Tag Archives: கூடங்குளம்

7 Questions for America’s Udhayakumar supporters and Infrastructure critics

தொடர்பான பதிவு: அணு உலைகளை ஏன் ’அமெரிக்கா’ உதயகுமார் எதிர்க்கிறார்?

1. கூடங்குளம் உண்ணாவிரதம் » ஜெயமோகன்: இந்தநிமிடம் வரை நம்முடைய முக்கியமான அதிகார பீடங்கள் எவையும் அவரை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இதுவரை அவரைநோக்கி ஒப்புக்குக்கூட ஒரு சமாதானக்குரல் வரவில்லை.

ஒசாமா பின் லாடன் மதத்தை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறார். வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாதவர்களை அமெரிக்காவில் யூனியன் தொழிலாளிகள், மிரட்டி உருட்டுவதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்; அடி வாங்கி இருக்கிறேன். இந்த மாதிரி கொள்கைக்காக கொண்ட லட்சியத்தில் ஈர்ப்போடும் முனைப்போடும் இருப்பவர்களின் உள்நோக்கங்களை ஆராயாமல் உள்ள உறுதியை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டுமா?

2. இடிந்த கரை.. இடியாத நம்பிக்கை… « திண்ணை – ஞானி: சிறுமியாக நடிக்கப்போன காலத்திலிருந்து செட்டில் கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். நூற்றுக்கணக்கில் செருப்புகளை வைத்திருந்தீர்கள் என்ற அவதூறுப் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை உடைய நூலகத்தை வீட்டில் வைத்திருந்ததை மறைக்கப் பார்த்தார்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இரு தரப்பு நூல்களையும் வாசியுங்கள்.

நீங்களும் இணையத்தை பரவலாக வாசிப்பீர்கள் என்று அறிந்திருக்கிறேன். மின்ரத்து இல்லாத சில மணித்துளிகளில் கீழ்க்கண்ட உரல்களை படித்து தெளிவடைவீர்கள் என்று நம்புகிறேன்.

அ) Benefits Of Nuclear Power
ஆ) Top 10 Facts About Nuclear Energy – CASEnergy Coalition

3. அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள் ! | வினவு!: ஃபுகுஷிமா விபத்துக்குப் பின் ரசிய அணுஉலைகளைச் சோதித்த அந்நாட்டு விஞ்ஞானிகள், “நிலநடுக்கம், தீ, வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறன் நமது உலைகளுக்கு இல்லை” என்று அந்நாட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.

தங்கம் வாங்கினால் திருடு போய் விடும். வண்டி ஓட்டினால் விபத்துக்குள்ளாகும். கணினியால் கண் பிரச்சினை வரும்; செக்ஸ் வைத்துக் கொண்டால் எயிட்ஸ் வரும். மின்சாரம் வந்தால் ஆபத்து வருமா?

4. The Koodankulam Struggle and the ‘Foreign Hand’ @ EPW by S P Udayakumar: They promise foreign direct investment (FDI), nuclear power, development, atom bombs, security and superpower status. We demand risk-free electricity, a disease-free life, unpolluted natural resources, sustainable development and a peaceful future.

நிலக்கரி போன்ற நச்சுத்தன்மையற்ற எரிசக்தி கிடைப்பது ஏன் பிடிக்கவில்லை? கேரளா மாநிலம் முழுக்க காற்றாலையால் ரொப்பி வருண பகவான் அருளினால் கூட கூடங்குளம் போன்ற குறுகிய இடத்தில் கிடைக்கும் உற்பத்தி கிடைக்காது. மக்கள் முன்னேற்றத்தை விட, தங்கும் இருப்பிடத்தை விட இராட்சத காத்தாடிகள்தான் தங்கள் குறிக்கோளா?

5. அழிவிற் சிறந்தது :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.: அணுக்கழிவுகளை தொடர்ந்து சாமாளிப்பது என்ற வகையில், சுற்று சூழலுக்கு உகந்ததாக அணு மின்சாரத்தை சொல்ல முடியுமா என்று கேள்வியை மண்டையில் இருந்து கழற்றி வைத்து விட்டு பார்த்தால், அணு மின்சாரம் ஒரு விதத்தில் தூய்மையான பச்சை மின்சாரமாகத்தான் தெரிகிறது.
.
.
ஃபாசில் எரிபொருட்களின் வளம் வற்றப்போவது நிச்சயமான எதிர்காலப்பிரச்சனை. அதை அணு மின்சார உற்பத்திக்கு மாறுவதன் மூலமாக மட்டும் சமாளிக்க முடியுமா? எல்லாவித பெட்ரோல், டீசல் தேவைகளையும் நேரடி மின்சாரம் சார்ந்த பயன்பாடாக மாற்ற வேண்டும்.

