Daily Archives: மார்ச் 7, 2006

Nayinaar Nagendran’s Poster/Banner in Thirunelveli…

Nayinaar Nagendran’s Poster/Banner in Thirunelveli – Tamil Murasu Posted by Picasa

Velachery Dog – Deer incident – Thamizh Murasu 

Velachery Dog – Deer incident – Thamizh Murasu Posted by Picasa

Reactions to Varanasi Blasts

செய்தி: ரீடிஃப் | கூகிள் தேடல் | IBNLive : Narendra Nag’s Blog

1. நடுநிலைவாதி: கண்டிக்கிறேன்.

2. மறுமொழிவாதி: நன்றி!

3. இடதுசாரி அலசல்வாதி: காசியை இன்னொரு அயோத்தியாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். திட்டமிடுகிறது. நடக்கப்போகும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு அவர்களே குண்டுவெடிப்பைத் தூண்டியிருக்கிறார்கள்.

4. நாத்திகவாதி: கடவுள் காப்பாற்றுவான் என்கிறார்களே… இறந்தவர்களை ரட்சிக்க இறைவனால் முடியவில்லையா?

5. குரூர நகைச்சுவைவாதி: கோவிலுக்கு சென்றால் மோட்சம் கிட்டும் என்றார்களே? இவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

6. ஹிந்துத்வாவாதி: காசி விச்வநாதருக்குப் பக்கத்தில் இருக்கும் மசூதியை இடித்துவிட்டு அன்னபூரணிக்கு புனருத்தாரணம் செய்வது மட்டுமே தீர்வு.

7. அமெரிக்க வெளியுறவுத்துறை: இந்தியாவுக்கு தற்போது செல்லுதல் வரவேற்கத்தக்கதல்ல. பாதுகாப்பு குன்றிய நிலையில், வெளிநாட்டுக்காரர்களின் நலனுக்கு பங்கம் விளைவிக்கும் சூழல் இந்தியாவில் நிலவுவதால், அமெரிக்கர்கள், உத்தர பிரதேசம், பிஹார், உத்தரான்சல் மாநிலங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

8. முற்போக்குவாதி: இந்த குண்டுவெடிப்பை வரவேற்கிறேன். இது போன்ற வீரதீரச்செயல்களால்தான் நாட்டில் இருக்கும் அவலங்கள் கவனிப்புக்குள்ளாகிறது. பிரச்சினையை மூடி மறைத்து புஷ்ஷை வரவேற்கும் செய்கைகள் உலக அளவில் திரும்பிப் பார்க்கப்படுகிறது. சிறுபான்மையினரை அடக்கியாளும் வரை இவ்வித வெடிப்புகள் தொடரும் என்பதை தேசியவாதிகள் புரிந்து கொள்ளப் போவதில்லை.

9. தமிழக பி.ஜே.பி. அரசியல்வாதி: கோவை குண்டுவெடிப்பை மறந்து விட்டோமா? தமிழகம் வாரணாசியாக மாறாமல் இருக்க பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பீர்கள்.

10. ஆளுங்கட்சி: குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தோம். மிகவும் வருந்தத்தக்கது. நாசகார சக்திகளை அடையாளம் கண்டுபிடிப்பதில் காவல்துறை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. கூடிய சீக்கிரமே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். மேலும் பல திட்டங்களை முன்பே அறிந்து முறியடித்து வருகிறோம்.


| |

Andipatti, Madras, Coimbatore

Thanks: Dinamani Election Updates

1. வி.ஐ.பி. தொகுதி: ஆண்டிபட்டியா? அரசப்பட்டியா?

2. கட்சிக் கொடி கம்பங்களே இல்லாத கிராமம்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள விளாம்பட்டி கிராமத்தில் கட்சிக் கொடிக் கம்பங்கள், கொடிகள் இல்லை. விளாம்பட்டி இரண்டாம் நிலை ஊராட்சியாகும். இங்கு சுமார் 4,000 பேர் வசிக்கின்றனர். இக் கிராமத்தில் ஒரு காந்தி சிலை மட்டுமே உள்ளது.

