Tag Archives: Perumal

மிகவானுள் எரி தோன்றினும் குளமீனொடுந் தாட்புகையினும்

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த உரையாடல்:

Meet C/2022 E3 (ZTF) (her friends call her the green comet for short)

“பீஷ்ம ஏகாதசிக்காக புதன்கிழமையன்று வானில் பெருமாள் தோன்றினார். பார்த்தாயா!?”

“தவறவிட்டுட்டேனே… எப்பொழுது, எப்படி வந்தார்?”

“அது வால் நட்சத்திரம் எனலாம்… பச்சை நிறத்தில் இருக்கிறது. இந்த வால் நட்சத்திரத்தின் மையப்பகுதி இரு கார்பன் அணுக்கள் சேர்ந்த டைகார்பன் (C2) என்ற மூலக்கூறுகளால் நிறைந்துள்ளது. சூரிய ஒளியோடு இந்த டைகார்பன் அணுக்கள்  வினைபுரிவதால் இந்தப் பச்சை நிற ஒளி வருகிறது.”

அருஞ்சொல் தளத்தில் ஜோசப் பிரபாகர் கட்டுரை எழுதுவது போல் பாடம் எடுக்கிறீர்கள். ஆன்மீகமாகச் சொல்லுங்களேன்…”

“மகாவிஷ்ணு மரகத மேனியனாக பச்சை நிறத்தில் பீஷ்மருக்காக விஸ்வரூப தரிசனம் தருகிறார். எனவே இந்த காட்சியை ‘பச்சை வண்ண பெருமாள்’ எனலாம்!”

“ஏதோ ஏகாதசினு சொன்னீங்களே?”

“பீமன் கூட பட்டினி இருப்பதால் நேற்றைக்கு பீம ஏகாதசி என்று பெயர்.”

“எனக்குத்தான் காது ஒழுங்காக் கேக்கலியா! பீஷ்ம ஏகாதசினு சொல்லிட்டு இப்பொழுது சாப்பாட்டு ராமனை உபவாசம் இருப்பதாக சொல்கிறீரே?”

“பீஷ்மர் கதை உங்களுக்குத்தான் தெரியுமே! அவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். வசு எனும் சொல்லுக்கு வெளி (Space) என்று பொருள். இவர்கள் இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள்.”

“அதெல்லாம் சரி… பீஷ்மருக்கும் வால் நட்சத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்?”

“பிரபாசன் எனும் வசு வைகறையை குறிப்பவர். அவருடைய மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, வசிட்டரின் காமதேனு பசுவை கவர்ந்து செல்கையில், வசிட்டரால் சாபம் பெற்று மண்ணுலகில், சாந்தனு – கங்கை தம்பதியர்க்கு பீஷ்மராக பிறந்தார்.”

“பீஷ்ம ஏகாதசி அன்னிக்குத்தான் பீஷ்மர் பரமபதம் அடைந்தார். அன்றைக்கு பச்சை வால் நட்சத்திரம் வருது. சரியா?”

“இல்லை. பீஷ்மர் அஷ்டமியில் மரணமடைந்தார். அதாவது ரத சப்தமி அன்று பரந்தாமத்திற்கு செல்ல நிச்சயித்தார்.”

“அப்படியானால், பச்சை தூமகேது… ஏகாதசி பெருமாள்… பீஷ்ம ஏகாதசி… எல்லாம் எதேச்சைதானே?”

“கோதர்ம: சர்வதர்மாணாம் பவத: பரமோ மத: !

கிம் ஜபன் முச்யதே ஜந்துர் ஜன்மசம்சார பத்தனாத் !

என்ற யுதிஷ்டிரன் வினவியபோது, “அனைத்து தர்மங்களிலும் சிறந்த தர்மம் எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டபோது, “நாராயண நாம ஸ்மரணையே சிறந்த தர்மம்” என்று பதிலளித்தவர். அர்ஜுனனின் ரத சாரதியாக குதிரைகளை வழி நடத்தும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என் இதயத்தில் எப்போதும் நிலைக்கட்டும் என்று தியானம் செய்கிறார் பீஷ்மர்”

“வானியல் அறிவு அதிகம் வளராத காலகட்டத்தில் இருந்த மனிதர்கள் அவ்வப்போது வானத்தில் திடீரென்று ஒரு பொருள் நட்சத்திரம் போன்றே ஒளிர்ந்துகொண்டே வால் போன்ற தோற்றத்தில் இருந்ததால் இதற்கு வால் நட்சத்திரம் என்ற பெயரிட்டு அழைத்தார்கள். ஆனால், இது உண்மையில் நட்சத்திரம் அல்ல. கோளும் அல்ல. அதற்கு வால் எப்போதும் இருப்பதில்லை. – என்பார் ஜோசப் பிரபாகர்.”

