Daily Archives: மார்ச் 12, 2006

Women Vote Power <> Women Representation in Assembly

தினமணி நாளிதழில் இருந்து:

1. தேர்தலில் வெளிப்படுமா மகளிர் சக்திவீர.ஜீவா பிரபாகரன்

தமிழகத்தில் தேர்தலுக்குத் தேர்தல் மகளிர் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சட்டப்பேரவையில் மகளிர் எண்ணிக்கை இதுவரை 14 சதவீதத்தைத் தாண்டவில்லை.

நமது நாட்டில் நாடாளுமன்றத்தில் மகளிர் பங்கேற்பு பத்து சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தில் 1991-ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே, சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. அதிலும் பிற்பட்ட, ஆதிதிராவிட வகுப்புப் பெண்களின் அரசியல் பங்கேற்பு மிக, மிகக் குறைவாக உள்ளது.

பெண் உறுப்பினர்களையே தேர்வு செய்யாத மாவட்டங்கள்: நீலகிரி, பெரம்பலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் கடந்த 5 சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரு பெண் உறுப்பினரைக் கூட தேர்வு செய்யவில்லை.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் போதிய பெண் உறுப்பினர்களை வேட்பாளர்களாக அறிவிக்காததும் மிக முக்கியமான காரணம்.

இம்முறை நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மட்டுமே தேர்தலில் மகளிருக்கு 33 சத இட ஒதுக்கீடு அளிப்போம் என அறிவித்துள்ளது. இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்விஷயத்தில் மௌனமாக உள்ளன.

2. இதுவரை….10% கூட பெண்களுக்கு வாய்ப்பில்லை

தேர்தகளில் மொத்த வேட்பாளர்களில் பெண்கள் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்துள்ளனர். மொத்த உள்ள 234 இடங்களில் ஒரே ஒரு தேர்தலில்தான் 10 சதவீதம் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 1996-ம் ஆண்டில் மொத்தம் போட்டியிட்ட 5 ஆயிரத்து 17 வேட்பாளர்களில் 156 பேர் மட்டுமே பெண்கள். பெண்களுக்கு 10 சதவீதம் வாய்ப்புக் கொடுத்திருந்தால் கூட 500 பெண் வேட்பாளர்கள் இருந்திருக்க வேண்டும்.

Election Posters – Dinamani

சுவரொட்டி #1: வைகோ மண்ணின் குரல் (கலிங்கத்துப்பட்டியில் இருந்து)

சுவரொட்டி #2: சின்ன கலைஞர் (சைதாப்பேட்டையில் இருந்து)

TN Assembly Alliance History

இன்றைய தினமலரில் இருந்து…

Dinamalar E-Paper March 13, 2006

21 Grams

Tamiloviam:

திரைப்படத்தில் இருந்து சில வசனங்கள்:

 • உண்மையைத் தேடி கண்டுபிடிப்பவன், அதற்கான தண்டனையைப் பெறத்தக்கவன் தான்! (Whoever looks for the truth deserves punishment for finding it.)
 • உன்னையும் என்னையும் இணைக்க உலகம் உருண்டது :: Eugenio Montejo

  உன்னையும் என்னையும் இணைக்க உலகம் உருண்டது
  தனக்குள்ளும் நமக்குள்ளும் சுழல்வது
  மன்றத்தில் செதுக்கியுள்ளது போல்
  கனவாக இறுதியில் நம்முடன் இணைகிறது

  The Earth Turned to Bring Us Closer ::
  Peter Boyle (Trans.)

  The earth turned to bring us closer,
  it spun on itself and within us,
  and finally joined us together in this dream
  as written in the Symposium.
  Nights passed by, snowfalls and solstices;
  time passed in minutes and millennia.
  An ox cart that was on its way to Nineveh
  arrived in Nebraska.
  A rooster was singing some distance from the world,
  in one of the thousand pre–lives of our fathers.
  The earth was spinning with its music
  carrying us on board;
  it didn’t stop turning a single moment
  as if so much love, so much that’s miraculous
  was only an adagio written long ago
  in the Symposium’s score.


  அமோரஸ் பெரோஸை (Amores Perros) இயக்கிய அலெக்ஸாண்ட்ரோ கொன்ஸாலஸின் (Alejandro Gonzநூlez Iண்நூrritu) படம் என்பதால் முறுக்குப்பிழி நடைக்கும் சிதறலானத் திரைக்கதைக்கும் தயாராகவேப் பார்க்க ஆரம்பிக்கிறேன். ‘மெமண்டோ’ கொடுத்த கிறிஸ்டோபர் நோலனையும், க்வெண்டின் டாரண்டினோவையும் நினைத்துக் கொள்கிறேன்.

