இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்
இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:
நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?
இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்
இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:
நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 1927, ஆக்கம், இலக்கியம், கதை, சுதந்திரம், திருநெல்வேலி, நாவல், நெல்லை, பார்ப்பனர், பிராமணர், புனைவு, பெண், பெண்ணியம், மகளிர், விடுதலை, Baba, Bala, BoBa, Brahmins, Caste, community, Drama, Events, Females, Feminism, Fiction, Life, Narration, Novel, Series, She, Shorts, Story, Women
கதைக்கான களம் பதிவுகள் அல்ல என்றாலும், சொந்தமாக சிறுகதை/கவிதை எழுதியதை கத்திமுனையில் படிக்க வைக்க வலைப்பதிவு போட்டி உருவாக்குகிறது.
தேன்கூடு போட்டியில் கண்ட ஆர்வம் மீண்டும் spring ஸீஸன் ஆகி அலர்ஜி ஆகும் வீரியத்துடன் பல புனைவுகள் வந்துள்ளன.
அனைத்தையும் ப்ளாக் – குட் / சங்கமம் வலையகம் தொடுத்திருக்கிறது.
அனுபவமும் அனுபவம் சார்ந்த இடுகையும் வலைப்பதிவு எனப்படும். சுஜாதாவும் சுஜாதா நடை சார்ந்ததும் சிறுகதை எனப்படும். பிற்காலத்தில் இந்தக் காலத்தை இப்படித்தான் ஆய்வறிக்கை தரவேண்டும்.
இரண்டையும் சரியாக மிக்ஸ் செய்து காக்டெயில் தந்த ஆசிப்பை பார்த்து தோன்ற வேண்டிய ஏகலைவர்களின் தேவையை சங்கமம் போட்டி நிரூபித்திருக்கிறது.
கலந்துக்கத்தான் வக்கில்லை என்னும் உரிமைதுறப்புடன், சிதறலாகத் தேர்ந்தெடுத்து படித்தவைக்கான கருத்துகள்:
மேற்கோள் மூலை:
போனஸ் அடி வாங்கிய இன்னொரு நண்பன் “டேய் அவனே விழுந்த அடியிலே அரண்டு போய் இருக்கான், நீ சட்டை லுங்கி ன்னு கவலைப் பட்டு கிட்டு இருக்கீங்க”
ராம் நாடு நண்பன் ” பின்ன நான் கவலை படமால் இருக்க முடியுமா?, அவன் போட்டு இருந்தது என் சட்டை டா, நான் 10001 ரூபா என் ஆளுக்கு செலவு பண்ணிட்டேன்னு என் காதலி பரிசா எடுத்து கொடுத்த 50 ரூபா சட்டை”
திருச்சி நண்பன் “அவன் போட்டு இருந்தது என் லுங்கி”
நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:
Sathia : வம்பே வேண்டாம். ஒரு :-)) மட்டும் போட்டுக்கறேன். – March 11, 2009 4:17:00 PM EDT
மேற்கோள் மூலை:
பஸ்ஸில் தொங்கிக் கொண்டிருந்த திருவள்ளுவரை பிள்ளையாராக மானசீகமாக நினைத்து வேண்டிக் கொண்டேன். “நீ திருக்குறள்லாம் படிப்பியாமே” என்று எங்கள் கடலை அஃபிஷியலாகத் தொடங்கியது. எப்போதுமில்லாமல் திருச்சி மிக விரைவில் வந்தாற்போலிருந்தது.
நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:
Sridhar Narayanan said…சொல்றாங்க: //கௌதமை விட உத்தமனாய், ஒரு ராஜாமணி எனக்குக் கிடைக்க வைச்ச மலைக்கோட்டை பிள்ளையாருக்கு நன்றி:-)//
இந்த வரி உண்மைன்னா கௌதமும் உண்மை, கதையும் உண்மைதானே. அப்புறம் எப்படி ‘பாதிதான் உண்மை’ன்னு சொல்றீங்க?
அதெல்லாம் நாங்க பாயிண்டை பிடிச்சிருவோமில்ல கரெக்டா :-))
Was just kidding.
கதையில் ஒரு நேர்த்தி இருக்கிறது.
//அம்மா ஒரு நிமிடம் மலைக்கோட்டையை விட நிமிர்ந்தாற் போலிருந்தது. //
கலக்கல். வாழ்த்துகள்! – 3/23/2009 காலை 10:28
நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:
மேற்கோள் மூலை:
இருக்கை கிடைத்த மாணவிகள் அவர்களது வகுப்பு தோழர்களின் பைகளை வாங்கி காலுக்கு அடியிலும், பிடித்தமானவர்களின் பையை மடியிலும் வைத்து கொண்டார்கள்.