ஒரு யுரேனியம் குளிகை – அதாவது உங்களின் சுண்டு விரல் கூட அல்ல… சுட்டுவிரலின் நுனி
– (சவுதி எண்ணெய்க் கிணறுகளின் கிடைக்கும்) பதினேழாயிரம் கன சதுர இயற்கை வாயு
– எண்ணூறு கிலோ நிலக்கரி
– ஐநூறு லிட்டர் பெட்ரோல்

இப்படி முழுவதும் தயாரான, தற்கால நுட்பங்களை உள்ளடக்கிய, தொழிற்சாலையை இயக்குவதில் அதன் மூலம் பயனடைவதில் ஏன் சுணக்கம்?

6. Koodankulam: Letter to IAEA, Nuclear Regulators and Human Rights Organisations — DiaNuke.org: The KKNPP reactors from Russia are being set up without sharing the Environmental Impact Assessment (EIA), Site Evaluation Study and Safety Analysis Report with the people, or the people’s representatives and the press. No public hearing has been conducted for the first two reactors either

அமெரிக்கா வரை சு. ப. உதயக்குமாரால் சுற்றுலா வரமுடிகிறது. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து உரையாட முடிகிறது. உலகெங்கிலும் இருந்து பணம் கொணர முடிகிறது. ஆனால், திருநெல்வேலி வரை வந்தவர்களை சந்திக்க செல்ல முடிய வில்லையா? அரசு ரகசியங்களையும் பாதுகாப்பு ஆவணங்களையும் படிப்பதற்கு நேரம் ஒதுக்க மனமில்லையா?

7. 02 | மார்ச் | 2012 | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்: “உதயகுமாருக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம்”: ஜெர்மனிய நிறுவனத்திடமிருந்து –
2,15,21,900.00 ரூபாய். INDISKA MAGASINET AB Box 27317,S-102 54,Stockolm, Sweden என்கிற ஸ்வீடிஷ் நிறுவனத்திடமிருந்து 41,91,222.00 ரூபாய்.”

இவ்வளவு சொல்ப வருமானத்தை வைத்துக் கொண்டு பள்ளிச்சிறுவர்களை படிக்க அனுப்பாத பெற்றோர்களுக்கு பஞ்சப்படி தர முடிகிறதா?

அணு உலைகளை ஏன் அமெரிக்கா உதயகுமார் எதிர்க்கிறார்?

வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்
பொய் கலவாது என்
மெய் கலந்தானே.
(திருவாய்மொழி – 1.8.5)
உட்பொருள்
அயல் மனைகளில் தினமும் புகுந்து, மிகுந்த விருப்போடு தன் கைகளால் கிடைத்ததை அளைந்து, கைகளில் அகப்பட்டதை மகிழ்ச்சியுடன் உண்ட அமெரிக்கா, சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் இன்று நம்மில் கலந்தான்.
அராபியர் கடைந்த எண்ணெய் எவ்வளவு விருப்பமோ அதே அளவிற்கு உலகின் அணுகலன்களும் அமெரிக்காவிற்கு விருப்பமானதாயிற்று என்பது உரை.

அமெரிக்காவிற்கு மூன்று கவலைகள்:

1. தங்களை விட பராக்கிரமத்துடன் இன்னொரு இடம் வளர்ந்துவிட்டதாக உலகம் நினைக்கத் துவங்கிவிடுமோ?

2. தங்களுக்கான காரியங்களை சாதிக்கக் கூடிய குறைவான செலவில் நிறைவான லாபம் தரும் ஸ்தலங்கள் குறைந்துவிடுமோ!

3. தங்களின் முதல் மரியாதையான இந்திர பதவி போன்ற ஸ்திரதன்மைக்கு இந்தியா போன்ற குடியரசு வல்லரசு கோருமோ?

இந்த அச்சங்களை நீக்க அமெரிக்கா பல உபாயங்களைக் கையாளுகிறது. அதில் ஒரு அஸ்திரம் திரு உதயக்குமார்.

உலகெங்கும் உள்ள அணு உலைகள் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு பங்கம் விளைவிக்கிறது. முன்னும் ஒரு காலத்தில் இரண்டே இரண்டு நாடுகள் மட்டுமே அணு உலை வைத்திருந்தது. ஒன்று அமெரிக்கா; இன்னொன்று ருசியா.