  முந்தையப் படத்தைப் போலவே திரைப்படத்தில் விபத்து உண்டு. விபத்தினால் மூன்று பேர்களின் வாழ்வு பாதிக்கிறது. மூவருக்கும் விதவிதமான வண்ணக்கலவைகள் குறியீடு கண்ணை உறுத்தாமல் கிடைக்கிறது. ஒற்றுமைகள் அவ்வளவே.

  சாலை விபத்து ஒன்றில் கணவனையும் இரு மகள்களையும் இழக்கிறாள். சாகும் தருவாயில் மாற்று இதயத்துக்காக நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவன் இரண்டாவது கதாபாத்திரம். விபத்தை செய்து குற்றவுணர்ச்சியில் துடிப்பவர் மூன்றாமவர்.

  மூன்று பேரின் குணாதிசயங்களையும் அவர்களின் உறவுகளையும் நட்புகளையும் அன்றாட சிக்கல்களையும் நேர்க்கோட்டில் சொல்லாவிட்டாலும், கோர்வையாக நிரப்பிக் கொண்டு வருகிறார்கள். எடிட்டிங், ஒளிப்பதிவு, திரைக்கதை மூன்றுமே, நம்மை இயல்பாக படத்தில் உள்ளிழுத்து ஆட்கொள்ள, இயக்குநருக்கு வாகாக அமைந்திருக்கிறது.

  எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்னும் முகாரியான ஆரம்பம்.

  உயிருக்கு ஊசலாடும் சான் பென் (Sean Penn). திருந்தி நேர்வழியில் செல்ல நினைக்கும் முன்னாள் சிறைவாசி பெனிசியோ டெல் டோரோ (Benicio Del Toro). குடும்பமே விபத்தில் இழந்தபிறகு, கணவனின் கடைசி நிமிடங்களில் இதயத்தை தானமாக அளிக்கும் நவோமி வாட்ஸ் (Naomi Watts).

  சஸ்பென்ஸ் த்ரில்லரை பார்ப்பது போல் படம் முன்னேறுகிறது. யார் இறந்தார்கள்? எவரைக் கொலை செய்ய சான் பென் திட்டமிடுகிறான்? தனிமையில் வாடி, போதை உட்கொள்ளும் நவோமி எப்படி மகிழ்ச்சியாக இருந்தாள்?

  துப்பறியும் கதையில், உளவியல் ஆராய்ச்சி நடத்தும், முடிச்சுகளை உங்களுக்குள்ளேயே அவிழ்க்க சொல்லும் திரைக்கதை.

  கதாநாயகர்கள் மூவருமே பழக்கத்திற்கு அடிமையானவர்கள். சிகரெட் பிடித்தால் கொஞ்சநஞ்ச இதயத்துடிப்பும் நின்றுவிடும் என்னும்போதும் நிறுத்த முடியாதவன் சான் பென். போதை மருந்தை விட்டு விலகி வந்திருந்தாலும், குழந்தைகளின் பிரிவுத்துயரினால், மீண்டும் பழைய சிநேகங்களை அழைத்து, போதைக்குள்ளாகும் நவோமி வாட்ஸ். குடியை விட்டு கடவுளைக் கண்டெடுத்து, மீண்டும் குடிக்க ஆரம்பிக்கும் பெனிசியோ டெல்டோரோ.

  தெய்வம் என்பதும், மழலைகளின் அன்பு என்பதும், வாழ்க்கை என்பதும் போதைதானோ என்று மனதிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

  கதாபாத்திரங்கள் அனைத்துமே நம்பக்கூடியதாக உலாவுகிறார்கள். விபத்து நடத்திய கணவனிடம் ‘ஒப்புக் கொள்ளாதே’ என்று கதறி, மீறி போலீஸிடம் சரணடைந்தவனை சாதுரியமான வக்கீல் கொண்டு மீட்டெடுக்கும் பெனிசியோ டெல் டோரோவின் மனைவி; முன்னாள் காதலன் சான் பென், உயிருக்குப் போராடுகிறான் என்பதை அறிந்ததும் அவனுக்கு சேவை செய்யத் திரும்பும் பிரிட்டிஷ் காதலி; மகளின் எல்லா உறவுகளும் விபத்தில் காணாமல் போன பின், விட்டேத்தியாக நடந்ததையே எண்ணிப் புழுங்காமல், வாழ்க்கையின் அடுத்த அடிகளை நோக்குமாறு சொல்லும் அப்பா; விபத்தை நிகழ்த்தியவனைக் கொல்லத் துடிக்கும் நவோமி வாட்ஸ்; இதயம் கொடுத்தவளைக் கண்டு கொள்ளத் துடிக்கும் சான் பென்…

