நியு யார்க் நகரம் – தாங்ஸ்கிவிங் வாரம்


சென்ற வாரம் நியு யார்க் நகரமும் அதன் சார்ந்த வட்டாரங்களிலும் சுற்றிய கதை:

 • வாடகைக் கார் அமெரிக்க தயாரிப்பு. பெரியதாக இருந்தது. துளியசைத்தால் முன்பின் நகர்ந்து சாய்ந்து உயர்ந்து வளைந்து நெளியும் இருக்கை முதல் உள்ளே ஓட்டுநருக்கு ஒரு வெப்பநிலை, பயணிக்கு இன்னொரு குளிர்நிலை வைக்கும் வரை சின்னச் சின்ன சௌகரியங்கள் நிறைந்திருந்தன. எஞ்ஜின் சரியில்லாவிட்டாலும் கவரிங் தூள்.
 • பாஸ்டனில் இருந்து நியுயார்க் செல்லும்வழியில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 68 மைல் வேகத்தில் சென்றதாக புள்ளிவிவரம் காட்டியது. திரும்பிவரும்போது கும்பலோடு கோவிந்தா போட்டதினால் 35 மைல்தான் ஒரு மணி நேரத்தில் சராசரியாக செய்ய முடிந்தது. மெதுவாக செல்வதற்கு ட்ராஃபிக் மாமா நிறுத்துவாரா?
 • நியுயார்க் கென்ன்டி விமான நிலையம் செல்லும் போதெல்லாம் முன்னுமொரு காலத்தில் எனக்கு நேர்ந்த சம்பவத்தை கூட இருப்பவர்களோடு நினைவு கூர்வேன். பதினெட்டாவது தடவையாக மனைவியும், மூன்றாவது தடவையாக மகளும் கேட்டுவைத்தார்கள். பாஸ்டனில் அந்த மாதிரி செய்தால் கப்பம் கட்ட சொல்கிறார்கள்.
 • நியூ யார்க் ஃப்ளஷிங் கணேஷா கோவில் புனருத்தாரணம் செய்கிறார்கள். நான் அமெரிக்க வந்தபிறகு கட்டி முடிக்கப்பட்ட அரங்கத்திற்கு முதன் முறையாக மேயர் ப்ளூம்பர்க் வந்திருந்தார். மும்பை குண்டுவெடிப்புக்கு இரங்கல் சொன்னார். வலைப்பதிவர்களும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
 • உள்ளாட்சி அமைப்பின் சபாநாயகரும் வந்திருந்தார்.  ‘இப்போது முறைப்படி பூரணகும்ப மரியாதை செய்யமுடியவில்லை. அடுத்த முறை சாஸ்திரோப்தமாக அழைப்பதாக’ கோவில் நிர்வாகி வாக்களித்தார். இந்து மதம் லெஸ்பியன்களை எப்படி பார்க்கிறது?
 • நியுயார்க்கில் சென்ற இடமெல்லாம் மும்பை குண்டுவெடிப்பிற்காக மன்னிப்பு கோரினார்கள். ‘நீங்கள் இந்தியர்தானே!? உங்கள் ஊரில் இப்படி நடந்துருச்சே! ரொம்பவும் சாரிஈஈஈ… தங்கள் உறவினர், தெரிந்தவர் யாருக்கும் சேதமில்லையே?’ என்று பரிவுடன் விசாரித்தார்கள். அமெரிக்காவின் விடிவெள்ளி சி என் என்னுக்கும் விடாக்கண்டர் லஷ்கர் – இ – தொய்பாவுக்கும் உயிர் நீத்த ஆறு அமெரிக்கர்களுக்கும் நன்றி.
 • நடுத்தெருவில் புதிய ப்ராட்வே ஷோவிற்காக துண்டுச்சீட்டு கொடுப்பவர் முதல் ஃபாந்தம் ஆஃப் தி ஓபராவிற்கு கோட் சூட் போட்ட கனவான் வரை முகமன் கூறி, புன்னகை சிந்தி, துக்கம் விசாரித்தார்கள். ‘இந்தியராகப் பிறந்திட மாதவம் செய்ய வேண்டும்’ என்பது போன்ற அரச கவனிப்பு.
 • ஃப்ளஷிங் கணேஷ் கோவில் சாப்பாடு ஏ1. அது கேண்டீன் என்று சொல்வது இழுக்கு. நியூ ஜெர்சி சரவண பவன் அண்ணாச்சி தொழிலும்  சுவையும் சேவையும் கற்கவேண்டிய தலம்.
