நியு இங்கிலாந்து கலை இலக்கிய மன்றத்தின் பதினான்காவது சந்திப்பின் போது உறுப்பினர்கள் கீழ்க்கண்ட தீர்மானத்தை அங்கீகரித்தனர்.
- முட்டை பரோட்டா சவுண்ட்
- வேஷ்டி டப்பாகட்டு
- தெருவோர இட்லி கடை
- காலை ஹோட்டலில் ஊதுபத்தி
- டீக்கட பென்ச்
- கோவில் திருவிழா
- காலையில் கிராமத்தில் ஃபர்ஸ்ட் ட்ரிப் பஸ்ஸில் காயகறி ஒரு டிக்கெட்டாக வருவது
- யாரையும் அக்கானு கூப்பிடறது
- ஓட்டல் ஆர்டரில் சர்வரே நாம என்ன சாப்புடனம்னு சொல்லுறது
- பழைய பேப்பர் கட
- மாட்டு வண்டி சவாரி
- தெருநாய்
- டிராஃபிக் கான்ஸ்டபிள் காடும் சைகையையும் புரிந்து கொண்டு இடிக்காமல் செல்லும் வாகன ஓட்டுநர்கள்
- வாய்க்கால்
- மசாலா பால்
- வெத்தல
- சிதறு தேங்கா
- பஸ் ஸ்டாண்டு பக்கத்தில இருக்கும் தியேட்டரில் எப்ப வேணும்னாலும் உள்ளார போயிட்டு வரது
- ஆட்டோ வாசகங்கள்
- முட்டை போண்டா
- வேப்பமரம்
- மரத்தடி பிள்ளையார் கோவில்
- நுங்கு
- தெருவோர கட்சிக் கூட்டம்
- மல்லிகப்பூ
- சந்தைக்கு காத்திருப்பது
- கனகாம்பரம்
- பதநீர்
- கொடுக்காபுளி
- தாவணி
- பாண்டிச்சேரி சரக்கு
- பட்டுப் பாவாட
- சாம்பார் வடை
- ரயில் சத்தம்
- இடியாப்பம்
- வயலோர வெளிக்கி
- புளியோதரை
- அய்யங்கார் கோவில் தூண் பிசுக்கு
- அடை அவியல்
- அக்ரஹாரத்து மடிசார் மாமி
- இட்லி தோசை
- கொசுறு வாங்குவது
- அல்வா
- வாழைமரம்
- கோலம்
- மார்கழி மாசப் பூசணிப்பூ
- அய்யர் கோவில் பொங்கல்
- மாரியம்மன் கூழ்
- பன்னீர்
- பட்டு புடைவை
- வாழையில சாப்பாடு
- பறை சாவு மேளம்
- ரஜினிகாந்த்
- சில்க் ஸ்மிதா
- ரேடியோ மிர்ச்சி சுசித்ரா
- சரோஜ் நாராயணசாமி
- அண்ணாச்சி கடையில் சாக்கு மடித்து உட்கார்வது
- குருவி ரொட்டி
- ஆரஞ்சு மிட்டாய்
- ராஜராஜ சோழன்
- கல் கோனான்
- இலந்தை வடை
- கோமணம்
- மாடுக் கொம்புக்கு கட்சிக் கொடி வண்ணம் போட்டிருப்பது
- பல்லவன்
- தலைப்பாக்கட்டு
- சந்திரலேகா
- சுக்கா வறுவல் & ஆட்டுக்கறிக் குழம்பு
- பலாப்பழம்
- மௌன ராகம்
- நவ்வாபழம்
- ‘கொஞ்சம் கவனித்தால்’ சகலமும் நடந்தேறும் சுமூகம்
- ப்ளாட்பாரத்தில் கிடைக்கும் உலகம்
- இலந்தப் பழம்
- சாயந்தரம் கோவில் நடைபாதையில் சுத்தம் செய்த துணிகள்
- ஏவியெம்
- சாயரட்சை நாதஸ்வரம் & தவில்
- நரசூஸ் காபி
- பொன்னியின் செல்வன்
- கொழுக்கட்டை
- குமுதம் நடுப்பக்கம்
- பிள்ளையார் எறும்பு
- ஆடிப் பெருக்கு, ஆடிப் பதினெட்டு – சித்ரான்னம்
- ஏர் கலப்பை உழுதல்
- ம.பொ.சி. மீசை
- தட்டச்சு சொல்லிக் கொடுக்கும் பெண்ணின் கைவிரல்
- எம்.ஜி.ஆர் தொப்பி
- ரேஷன் க்யூ
- ஆதிமூலம்
- புன்னகை அரசி
- விவேகானந்தர் பாறை
- தமிழ்99
- பெயருக்கு முன் பட்டப்பெயர்
- சீரணி அரங்கம்
- சரோஜாதேவி
- டேப் ரிகார்டரில் இளையராஜா
- முன் ஜாக்கிரத்தை முத்தண்ணா
- ஆடிவெள்ளிக்காக திறந்த அரங்கில் திருமால் பெருமை
- புரியாத மொழியில் கோவில் கல்வெட்டு
- தந்தை ஈ.வெ.ரா. பெரியார் லை
- மொய் 101
- எல்லாரையும் தல போடுவது
- திருக்குறள்
- விஸ்வநாதன் ஆனந்த்
- கைலி
- கஷ்டமோ, நஷ்டமோ… ஓடோடி வரும் சுற்றுப்புறமும் சொந்த பந்தமும்
- உலகெலாம் பல்கிப் பெருகுவது
- ஸ்தோத்திரம் 108
உங்களுக்கு என்ன பிடிக்கும்?
Meen kulambu
enga amma….