  கழிவிறக்கமா, பச்சாதபமா, ஆதுரமா, இயலாமையா, விதி வசமா, சுய மீட்பா, கடமையா, இறை நம்பிக்கையா… பல தேடல்களை முன்னிறுத்துகிறார்.

  மரணிக்கும் ஒவ்வொருவரின் எடையும் 21 கிராம் குறைவதாக டங்கன் மெக்டூகல் (Dr. Duncan MacDougall) ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடித்திருக்கிறார். எத்தனை முறை நம்முடைய ஆன்மா இறக்கிறது என்பதை நீங்கள் மட்டுமே கணிக்க முடியும்.

  நமக்கு எத்தனை உயிர்கள் இருக்கிறது? எத்தனை முறை இறக்கிறோம்? நாம் இறக்கும் தருணத்தில் இருப்பத்தியொன்று கிராம்களை, நம் உடம்பு இழப்பதாக சொல்கிறார்கள். துல்லியமாக 21 கிராம்கள். அந்த 21 கிராம்களுக்குள் எதை அடைக்க முடியும்? அந்த எடை நம்மை விட்டு செல்வதால், எதனை இழக்கிறோம்? அதனால் என்ன கெட்டுப் போகிறது? எதை அடைகிறோம்?


  | |

 • Vote Percentage Calculations

  சின்னக்குத்தூசி பக்கம் :: 2006ல் யாருக்கு வெற்றி? – விகடன்.காம்

  2006 தேர்தல் நடைபெற பத்து மாதங்கள் இருக்கும்போது எழுதப்பட்ட கட்டுரை. இன்றைய நிலையில்:

  திமுக கூட்டணி: 51.6 – விஜயகாந்த் பாசக்கிளிகள்
  அதிமுக கூட்டணி: 35.6 + விடுதலை சிறுத்தைகள்

  1. 2004 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பி.ஜே.பி.யும் சேர்ந்து வாங்கிய வாக்குகளின் மொத்த சதவீதம் 34.91 % ஆகும்

  2. இதில் அ.தி.மு.க. மட்டுமே வாங்கிய வாக்குகள் 29.8 %

  3. தி.மு.க. கூட்டணியில்

  தி.மு.க. 24.6 %,
  காங்கிரஸ் 14.4 %
  பா.ம.க. 6.7% ,

  ம.தி.மு.க. 5.8 %

  சி.பி.ஐ. 3 %
  சி.பி.எம். 2.9%

  பா.ம.க. தவிர்த்த தி.மு.க. கூட்டணியின் பலம் 50.7 சதவிகிதமாக இருக்கும்.

  தனித்தே போட்டியிடுவோம் என்று ஓங்கியடித்து சொல்லிக் கொண்டிருக்கிற பி.ஜே.பி. கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிட்டாலும்.

  அ.தி.மு.க. 29.8%
  பி.ஜே.பி. 5.1%

  ஆக மொத்தம் 41.6 சதவீதம்.

  விஜயகாந்த் தொடங்கும் புதிய கட்சியால் அ.தி.மு.க.வுக்கு லாபமா? தி.மு.க.வுக்கு லாபமா? யூகங்களும், கணிப்புகளும் அவரவர் ஆசைப்படி வந்து கொண்டேதானிருக்கும். அதனை யாரால் தடுக்க இயலும்?

  எனது யூகம்: மூன்றாவது அணி ஆட்சி. ஆறு மாதம் வைக்கோ; ஆறு மாதம் பா.ம.க. காங்கிரஸ் ஆதரவு. (தமிழக காங்கிரஸின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருமகன் அன்புமணி ராமதாஸ். மத்தியில் மாறன் மந்திரியாக தொடரும் வரை திமுக-வும் இந்த ஏற்பாடைக் கண்டு கொள்ளாது.) வெளியில் இருந்து திமுக ஆதரவு.