“சரியே… அதனால்தான் விஷ்ணு சஹஸ்ரநாமம் பூராவும் சொல்லி முடித்தபின், ‘ரதாங்கபாணி ரக்ஷோப்ய: சர்வப்ரஹரணாயுத’ என்ற நாமத்தோடு முடிக்கிறார். அதற்கு முன்பே ‘சக்ரீ’ என்கிறார். அந்த சக்கரத்தின் கனற்கொடியை C/2022 E3 (ZTF) எனலாம்.”

“அந்த மாதிரி ஜீரோ டிகிரி ஃபாரென்ஹீட்டில் தேவுடா காத்தால் பச்சை வண்ணப் பெருமாள் தெரிவார் என்கிறீர்கள்?”

“அதே… அதே… சபாபதே!”

பாஸ்டன் பெருமாள் – பார்த்தசாரதி கோலம்

ஸ்ரீமத் ராமானுஜ வைபவம்: ஆர்.பொன்னம்மாள்

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Cover

Via Senkottai Sriram

வானதி பதிப்பகத்தின் சார்பில் நூலாகியுள்ளது. ஆர்.பொன்னம்மாள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திரத்தை ஒட்டி வெளியிடப்பெற்றுள்ள தொகுப்பு!

வழக்கமாக தற்போது நடைபெறும் புத்தக வெளியீடுகள் போல் அல்லாது, வித்தியாசமாக யோசித்தார் வானதியின் பெயரன் சரவணன்.

ஒருநாள் காலை… கைபேசியில் அழைத்தார். அண்ணா, ஸ்ரீமத் ராமானுஜர் புத்தகம் போடுகிறோம்.. என்று சொல்லி, நூல் தலைப்பு, உள்ளடக்க குறிப்பு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டார். சொன்னேன். அடுத்த சில நாட்களில் மீண்டும் அழைத்தார். அண்ணா… நாம ஸ்ரீபெரும்புதூர் போய், அங்கேயே உடையவர் சந்நிதியில் நூலை வெளியிட்டு உடையவர் பாதத்தில் வைத்து வந்துடலாம். நீங்கதான் வெளியிட வரணும். உங்க கையால் வெளியீடு. ராமானுஜ நூற்றந்தாதி பாடிய உஷா பத்மநாபன் அம்மாவ அழைச்சிண்டு வரேன். அவர் முதல் பிரதியை வாங்கிப்பார் என்றார்.

மறுக்கவில்லை. சரியாக நேற்று திருவாதிரை. எம்பெருமானார் திருநட்சத்திரம். காலை அடியேன் பொத்தேரியில் இருந்து வண்டியில் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றுவிட்டேன். அவர்களும் வந்தார்கள். சந்நிதிக்குச் சென்று பெருமாளை, உடையவரை ஸேவித்தோம். பாதத்தில் புத்தகக் கட்டை வைத்து ஆசி பெற்றோம். அப்போது நம் எம்பார் ஜீயர் நினைவுக்கு வர, சரவணனிடம் சொன்னேன்…. நம் ஜீயர் ஸ்வாமிதான் புத்தகத்தை வெளியிட சிறப்பானவர். அவர் திருமாளிகைக்குப் போய், அவர் கையாலேயே வெளியிட்டுவிடுவோம் என்றேன்.

Senkottai_Sengottai_Sriram_Book_Release_Ramanujar_Ponamal_Vaishnaivism

அவ்வாறே சென்றோம். ஜீயர் ஸ்வாமி திருமாளிகையில் அன்று அன்பர் குழாம் அதிகம்! அதோடு அதாக, ஜீயர் ஸ்வாமி புன்னகையுடன் நூலை வெளியிட்டு, பிரதியை உஷா பத்மநாபனுக்கும் அடியேனுக்கும் வழங்கினார்.

