எல்லா கேள்விகளுமே ரொம்ப நுண்னோக்கி மூலமா பார்த்து அலசி ஆராய்ஞ்சாத்தான் பதிலை வழங்க முடிய்ங்கிற மாதிரி அமைஞ்சு போச்சு எனக்கு மட்டும்.
அமெரிக்கா அப்படின்னாலே உலக வல்லரசா தன்னைத் தக்க வைத்துக்கொள்ள சில பல வித்தைகளை அது குடியரசுக் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது ஜனநாயகக் கட்சியாக இருந்தாலும் தன் நாட்டினுடைய சுய லாபத்திற்காக செய்துதான் ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அப்படிங்கிற மறுப்பதற்கில்லை.
தன் நாட்டின் எல்லையைத் தாண்டி வந்துவிட்டால் அவர்களின் உலக அரசியல் அணுகுமுறை எது போன்ற ஆயுதத்தை எடுத்து எந்த நாட்டுடன் போரிடுகிறார்கள் என்பதனைப் பொருட்டே வெளிப்பார்வைக்கு எல்லோராலும் அறியப்படுவதாகவும், கண்ணுக்குகிட்டாமல் தன் நாட்டிற்கு லாபத்தை ஈட்டித் தருவதாகவும் அமைத்துக் கொள்கிறது – வெளியுறவுத் துறையில் இரு கட்சிகளுமே.
அதன் அடிப்படையில் இப்பொழுது இரு பாலருமே உலக அரசியல் மேடையில் எது போன்ற இரட்சகர்களா மற்ற நாடுகளுக்கு இருப்பார்கள் என்பதனைக் கொண்டு எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் கேள்விகளை பார்க்கலாம்.
1. சுற்றுச்சூழலுக்கு எதிரியான, நிலச்சுவாந்தார்களுக்கும் பண்ணையார்களுக்கும் நேசக்கரம் நீட்டும் மசோதாக்களை ஆதரிப்பவர் ஒபாமா. (வாசிப்பிற்கு: Bloomberg.com: Politics – Obama May Get Rural Votes on Farm-Subsidy Support) மகயின் இதை வெளிப்படையாக எதிர்த்திருக்கிறார். உணவுப்பண்டங்களின் உலகளாவிய விலை உயர்வுக்கு இந்த மசோதாவும் ஒரு காரணம். வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாயிகளைத் தேவைக்கு மீறி பாதுகாக்கிறது என்பது புஷ் மற்றும் மெகயினின் கருத்து. உங்க கருத்து என்ன?
சில வளர்ந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்கா அதிலும் ஜனநாயகக் கட்சி அதீதமாக பண்ணையார்களுக்கு மானியம் கொடுத்து விவசாயப் பண்டங்களை அதிக உற்பத்திக்கக் காரணம் வேறு மாதிரியான ஓர் போர் உத்தியாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது.
குடியரசுக் கட்சி நேரடியாக எண்ணெய்க்கெனவும், போர் கருவிகளை விற்பதிலும் சிறப்புக் கவனம் செலுத்தி அதன் மூலம் பொருளீட்டி நாட்டிற்குள் எடுத்து வருகிறதெனில், ஜனநாயகக் கட்சி அதனையே வேறு உருவத்தில் நிகழ்த்திக் கொள்கிறது. ஆக, இரு பாலரின் சுய-ஆர்வம் தனது நாட்டின் பொருளாதாரத்தை பெருக்குவது ஒன்றே குறி.
ஏன் குடியரசுக் கட்சி இதனை எதிர்க்கிறார்கள்? இந்த விசயத்தில் நல்ல பிள்ளையாக உலகிற்கு காட்சியளிக்கிறார்கள் என்றால் எல்லாம் அரசியல் சித்து விளையாட்டுத்தான்.
ஒரு பக்கம் ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் ஒன்றுமறியா குடிமக்களை நேரடியாக கொன்று குவிப்பது, மறு முனையில் இது போன்ற நல்ல விதத்தில்தான் அரசியல் உலகரங்கில் நடத்துவதாக பறைசாற்றிக் கொள்ளவும் உதவலாமென்ற அக்கறையிலாக இருக்கலாமென்று என்னால் எண்ண முடிகிறது. மற்றபடி உலகம் சுபிட்சமுற்று இருக்க வேண்டின் அந்த மசோதாவை செனட்டில் கொன்றதாக தெரியவில்லை.
இந் நிலையில் அது இந்தியாவிலருந்து ஏற்றுமதியாகும் உணவுப் பண்டங்களாகட்டும் அல்லது சிறு தீவான ஜமாய்க்கவாகட்டும் எங்களுடைய உற்பத்தி விலைக்கு உங்களால் ஈடுகட்டி ஏற்றுமதி நடத்த முடியவில்லையெனில், ட்டூ பேட். இதற்காக இன்னொரு போரா நிகழ்த்த முடியும் பணத்தை உற்பத்திக்க என்றொதொரு சித்தாந்தமாக ஜனநாயகக் கட்சியின் அணுகுமுறை இருக்குமோ.
இந் நிலையில் தீணிப் போட்டு அடி பட்டு சாவதை விட (குடியரசுக் கட்சியின் நீண்ட கால திட்டம் – வர்த்தகத்தை பிற நாடுகளும் செய்து பின்னாளில் அதனை தட்டிப் பறிக்க போரிடுவது இவர்கள் பாணியெனில்), இது போன்று அதீதமாக உணவு பொருட்களை உலக சந்தையில் நுழைத்து அதன் பெயரில் பொருளீட்டுவது என்னவோ சரியாகப் படுகிறது. இந்தக் கரையோரம் இப்ப ஒதுங்கிப் போயி கிடப்பதால்.
இதன் மூலமாக வளரும் நாடுகள் போராடி உணவு உற்பத்தியின் தரத்தையும், விளைச்சலையும் தொழிற் நுட்பத்தில் பெருக்கி இவர்களைப் போலவே போராடி உலக சந்தையில் ஜெயிக்க வேண்டி நிர்பந்திக்கப்படுகிறது.
2. ‘இந்தியா போன்ற நாடுகள் தொடர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. அவற்றைத் தடுக்க ஆவன செய்யவேண்டும்’ என்றிருக்கிறார் ஒபாமா. கமல்நாத், மறைந்த மாறன் போன்றோர்கள் இப்படி செய்வது இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு எத்தகைய சேதத்தை இத்தகைய கிடுக்கிப்பிடிகள் கொடுக்கும் என்பதை விவரித்துள்ளனர். ஒபாமா வலியுறுத்தும் carbon credits என்பது சாத்தியமானாலும் ஆப்பிரிக்காவிற்கு சல்லிசான விலையில் குப்பையை ஏற்றுமதி செய்யும் வித்தைக்கு இட்டுச்செல்லாதா? ஏழை நாடுகளிடம் இருந்து குறைந்த பேரத்தில் கரியமிலக் கழிவுகளை (தற்போதைய நிதிபேரம் போல்) வாங்கிவிட்டு, அமெரிக்கா தன்பாட்டுக்கு நச்சை உண்டாக்கும் திட்டத்திற்கு ஒபாமா ஆதரவுக்கரம் நீட்டுகிறாரா?
நாளை…
பதில்களை இந்த வாரம் வழங்குபவர் தெக்கிகாட்டான்