ராஜராஜன் என்னும் முடிந்த பெருங்கனவும் முடியாத ஆதிக்கப் புன்மரபும் « பிரபஞ்சன்
இராஜராஜ சோழர் குறித்து எழுத்தாளர் பா. ராகவன்:
கிழக்கில் ராஜராஜ சோழனை மக்கள் தாவி அள்ளும் காட்சியைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடிவதில்லை.
நூலை எழுதிய ச ந கண்ணன் புத்தகக் குறிப்பில் இருந்து:
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.
கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.
ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.
ராஜராஜ சோழன் நூல் பற்றி பாரா, பத்ரி.
ச ந கண்ணன் பதிவில் இருந்து சில பகுதிகள்:
சோழர்கள் வரலாற்றை முழுமூச்சில் ஆய்வு செய்தவர்களில் மிகமுக்கியமானவர், நீலகண்ட சாஸ்திரி. அவருடைய சோழர்கள் வரலாறு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல் குவியல்தான். ஒரு நாவல்போல அந்த நூலை கிடுகிடுவென வாசித்துவிடமுடியாது. ஒவ்வொரு பக்கத்துக்கும் அவர் இணைத்துள்ள ஃபுட்நோட்டே ஒரு நூலின் கனம் தாங்கும். மா. ராசமாணிக்கனாரின் ’தென்னாட்டு வரலாறு’ நூல் உள்ளதில் மிக எளிமையான மொழியைக் கொண்டது. குடவாயிலின் தஞ்சாவூர் நூல், முழுக்க முழுக்க தஞ்சாவூரின் வரலாறைச் சொல்லும் அதிஅற்புதம். இந்த நூல்களோடு, ராஜராஜனின் ஆயிரமாண்டு சிறப்பிதழுக்காக வரலாறு டாட் காம் உள்பட இணையத்தில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளும் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவி புரிந்தன.
இதுவரை, சோழர்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகவே ராஜராஜ சோழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. க.த. திருநாவுக்கரசு மட்டும் ராஜராஜ சோழன் பற்றி தனிநூல் எழுதியிருக்கிறார். ஆதாரங்கள் குறைவு என்பதால் அவரைப் பற்றிப் பிரத்தியேகமாக நூல் எழுதுகிற அளவுக்கு யாரும் முயலவில்லை.
ஜடாயு:
// ஆனால், கிட்டத்தட்ட 400 கடைகள் உள்ள கண்காட்சியில் கிழக்கு தவிர வேறு எங்கும் நீங்கள் இந்தச் சோழனைப் பற்றிய ஒரு புத்தகத்தையும் பார்க்க முடியாது. [என்.சி.பி.எச்சில் நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறு இருக்கிறது.] //
அன்னம் ஸ்டாலில் “இராஜராஜேஸ்வரம்” (குடவாயில் பாலசுப்பிரமணியம்) கிடைக்கிறது! பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்திருக்கும் செம்பதிப்பு. ஒரு அருமையான கலை, வரலாற்றுக் களஞ்சியம் இந்தப் புத்தகம்.
short cutல் மயங்காமல் ராஜராஜன் பற்றியும் தஞ்சைக் கோவில் பற்றியும் ஆழமாக்த் தெரிந்து கொள்ள விரும்புவோர் நாடவேண்டிய புத்தகம்.
என்னுடைய அம்மா ஆர் பொன்னம்மாளும் இராஜராஜரைக் குறித்து புத்தகம் எழுதியிருப்பதாலும், என் பன்னிரெண்டெ முக்கால் வயதிலேயே இராஜராஜனைக் குறித்து ஆறு நூல்களை தேவநேயப் பாவாணரின் வரலாற்றுப் பகுதியிலும் இரண்டு நூல்களை Oriya Literature பகுதியிலும் கண்டெடுத்தன் தொடர்ச்சியான விசன ட்விட் .
ட்விட்டரில் நான் கருதியது:
கிளியோபாட்ரா, ராஜ ராஜ சோழன் எல்லாம் பெஸ்ட்செல்லர்ஸ்னு சொல்லிக் கொள்ளும் நிலையில் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் இன்றும் இருப்பதை நெனச்சா
அதற்கு மூலகர்த்தா குறளையும் பார்த்து விடுவோம்:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்
பொருள்: நல்லவர்கள் வறுமையில் வாடுவதையும், தீயவர்கள் செல்வத்தில் திளைப்பதையும் மக்கள் தம் விழிப்புணர்வால் சிந்திக்க வேண்டும்; உரிய மாற்றத்தை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக நந்திதா தாஸ் போன்ற சிறப்பான ஆய்வுநூல்களும், ஹன்சிகா மொட்வானி போல் விதந்தோத வேண்டிய புதினங்களும் வெளியாகும் சூழலில் இன்னமும் ஸ்ரீதேவி காலத்து கிளியோபாட்ராவும் எஸ். வரலட்சுமி பாடல் பெற்ற இராஜ ராஜ சோழனின் ரீ-மிக்ஸ்களும் சூப்பர் ஹிட்டாகிறதே என்னும் அங்கலாய்ப்புதான்.
தொடர்புள்ள பதிவுகள் இரண்டு:
1. 2009ல் வெளியான நாவல்கள் :: நேசமுடன் வெங்கடேஷ்
2. தமிழ் நூல் பரிந்துரை – 2010 :: பாஸ்டன் பாலா
3. கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன் :: கிரேஸி மோகன் (கிழக்கு)
4. சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?”