அறிவிப்புகள்:
உயிர்மை.காம் வழங்கும் வார இணைய இதழ்: “இது உயிரோசையின் 50ஆவது இதழ் :: மனுஷ்ய புத்திரன்” எழுதியதில் இருந்து:
- நமது பண்பாட்டு வேர்கள், கலை, இலக்கியம், தத்துவம், சமூகம், அரசியல், சர்வதேச விவகாரங்கள், சினிமா என ஏராளமான துறை சார்ந்த எண்ணற்ற கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
- 1500க்கும் மேற்பட்ட படைப்புகள் பல்லாயிரம் பக்கங்களுடன் மிக அரிதான பிழைகளுடன் பதிவேற்றம்.
- எதையும் எழுதலாம் என்ற எழுத்து சுதந்திரத்தையோ இணைய சுதந்திரத்தையோ சிறிதும் ஏற்கவில்லை.
- ஓராண்டாக உயிரோசை கடும் பொருட் செலவுடன் — ஓராண்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய்.
- உயிரோசைக்கு ஒரு சிறிய அளவிலான சந்தா தொகை
Uyirmai.com & Manushyaputhran in Uyirosai.com: “உயிரோசை ஓராண்டு நிறைவு விழா: இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்: உயிரோசையை முன் வைத்து — சிறப்புரைகள்: சாருநிவேதிதா & எஸ்.ராமகிருஷ்ணன்”
என்னுரை
உயிர்மை போன்ற பத்திரிகை நடத்துமிடத்தில், உயிரோசை போன்ற இணையத்தில் மட்டும் வெளியாகும் வார இதழ் நடத்துவது வெகு சுலபம்.
மாத இதழ். அதுவும் அச்சில் வெளியாகும் இதழ். ஒல்லியாக விளம்பரம் இன்ன பிறவெல்லாம் கழித்தால் 150 ஒருங்குறி கிலோபைட்டுக்குள் அடங்கும் இதழ். அதற்குள் எல்லோரையும் திருப்தி செய்ய இயலாது.
அதை விட புத்தகமாக்கல் லாபகரமானது. ஜூன் 2009 உயிர்மையை வாங்கமாட்டீர்கள். ஆனால், ஜூன் 2000த்தில் வெளியான புத்தகத்தை பத்தாண்டு கழித்தாலும் வாங்குவீர்கள். விமர்சிப்பீர்கள். வாசிக்கக் கூட செய்துவிடுவீர்கள்.
ஆகவே,
- புத்தகத்திற்கு ஆள் பிடிப்பது எப்படி? எழுதவும் ஆள் வேண்டும்; படிக்கவும் கூட்ட வேண்டும்.
- பத்திரிகையில் விற்பனையாகாத பெயரை எப்படி சந்தைப்படுத்துவது?
- அச்சில் கழித்துக் கட்டப்பட்டதை, மனம் புண்படாமல், தேர்வானதாக சொல்வது எப்படி?
- துணை ஆசிரியர் கவிதைகளையும், வளரும் உதவி ஆசிரியர் தலையங்கங்களையும் வெளிவரச் செய்யும் வழி எது?
- ப்ராண்ட் அம்பாசடர்களை உருவாக்குவது எப்படி?
- அறுபது பக்கத்திற்குள் இடங்கொடுக்க முடியாதவருக்கு, மனதில் மட்டுமல்லாமல், பாலம் அமைத்து, இடங்கொடுப்பது எப்படி?
- மூத்த தலைமுறையினருக்கு அறிமுகமானவர்களை வைத்து உயிர்மை பதிப்பகத்திற்கு ரெகுலர் விளம்பரம் பெறுவது எப்படி?
- சாரு.ஆன்லைன், ஜெயமோகன். இன், எஸ். ராமகிருஷ்ணன்.காம் போன்ற தனி மனிதர்களே புகழைத் தட்டிச் செல்லாமல், அவரின் வெளியீட்டாளரும் எப்படி தன்னை நிலை நிறுத்திக்கொள்வது?
- இணையம் வந்தபிறகு இலக்கியச்சண்டை என்பது நொடிக்கு நொடி பதிவிடுவது. அதற்கு ஈடுகொடுக்க வாரம்தோறுமாவது வெளியாவது.