3. தலைநகரைக் கைப்பற்றப் போவது அதிமுகவா? திமுகவா? – ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991 தேர்தலின்போது சென்னையில் உள்ள 14 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இரண்டில் மட்டுமே தி.மு.க. வென்றது.

ராயபுரம்: பேரவைத் தொகுதிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள தொகுதி. 1967-ல் இருந்து (1991, 2001 தவிர) அனைத்துத் தேர்தல்களிலும் தி.மு.க. வென்ற தொகுதி.

1991, 2001 தேர்தல்களில் இங்கு வென்றவர் அமைச்சர் டி. ஜெயக்குமார்.

துறைமுகம்: 1977-ல் இருந்து தி.மு.க.வின் கோட்டை. 1989, 1991-ல் தி.மு.க. தலைவர் கருணாநிதி வென்றார். 1991-ல் மாநிலம் முழுவதும் தி.மு.க. தோற்றபோதிலும், அக்கட்சி வென்ற இரு தொகுதிகளில் இதுவும் ஒன்று.

1996, 2001-ல் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வென்றார்.

ராதாகிருஷ்ணன் நகர்: 1957, 1962-ல் டி.என். அனந்தநாயகி (காங்.) வென்றார். 1967, 1971, 1989, 1996-ல் தி.மு.க. வென்றது.

1980-ல் தி.மு.க. ஆதரவுடனும்,, 1984-ல் அ.தி.மு.க. ஆதரவுடனும் காங்கிரஸ் வென்றது.

1977-ல் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டபோது இங்கு நடிகர் ஐசரி வேலன் வென்றார். 1991-ல் இங்கு வென்ற இ. மதுசூதனன் அமைச்சர் ஆனார். 2001-ல் பி.கே. சேகர்பாபு வென்றார்.

பூங்கா நகர்: 1967, 1971-ல் டாக்டர் எச்.வி. ஹண்டே சுதந்திரா கட்சி வேட்பாளராக வென்றார். 1977-ல் இருந்து தொடர்ந்து தி.மு.க. வென்றது. 1991-ல் உ. பலராமனும், 2001-ல் எஸ்.ஜி. விநாயகமூர்த்தியும் (இருவரும் காங்.) வென்றனர்.

பெரம்பூர்: 1991, 2001 தேர்தல்களைத் தவிர தொடர்ந்து தி.மு.க. வென்று வரும் தொகுதி. 1967, 1971-ல் முன்னாள் அமைச்சர் சத்தியவாணிமுத்து, 1984-ல் பேரவை முன்னாள் துணைத் தலைவர் பரிதி இளம்வழுதி ஆகியோர் வென்ற தொகுதி. தற்போது கே. மகேந்திரன் (மார்க்சிஸ்ட்) இங்கு எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

புரசைவாக்கம்: 1991 தேர்தலைத் தவிர, 1967-ல் இருந்து தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வென்று வரும் தொகுதி. தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளவர் ப. ரங்கநாதன். ஒருகாலத்தில் காங்கிரஸ், த.மா.கா. ஆகியவற்றில் இருந்தவர். ப. சிதம்பரத்தின் காங். ஜனநாயகப் பேரவையின் வேட்பாளராக 2001-ல் போட்டியிட்டு வென்றார். தற்போது தி.மு.க.வில் உள்ளார்.

எழும்பூர்: 1967-ல் இருந்தே தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டை. 1991-ல் மாநிலம் முழுவதும் தி.மு.க. தோற்றபோதிலும், அக்கட்சி வென்ற இரு தொகுதிகளில் இதுவும் ஒன்று.

1989, 1991, 1996, 2001 ஆகிய 4 தேர்தல்களில் தொடர்ந்து பரிதி இளம்வழுதி வென்றார்.

