தென்றல் (பொருளாதாரம் | அமெரிக்க நிதிநிலை: பொக்கீடு பற்றாக்குறை, டாலர் மதிப்பு | பங்கு சந்தை – வருமான வரி) பதிலளித்ததைத் தொடர்ந்து இன்னொரு சிறப்பு விருந்தினர்: $ என்றவுடன் நினைவுக்கு வரும் செல்வன்.
1. முதலாளித்துவம் பரப்பிய அமெரிக்கா சோஷலிஸம் பேசுகிறதா? முதலியக் கொள்கை எப்படி இருக்கிறது? பூட்ட கேஸா அல்லது தவறன மருந்து உட்கொண்ட நோயாளியா?
சோஷலிசம் என்றால் தனியார் சொத்துடமைக்கு அனுமதி மறுப்பு, வணிகம் செய்யும் உரிமை முழுவதும் அரசுக்கே சொந்தம் என்று பொருள். அந்த நிலைக்கு அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் எந்த நாடுமே இனிபோகாது. காம்யூனிசம் செத்தது செத்ததுதான். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீளப்போவதில்லை..
முதலிய கொள்கை எனப்படும் சுதந்திர பொருளாதார கொள்கை மனிதனுக்கு என்று ஆசை மனதில் தோன்றியதோ அன்றே தோன்றிவிட்டது. கொலம்பசை கப்பலில் ஏறி இந்தியாவை தேட வைத்ததும், ஆம்ஸ்ட்ராங்கை நிலவுக்கு அனுப்பியதும், எட்ட முடியாத பனிமலைகளை மனிதனை ஏறிக்கடக்க வைப்பதும் அதே ஆசைதான்.
ஆசையும் சுயநலமும் இல்லையென்றால் மனித இனமே கிடையாது.மீண்டும் அவன் மிருகநிலைக்கு தாழவேண்டியதுதான்.
- டாட்டாவின் சுயநலம் லட்சம் ரூபாய் காராக மலர்ந்தது.
- நாராயணமூர்த்தியின் சுயநலம் இந்தியாவை டிஜிட்டல் யுகத்துக்கு கொண்டு சென்றது.
- லாரி பேஜின் சுயநலம் கணிணி இருப்பதே எழுத்தாளனாவதற்கு தகுதி என்ற நிலையை தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொண்டுவந்தது.
தனிமனிதனின் சுயநலத்தை பொதுநலத்துக்கு பயன்படுத்துவதே ஒரு நல்ல அரசின் கடமை.
2. வருமான வரி: தனிநபர் வரியைக் குறைப்பது என்பது கேபிடலிசத்தின் அடிநாதம் அல்லவா? அதை ஏன் ஒபாமா எதிர்க்கிறார்? உழைத்து முன்னேறியவர் தனக்குக் கிடைக்கும் செல்வத்தை மறுபடியும் சந்தையிலேயே முதலீடு செய்து புத்தம்புதிய வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்கும் மகயினின் ‘வரிக்குறைப்பு கொள்கை’ ஒபாமாவை விட சிறந்ததா?
ஒபாமாவின் வருமான வரிக்கொள்கை ஓட்டுக்களை பெற்றுத்தருமே அன்றி வேலைகளை பெற்றுத்தராது. கம்பனிகளுக்கு வருமானவரியை அதிகரித்தால் அவை வேறு தேசத்துக்கு போய்விடும். இது எல்லைகள் இல்லாத உலகம்.
வருமானவரி விலக்கு கிடைக்கும் என்றதும்
- ஐ.சி.சி தான் பிறந்த லண்டனை விட்டுவிட்டு துபாய்க்கு ஜாகையை மாற்றிவிட்டது.
- டாட்டா நானோவை மேற்குவங்கம் துரத்தினால் குஜராத் கைநீட்டி வரவேற்கிறது.
ஒபாமாவின் கொள்ககளால் பீதியடைந்த வால்மார்ட் ஒபாமாவுக்கு எதிராக தனது தொழ்லாளிகளிடம் பிரச்சாரம் செய்கிறது. அமெரிக்க தொழில்துறை முழுவதும் ஒபாமாவுக்கு எதிராக மெக்கெய்னுக்கு நிதியுதவி அளிக்கின்றது. தொழிலகங்கள் இல்லாவிட்டால் தொழிலாளியே கிடையாது என்பதை டெமக்ராட்க் கட்சியினர் புரிந்துகொள்வது நல்லது
பிங்குபாக்: வர்த்தகம், வன்முறை, வாசிப்பு, வருமானம் - செல்வன் « US President 08