India Trip – Varanasi


காசி, சாரநாத், அலஹாபாத் என்று புனிதப் பயணம் சென்று வந்ததில் இருந்து சில புகைப்படங்கள். புகைப்படத்தை க்ளிக்கினால், இன்னும் பெரிய படம் தெரியும்.

1. வாரநாசியில் மூன்று மசூதிகள் இருப்பதாக ஓடக்காரர் + நகர விவரிப்பாளர் (Guide) சொன்னார்.

ஒன்று பா.ஜ.க. மெல்லுவதற்கு வசதியாக, காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் நிறைவான போலீஸ்காரர்களுடனும், குறைவான பாதுகாப்புடனும், அடுத்த இனக்கலவரத்தை எப்போது வேண்டுமானாலும் கொடுக்க சர்வ வல்லமையுடனும் விளங்குகிறது.

இந்த ஷாட்டில் வேறொரு மிகப் பெரிய மசூதி.

2. ‘லைவ் ரிலே‘வாக ‘டெட் சலோ‘ என்று இறந்தவர்களின் உடலை (சில சமயம்) அப்படியே கங்கையில் அனுப்புகிறார்கள். மற்றவர்கள் ஹரிச்சந்திரா காட், மணிகர்ணிகா காட் என்னும் கங்கைக் கரையிலேயே எரியூட்டப்பட்டு, கரைக்கப்படுகிறார்கள்.

இறுதிச்சடங்கு நடக்கும் ‘கட்டங்களும்’ கறைகளைப் போக்கவல்ல & அவசியம் குளிக்கவேண்டிய புனிதக் கரைகள்.

3. பீட்ஸா புகழ் ‘பைஸா நகரத்து சாய்ந்த கோபுரம்’ போல் மக்களின் பாவங்களைப் போக்கி போக்கி, சாய்ந்து போன கங்கைக் கரை கோவில் கோபுரம்.

4. ‘பாரதி‘யும் சாகேத் ‘ஹே ராமு‘ம் இன்ன பிறரும் ஸ்நானம் செய்த தளம்.

பாசி பிடித்த படிக்கட்டுகள். நிம்மதி தேடும் வெள்ளைக்காரர்கள். ஆள் பிடிக்கும் படகுக்காரர்கள். கம்பி தோறும் பிச்சைக்காரர்கள். காலைக்கடன் கழிக்கும் உள்ளூர்வாசிகள். சூரியக்குளியல் மிதக்கும் எருமைகள். துணி அழுக்கைத் துவைக்கும் தோட்டிகள். அசுத்த நீருக்கும் தீர்த்தக்கரை பாவியாவதற்கும் பயந்து ப்ரோஷணம் மட்டுமே செய்துகொள்பவர்கள். பான் பராக் கொப்பளிக்கும் ஓடக்காரன். அஸ்தி கரைக்கும் துக்கம் கொண்டவர்கள். கௌபீனத்துடன் படிக்கட்டில் காட்சிகளை ரசிப்பவர்கள்.

தஷாஷ்வமேத் காட் – ஆயிரம் குதிரைகளைக் கொன்(டு)று அசுவமேத யாகம் செய்த கங்கைக் கரை.

5. தினசரி மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை கங்கைக் கரையில் பஜனையும் கங்கா ஆரத்தியும் நடந்தேறுகிறது. நயாகரா அருவியில் இரவு விளக்குகள் பல்வண்ணத்தில் நீர்வீழ்ச்சியை ரம்மியமாக்கும். அதே போல், இரவு நேர நதிக்கரை ஆராதனைகள் (பார்வையாள பக்திமான்களும்தான்) கங்கை ஹாரத்தியை ரசிக்க சொல்கிறார்கள்.

சென்னை பீச் சுண்டல் போல் சூடான டீ கிடைக்கிறது. கங்கையில் விளக்கு அனுப்ப சொல்கிறார்கள். இரவு நீச்சல் நிம்மதியானது என்றால்; கங்கை தீரத்தின் வெளிச்சத்தை, காலையில் குற்றங்களைப் போக்கிக் கொண்ட நதியின் கும்மிருட்டு நடுவில் இருந்து பார்க்கலாம்.