அண்ணா நகர்: 1991 தேர்தலைத் தவிர, 1977-ல் இருந்து தி.மு.க. தொடர்ந்து வென்று வரும் தொகுதி. 1977, 1980-ல் கருணாநிதியும், 1989-ல் அன்பழகனும், 1996, 2001-ல் ஆர்க்காடு வீராசாமியும் வென்றனர்.

4. சென்னை யார் கோட்டை? தொடர்ச்சி : ஆயிரம் விளக்கு: 1957-ல் தொடங்கி, 1977 வரை தொடர்ந்து 5 முறை தி.மு.க. வென்றது. 1980, 1984, 1991-ல் அ.தி.மு.க. வென்றது. 1989, 1996, 2001-ல் மு.க. ஸ்டாலின் வென்றார்.

சேப்பாக்கம்: மிகச் சிறிய தொகுதி. தி.மு.க.வின் கோட்டை. 1991 தேர்தலைத் தவிர இதர அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. வென்றுள்ளது. 1996-ல் இங்கு வென்ற கருணாநிதி முதல்வர் ஆனார். 2001-லும் அவரே வென்றார்.

திருவல்லிக்கேணி: 1991 தேர்தலைத் தவிர, 1962-ல் இருந்து தி.மு.க. வென்ற தொகுதி. தி.மு.க.வின் அசைக்க முடியாத தொகுதி. இரா. நெடுஞ்செழியன் 3 முறையும்,, நாஞ்சில் கி. மனோகரன் 2 முறையும் வென்ற தொகுதி. 2001-ல் எஸ்.ஏ.எம். உசேன் வென்றார்.

மயிலாப்பூர்: 1980, 1984, 1991-ல் அ.தி.மு.க. வென்ற தொகுதி. 2001-ல் பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் வென்றார். மற்ற தேர்தல்களில் தி.மு.க. வென்ற தொகுதி.

சைதாப்பேட்டை: 1984, 1991 பொதுத் தேர்தல்கள், 2002 இடைத்தேர்தல் ஆகியவற்றைத் தவிர, இதர தேர்தல்களில் தி.மு.க. வென்ற தொகுதி. 1967, 1971-ல் கருணாநிதி வென்ற தொகுதி.

2001 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வை. பெருமாள் (தி.மு.க.) 13.8.2001-ல் காலமானார். இடைத்தேர்தலில் நடிகர் ராதாரவி (அ.தி.மு.க.) வென்றார்.

5. வி.ஐ.பி. தொகுதி: பென்னாகரத்தின் தாகம் தீர்ப்பாளா காவிரித் தாய்: தொகுதியில் கடந்த 2001 தேர்தலில் 2-வது முறையாக மாம்பழம் சின்னத்தில் வெற்றிக்கனியைப் பறித்தவர் பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி. 1996-லும் அவரே வெற்றிக் கண்டார்.

இந்த தொகுதியில் 1972-ல் மட்டும் திமுக வெற்றிக் கண்டது. அதன் பின்னர் அக் கட்சி பலமுறை போட்டியிட்டும் தொகுதியைக் கைப்பற்ற இயலவில்லை.

77-ல் ஜனதாதளம், 81-ல் காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ், 84-ல் அதிமுக, 89-ல் இந்திய கம்யூ. கட்சி, 91-ல் அதிமுக ஆகிய கட்சிகள் வெற்றிக் கண்டுள்ளன.

6. சீட் கேட்கும் வாரிசுகள் :
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா :: ஈரோடு தொகுதி

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் :: சிவகங்கை தொகுதி

தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக முன்னாள் எம்.பி. எம்.கிருஷ்ணசாமி மகன் டாக்டர் விஷ்ணு பிரசாத் ஏற்கெனவே இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவரும் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்.