பின்னர், அப்படியே எல்லாரும் அமருங்கள். பிரசாதம் சாப்டுட்டு போயிடலாம் என்றார் ஸ்வாமி. அருமையான கதம்ப சாதம், தயிர் சாதம்..! பக்கத்தில் உள்ள மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சிஷ்ய கோடிகள் பாகவத சிரோமணிகள் வழக்கமாக திருவாதிரை நட்சத்திரத்தில் கோயிலுக்கு வந்துவிட்டு ஸ்வாமி சந்நிதிக்கு வந்து மதியம் சாப்பிட்டு விட்டுச் செல்வார்களாம். அதனால் ஒரே தடபுடல்!

பரம திருப்தியுடன் எளிய, ஆனால் ஆத்மார்த்தமான ஒரு நிகழ்வுடன் அங்கிருந்தே அலுவலகம் விரைந்தேன்.

பின் இணைப்பு:
புத்தகம் குறித்து பலரும் விசாரிப்பதால், வானதி பதிப்பக எண் தருகிறேன்… போனில் விசாரித்துக் கொள்ளுங்கள்..
VANATHI PATHIPPAKAM
23,Deenadayalu street,T.nagar, Chennai-17
Ph-no: 044 – 2434 2810 / 2431 0769

செங்கோட்டை ஸ்ரீராம்

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Back_Cover_Book

நூலின் முன்னுரையில் சுதா சேஷய்யன் எழுதியதில் இருந்து சில பகுதிகள்:

(இந்த நூலின்) சிறப்பு, நூலின் எழுத்தமைப்பால் ஏற்படுகிறது. பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் உள்ள செய்திகளை, அதுவும் மரபும், சமயமும் சார்ந்த செய்திகள, எடுத்துரைக்கும்போது, அவ்வாறான நூலின் மொழி நடை, பாரம்பரியமும், பரிபாஷையும் சார்ந்ததாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு. மிகுதியான பரிபாஷைச் சொற்களும் வடமொழி மணிப்ரவாளச் சொற்களும் கலந்துவிடுமானால், வாசகர்கள் பால்ர் ஒதுங்கிவிடுவார்கள். குறிப்பாக இளைய தலைமுறை வாசகர்கள் அத்தகைய நூலைக் கையிலெடுக்கவே தயக்கம் காட்டுவார்கள்.

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_1

நூலின் மூன்றாவது சிறப்பு, கருப்பொருளுக்கு முன்னாலும், பின்னாலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் தக்க இடங்களில், தக்க முறைகளில் அமைத்திருக்கும் பாங்கு. …

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_2_Munnurai_Preface

… வைணவ குரு பரம்பரையின் பிரபாவத்தை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த நூலாசிரியர், அதற்கான தகவல்களை, திருமலை நம்பி – ராமானுஜர் ஆகியோரின் உரையாடல்களில் பொதித்துக் கொடுப்பது மிகச் சிறந்த யுத்தி.

வைணவ உரைகளில் ‘ஈடுகள்’ முக்கிய இடம் பெறுகின்றன. ஈடு என்பது என்ன, எதைக் கொண்ட ஈட்டுக் கணக்கு வருகிறது போன்ற தகவல்களையும் நூலாசிரியர் போகிற போக்கில் விளக்கியுள்ளார்.
Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_3

ஆசாரக்கோவை கதைகள் 1 – ஆசார வித்து

தூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.

இப்பொழுது விமானம் நெருங்குகிறது. அல்ல… கலிஃபோர்னியா கான்டோர் வந்து இறங்கியது.

“நீ அழிந்து கொண்டிருக்கிறாயாமே”

“சேச்சே! உன் அப்பாவ கிட்டக்கயே வச்சுக்கணும்னு நீ கேட்ட இல்லியா! அதுக்காக வந்திருக்கேன்.”

“கருடன் மேல் பெருமாள் பறப்பது போல் நீதான் எங்கப்பாவ கூட்டிகிட்டு வரப்போறியா?”

“இல்ல… நான் படைச்ச மக்களையெல்லாம் அழிக்கணும்.”

“என்னது?”

“உனக்கு தெரியுமில்லியா? நாந்தான் இந்த உலகத்தை சிருஷ்டிச்சேன். முன்னுமொரு தினத்தில் மேலேயிருந்த முதியவர் பிரளயத்தை உண்டுசெஞ்சார். வாக்கு சாதுர்யம் இல்லாதவங்க எல்லாரும் அம்பேல். நான் மச்சாவதாரம் எடுத்து ஏட்டுச் சுரைக்காய்களைக் காப்பாற்றினேன். இப்பொழுதும் அந்த மாதிரி செய்யணும்”

“எனக்கு ஆசாரக்கோவை ஞாபகத்துக்கு வருது. உனக்கு நன்றி சொல்லணும்.”

