Daily Archives: மே 19, 2006

How The Da Vinci Code Doesn’t Work

1. Howstuffworks : புத்தகத்தை சேரியமாய் எடுத்துக் கொண்டு கழலாக்கட்டை சுற்றுபவர்களுக்காக, ‘டா வின்சி கோட்’ நாவல் ஒரு கட்டுக்கதை என்பதை இன்ச்… இன்ச்சாக அலசி ‘புனைவு’தான் என்பதை நிரூபிக்கிறார்கள். (வலைப்பதிவில் சிறுகதை எழுதியவுடன் ‘சொந்த அனுபவமா’ என்று கேட்பார்கள்; இது மாதிரி வலைப்பதிவரின் சிறுகதைகளையும் கட்டுடைத்தால் புண்ணியமாப் போகும்).

2. Conspiracy theory : வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு கோபம் வருகிறது.

3. C.S. Lewis’s message to “Da Vinci Code” : விசுவாசிகளின் நம்பிக்கையை ஐயுற வைக்குமா?

4. FO : நல்லவேளை… ‘இருவர்‘ திரைப்படத்தை கலைஞர் பார்த்து பரிசீலித்து பதுக்க வேண்டியதை பரிந்துரைத்து, பின் வெளியிட்டது மாதிரி, லியோனார்டா டா வின்சி பார்த்து ஒப்புதல் அளித்தால்தான் ‘டா வின்சி கோட்‘ திரைப்படம் வெளியிட முடியும் என்று தடா போடாமல் விட்டார்களே! (முதல் மூன்றும் படிக்க நேரம் கிடைக்காவிட்டால், இந்த கார்டியன் பத்தியை மட்டும் படிக்கலாம்.)

Sir Ian McKellen suggested that perhaps there should be a warning printed at the beginning of the Bible saying that some of that might be fiction; for example, the walking on the water.


| |

Annual FETNA Festival – New York City

 • செல்வி‘ வில்லி தேவிப்ரியா வாராங்க! (தேவதர்ஷினியையும் சேத்தனையும் கூப்பிட்டிருக்கலாம்)
 • சித்திகிழக்கே போகும் ரயில் ராதிகா வாராங்க!! (ஒய் விஜயா, வடிவுக்கரசி, ஜெயசுதா எல்லாம் ஏன் அழைக்கவில்லை?)
 • அர்ஜூனா அர்ஜுனா‘ பாடலில் துணை நடனமாடிய புலன் விசாரணை சரத்குமார் வாராங்க!!! (நமீதாவையும், ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்த நயந்தாராவையும் விட்டுட்டு வருவது துளிக்கூட நியாயமில்லை.)
 • வான்மதி‘ ஸ்வாதி வாராங்க!!!! (விந்தியா, சிம்ரன் எல்லாம் சும்மாத்தானே இருப்பாங்க?)
 • ‘வண்ண வண்ணப் பூக்கள்’ விநோதினி வாராங்க!!!!! (‘ஈரமான ரோஜாவே’ மோகினி, ‘இதயம்’ ஹீரா, ‘புது நெல்லு புது நாத்து’ சுகன்யா என்று 1991 சகமுகங்களோடு டச் வெச்சுண்டு இருக்காங்களா?)
 • ‘கவிப்பேரரசு’ கள்ளிக்காடுக் கவிஞர் வைரமுத்து வாராங்க!!!!!!

  இந்த மண்ணில், மலைகளில், நதிகளில், மரம் செடி கொடிகளில், பறவைகளில், விலங்குகளில், கண்ணீரில், ரத்தத்தில், கண்படு உறவுகளில், கண்காணா உறவுகளில், ஒவ்வொரு மைக்ரோ வினாடியிலும் வலைப்பதிவுகள் உட்கிடையாகவோ, வெளிப்படையாகவோ இருக்கிறது.

  (வலைப்பதிவு எழுதுவதற்கு ஃபார்முலா சொல்லித் தருவீங்களா?)

  FeTNA in coordination with New York Tamil Sangam 19th Annual Tamil Convention

  நுழைவு கட்டணம் – $85 (இரு நாள்களுக்கும் சேர்த்து)

  மேலும் விவரங்களுக்கு: ஃபெட்னா


  | |

 • Day with a Difference & BlogDesam

  Happy Birthday! :: தினம் ஒரு கவிதை யாஹூ குழுமத்தின் மூலம் பரிச்சயம் ஆனவர்களில் ப்ரியாவும் ஒருவர். தினந்தோறும் Day with a Difference என்னும் மின்மடலை கடந்த மூன்று/நான்கு வருடங்களாக அனுப்பி வருகிறார்.

  சிந்தையை மேம்படுத்தும் மேற்கோள், புத்தகங்கள்/பதிவுகளில் இருந்து ரசனையான பத்தி மற்றும் அறிவை விசாலப்படுத்தும் தகவலுடன் அனுதினம் அனுப்பி வந்தவர், தற்போது வலைப்பதிந்தும் வருகிறார்.

  பிரியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


  BlogDesam – IndiBlogs Portal

 • சுன்சுனா,
 • மைடுடே,
 • இண்டிப்ளாக்,
 • சுலேகா,
 • தேஸிப்ளாக்ஸ்
  என்று நிறைய பேர் இருப்பதாலோ என்னவோ, ப்ளாக்தேசம் இன்னும் பரவலாகப் புகழ் அடையவில்லை?!
 • கண்ணுக்குப் பழக்கமான, (ஆனால் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமான) வடிவமைப்பு உடையது
 • மற்ற எந்த (ஆங்கிலத் தொகுப்பகங்கள்) வலையகத்திடமும் இல்லாத மறுமொழி நிலவரத்தைக் காட்டுவது
 • வலைப்பதிவரே ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்துவது (பெரும்பாலானவற்றில் வலைப்பதிவை பொத்தாம் பொதுவாக ‘அரசியல்’, ‘விளையாட்டு’ என்றுதான் ஒரேயடியாக வகைப்படுத்த இயலுகிறது.)
 • ஒவ்வொரு category-க்கும் தனித்தனியே செய்தியோடை விடுவது
 • வலைப்பதிவை எளிதில் அடையாளம் காட்ட ஒவ்வொரு பதிவுக்குப் பக்கத்திலும் ஆசிரியரின் உருவம் தோன்றுவது
 • வாசகரின் கோபத்தைப் பதிவு செய்வதற்கு ‘-‘ வாக்குகளோ, பிறருடன் பகிர நினைப்பதை செயலாக்குவதற்கு ‘+’ வாக்குகளோ போட சொல்வது
 • தமிழ்மணம் போல் இல்லாமல் தானியங்கியாக பதிவுகளைக் கண்டெடுப்பது (manual vs automatic aggregation)
 • கருவிப்பட்டி எல்லாம் நிறுவாமலேயே, மறுமொழி கலவரத்தை வாசகர்களுக்கு பிரகடனம் செய்ய முடிவது…

  சாம்பார் பந்தோக்கு / அஞர் அறிஞர் / உடனடி குளம்பி / கிருபா / ஆண்டி போன்ற பதிவுப்பரிபாகிகளும் ஜோதியில் ஐக்கியமானால் வலை தேசமே களை கட்டும் 🙂

  ப்ளாக் தேசத்தில் இணைய…


  | | | |