அமெரிக்கர்களுக்கு வருமான வரி குறைகிறதா என்பது மட்டும்தான் பொருளாதாரக் கொள்கையா என்பது வெங்கட்டின் ஆதங்கம். இதை உறுதிப்படுத்துவது போல் ‘நடுத்தர வர்க்கத்தின் வரிச்சுமையைக் குறைப்பேன்‘ என்று ஒபாமாவும், ‘அது மட்டும் போதாது; பெருநிறுவனங்களுக்கும் வரிவிலக்கு தருவேன்!‘ என்று ஜான் மெகயினும் சளைக்காமல் ஆலமரத்தடி பிள்ளையாரான வரியை மட்டுமெ ஒவ்வொரு வரியிலும் சுற்றி சுற்றி வந்து பங்குச்சந்தையான அடிவயிறு பெருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வருகிறார்கள்.
தேர்தலில் தற்போதைக்கு முன்நிலையில் இருக்கும் ஒபாமாவின் வலையகமும் இதை உறுதியாக்குவதாக இரண்டு கிடங்குகளை காட்டுகிறது. சேமிப்புக் கிடங்கின் அடியில் நிறைய சில்லறையும், வரிக் கிடங்கு காலியாகவும் இருந்தது. குறைவாக சேமித்தால் நிறைய வருமான வரி போடும் கொள்கை என்று இதை நான் புரிந்து கொண்டேன்.
இந்த மாதிரி நாணயமான சந்தேகங்களை விளக்க வருகிறார் தென்றல்:
முதலில் டிஸ்கி;
(அமெரிக்காவைப் பொறுத்தவரை) ராமன் ஆண்டா என்ன ..ராவணன் ஆண்டா என்ன கட்சியை சேர்ந்தவன். நம்ம ஊர்லயாவது ஓட்டு போடலாம். இங்க அதுவும் இல்ல! தலைப்பு செய்திகளை படிச்சிட்டு, வெட்டி விவாதங்கள் பண்ணிட்டு, CNN, Fox, Jay Leno, Saturday Night live பார்த்துட்டு சிரிச்சிட்டு போற கோஷ்டியை சேர்ந்தவன்!!
1. பொருளாதாரக் கொள்கை: யாருடையது மேம்பட்டதாக உங்களுக்குத் தோன்றுகிறது? ஏன்? எந்த அம்சங்கள் கவர்ந்தது?
இப்பொழுதய நிலையில், பொருளாதாரக் கொள்கை னா நாலு குருடர்கள் யானையை வர்ணித்த கதைதான் நினைவுக்கு வருது.
‘அந்தளவுக்கு’ விசய ஞானம் இல்லாததால், நமக்கு எந்தளவு இவர்களுடைய திட்டங்கள் நல்லதுனு பார்த்தா….
- வருடத்திற்கு, $250,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு வரியை உயர்த்தப் போவதில்லை.
- $80,000 சம்பாதிக்கும் குடும்பத்திற்கு $1000 வரி விலக்கு
- 10% Morgage interest வரி விலக்கு
- கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு $4000 வரி விலக்கு
- ராணுவச் செலயை குறைப்பதற்கான வழிமுறைகள்
- எல்லாரும் பொதுவா சொல்றது, நாட்டில் தொழில் உற்பத்தியை வளர்க்க பாடு படுவேன்
… இப்படியாக நடுத்தர மக்கள் சிறிது ஆசுவாசப் படுத்திக்கொள்ள உதவும் திட்டங்கள் ஒபாமா தரப்பிடமிருந்து…
மெக்யன் தரப்பிலிருந்து
- வேலை வாய்ப்பை அதிகரிக்க, பெரிய நிர்வாகங்களின் வரி விகிதத்தை 35% லிருந்து 25% ஆக குறைத்தல்
- Single Parentக்கான வரி விலக்கு $3500 லிருந்து $7000 ஆக உயர்த்துதல்
- இணையதளத்திற்கான வரி விலக்கு
- புது கைத்தொலைபேசிக்கான வரிவிலக்கு
- கோடைகால விடுமுறை நாட்களில் பெட்ரோல்/டீசலுக்கான வரி விலக்கு
இதில் எந்தந்த அம்சங்கள் யார் யாருக்கு சிறந்தது…?!!
2. அமெரிக்க நிதிநிலை: இப்பொழுது பங்குச்சந்தை படுத்து இருக்கும் நிலையில் இருந்து நிமிர யார் தேவை? அடுத்த அதிபர் எப்படி செயல்பட்டால் வீழ்ந்த வால்ஸ்ட்ரீட் தலைதூக்கும்?
Posted in ஒபாமா, கருத்து, செவ்வி, பணம், பொது, மெக்கெய்ன்
குறிச்சொல்லிடப்பட்டது Analysis, Answers, உடலநலம், சம்பளம், டாலர், நிதி, பட்ஜெட், பொக்கீடு, பொருளாதாரம், வரி, வருமானம், Bailout, Deflation, Dollar, Dow, Economy, FAQ, Finance, Income, Inflation, Issues, Markets, Questions, Recession, Recovery, Stagflation, Tax, Thendral