பதில்களை இந்த வாரம் வழங்குபவர் தெக்கிகாட்டான். (முந்தைய பகுதி)
2. ‘இந்தியா போன்ற நாடுகள் தொடர்ந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. அவற்றைத் தடுக்க ஆவன செய்யவேண்டும்’ என்றிருக்கிறார் ஒபாமா. கமல்நாத், மறைந்த மாறன் போன்றோர்கள் இப்படி செய்வது இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு எத்தகைய சேதத்தை இத்தகைய கிடுக்கிப்பிடிகள் கொடுக்கும் என்பதை விவரித்துள்ளனர். ஒபாமா வலியுறுத்தும் carbon credits என்பது சாத்தியமானாலும் ஆப்பிரிக்காவிற்கு சல்லிசான விலையில் குப்பையை ஏற்றுமதி செய்யும் வித்தைக்கு இட்டுச்செல்லாதா? ஏழை நாடுகளிடம் இருந்து குறைந்த பேரத்தில் கரியமிலக் கழிவுகளை (தற்போதைய நிதிபேரம் போல்) வாங்கிவிட்டு, அமெரிக்கா தன்பாட்டுக்கு நச்சை உண்டாக்கும் திட்டத்திற்கு ஒபாமா ஆதரவுக்கரம் நீட்டுகிறாரா?
குடியரசு கட்சி அன்பர்கள் இந்த உலகச் சூடேற்றம் என்ற ஒன்றே புணைவுக் கதை என்ற ரேஞ்சில்தான் வைத்து உலக வர்த்தகத்தை வளர்த்து வருகிறார்கள்.
இயற்கையா அது பாட்டுக்கு தன் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் ஏற்கெனவே படமாக்கப்பட்ட ஒரு படச் சுருள் என்பதனைப் போன்றுதான் அவர்களின் இயற்கைசார் அறிவு என்பது எனது கருத்து. அது கண் கூடு எது போன்ற வாகனங்களுக்கு அவர்களின் வரி விலக்கு வழங்கும் மண்டை என்பதனைக் கொண்டு (ஒரு சமயத்தில் ஹம்வீ வாங்குபவர்களுக்கு வரி விலக்கு விதிக்கப்பட்டது…) காணலாம்.
இந்த நிலைமையில் உலகச் சூடேற்றம், க்ரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளிப்பாட்டைய் கட்டுப்படுத்தல் போன்றவைகளிளெல்லாம் அவர்களின் நிலைப்பாடு எதுவாக இருக்கும் என்பதும் யாவரும் அறிந்து கொள்ளும் வண்ணமாகத்தான் இருக்கும்.
வர்த்தகம் என்பது இருவழிச் சாலை என்று இங்கு மாசுக்களை உருவாக்கும் அத்தனை தொழிற்சாலைகளையும் சைனா, இந்தியா, வியாட்நாம், மொக்சிகோ போன்ற வளரும் நாடுகளுக்கு தள்ளிவிட்டுவிட்டு அங்கு காற்று, நீர் மற்றும் நிலம் போன்றவைகளை கட்டற்ற மாசுக்களின் மூலமாக நிகழ்த்த விட்டு வேடிக்கை பார்க்கும் ஒரு கட்சியாகத்தன் இருக்கிறது இந்தக் குடியரசுக் கட்சி. ஏனெனில் அவ் நாடுகளில் அப்படி ஒரு மாசுக் கட்டுப்பாடு வாரியமே விலை கொடுத்து வாங்கப்படும் நிலையிலிருப்பதனால்தான், அங்கே அவ்வாறு அத்தனை மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளும் தள்ளி விடப்படுகின்றன.
இதற்கு முத்தாய்ப்பாக கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் ஒதுங்கிக் கொண்டதும், மற்றுமொரு குடியரசுக் கட்சிக்காரர்களின் இயற்கைசார் அறிவின் பின்னடவை காட்டும் காட்டுத் தனமன்றி வேறென்னவாக இருக்க முடியும்.
இந்நிலையில், ஓபாமாவின் இந்த கார்பன் க்ரீடிட் திட்டம் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையிலேயே உள்ளது. இரும்புக்கரம் கொண்டு ஏதோ ஒரு வகையில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கரியமிலா வாயுவை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்துவதின் மூலம் உலகச் சூடேற்றத்தின் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்தானே.
இதன் மூலமாக சில குளறுபடிகள் கார்பன் க்ரீடிட்களை வாங்குவது, கொடுப்பதின் மூலம் நடந்தாலும், அந்த ப்ரக்ஞையுணர்வே மேற்கொண்டு நடவாமல் இருக்க கட்டுபடுத்தப்படலாமென்று தோன்றுகிறது. அவ்வாறு க்ரீடிட் பேரத்தின் மூலம் வாங்கும் கம்பெனிகள் பெரும் அளவில் நஷ்டமடைய
நேரும் பட்சத்தில் மேற்கொண்டு கழிவுகளை கட்டுப்படுத்தத்தான் விளையுமே தவிர மேற்கொண்டு பேரத்தின் அடிப்படையில் நஷ்டமடைய முன் வர மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.
…Under a cap-and-trade plan, companies that produce carbon dioxide and other greenhouse gases receive or buy credits that give them the right to emit a certain amount. Companies that emit less carbon than their credits allow can profit by selling any excess credits on the open market, while those that exceed their emission allowance have to make up the difference or face heavy fines…
3. எத்தனால்: உணவுப்பண்டங்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இது சுட்டப்படுகிறது. இது கோளாறான கோட்பாடுதானா? இதன் பின்னும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவிற்குத்தான் உங்கள் ஆதரவா?
நாளை…
Posted in ஒபாமா, கருத்து, குடியரசு, பொது
குறிச்சொல்லிடப்பட்டது Carbon, Environment, GOP, Gore, Kyoro, Nobel, Obama, Pollution, Republicans, Warming