 • இதற்கு நேர் எதிர்மாறாக நியு ஜெர்சி ப்ரிட்ஜ்வாட்டர் பெருமாள் உணவகம். சட்னியும் சாம்பாரும் ஜொலிக்காவிட்டால் தோசை சோபிக்காது என்பதை இவர்களுக்கு சொல்ல வேண்டும். எனக்கு தெலுங்கு தெரிசிலது ஆதலால், ஃப்ரீயா விட்டுவிட்டேன்.
 • நியு ஜெர்சி கோவிலில் அபிஷேகம் என்று கேலன் கேலனாக பால் கொட்டாமல் கால் கேலன் பால், அரைக் கரண்டி தயிர் என்று சிக்கனமாக செய்கிறார்கள். சாக்கடையும் சீக்கிரம் ரொம்பி சுற்றுச்சூழலை பாதிக்காமல், கடவுள் பக்தியும் குறைக்காமல், நல்ல பேலன்ஸ். கோவிந்தா வாழ்க!
 • நியூயார்க் நகரத்தில் இரவில் யாரும் உறங்குவதில்லை. வீட்டில் சமைப்பதுமில்லை. பின்னிரவு ஒரு மணிக்கு கூட சாப்பாட்டுக் கடைகளில் க்யூ வரிசை நீள்கிறது. சாலை முக்குகளில் கூட்டம் கூட்டமாக அரட்டை. மெக்டொனால்ட்ஸ் 24 மணி நேரமும் ஃபாஸ்ட் ஃபுட் செய்து தர வைத்திருக்கிறார்கள். பூஜ்யம் டிகிரி குளிருக்காக கதகதப்பாக இறுக்கியணைத்தபடி இணைந்த உடல்களாக அறுபத்தி மூவர் விழா பவனியாக சாரி சாரியான மக்கள். இந்த டவுன்டர்ன், ரிசெஷன் என்பதெல்லாம் வால் ஸ்ட்ரீட் செஞ்ச போலி என்றார்கள்.
 • கோளரங்கம், நேஷனல் ஜியாகிரபியின் 3டி படம் போல் நான் தூங்குவதற்கு இன்னொரு இடம் அகப்பட்டது. ஃபாந்தம் அஃப் தி ஒபராவின் இன்னிசையும் கும்மிருட்டும் ஜெகஜ்ஜாலங்களும் தாலாட்டி உறங்கச் சொன்னது. ‘மகள் குறட்டை பெரிதா, என் குறட்டை பெரிதா?’ என்று சாலமன் பாப்பையா மன்றத்தில் அடுத்த தூக்கம் தொடர எண்ணம். ஆராரிரோ என்பது மேற்கத்திய உச்சரிப்பில் மறுவி ஆபரா ஆனதாக தமிழறிஞர் எவரும் நிறுவவில்லையா?
 • பாம்பே ட்ரீம்ஸ் இன்னும் ஓடுதா? ஃபாந்தம் ஆஃப் தி ஓபரா இருபதாண்டுகளாக நிறையரங்குகளாக வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. மெழுகுவர்த்தி நிறைந்த பேய்வீடு, ஊஞ்சல், படிக்கட்டு, பறந்து உலாவுதல், பட்டாசு வெடிகள் என்று உறக்கத்தைக் கலைக்க அரும்பாடு பட்டாலும் ஒபரா பாடல்கள் மெல்லிசையாகவே அமைந்திருக்க வேண்டும்.
 • எம்பயர் ஸ்டேட் ப்ல்டிங்கின் 83-வது மாடியை உள்ளரங்கமாக மாற்றவேண்டும். கடுங்குளிரில் புகைப்படம் சுட்டு சூடேற்ற முடியுமா?
 • பர்மா பசார் கனால் தெரு, ஏழாண்டுகளாக தரைமட்டமாகி இருக்கும் உலக வர்த்தக மைய வளாகம், இந்த ஆண்டு தரைமட்டமான வால் தெரு, தொலைக்காட்சிசூழ் டைம்ஸ் சதுக்கம், திரைப்பட தீவிரவாதிகளால் தகர்க்கப்படும் மேன்ஹட்டன் மேம்பாலங்கள், காபந்து கெடுபிடி நிறைந்த சுதந்திர தேவி, காந்தி பொம்மையும் வசிக்கும் மெழுகு காட்சியகம், ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் போன்ற புனிதத்தலங்களில் காலடியும் புகைப்பட ஃப்ளாஷ் அடியும் எடுக்காமல் படேல் வால்யூ எனப்படும் தலபுராணம் நிறைவுறாது.