கொஞ்ச நாள்போக்கில் நட்பு நாடுகளான இங்கிலாந்திற்கும் பிரான்ஸிற்கும் அமெரிக்கா அணுப் பொருட்களைக் கொடுத்தது. சீனாவும் அணுகுண்டு வெடிக்கும் நாடாக வளர்ந்தது.

பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் இந்தியா அணு சோதனை செய்து பறைசாற்ற, இராவோடு ராவாக பாகிஸ்தானும் இந்த ஐவரோடு இணைந்து எழுவரானது.

இன்றைய அளவில் இஸ்ரேல் – நம்பர் எட்டு.

வட கொரியாவால் தம்மாத்துண்டு வெடியாவது போட முடியும் – ஒன்பது.

இரான் கடும் பிரயத்தனத்தில் இருப்பதால் – #10.

இப்படியே போனால், சங்கரன்கோவில் வாக்காளர் எல்லோருக்கும் யுரேனியம் தருவதாக ஜெயலலிதா அறிவிக்கும் நாள் தூரத்தில் இல்லை.

இந்த மாதிரி உலகெங்கும் அதிகாரமும் அணுவும் சிதறி இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இருப்பதை எல்லாம் தன்னிடம் கொண்டு வரவேண்டும். இனிமேல் எவருக்கும் தாரை வார்க்கக் கூடாது என்பது ஒபாமா சித்தாந்தம்.

இதில் பையன் ஜார்ஜ் புஷ் வேறு ரகம். நல்ல நாடாக இருந்தால் அவர்களிடமும் கொஞ்சம் கொடுத்து வைப்பதில் தவறில்லை என்று பார்ப்பது ரிபப்ளிகன் கட்சி. உற்ற தோழனாக இருந்தாலும், நாம் படியளந்தால் மட்டுமே பாக்கெட் மணி என்று கெட்டியாக இருப்பது டெமொக்ரடிக் கட்சி.

அமெரிக்க அரசியல் நினைவுக்கு வந்தது.

அதிகாரத்தைக் கையில் எடுக்கும் குழுவை அமெரிக்காவில் டெமொக்ரட்ஸ் என்கிறார்கள். ஒபாமா கட்சி. மக்களுக்கு நல்லது கெட்டது தெரியாது என்று எண்ணுபவர்கள் இவர்கள் பக்கம். மக்களிடமே நல்லது கெட்டதை விட்டுவிட்டால், சுயநலமாக இருப்பார்கள்; எனவே, அதிகாரம்தான் பொதுவுடைமையாக இயங்க வேண்டும் என்று கருதுபவர்களும் இவர்கள் பக்கம்.

பொறுப்பைக் கையில் எடுக்கும் குழுவை ரிபப்ளிகன் கட்சி என்கிறார்கள். மிட் ராம்னியின் கட்சி. இன்னொருத்தருக்கு என்னுடைய கஷ்ட நஷ்டங்கள் தெரியாது என்று நினைப்பவர்கள் இவர்கள் பக்கம். தூண்டி விட வேண்டிய திரியாக இருப்பதை விட மெழுகுவர்த்தியாக எரிய விரும்புபவர்கள்.

இந்தியாவில் தன்னிறைவு வரக்கூடாது. மின் உற்பத்தி இடைஞ்சல் செய்ய வேண்டும். இதனால் அயல் முதலீட்டாளர்களுக்கும் கவலை பிறக்கும். எவனோ, எவளோ…. எப்போது பார்த்தாலும் எதற்காவது செங்கொடி தூக்கி வேலை நிறுத்த போராட்டம் செய்யும் நாடு என்னும் பிம்பம் எழும்…

இது பங்குச்சந்தையைக் கவிழ்ப்பதற்கு நல்லது.

அணு மின்சாரம் என்றால் ஏதோ நாக பாணம் போல் சயனைட் குப்பி பயம் எழுப்புவதால் உள் கட்டுமானங்களில் சுணக்கம் விழும். நம்பகமான நாடு அல்ல என்னும் பிம்பத்தை சுமத்தலாம்.

டாலர் கீழே படுத்திருக்கும் இந்த நிலையில் இது பேஷ்.

கிடைத்தார் உதயகுமார். குருஷேத்திரமாகிறது கூடங்குளம்.