  பா.ம.க. – 25
  ம.தி.மு.க. – 25
  காங்கிரஸ் – 35
  வி.சி. + கம்யூ. + இதர கட்சிகள் – 30
  மைனாரிட்டி ஆட்சி – 115

  அதிமுக – 85~90
  திமுக – 30~35

  மூன்றாவது அணி மாதிரி… இது ஒரு கனவு.

  Rajni Fans’ Coimbatore Posters – Dhina Boomi

  கோவையில் ராமதாசுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர் :: தினபூமி

  கோவையில் பா.ம.க.விற்கு எதிராக ரஜினி ரசிகர்கள் ஒரு சுவரொட்டி ஒட்டி உள்ளார்கள். அதில்

  “மக்களை சந்திக்காமல் மத்திய மந்திரி, பா.ம.க.வே மக்களை மறந்த உனக்கு மக்கள் சபையில் இடம் எதற்கு”

  கோவை அனைத்து ரஜினி மன்றங்கள், கோவை என குறிப்பிடப்பட்டுள்ளது.


  கோவையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் இன்னொரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில்

  “கலைஞரே!
  ராமதாசால் நீங்கள் இழந்தது…,
  உங்கள் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,
  தங்கபேனா வழங்கிய விஜயகாந்த்,
  தொண்டரணி அமைத்து உங்கள் வழி காத்த வைகோ,

  2006 ல் உங்களுக்கு கிடைக்க இருந்த முதல்வர் பதவி!

  (நாமம் என்பது போல் அச்சடிக்கப்பட்டுள்ளது) – பி.எச்.முபாரக், மாவட்ட துணை செயலாளர் அபு, மாவட்ட பிரதிநிதி எஸ்.எம்.எஸ்.எஸ்.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ரஜினிதுரை மற்றும் கோட்டை அனைத்து ரஜினி மன்றங்கள், கோவை என அதில் அச்சிடப்பட்டுள்ளது.

  Tamil Poems by Women Writers

  1. இரண்டாம் தளத்தில் தள மேற்பார்வை – ப கல்பனா

  பச்சைப் பசேலெனக்
  கண்ணை நிறைக்கிறது
  அகண்ட அரச மரம்

  இளவேனிற்காலக்குயில் உள்ளிருக்கலாம்

  வேப்பங்கொழுந்தும் மாந்தளிரும்
  சன்னலைத் தழுவி அசைகின்றன

  நான்கைந்து காகங்களைத் தவிர
  வானத்தில் இயக்கமில்லை

  குனிந்த தலை நிமிராமல்
  எழுதுகின்றனர் தேர்வு
  நாளை தலைநிமிர்ந்து நடக்க

  என்றோ வாங்கிய சாக்லெட்
  ஐந்து நிமிட ஆசுவாசம்

  நான்காம் மாடி பால்கனியிலிருந்து
  எட்டிப் பார்க்கிறது
  ஐந்து வயது தளிர்
  கோடை விடுமுறை போலும்

  மேலும்
  மின்விசிறி நாற்காலி மேசை தாள் பேனா…
  இன்னும் வரிசையாய்
  விவரிக்கத் தொடங்குமுன்
  முடித்துவிடுங்கள் தேர்வை.

  ஐந்து மணிக்குப் போக வேண்டும்
  குழந்தையைப் பார்க்க.


  2. இருக்கிறேன் – சே பிருந்தா

  பொசுக்கும் வெயிலில்
  மரங்களேதுமற்ற நகரச் சாலைகளில்
  வழி தவறிய முதியவரென –

  அன்புமிக்கவரிடமிருந்து பெற்ற
  சாபமென –

  கடைசித்துளி
  விஷத்திற்கப்புறமான
  வாழும் வேட்கையென –

  இலையுதிர்கால மரத்தினடியில்
  வளரும் சிறு புல்லென –

  உன் கடிதங்களின்றி.


  3. பனிக்குடமும் சில பாம்புகளும் – சுகிர்தாராணி

  புராதனமான என் பனிக்குடத்தில்
  பாம்புகள் சில நீந்தி மகிழ்கின்றன
  பெருத்த கர்ப்பகாலம் தீர்வதற்குள்
  நாற்புறமும் என்னுடல் வெடிக்கப்
  பிறக்கின்றன பிளந்த வாய்களுடன்.