18 responses to “நியு யார்க் நகரம் – தாங்ஸ்கிவிங் வாரம்

 1. இதெல்லாம் சரியாச் செய்யுங்க. ஆனா வலைப்பதிவர் சந்திப்புன்னா மட்டும் கோட்டை விட்டுடுங்க. என்ன ஆளய்யா நீர்!

 2. நியுயார்க், நியுஜெர்சிக்கு வந்து எங்க வீட்டுக்கு வராமல் போனதால் உங்க பேச்சு கா…

  கிருஸ்துமஸ் லீவுக்கு நியுஹாம்ஷைர் வந்து ஹோட்டலில் தங்கி டாக்ஸ் ப்ரீ ஷாப்பிங் செஞ்சு அதைப்பத்தி ஒரு பதிவு போட்டாதான் மனசு ஆறும்.

 3. ‘ஃப்ளஷிங் கணேஷ் கோவில் சாப்பாடு ஏ1. அது கேண்டீன் என்று சொல்வது இழுக்கு’

  உண்மை.காபியும் நன்றாக இருக்கும்.
  கோயிலுக்குப் போனால் வயிற்றை
  நிரப்பாமல் வருவதில்லை.அப்புறம்
  கூடிய கொலாஸ்ட்ரலைக் குறைக்க
  108 முறை சுற்றி வர வேண்டும் :(.
  பிரிட்ஜ்வாட்டர் கோயிலா கடனில் இருந்த கோயில்?.

 4. பாபா,

  ஒரு வாட்டிதான் டிக்கெட் கொடுத்தாங்கன்னு நினைச்சேன். மறுகி மறுகி எழுதறதைப் பாத்தா டேமேஜ் ரொம்பத்தான் போல 🙂

  //ஆராரிரோ என்பது மேற்கத்திய உச்சரிப்பில் மறுவி ஆபரா ஆனதாக தமிழறிஞர் எவரும் நிறுவவில்லையா? //

  க்ரீச்சிடும் குரலில் நடுக்கத்தோடு நர்த்தனம் புரிவது உங்களுக்கு ஆராரோ ஆரிராரோ போல் இருக்கிறதா?

  //இந்த டவுன்டர்ன், ரிசெஷன் என்பதெல்லாம் வால் ஸ்ட்ரீட் செஞ்ச போலி என்றார்கள்.//

  எனக்கும் அந்த சந்தேகம் உண்டு. நன்றி நவில்தல் நாளன்று எள் போட்டால் எண்ணெய் எடுக்க முடியாத கூட்டம் அலைமோதியது சான் ஹோஸே கிரேட் மால்-இல்.

  //அமெரிக்காவின் விடிவெள்ளி சி என் என்னுக்கும் விடாக்கண்டர் லஷ்கர் – இ – தொய்பாவுக்கும் உயிர் நீத்த ஆறு அமெரிக்கர்களுக்கும் நன்றி. //

  அது என்ன ‘நன்றி’ன்னு போட்டிருக்கீங்க :((. 2004 சுனாமி பத்தி நேசமுடன் வெங்கடேஷ் எழுதிய கட்டுரை நினைவிற்கு வருகிறது. இந்த வார்த்தை இங்கு சரிவராது. மாற்றி விடுங்கள்.

  //நியூ ஜெர்சி சரவண பவன் அண்ணாச்சி தொழிலும் சுவையும் சேவையும் கற்கவேண்டிய தலம். //

  கூடவே விலை நிர்ணயமும் கற்க வேண்டும். சன்னிவேல் சரவண பவனில் கொடுமையான் விலை.

  //இதற்கு நேர் எதிர்மாறாக நியு ஜெர்சி ப்ரிட்ஜ்வாட்டர் //

  டைனோவை பார்த்தீர்களா? மாறுவேஷத்தில் ப்ளாகர் மீட்டுக்குக் கூட வந்திருந்தாராமே. :-))

 5. ‘கூடவே விலை நிர்ணயமும் கற்க வேண்டும். சன்னிவேல் சரவண பவனில் கொடுமையான் விலை.’