முன்னாள் எம்.பி. இரா. அன்பரசுவின் மகன் அருள் அன்பரசு :: பூந்தமல்லி அல்லது உத்தரமேரூர் தொகுதி

7. கரூர்: சவால் மிகுந்த தேர்தல் களம் – 1957-ல் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டுக்குப் பிறகு, திமுக தலைவர் கருணாநிதி முதல் முறையாக போட்டியிட்டு வென்ற தொகுதி குளித்தலை.

பின்னர் இத்தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த அ. பாப்பாசுந்தரம் 3-வது முறையாக வென்றுள்ளார். கரூர் மாவட்டத்தில் கூட்டணி பலம் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கிறது. பெரிய தொழில் நகரான கரூரில், தொழிற்சாலைகள் அதிகம் இருந்தும் கம்யூ கட்சிகளைவிட கழகங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவுக்கு என தனி வாக்காளர்கள் உண்டு. 1980 முதல் 2001-ம் ஆண்டு வரை நடைபெற்ற 6 தேர்தல்களில் அதிமுக கூட்டணி நான்கு முறை வென்றுள்ளது. முஸ்லிம் சமுதாயத்தினரை முன்னிலைப்படுத்தினால், இங்கு அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

கிருஷ்ணராயபுரம் தொகுதியும் அதிமுக வசமே. கடந்த 7 தேர்தல்களில் 4-ல் அதிமுக வென்றுள்ளது. தனித்தொகுதியான இங்கு திமுக, அதிமுகவுக்கென ஓரளவு பலம் உள்ளது. பாமகவுக்கு ஓரளவு ஓட்டு வங்கியும் உள்ள தொகுதி இது.

குளித்தலையில் திமுகவும், அதிமுக கூட்டணி பலத்தை ஒப்பிட்டால் சமம் என்றே கருதப்படுகிறது.

அமராவதி பாலம் உடைப்புக்காக கருணாநிதி மீதான வழக்கு, தேர்தல் பிரசாரத்தில் சூடேற்றும் விஷயமாக அமையும்.

8. வி.ஐ.பி. தொகுதி: மேலும் பொலிவு பெறுமா குடந்தைத் தொகுதி? – திமுகவின் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கோ.சி. மணியை மூன்று முறை தேர்ந்தெடுத்த தொகுதி கும்பகோணம். இதில் இரு முறை திமுக அரசில் அமைச்சர் பொறுப்புகளையும் வகித்தார். அதிமுக கூட்டணி அலை வீசிய 2001-ம் ஆண்டு தேர்தலிலும் 6,581 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் கோ.சி. மணி.

9. நெல்லை: பூர்த்தி ஆகாத தேவைகள் அதிகம்

10. கோவை: கூட்டணியைவிட பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம்? – கடந்த தேர்தலில், மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் அதிமுக-9, காங்கிரஸ்-4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -1 என அனைத்துத் தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வென்றது.

கோவை மாவட்டம் அதிமுக கோட்டை என வர்ணிக்கப்படுவது.

குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின் கோவை, திருப்பூர், உடுமலை பகுதிகளில் பாரதீய ஜனதா செல்வாக்கு அதிகரித்தது போல் இருந்தாலும், திமுக, அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பின் பாஜகவுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை.

கோவை கிழக்கு, கோவை மேற்கு, தொண்டாமுத்தூர், வால்பாறை ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. வாசன், இளங்கோவன் ஆகியோருக்கு தனித்தனி கோஷ்டிகளும் உண்டு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் சிங்காநல்லூர் தொகுதி உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாநகர் மற்றும் திருப்பூரில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது. மதிமுகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் நிரந்தர வாக்குகள் இருந்தாலும், கூட்டணியை நம்பித்தான் களம் இறங்க முடியும்.

