தமிழ்நாடு அரசு திரைப் பட விருதுகளையும், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழில் நுட்ப பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளையும் தேர்வு செய்ய புதிய தேர்வுக்குழு ஒன்றை இன்று அமைத்து முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் இடம் பிடித்த நடிகர் தியாகுவுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்ந்தெடுத்து வெகு சில படங்களில் மட்டும் தோன்றுபவர். மேடை கிடைத்தபோதெல்லாம் விடாமல் பேசுபவர். சிந்திக்க வைத்து பார்வையாளர்களைப் புண்படுத்தாமல், சிரிக்கவைத்து நோகடிக்காமல், கண்களை மட்டும் உருட்டுபவர். சாமுராய் படத்தில் விக்ரமின் பெயர் தியாகு. ‘அரங்கேற்றம்’ படத்தில் கமலின் பெயர் தியாகு. அவள் அப்படித்தானில் ரஜினி கதாபாத்திரத்திற்கும் தியாகு!
பொருத்தமான நபரைத் தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தி, விருதுக்கு உரியவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பைக் கொடுத்த கலைஞருக்கும்;
அடைமொழி கொள்ளா இளவல், திமுக ஒலிபெருக்கியெல்லாம் தித்திக்கும் தகதக தீப்பொறிகளை நிறைத்த தியாகுவிற்கும் வாழ்த்துக்கள்.
மாலைமலர் செய்தி: Tamil Nadu Government’s Movie Award Committee nominated « Tamil News
Tamil Movies | Awards | Selection Committee | Thyagu | Prizes | DMK








![BMDM 0007 006 | Tv 48004 Дружба/Druzhba [BG] - Панчево/Pančevo [SRB] | Чифлик/Čiflik [SRB] BMDM 0007 006 | Tv 48004 Дружба/Druzhba [BG] - Панчево/Pančevo [SRB] | Чифлик/Čiflik [SRB]](https://live.staticflickr.com/65535/55654903697_8c2e99e8f7_s.jpg)


வெளங்கிரும்…
சரி தியாகு இல்லாதப்பயும் அருணாச்சலத்துக்கு விருது கொடுத்தவுகதானே… என்ன பெரிசா மாத்தம் வந்துறப் போவுது. அங்க தேசிய விருதே நட்டுக்கிட்டு நிக்குதாம்….
ரத்தக் கண்ணீர்ல நடிகவேள்கிட்ட ஒருத்தர் சொல்லுவாரு… “ராவுத்தரே கொக்காப் பறக்குறாராம், குதுர கோதும ரொட்டி கேக்குதாமின்னு” நல்ல சினிமா, நல்ல விருதெல்லாம் தமிழனுக்கு எதுக்குய்யா???
//அடைமொழி கொள்ளா இளவல், திமுக ஒலிபெருக்கியெல்லாம் தித்திக்கும் தகதக தீப்பொறிகளை நிறைத்த தியாகுவிற்கும் வாழ்த்துக்கள்.//
பாபா, மத்த குவாலிபிகேஷனை எல்லாம் விடுங்க. முக்கியமானது இங்க இருக்கே. அப்புறம் என்ன? அர்த்த ராத்திரியில் குடை பிடிக்க வேண்டியதுதானே..
@பிரதீப்
—தியாகு இல்லாதப்பயும் அருணாச்சலத்துக்கு விருது கொடுத்தவுகதானே… —
ஓ… இந்த மாதிரி கமிட்டி அமைத்தாலும், ஆட்சியாளருக்கு நெருக்கமானவருக்கு விருது; அமைக்காவிட்டாலும், பிடித்தவருக்குத்தான் விருது என்று நடுநிலையாக இருக்கிறார்கள் ; )
—நல்ல சினிமா, நல்ல விருதெல்லாம் தமிழனுக்கு —
மணி ரத்னம் ஹிந்திக்குப் போன காரணத்தை சொல்றீங்களா : )
@இ.கொ.
—அர்த்த ராத்திரியில் குடை பிடிக்க வேண்டியதுதானே..—
The higher the ape goes, the more he shows his tail.
simply super. from fun tamil movie quiz.