1. கலைஞருக்கு போட்ட மாதிரி புஷ் குடும்பத்திற்கும் க்ளின்டன்களுக்கும் family chart போட முடியுமா? (இருவரையும் கோர்த்து விட்டுடாதீங்க 🙂
கலைஞருக்கே நிறைய ஆட்டோ வந்தது. கிளிண்டனுக்கு dotted line relationship போடணும். புஷ் கதை என்னதோ. இரண்டு பேரும் சேந்து வீட்டுக்கு ஆளுக்கு ரெண்டு ஹம்மர் அனுப்பவா.
வேண்டாம் சாமீ. நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. ஆனா Sr. Obama சுவாரசியமான ஆளா இருப்பார் போல.
Political Punch :: Barack Obama’s Branch-y Family Tree
2. ஒபாமாவும் மெகயினும் (ஹில்லரியும்தான்) சேர்ந்து ஏறக்குறைய முக்கால் பில்லியன் டாலர்களை இதுவரை தேர்தல் களத்தில் செலவழித்துள்ளார்கள். இது செஞ்சிலுவை சென்ற வருடம் மீட்புநடவடிக்கைகளில் செலவழித்ததை விட பன்மடங்கு அதிகம்.அமெரிக்காவை கடன் கடலில் இருந்து மீட்பிக்க எவர், எது தேவை?
ஒரு வேட்பாளர் மொத்தமாக எல்லா பணத்தையும் செஞ்சிலுவை சங்கத்துக்கு கொடுத்துவிட்டால் மக்கள் எல்லோரும் புளகாங்கிதப்பட்டு ஓட்டுப்போட்டுவிடுவார்களா?
மாட்டார்கள்.
பொதுமக்களுக்கு தேவை வேடிக்கை. அதைக்காட்ட பணத்தை வாரி இறைத்தே ஆகவேண்டும். இது அரசியல் கட்டாயம். எந்த நாடாக இருந்தாலும் இது மாற வாய்ப்பேயில்லை. அமரிக்காவை கடன் கடலிலிருந்து மீட்க அடிப்படை மாற்றம் தேவை. தனியொரு ஜனாதிபதியோ மத்திய வங்கியோ இதை சாத்தியப்படுத்தவிடமுடியாது
பொருளாதாரத்தின் மிக அடிப்படையான,
- மக்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும், சேமிப்பை அதிகமாக்கவுமான பொருதாளார வழிமுறைகளும்
- உற்பத்தியை பெருக்கவும், இன்னும் குறைந்தவிலையில் உள்நாட்டில் தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளும் தேவை.
இவையிரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து கடனை குறைக்க உதவும்.சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் செய்ய வேண்டியது மிக மிக அதிகம்.
- போரினால் ஏற்பட்ட இழ்ப்புகள்
- திரும்பி வரும் படை வீரர்களுக்கான சேவைகள்
- மருத்துவ காப்பீட்டு திட்டங்கள்
- முதியோர் காப்பீட்டு திட்டங்கள்
- ஒய்வு கால மற்றும் சேம நிதிகளின் ஓட்டைகள்
என்று செலவுகளுக்கான பட்டியல் மிக நீளமாக இருக்கிறது.
எனக்கு தோன்றும் ஒரே பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அமரிக்கா வாலைச்சுருட்டிக்கொண்டு தன் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் மட்டுமே தேறும். இல்லையென்றால் ஆண்டவனே வந்தாலும்…
3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.
– சத்யா
Posted in கருத்து, செவ்வி, பொது, வாக்களிப்பு
குறிச்சொல்லிடப்பட்டது ஒபாமா, சத்யா, செலவு, மெகயின், ஹில்லரி, Bush, Chat, Clinton, Interview, Meet, Obama Sr., op-ed, Questions, Sathya