- வாரப் பத்திரிகை குமுதம், மாதமொருமுறை இலக்கியம் சமைக்க ‘தீராநதி‘ ஆகும்போது, மாதாந்தரி சிற்றிலக்கிய சிற்றேடு, வாராந்தரி ஆகக் கூடாதா? கூடுமா?
What did Uyirosai achieve? உயிரோசை என்ன சாதித்தது?
1. தமிழ் சினிமா குறித்த சுவாரசியங்கள் இலக்கியமாகா என்பதை தமிழ்மகன் கொண்டு முறியடித்தது.
2. தனிவலை இல்லாத சுகுமாரன், வாஸந்தி, இந்திரா பார்த்தசாரதி, தமிழவன் போன்ற மூத்த இலக்கியவாதிகளை தொடர்ச்சியாக எழுதவைத்தது.
3. சொந்த வலையகமாக இருந்தால் அமிதாப் பச்சன் போல் ‘என்னை எல்லாரும் திட்டறாங்க’ என்று அழுதோ, மறுமொழிகளை மறைத்து/பின் திறந்து/மீண்டும் மட்டுறுத்தி என்று சுழற்சிக்குள் சிக்கியோ காணாமல் போகும் அபாயத்தை தவிர்த்தது.
3. சுதேசமித்திரனின் potentialல் துளி ஆளுமையாவது வெளிக்கொணர்ந்தது.
4. இந்திரஜித் பத்தி நிஜமாகவே தவறவிட முடியாததாக இருப்பது.
5. Lack of consistency in மனோஜ், மாயா, சஞ்சித், அபிலாஷ் என்பதைக் குறையாக சொல்ல வந்தாலும், அவர்கள் எல்லாம், புது எழுத்தாளர்களாமே!?!
6. இலக்கியவிருதுகள் குறித்து பன்முக விமர்சனம் வராவிட்டாலும், முழுமையான ஆளுமை சித்திரம் கிடைக்காவிட்டாலும், பின்னணியும் அரசியலும் அறியச்செய்திரா விட்டாலும், இன்னின்னாருக்கு இப்படி என்று செய்தியாக்கியது.
7. ‘உரையாடல்‘ மாதிரி போட்டி இல்லாவிட்டாலும், இதழுக்கு ஒரு சிறுகதையாவது வெளியிடுவது. (கவிதைகளும் வருகிறது. எவராவது வாசித்ததுண்டா?)
8. எழுத்தாளருக்குத் தேவை அங்கீகாரம். படைப்பை ‘நல்லாருக்கு!’ என்று குறிப்பால் உணர்த்தி, உயிர்மை வெளியீட்டீல் இடங்கொடுத்து, பீடத்தில் ஏற்றி அமரவைப்பது.
9. தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து தொடர் எழுதாமல் இருந்தது.
10. ஒரு வருடம்; 50 இதழ் என்பது லேசுப்பட்ட சமாச்சாரம் இல்லை. அதுவும் இணையத்தில். முணுக்கென்றால் வோர்ட்பிரெஸ், சட்டென்று ப்ளாக்ஸ்பாட் நிலவும் சூழலில், நாலு குதிரை, மூன்று மாடு, ஓரிரு கழுதை, என்று animal farmஐ கட்டி மேய்த்திருப்பது.
How Uyirosai could have done better? உயிரோசை எவ்வாறு மேலும் பரிமளித்திருக்கலாம்?
1. பாபுஜியின் கருத்துப் படம்
2. உயிரோசையின் வடிவமைப்பு
வலையில் உள்ள சில வண்ணங்கள் கண்களுக்கு உறுத்தலாக இருப்பதைச் சரி செய்தால் படிப்பவர்களை அசதியுறாமல் இருக்கச் செய்யும். புகைப்படங்களும் மிகவும் சிதறிப்போன ஒரு தோற்றத்தை அளிக்கின்றன. – வெங்கடாசலம் / சிங்கப்பூர்
3. தமிழ்ப் பெயர்ப்பு
மொழிகளினூடான பயணத்தில், கவித்துவம் பின்தங்கிவிடுகிறதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. – மெ.உலகநாதன் / சென்னை
4. புது நூல்கள் அறிமுகம் (அல்லது) புது புத்தக விளம்பரம்தானே?