  அவற்றைப் பழக்குவது
  அவ்வளவு எளிதாக இல்லை.
  சலனங்கள் பூக்காத துவாரங்கள் மறந்து
  படர்ந்தயென் மடியுள் ஒடுங்குகின்றன
  உறங்குவதற்கும் விழிப்பதற்கும்.

  அதனதன் வால்களையே
  விழுங்கிக் கொள்ளும் உணவுப்பழக்கம்
  விசித்திரமாயிருக்கிறது.

  காற்றசையும் ஒலித்தருணத்தில்
  பற்றுக்கொடியின் உயிர்வேட்கையாய்
  நட்ட என் மீதேறி
  விஷத்தை கக்குகின்றன.

  என்னிழல் என்மீது விழும்
  மதியப் பொழுதுகளில்
  நீண்டு கிடக்கிறேன்
  வறட்சியை ருசித்த துக்கஆறு போல.

  பாம்புகளுடன் வாழ்வது
  சிரமமாயிருக்கிறது
  இல்லாமல் வாழ்வதும்.


  4. படையல் – உமா மகேஸ்வரி

  வீடு முழுக்க அப்பியிருக்கும்
  இழப்பின் உலர்ந்த துயரம்.
  பொருளற்ற சொற்கள்
  உருள்கின்றன நிற்க மாட்டாமல்.
  மௌனமாய்க் கலங்கும்
  யாரும் யாருடனும் இல்லை.
  சமாதானங்கள்
  ஜலதாரையில் வழிகின்றன கறுப்பாக.
  மகள் இறந்த முப்பதாம் நாளில்
  தலைக்குச் சாயமிட்டுக் கொண்டிருக்கும் அப்பாவைக்
  கல்லெறிந்து கொல்லவேண்டும் என்றிருக்கிறது.
  உனக்குப் பிடிக்குமேயென்று
  ஜாதிமல்லியை முழம் போட்டு வாங்கும் அம்மா.
  உனக்குப் பிடிக்குமே, உனக்குப் பிடிக்குமே…
  ஊதா நிறப் பட்டு;
  பருப்பு ரசம்; பட்டாணி பொரியல்;
  பால் கொழுக்கட்டை;
  கப்பங்கிழங்கு; கருவாட்டுக் குழம்பு;
  இலையிலேறுகிறது ஒவ்வொன்றாகப்
  படையலென்று.
  பூச்சரத்தைக் கோர்த்து
  மாலையிட முனையும்
  அம்மாவைத் தடுத்து,
  திருப்பி வைக்கிறேன் உன் நிழற்படத்தை
  அது நீயில்லையென்று


  5. அறைகளாம் ஆன வீடு – குட்டி ரேவதி

  அந்த அறை பெண்களுக்கானது
  ஆளுயரக் கண்ணாடிகளும் எப்பொழுதும்
  வீசும் மதுவின் போதையும்;
  உறக்கத்திலாழ்ந்து கனவுகளுக்கான
  நுழைவாயிலைக் கண்டடைவதும்,
  அங்கு வரும் அதிசயப்பிராணிகளை
  வரைந்து பிரதியெடுப்பதும்
  மற்றபடி மந்திரங்கள் நிகழ்த்துதல்
  அவர் தொழில்

  அடுத்த அறை யானைகளுக்கானது
  நினைத்துப் பாருங்கள்
  உடலைத் திருப்ப முடியாமல்
  சுவரை உரசும் முதுகும் தலையும்
  மதம் பெருகி நிற்கின்றன
  வன்மத்தின் விதை ஊன்றப்பட்ட தரையும்
  அது வளர்ந்து செழிக்கப்போதாத
  உத்திரமும்

  பக்கவாட்டில் இருக்கும் அறை
  குழந்தைகளுக்கானது ஆகவேதான்
  நீங்கள் பறவைகளின்
  இறக்கை படபடப்பைக் கேட்க முடிகிறது
  கண்ணாடியைக் கண்டு மிரளும் அவர்கள் கையில்
  கத்திகள் பழக்கப்படுகின்றன

  முன்புறம் இருக்கும் பெரிய அறை
  ஆண்களுக்கானது
  குறட்டை ஒலிகளும் பேதலித்த வார்த்தைகளும்
  நீங்கள் நுழையவே முடியாத
  அவர்களும் வெளியேறவே விரும்பாத
  இரும்புச்சுவர்கள்
  காலத்தை வழிமறிக்கும் கற்களைத்
  தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்


  | |