  அது சிலிகான்வேலியருக்கான விலையோ:). என்ன இருந்தாலும்
  இல்லாவிட்டாலும், கலிபோர்னியா மக்கள் வாழ்க்கையை காஸ்டிலியாக ரசிப்பார்கள், விலை ப்ரச்சினையில்லை என்று அண்ணாச்சிக்கு சொன்னதே
  நான்தான் :).

 6. பாலத்தண்ணி கோயிலில் கேண்டீன் சமீபத்தில் (உண்மையிலேயே சமீபம், அந்த சமீபம் இல்லை) கை மாறிடுச்சு. அதற்கு முன் இருந்த சுவை இப்போ இல்லைன்னு பலரும் சொல்லிட்டாங்க.

  போமோனா என்ற இடத்தில் இருக்கும் ரங்கநாதர் கோயில் போனீங்கன்னு நினைச்சேன். போகலையா?

  நியூயார்க்கில் ‘The katti roll company’ என்ற விரைவுணவகம் நல்லா இருக்கும். பின்னிரவு வெகுநேரம் திறந்திருக்கும். சப்பாத்தியுள் பலவிதமான filling வைத்துத் தருவார்கள்.

  இந்தப் பக்கம் வந்தா பார்க்கணும் பேசணும். அதை விட்டுட்டு இப்படி ஓடி ஒளிஞ்சா எப்படிச் சொல்லறது! 🙂

 7. கொத்ஸ் 🙂 __/\__

  இதெல்லாம் சரியாச் செய்யுங்க. ஆனா வலைப்பதிவர் சந்திப்புன்னா மட்டும் கோட்டை விட்டுடுங்க. என்ன ஆளய்யா நீர்!—

  I was truly, madly, deeply excited about the meet 🙂

  முதலில் இரண்டு மணி நேரம்தான் பேசலாம் என்றவுடன் கொஞ்சம் வாடினேன். அதன் பிறகு, நீங்களும் ‘வந்தால்தான் வருவேன்’ என்று டிவிட்டரில் முகாரி பாட இன்னும் கொஞ்சம் ஆர்வம் குறைந்தது.

  எனக்கு ஏழு மணிக்கு ஆரம்பித்து, எட்டு மணிக்கு சுருதியேறி இரவெல்லாம் தொடர்கிற மாதிரி இருந்தால் வசதி என்றவுடன், இளா ‘ஏன்ப்பா! எங்களப் பார்த்த குடும்பஸ்தர்களா தெரியலியா?’ என்று அறிவுறுத்தியதும்தான் நனவுலகிற்கு வந்தேன்.

  அடுத்த தபா ஜமாய்ச்சுரலாம் 😀

 8. கணேஷ்,

  —-நியுயார்க், நியுஜெர்சிக்கு வந்து எங்க வீட்டுக்கு வராமல் —-

  கணேசரைப் பார்த்தேனே 😉 அவரைப் பார்த்ததும் உம்மைப் பார்த்த மாதிரி இருந்ததால் அடுத்த தடவை அசல் ராஜகணபதிக்கு என்று முன்பதிவு செய்து வைக்கிறேன் 🙂

  —-நியுஹாம்ஷைர் வந்து ஹோட்டலில் தங்கி டாக்ஸ் ப்ரீ ஷாப்பிங் செஞ்சு அதைப்பத்தி ஒரு பதிவு —-

  இந்தப் பொருளாதாரத்தில் கடைகண்ணிக்குப் போனாலே செய்திதான்

 9. நாட் காட்,

  —-காபியும் நன்றாக இருக்கும்.—-

  இதுதான் Breaking point. மெட்ராஸ் காபி போட்டுக் கொடுத்தார்கள் பாருங்க! தூள்! அதே ஆசையுடன் அடுத்த நாள் ப்ரிட்ஜ்வாடரில் சென்னை காபி சாப்பிட்டால் தூ என்றாகிவிட்டது (:

  —கோயிலுக்குப் போனால் வயிற்றை
  நிரப்பாமல் வருவதில்லை.

  தாங்ஸ்கிவிங் அன்று எல்லாக் கடைகளும் மூடியிருக்க, கோவில் உணவகத்தில் மூன்று வேளையும் சாப்பாட்டுக்காகவே சென்றோம் 🙂

  —பிரிட்ஜ்வாட்டர் கோயிலா கடனில் இருந்த கோயில்?.

  ஏடி & டி அருகில் இருந்தபோது ஓரளவு மிகக் குறைந்த கடனில் இருந்த கோவில். வெகு வெகு சீக்கிரமாய் அடைத்து விட்டார்கள்.