(பயணமும் படமும் தொடரும்)


| |

9 responses to “India Trip – Varanasi

 1. தமிழ்நாடு, தமிழ்க்கடவுள் எல்லாம் இருக்க ஆரியநாட்டு காசியை விரும்பி தேடி போனது எதற்கு? காவிரியில் தண்ணீர் இல்லாமல் இங்கே அவனவன் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க கங்கையில் தண்ணீர் ஓடுகிறது என்று படம் போடுவதன் உள்நோக்கம் என்ன? உள்நாட்டில் சிதிலமடைந்து சாய்ந்த கோபுரங்கள் பல கவனிப்பாரற்று கிடக்கும் காலத்தே பீஸா கோபுரத்தை உதாரணம் காட்டுவது இத்தாலி (அதன் மூலம் காங்கிரஸ்) மீது தாங்கள் கொண்டிருக்கும் பற்றையே காட்டுகிறது. தூய தமிழாம் கோவணம் இருக்க வடமொழி சொல்லாம் கௌபீனம் என்ற சொல்லை உபயோகப்படுத்துவது த்மிழை உச்சரித்தால் கேவலம் என்ற உயர்குடி மனோபாவத்தையே காட்டுகிறது… முக்கியமாக காசிக்கு போனதன் மூலம் இந்துமத ஆதரவு அதன் மூலம் சாதிக்கு ஆதரவு என்ற உங்கள் நிலைப்பாடு அருவருக்க வைக்கிறது…

  இவண்,
  தமிழ் வலையுலக செக்கூலரிஸ்ட் பாதுகாப்பு இயக்கம்.

 2. படங்களைப் பாத்தாலே பாவம் கழிஞ்சுடுமா ராசா? ஆமாம் காசிக்குப் போயி புடிச்சதை வுட்டுட்டு வருவாளாமே? நீரு எத்த வுட்டீரு? (விளக்கு உட்டேன்ன்னு சொல்லாதீர்)

  🙂

 3. டுபுக்கு… __/\__

  எம்.எம்…

  அடுத்து வரப்போகும் என்னுடைய பிட்டுகளுக்கு முன்னோடியான கண்டனங்கள் 😛 😉

  1. உல்லாசபுரியில் நேரு வசித்ததை சுட்டும் ‘ஆனந்த பவன்’ புகைப்படம்.

  2. சாந்தமே உருவான இலங்கையின் புத்தராலயம்.

  3. கொழுப்பு மிகுந்தவர்களை எள்ளி நகையாடும் ‘தி மேகிங் ஓஃப் எ லஸ்ஸி’.

  4. பட்னாவின் ஜெயப்பிரகாஷ் நாராயண் விமானத்தளத்தை படம் பிடிக்காமல், இந்திரா காந்தி அவதார ஸ்தலத்தை மட்டும் நிழற்படுத்தும் அவலம்.

  (தொடரும் :P)

 4. —-படங்களைப் பாத்தாலே பாவம் கழிஞ்சுடுமா —

  பாவம் கொடூரன் அய்யா நீர்… எந்தப் படத்தை பார்க்கிறோம் என்பதில் இருக்கு கூட்டலும் கழிதலும்.

  —காசிக்குப் போயி புடிச்சதை வுட்டுட்டு —

  அது ‘கயா’. எனக்குப் பிடித்ததே வலைப்பதிவுதான். இனிமேல் ‘விட்ட’ வலைப்பதிவு பக்கம் போவதில்லை என்று மரத்திடம் மானசீகமாக சொல்லிவிட்டேன்.

 5. Baba,

  Welcome back Friend!

  Where is the audio/video blog of your speech in literary meeting?

  Post it soon without excuses like, “I have not recorded”.

  If you have not recorded, write a summary commentary 🙂

  Thanks and regards, PK Sivakumar

 6. //அது ‘கயா’//

  அது அது… கயா மத்லப் ‘கயா’… கியா போல்தோய்?

  விட்ட பதிவு பற்றி மரம் என்ன வரம் தந்தது? 😉

 7. Chameleon - பச்சோந்தி

  //பாசி பிடித்த படிக்கட்டுகள். நிம்மதி தேடும் வெள்ளைக்காரர்கள். ஆள் பிடிக்கும் படகுக்காரர்கள். கம்பி தோறும் பிச்சைக்காரர்கள். காலைக்கடன் கழிக்கும் உள்ளூர்வாசிகள். சூரியக்குளியல் மிதக்கும் எருமைகள். துணி அழுக்கைத் துவைக்கும் தோட்டிகள். அசுத்த நீருக்கும் தீர்த்தக்கரை பாவியாவதற்கும் பயந்து ப்ரோஷணம் மட்டுமே செய்துகொள்பவர்கள். பான் பராக் கொப்பளிக்கும் ஓடக்காரன். அஸ்தி கரைக்கும் துக்கம் கொண்டவர்கள். கௌபீனத்துடன் படிக்கட்டில் காட்சிகளை ரசிப்பவர்கள்.//

  இந்தப் பார்வைதான் சிறப்புப் பார்வை.

  :))

  புகைப்படங்கள் குறிப்பாக இரவில் எடுத்தது அருமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.