11. வி.ஐ.பி. தொகுதி: முன்னாள் முதல்வரின் தொகுதி – முன்னாள் முதல்வர் தொகுதி என்ற பட்டியலில் இடம் பெறும் பெரியகுளம் தொகுதியில் 1967, 1971 1989, 1996 தேர்தலில் திமுகவும், 1977, 1980, 1984, 1991, தேர்தலில் அதிமுகவும் வென்றன.

2001-ல் நடந்த தேர்தலில் அப்போது பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

12. வி.ஐ.பி. தொகுதி: வேலூர் மாவட்ட தொகுதிகளில் “துரை”காட்பாடியில் இருந்து திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக தலைமை நிலைய முதன்மை செயலருமான துரைமுருகன் 6 தேர்தல்களில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார். குடியாத்தம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு 1962-ல் காட்பாடி தொகுதி உதயமானது. 1980 தேர்தலைத் தவிர 9 தேர்தல்களில் திமுக வேட்பாளர்களே இத்தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர்.

1971-ல் முதன்முறையாக இத்தொகுதியில் துரைமுருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்து 77 மற்றும் 80-ல் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 84 மற்றும் 91-ல் நடந்த தேர்தல்களில் தோல்வியை தழுவிய அவர் 71, 89, 96 மற்றும் 2001 தேர்தல்களில் இதே தொகுதியில் இருந்து சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 89 மற்றும் 96-ல் திமுக அரசில் அவர் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆனார்.

Dianamani.com – Election Coverage

1. வி.ஐ.பி. தொகுதி: ஆயிரம் விளக்கும், இளைய சூரியனும் – கடந்த 50 ஆண்டுகளில் 3 தேர்தல்களைத் தவிர, 8 தேர்தல்களில் தி.மு.க.வின் எஃகுக் கோட்டையாக ஆயிரம் விளக்கு திகழ்ந்துள்ளது. 1957-ல் ஏ.வி.பி. ஆசைத்தம்பி, 1962, 1967, 1971 ஆகிய 3 தேர்தல்களில் கே.ஏ. மதியழகன், 1977-ல் எஸ்.ஜே. சாதிக்பாட்சா, 1989, 1996, 2001 ஆகிய 3 தேர்தல்களில் ஸ்டாலின் ஆகிய தி.மு.க. மூத்த தலைவர்கள் வென்ற தொகுதி.

1980, 1984, 1991 ஆகிய 3 தேர்தல்களில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமி (அ.தி.மு.க.) வென்றார்.

2. தமிழகத்தின் அரசியல் அளவுகோல் ராமநாதபுரம் – ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, திருவாடானை ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பரமக்குடி தொகுதி மட்டும் தனித்தொகுதி.

ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே பெரும்பாலும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்படுகிறது. அது கடந்த தேர்தல்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் போட்டியிட தற்போது எம்எல்ஏ ஆக உள்ள அ.அன்வர்ராஜா, கட்சியின் மாவட்டச் செயலராக உள்ள செ.முருகேசன், முன்னாள் மாவட்டச் செயலர் ஜி.முனியசாமி, ராமநாதபுரம் ஒன்றிய குழுத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட மீனவர் அணி செயலரும், மண்டபம் சிறப்பு சிற்றூராட்சித் தலைவருமான தங்கமரைக்காயர், அரசு ஊழியர் எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் மனு செய்துள்ளனர்.

இத்தொகுதியில் அகமுடையார் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.

திமுக சார்பில் போட்டியிட சேதுபொறியியல் கல்லூரியின் நிறுவனரும், தொழிலதிபருமான எஸ்.முகமது ஜலீல், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், முன்னாள் எம்.பி. காதர், ராமநாதபுரம் நகர் திமுக செயலர் ஆர்.ஜி.ரெத்தினம், மண்டபம் ஒன்றிய செயலாளர் வி.சி.கனகு உள்ளிட்ட ஏராளமானோர் மனு செய்துள்ளனர்.