  இவர்களை விட பொமோனோ ரெங்கநாதர் மில்லியன் கணக்கில் கடன் வைத்திருந்தார். ஒரே வருடத்தில் அத்தனையும் முடித்துவிட்டது ப்ரிட்ஜ்வாடரை விட அசகாய அதிசயம்!

 10. ஸ்ரீதர்,

  —-ஒரு வாட்டிதான் டிக்கெட் கொடுத்தாங்கன்னு நினைச்சேன். மறுகி மறுகி எழுதறதைப் பாத்தா டேமேஜ் ரொம்பத்தான் போல

  எப்படி இருந்த நான் மாதிரி படிக்கவும்:

  கென்னடியில் நான்கு மணிக்கு விமானத்தைப் பிடிக்கும் அவசரம். மணியோ மூன்றாகி பத்து நிமிடம் ஆகியிருந்தது. வாடகைக் காரையும் திருப்ப வேண்டும்.

  90களில் பறந்த என் வண்டியை காவலர் நிறுத்துகிறார். காரணம் கேட்டார். சொல்கிறேன்.

  ‘நான் லைட் போட்டுக்கறேன். எல்லாரும் வழி விடுவாங்க. என் பின்னாடியே வரணும்! தெரிஞ்சுதா?’

  தலையாட்டி வால் பிடிக்கிறேன். விமான நிலையம் சென்றவுடன் ட்ராஃபிக் டிக்கெட்டைக் கிழித்து கொடுத்து ‘ஹேவ் எ சேஃப் ப்ளைட்’ வாழ்த்தும் சொல்லி வழியனுப்பும் 9/11க்கு முந்தையக் காலம் எங்கே போச்சு என்னும் புலம்பல்தான்.

  —க்ரீச்சிடும் குரலில் நடுக்கத்தோடு நர்த்தனம் புரிவது உங்களுக்கு ஆராரோ ஆரிராரோ போல் இருக்கிறதா?

  ‘ஃபாந்தம் ஆஃப் தி ஒபரா’ ம்யூசிகல்தானே? நிஜ ஆபரா அல்லவே! (இன்னும் மெய்யாலுமே அரங்கில் சென்று ஆபரா கேட்டதில்லை 😦

  —நன்றி நவில்தல் நாளன்று எள் போட்டால் எண்ணெய் எடுக்க முடியாத கூட்டம் அலைமோதியது சான் ஹோஸே கிரேட் மால்-இல்

  அதன் பிறகு வெகுவாக குறைந்து போயிருக்கிறது. மால்களில் எல்லாம் சுளுவாக காரை சொருகமுடிகிறது. இந்தக் காலகட்டங்களில் இடம் கிடைக்காமல் திண்டாடி, யார் வெளியே வருகிறார்கள் என்று தேவுடு காத்து, பின் தொடர்ந்து பிச்சை எடுத்து பார்க்கிங் பிடிப்பது வழக்கம்.

  –சன்னிவேல் சரவண பவனில் கொடுமையான் விலை.

  ஒரேயொரு முறை அங்கும் சென்றிருக்கிறேன். நீண்ட நேரம் காத்திருப்புக்குப் பிறகு கொண்டு வந்த பதார்த்தங்களின் சுவை ஏனோ ‘ஏதோ மிஸ்ஸிங்’ சொல்லவைத்தது.

  அப்படியிருந்தும் தள்ளுமுள்ளு கூட்டம் வருகிறது! எல்லாம் பெயரில் இருக்கும் சூட்சுமம்.

  —டைனோவை பார்த்தீர்களா? மாறுவேஷத்தில் ப்ளாகர் மீட்டுக்குக் கூட வந்திருந்தாராமே.

  செய் வராருன்னு முன்னமே சொல்லி இருந்தாருன்னா ஒழுங்கா சீக்கிரமே கிளம்பி ஜரூரா ஆஜராகியிருப்பேன் :>

 11. கொத்ஸ்,

  —-பாலத்தண்ணி கோயிலில் கேண்டீன் சமீபத்தில் (உண்மையிலேயே சமீபம், அந்த சமீபம் இல்லை) கை மாறிடுச்சு. —-

  ‘சமீபத்தில் கைமாறிய நிர்வாகத்திற்கு உங்கள் ஒத்துழைப்பு தேவை’ என்று போட்டிருந்தார்கள்.

  சாம்பார், சட்னி எல்லாம் அன்லிமிடட் அக வைப்பதற்கு பதில் அளவைக் குறைத்து தரத்தை/சுவையைக் கூட்டலாம்.