5. குறுந்திரைப்படங்கள் விமர்சனம் + பார்வை
6. பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு
7. ஓவியங்கள், சிற்பம், நுண்கலை
8. அரசியல் சப்தங்களுக்கு பதில் அனுபவங்களின் பகிர்வு
9. ஈழம், இலங்கை கவனிப்பு
10. பாலியல், பொருளாதாரம்/வர்த்தகம்/நிதிநிலை போன்ற பேசப்படாத & தட்டையான தமிழ் ஊடகப் பார்வை பெறும் தலைப்புகள்.
Where did Uyirosai mimic other websites? உயிரோசை எங்ஙனம் பிற வலையக செயல்பாடுகளை பிரதிபலித்தது?
1. வெட்டி, ஒட்டும் Ctrl+C வகையறா → ஹைக்கூ தொடர், முல்லா கதைகள், சூஃபி கதைகள்
2. திண்ணை
3. சொல்வனம் போல் வாசகர் கருத்துகளைத் தடை செய்தல்
4. கீற்று போல் விளம்பரங்கள்
5. அந்திமழை போல் ஆதிகால வெப்1.0 தோற்றம்
6. தமிழோவியம் போல் அ.ராமசாமி போல் சில எழுத்தாளர்களுக்கு நிழற்படம்; பாவண்ணன் போல் வேறு சிலருக்கு எந்த ஒளிப்படமும் mastheadம் இடாமை.
7. இஷா (ஈசா?) யோகம் மாதிரி பக்கத்திற்குப் பக்கம் திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களின் திருவுருவப்படம்.
8. பதிவுகள் மாதிரி marquee scrolling செய்தி ஓடவிடுவது.
9. தமிழ்மணத்தில் இருக்கும் தனிப் பதிவரின் இடுகை போல் ஒற்றைப் பார்வையை மட்டும் தருவது. பத்திரிகைக்கு அழகு பல்நோக்கில் பல்லூடகமாக வருவது.
10. ஆறாம்திணை கொஞ்ச நாள் கழித்து தென்றலானது. அது போல்?
Letters to the Author: Importance of sending mails to Writers and Editors
புத்தகம் படிப்பதோடு நிற்காமல் எழுதியவருக்கு மடல் போடவும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். பத்து வயதில் கோகுலம் ஆசிரியரான அழ. வள்ளியப்பா பதில் போட்டது என்னை ஊக்குவித்தது. அப்புறம் பதில் போடாத சுஜாத இன்னும் நிறைய.
வாழ்க்கையினால் ஏதாவது உபயோகம் இருக்க வேண்டும். என்னுடைய உயிரினால் ஏதாவது பலன் இருக்க வேண்டும்.
எழுத்தாளரை வாசிப்பதால், பிறருக்கும் தம் எண்ணங்களைப் பகிரவேண்டும். வெறுமனே கருத்துகளை உறிஞ்சிக் கொண்டு இருக்கக் கூடாது. கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு சாலிட்டேர் மட்டும் விளையாடுவது போல் தனிமையைக் கொண்டாட, எதற்காக குழுமத்தில் இருக்க வேண்டும்?
கன்ஃபூசியசு சொன்னது: ‘reading without thinking gives one a disorderly mind; thinking without reading makes one flighty’
ஜெயமோகன்.காம் மட்டும் படித்துவிட்டு, அவருடைய குழுமத்தில் பதில் போடாவிட்டால் அலட்சியம் கலந்த சோம்பேறித்தனம் பெருகிவிடும். புத்தகம் வாசித்து முடித்தவுடன் எழும் எண்ணங்களைத் தொகுத்து அஞ்சல் செய்யாவிட்டால் எதிர்வினையாற்றவே பயம் நிறைந்த அசிரத்தை தோன்றிவிடும்.
உங்கள் பதிவுகளுக்கு சாதாரணமாக யார் பதில் போடுகிறார்கள்? இரண்டு மூன்று வரிகளுக்குள்ளேயே பதில் எழுதிப் போடுவதால், மறுமொழி எழுத அயர்ச்சி ஏற்படுகிறதா? எழுதுபவரை விமர்சித்து காயப்படுத்துவதற்கு பதிலாக, மௌனம் காப்பது சிறந்ததா?
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Authors, Azha Valliappa, ஆசிரியர், எண்ணம், எதிர்வினை, எழுத்தாளர், சிந்தனை, சுஜாதா, பதில், மறுமொழி, Books, Children, Comments, Editors, Feedback, Gokulam, Kids, Letters, Mails, Notes, Opinion, Reader, Reply, send, Sender, Sujatha, Think, Write, Writers