Situation Hopeless… But Not Serious

தொடர்புள்ள சுட்டிகள்:

1. NNSA HEU removal featured on The Rachel Maddow Show | National Nuclear Security Administration

2. The Koodankulam Struggle and the ‘Foreign Hand’ @ EPW by S P Udayakumar

3. அழிவிற் சிறந்தது :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

4. பத்ரி சேஷாத்ரி: எந்த மின்சாரம் ‘நல்லது’?

5. பத்ரி சேஷாத்ரி: கூடங்குளம் போராட்டம்

6. கூடங்குளமும் தி.நகரும் « நேசமுடன்

7. கூடு :: இலக்கியம் :: குறும்படம்: “குமுதம் தீராநதி ஜனவரி மாத இதழில் வெளிவந்த சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல் – சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன், கிருஷ்ணகோபால்.”

8. தமிழ்ஹிந்து – கூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1 & விஸ்வாமித்ரா

9. அணு மின்சக்தி நமது அத்தியாவசியத் தேவை | ஆர்.பாலாஜி

10. எஸ்.குருமூர்த்தி  » கூடங்குளம் போராட்டம்- திரைக்குப் பின்னால் யார்?

10 Reasons why Koodankulam Nuclear Power Plant is opposed

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இணையத்தில் தேடினால், ‘Whats the worst that could happen’ என்று விளக்கும் பதிவுகள் முதலில் தென்படுகின்றன. அவற்றில் இருந்து என் புரிதல்:

1. கேரளாவிற்கு அருகில் இருக்கிறது. முல்லைப் பெரியாறு போல் பிரச்சினைக்காரர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளும் இடம் தோதுப்படாது.

2. ராஜீவ் காலத்திலேயே கையெழுத்திட்டதால், தற்போதைய எம்.பி.க்களுக்கு கையூட்டு கிட்டவில்லை.

3. இலங்கையில் விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத சக்திகள் அடக்கப்பட்டுவிட்டாலும், பாகிஸ்தானில் இருந்து முஜாஹிதீன் யாராவது கள்ளத் தோணியில் வெடிகுண்டு போடுவார்கள்.

4. இந்த மாதிரி பயங்கரவாதக் குழுக்களும், அவர்களிடமிருந்து நாட்டை பாதுகாக்க இராணுவமும், ராணுவத்திடமிருந்து மக்களை பாதுகாக்க காவல் படையும் குவிவதால், நிலநடுக்கம் ஏற்படலாம்.

5. முன்னாடி லெமூரியா கண்டம் இருந்ததே இன்னும் ருசுப்படவில்லை. இந்த லட்சணத்தில் குமரிக் கண்டமும் திராவிடர்களுக்கு இல்லாமல் சுனாமிக்கு இழக்கலாமா!

6. தூத்துகுடி மறைமாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் அவர்களுக்கும், போராட்டக்குழுவுக்கு தலைமையேற்றுள்ள உதயகுமார் அவர்களுக்கும் முறையே 54 கோடி ரூபாயும், உதயகுமார் அவர்களுக்கு 1.5 கோடி ரூபாயும் வந்தது வெறும் முன்பணம் மட்டுமே. முழுப்பணம் இன்னும் பட்டுவாடா ஆகவில்லை.

7. இப்போதாவது தினசரி 550 ரூபாய் கிடைக்கிறது. மின் உற்பத்தி துவங்கி விட்டால், இந்த வருவாயும் நின்றுவிடும். தேர்தலும் இல்லாத தரிசு காலத்தில், கூட்டத்தில் நிற்போரின் தினப்படியை கொடுக்கவிடாமல், வாயில் அடிப்பது நன்றாக இல்லை.

8. உலகமே இன்னும் கொஞ்ச நாளில் இருளில் மூழ்கிவிடும். அப்போது தமிழ்நாட்டில் அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க, இப்போதில் இருந்தே பழக்கப்படுத்தும், சூரிய ஒளியை மட்டும் நம்பி வாழவைக்கும் திட்டம்.

9. வைகோ போன்ற பேச்சாளர்களுக்கு பேச, உணர்ச்சி உரை ஆற்ற ஒரு விஷயம் குறைந்து போகும் அபாயம்.

10. நெய்வேலியில் இன்னும் கரி இருக்கிறதே! ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் இருக்கிறதே!! இலையில் இருந்து எண்ணெய் கொடுக்க ராமர் பிள்ளை கண்ட அறிவியல் தமிழ்நாட்டில் அணுசக்தி எதற்கு!!!