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா? டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா? முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”

“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”

“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா?”

விக்கிக் குறிப்பு: The Wiyot tribe of California say that the condor recreated mankind after Above Old Man wiped humanity out with a flood.[49] However, other tribes, like California’s Mono, viewed the condor as a destroyer, not a creator. They say that Condor seized humans, cut off their heads, and drained their blood so that it would flood Ground Squirrel‘s home. Condor then seized Ground Squirrel after he fled, but Ground Squirrel managed to cut off Condor’s head when Condor paused to take a drink of the blood.

வைணவத் தத்துவத்தில் கேபிடலிசமும் கம்யூனிசமும்

உயிகளின் பகுப்பு: வைணவ மரபும் மெய்ப்பொருளியலும்: கம்பன் காட்டும் வைணவப் பேருலகம்

உயிகளின் பகுப்பு: வைணவ மரபும் மெய்ப்பொருளியலும்: கம்பன் காட்டும் வைணவப் பேருலகம்

  • வீடு பேறு பெற்றோர் – முக்தர்: நித்தியர்
  • ஒரு பொழுதும் தளைக்குட்படாத நிலையானவர்
  • தளைக்குட்பட்டோர்  – பக்தர்கள்
    • புனித நூல்களால் வழிநடத்தப்படாதவை: பயிரினங்களும் விலங்கினங்களும்
    • புனித நூல்களால் வழிநடத்தப்படுவோர்: மனிதர்கள் & கடவுள்
      • உலகப்பயன்களை நுகர விழைவோர்: புபுட்சு
        • நன்மையை நாடுவோர்: தர்மபரர்
        • பொருள், இன்பம் விழைவோர்: அர்த்தகாமர்
          • »பல கடவுளைச் சார்ந்து நிற்போர்: வேதாந்த பரர்
          • »ஒரே கடவுளைச் சார்ந்து நிற்போர்:: பகவர் பரர்
            • துன்புறுவோர்: அர்த்தர்
            • அறிவு விழைவோர்: சிக்ஞாசர்
            • பொருளை நாடுவோர்: அர்த்தார்த்தி
      • வீடுபேறடைய விரும்புவோர்:  முமுட்சு
        • தன்னை தூய நிலையில் உணர விழைவோர்: கைவல்யபரர்
        • இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: மோட்சபரர்
          • »அன்புவழிப்பட்டோர்: பக்தர்கள்
            • அன்பினை வழியாக ஏற்றோர்: சாதனை பக்தர்
            • அன்பினை முடிவாகக் கொண்டோர்: சாத்திய பக்தர்
          • »புகல்வழிப்பட்டோர்: பிரபன்னர்கள்
            • அறிவு அன்பு மட்டுமே இறைவனிடமிருந்து பெற விழைவோர்: பரமை கரந்திகள்
            • உறுதிப் பொருளை இறைவனிடமிருந்தே பெற விழைவோர்: ஏகாந்திகள்
              • முன்வினைப்பயன் நுகர்வின் முடிவில் இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: திருப்தர்
              • புகலுறுதி மேற்கொண்டவுடன் இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: ஆர்த்தர்

கேசவப் பெருமாள் கோவில் உற்சவம்

ஸ்ரீநிவாசர் கோவில்: திருமஞ்சனம்

பத்தாம் நாள் மாலை :: த்வாதசாராதனம் :: வெட்டிவேர் சப்பரம்

த்வாதசாராதனம் :: வெட்டிவேர் சப்பரம்

ஒன்பதாம் நாள் மாலை :: ஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்

வெட்டிவேர் சப்பரம்

ஆனந்த நிலைய விமானம்: வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்

ஒன்பதாம் நாள் காலை :: ஸ்ரீனிவாசர் கோவில் பிரும்மோற்சவம்

ஸ்ரீனிவாசர் கோவில் பிரும்மோற்சவம்

எட்டாம் நாள் :: குதிரை வாகனம் – ஜூன் 1, 2009

ஆள்மேல்பல்லக்கு (அவபிரதம்)

குதிரை வாகனம் – ஜூன் 1, 2009

ஏழாம் நாள் :: திருத்தேர்: சிறீநிவாசப் பெருமாள் கோவில்