  அல்லது ‘எப்படியாகிலும் கோவிலுக்கு வருபவர்கள் சாப்பிடாமப் போகமாட்டாங்க’ என்னும் தன்னடக்கமாக இருந்தால், நம்மிலொருவர் பழைய பண்ணை சாலையருகே தென்னிந்திய உணவகம் அமைத்து காசு பார்க்கலாம்.

 12. கோவில் பக்கமெல்லாம் போய் வருஷக்கணக்கில் ஆனதால், காண்டீன் பற்றி சொல்வதற்கில்லை.நிர்வாகம் கைமாறீயது மட்டும் அல்லாமல் உணவும் சுத்தமானதாக இல்லை என்று இரண்டு முறை எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  குழந்தை காரில் இருக்கும் போது அதிக வேகம் தப்பான செயல். ஒரு ஆக்ஸிடெந்ட் அவளின் வாழ்க்கையை மாற்ற வல்லது. குழந்தையோடு போகும் போது வேகம் தவிர்த்தல் நலம். தனியாய் போனால், உங்கள் வாழ்க்கை நலம், அது உங்கள் இஷ்டம். I am mom against speeding:))
  Fraternity கார்டெல்லாம் இல்லையா? தெரிகிறமாதிரி பர்சை பிரித்தால், டிக்கெட் இருந்திருக்காது.
  மெதுவாக போனாலும் (விபத்து, பாதை சீரமைப்பு) காரணம் இல்லாமல் எல்லோரும் வேகமாக போகும் போது, மெதுவாக போனாலும் டிக்கெட் உண்டு.
  இணையத்தில் வாங்க ஆரம்பித்த போதே கூட்டம் குரைய ஆரம்பித்துவிட்டது. நானெல்லாம் கால் வலிக்க டாய்ஸ்ராஸில் நின்ற காலம் போயே ரொம்ப நாளாகிவிட்டது. இப்போதெல்லாம் pre order தான்.

 13. கொத்ஸ்,

  சொல்ல விட்டுப் போனது.

  —-போமோனா ரங்கநாதர் கோயில் போனீங்கன்னு நினைச்சேன்.—-

  பதிவர் சந்திப்பு மாதிரி அதற்கும் வாய்தா 🙂

  —-நியூயார்க்கில் ‘The katti roll company’ என்ற விரைவுணவகம் நல்லா இருக்கும். —-

  முன்னாடியே சொல்ல மாட்டீங்க? வால் தெரு பக்கம் சைவ உணவகம் தேடி திண்டாடிக் கொண்டிருந்தோம். இறுதியாக இந்திய உணவகம் நிறைய இருக்கும் பகுதிக்கு சென்று தாய்லாந்து சாப்பாடு சாப்பிட்டோம்.

 14. பத்மா,

  —-உணவும் சுத்தமானதாக இல்லை என்று இரண்டு முறை எச்சரிக்கப் பட்டிருக்கிறார்கள்.—-

  ஓ! 😦

  —-I am mom against speeding—-

  இந்த அமைப்பில் சேர என் மனைவியும் விருப்பம் தெரிவித்திருக்கிறாள் 😉

  —கால் வலிக்க டாய்ஸ்ராஸில் நின்ற காலம் போயே ரொம்ப நாளாகிவிட்டது.

  இணையம் எங்கேயும் எப்போதும் ‘ப்ளாக் ஃப்ரைடே’வாக்கி இருப்பது உண்மை.

 15. பாபா – நீங்க வரமாட்டீங்கன்னு தெரிஞ்சுதான் நானும் வர்ல! இலவசம் வேற கொலவெறில இருந்ததா சொல்றாங்க, போகாம இருந்ததே நல்லது போலிருக்கு.

  >இணையம் – ‘ப்ளாக் ஃப்ரைடே’<

  சைபர் மண்டேன்னு இப்ப தனி கும்மிவேற இருக்கே?

 16. பாபா நீங்கள் twitters against ticketing என்று இயக்கம் துவங்க உள்ளதாக பாஸ்டனில் பேசிக்கொள்கிறார்கள் :).

 17. I am Not God: மாமாவுக்கு மட்டும் தெரிஞ்சது, கன்னம் வச்சு பிடிக்க ஆரம்பிச்சுடுவாங்க 🙂

 18. டைனோ… அடுத்த தபா மீட் செஞ்சிரலாம் 😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.