4 லட்சத்து 34 ஆயிரம் டன் எடையுள்ள மின் குப்பைகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

  தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியுள்ள இந்தியாவில் அதிக அளவில் மின்கழிவுகள் உருவாவது தவிர்க்க முடியாதது. ஆனால், மின் குப்பைகளின் மறுசுழற்சியை முறைப்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலுக்கும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இதற்கான நடவடிக்கைகளைப் பெரும்பாலான நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்திருக்கும்போது, இந்த விஷயத்தில் இந்தியா அக்கறை செலுத்தாமல் இருப்பது வியப்புக்குரியது. கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் மட்டுமே மின்னணுக் குப்பைகளை முறையாக மறுசுழற்சி செய்வது தொடர்பாக சில ஒழுங்குமுறைகளை வகுத்துள்ளன.

  ஆட்சியாளர்களே அலட்சியமாக இருக்கும்நிலையில், முன்னணி செல்போன் நிறுவனம் ஒன்று பயன்படாத செல்போன்களை பொதுமக்களிடமிருந்து திரும்பப் பெறும் நடவடிக்கையை தாமாக முன்வந்து செயல்படுத்தியுள்ளது. வரவேற்கத் தகுந்த இந்த முயற்சியை அனைத்து மின்னணுச் சாதன நிறுவனங்களும் கட்டாயமாகச் செயல்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டிய அவசரம் இப்போது ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் ஆய்வு உணர்த்துகிறது.

  இத்தனை காலத்துக்குப் பிறகும் மின் குப்பைகளின் ஆபத்து ஆட்சியாளர்களுக்கு இன்னும் புரியவில்லையே என்பதுதான் வேதனையான விஷயம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.