Daily Archives: மே 10, 2006

Nilavum Malarum & Ethilum Vallavanda

இரண்டு பாடல்கள்

அம்பிகாவும் கமல்ஹாஸனும் துள்ளி ஓடும் பாடல். மறந்து விட வேண்டிய படத்துக்கும் இளையராஜா, முக்கியமான பாடல்களைக் கொடுத்த காலம்.

திரைப்படம்: நானும் ஒரு தொழிலாளி
இயக்கம்: ஸ்ரீதர்
தயாரிப்பு: சித்ராலயா (ஸ்ரீதர்)
இசை: இளையராஜா

படத்தொகுப்பு: எம் உமாநாத்
ஒளிப்பதிவு: பி பாஸ்கர் ராவ்
கலை: ஏ ராமசாமி
வெளியீடு: மே 1 1986

பாடலாசிரியர்: வாலி
பின்னணிக் குரல்: எஸ்.பி.பி & எஸ் ஜானகி

ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கவியரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்

பெண் வண்ணம்
பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம்
தென்றல் கொஞ்சும் சிற்பம்

ராகங்கள்…
பாடுங்கள்…

புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்களேன்

படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு

மாமா…

கண் துடிக்குது
பெண் துடிக்குது
கை அணைச்சிடவா…

புது ரோஜா…

பூத்திருக்குது
காத்திருக்குது
நான் பறிச்சிடவா…

அட நீதான் சேர்ந்திருக்கணும்
நான் தான் தேன் கொடுக்கணும்

நெனச்சா முடிப்பே
இதில் நீ ஜெயிப்பே

குலுங்கக் குலுங்க
நடக்கும் கொடிய
வளச்சு வளச்சுப் பந்தாடுவேன்

மற்ற பாடல்கள்: Naanum oru thozhilali – Music by Maestro Ilaiyaraaja


அடுத்த பாடல்

திரைப்படம்: நம்மவர்
இயக்கம்: சேது மாதவன்
வருடம்: 1994
இசை: மஹேஷ்
பின்னணிக் குரல்: (அனேகமாக) எஸ்.பி.பி

எதிலும் வல்லவன்டா‘ என்று ஆரம்பிக்கும் பாடல். இசைக்கருவிகள் ஏதும் கிடையாது. பஞ்சாபி பாங்ரா இசை (+ நடனம்), கேரளத்து கதகளி, தெலுங்கு என்று பல மொழிகள் இயல்பாக உருமாறி ஆட்டமாட வைக்கிறது.

கல்லூரிப் பேராசிரியர் (அல்லது ஆசிரியர்) கமல் மேடையில் பாடுகிறார். வில்லன் கரண் இசைக்கருவிகளைத் திருடி மறைத்திருக்க வேண்டும். செந்தில் விடும் ஏப்பம், விக்கல் போன்றவையும் கலந்து வரும் அருமையான பாடல்.

துளியூண்டு சாம்பிள் கேட்க: Welcome to BrasianBeats.com – Nammavar

இசையமைப்பாளர் மஹேஷ் குறித்த பதிவு: அஞ்சலி |

‘நம்மவர்’ படத்திற்காக தேசிய விருதும் அறிமுக இசையமைப்பளருக்கான ‘ஸ்க்ரீன் – பானசோனிக்’ விருதும் கிடைத்த செய்தி: Songs of Mahesh


| |

படித்த பருப்புகள் காரணமா?

எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு மாபெரும் ஓட்டுப்பதிவு சதவீதம் தமிழகத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது அனைத்து தரப்பினரின் ஆவலையும் அதிகரித்துள்ளது.

திடீரென்று வந்து ஓட்டளித்துள்ள இந்த பத்து சதவீதம் ஆட்கள் யார்? என்பதை அலசுவதே இந்த பதிவின் நோக்கம்.

1. இவர்கள் அனைவரும் விஜயகாந்துக்கு ஓட்டளித்த நடுநிலை(?) வாக்காளர்கள் என்று சில தகவல்களும் பல பெண்கள் விஜயகாந்திற்கு வாக்களித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.( மதுரையில் உள்ள என் மேலிடமும் முரசுக்கு குத்தியதாக கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன. என் கருத்தை வீட்டில் செலாவணி செய்யமுடியாத இரண்டாவது சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.பெண்ணுரிமைங்க.)

2. இவ்விதம் முரசுக்கு குத்தப்பட்ட ஓட்டுக்கள் அதிமுக கட்சியை அதிகம் பாதிக்கும் என்பது என் கருத்து. திமுகவிற்கும் ஓரளவு பாதிப்பு இருக்கலாம். இனி தினமலர் போன்ற பத்திரிக்கைகள் விஜயகாந்த் அடிவருடியாக மாறலாம். சொந்தமாக எந்த அடிப்படை கொள்கையும் இல்லாத தினமலருக்கு இது சுலபம்.அதிமுகவிற்கு இது பிரச்சினைதான்.

3.இதுவரை வெட்டி வியாக்கியானம் பேசிதிரிந்த படித்த பருப்புகள் இந்த முறை வந்து ஓட்டு போட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அரசு ஊழியர் மற்றும் அவர்கள் குடும்பம். இது சரியானால் அது திமுக மற்றும் கூட்டணிக்கு சாதகம்.

4.மற்றபடி ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் இத்தனை அதிக அளவு ஓட்டுப் பதிவு என்பது சரியா என்று தெரியவில்லை.எனக்கு தெரிந்தவரை எதிர்கட்சிகளுக்கு ஆதரவு என்றால்தான் ஓட்டுப்பதிவு அதிகரிக்கும்.எதிர்கட்சி என்பது இங்கு தமிளன் விஜயகாந்தையும் குறிக்கும்.

நாளை நல்ல காமெடி உண்டு. DAY OF THE YEAR என்று சொன்னால் அது மிகையாகுமா?