பரமக்குடி : கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.வி.ஆர்.ராம்பிரபு அவரை எதிர்த்து திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் செல்லையாவைவிட கூடுதலாக 5 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் ஆதிதிராவிட சமுதாயத்தவரும் அவர்களை அடுத்து முக்குலத்தோர், யாதவர், செட்டியார் சமுதாயத்தினர் அதிக அளவில் உள்ளனர்.

முதுகுளத்தூர் : கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பதினெட்டாம்படியான் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் தொழிலதிபர் மலேசியா பாண்டியனை (மக்கள் தமிழ்தேசம்) விட 1500-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி இருமுறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக, திமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. 1962, 1980, 1984-ம் ஆண்டுகளில் பார்வார்டு பிளாக் வெற்றி பெற்றுள்ளது.

கடலாடி : கீழக்கரையை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் கீழக்கரை முஸ்லிம்களின் ஆதரவை பெறுபவர்களே வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. இத்தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோ.பாலகிருஷ்ணன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மாவட்ட திமுக செயலர் சுப. தங்கவேலனைவிட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

திருவாடானை : இத்தொகுதியில் கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கே.ஒ.ஆர்.ராமசாமி அவரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜோன்ரூசோ, திமுக கூட்டணி சார்பில் குட்லக் ராஜேந்திரன் (பாஜக) ஆகியோரைவிட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

3. பனைத் தொழிலாளர்களின் ஆதரவு யாருக்கு? – கடலாடி தொகுதியில் 36,000 வாக்காளர்களும், ராமநாதபுரம் தொகுதியில் 32,000 வாக்காளர்களும், பரமக்குடி தொகுதியில் 14,000 வாக்காளர்களும், திருவாடானை தொகுதியில் 18,000 வாக்காளர்களும் முதுகுளத்தூர் தொகுதியில் 14,000 வாக்காளர்களும் பனைத் தொழில் செய்பவர்களாகவும், அவர்களை சார்ந்து தொழில் செய்யும் நாடார் சமுதாயத்தவராகவும் உள்ளனர்.

4. அரசியல் மாற்றத்திற்கு ஏற்ப மாறும் தூத்துக்குடி மாவட்டம் : தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், ஓட்டப்பிடாரம் மட்டும் தனித் தொகுதி.

கோவில்பட்டி தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகள் எதுவும் குறிப்பிட்ட ஒரு கட்சியினர் தொடர்ந்து வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

தாமிரபரணியில் இருந்து சுமார் 100 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது. இதைத் தடுக்க தடுப்பணைகள் கட்டி, கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கோரிக்கை. மேலும், ஸ்ரீவைகுண்டம், மருதூர் அணைகளை தூர்வாரி, அமலைச் செடிகள், காட்டாமணக்குச் செடிகளை அகற்ற வேண்டும் என்பதும் விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.

கோவில்பட்டி தொகுதியில் ஏராளமான தீப்பெட்டி தொழில்சாலைகள் உள்ளன. இயந்திரமயமாக்கல் காரணமாக கையால் செய்யப்படும் தீப்பெட்டித் தொழில் நலிவடைந்து வருகிறது.

பழையகாயலில் ஜிர்கோனியம் தயாரிக்கும் தொழில்சாலை அமைப்பதற்கான பணிகளை உடனே துவக்க வேண்டும். சாத்தான்குளம் பகுதியில் டைட்டானியம் தொழில்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் கோரிக்கைகள்.

5. வி.ஐ.பி. தொகுதி: “தோழர்’களின் கோட்டையாக திகழும் திருவட்டார் : கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் சங்கத்தினர் நிறைந்த மலையோர எல்லைத் தொகுதி திருவட்டார். இத்தொகுதியில் 4-வது முறையாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜே. ஹேமச்சந்திரன். திருவட்டார் தொகுதியில் குலசேகரம், அருமனை, திருவட்டார் ஆகியவை முக்கியமான இடங்கள். இங்கு ரப்பர் தொழிலாளர்கள் அதிகமுள்ளனர்.