:::
பிசிக்ஸ் லேபிள் ஸ்பெக்ட்ரோமிட்டர் பிரசம் வைக்கும் போது அது முக்கோண வடிவத்திற்கு பதிலாக ஹார்டின் வடிவத்தில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
:::
அழக ரசிக்க கத்துக்கணும்னு நான் சொன்னவுடன், பருவத்துல பன்னிங்க கூட அழகா தாண்டா இருக்கும் என்றான். கண்டிப்பா ஆண் பன்னிகளுக்கு அழகாத்தான் தெரியும் என்று சொல்ல நினைத்து பேக் ஃபையர் ஆகிவிடும் என்று சொல்லாமல் விட்டுவிட்டேன்.
நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:
J said… Enakku puriyave illaye… why kesavan is like that in the end?
As others i also thought that u are writing abt the trip to college.Namma college and ooruku pona effect varuthu..but naan padikumpothu mini bus, auditorium ellam illa. 😦 – 10:14 PM
நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:
மேற்கோள் மூலை:
விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து வெளிச்சத்துக்குப் பதில் தூரத்தைக் காட்டி பயமுறுத்திக் கொண்டிருந்தன.
:::
“நான் எங்கே இருக்கேன்? சொர்க்கத்திலயா?”“கவர்மெண்ட் ஹாஸ்பிடல் சொர்க்கமா தெரியுதாம்டா.. அந்த மாத்திரை இனிமே மார்க்கெட்லே செம பிக்கப் ஆயிடும்”
நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:
சாத்தான் said… வெறி ரொமாண்டிக். 🙂 – March 19, 2009 9:10 AM
நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:
நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:
மேற்கோள் மூலை:
மனசு தைரிய சலைனை அவன் ரத்தத்தில் ஏற்றியது.
நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:
மேற்கோள் மூலை:
அதுல பாத்தீங்கன்னா ஈக்கும் இறக்கை இருக்கு. எரோப்ளேனுக்கும் இறக்கை இருக்கு. (கைதட்டல்). ஈ முட்ட வெக்குங்க. ஏரோப்ளேன்ல கோளாறு இருந்துதுனு வெயுங்க எங்காச்சும் கொண்டு போயி முட்ட வெச்சு ஆக்ஸிடெண்ட் ஆயுருமுங்க. (கூட்டம் ஊளையை நிறுத்திவிட்டுக் கைதட்டி ரசிக்க ஆரமிச்சுது.)
நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:
இராகவன் நைஜிரியா said… தாங்க முடியலங்க…
ஈயும் ஏரோப்ளேனும் – மிக அழகான கம்பேரிசன்.
வாழ்க அறுவை திலகம், கடிமன்னர்.
நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:
மேற்கோள் மூலை:
ஒடுங்கிப் போய் படுக்கையில் படுத்து இருந்தாலும் திடீரென்று உத்வேகத்தோடு எழுந்து சாக்பீஸை விட்டெறிந்து ஏதாவது தேற்றம் விளக்கி சொல்லச் சொல்வாரோ என்று கொஞ்சம் பயமாகவே இருந்தது.
நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:
ILA said… செம எழுத்து நடை.. 🙂 –March 20, 2009 1:22 PM
நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:
நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:
கெக்கே பிக்குணி சொல்வது… உங்க கதைத்தலைப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சி இருந்தது.
நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:
மேற்கோள் மூலை:
இடுகை முழுக்கவே இங்கே இட வேண்டும்.
நண்பர் சொன்னா நான் சொன்ன மாதிரி மூலை:
ஆதவா said… நான் படிக்கும் உங்களின் முதல் பதிவு… ரகளையா இருக்குனஙக….
அப்படியய அலேக்காக அந்த இடத்தில் கொண்டு போகும் எழுத்துக்கள்…
இது உண்Mஐயா நடந்ததா?? –February 6, 2009 6:05 PM
நானே ஜட்ஜ்மென்ட் சொல்லும் மூலை:
டாப் 10 பதிவைப் படித்து சன் டிவியின் செவ்வியல் தயாரிப்புகளான ‘தீ’, படிக்காதவன் விமர்சிப்பவரா நீங்க? உங்களுக்காக என்னுடைய கல்லூரி: ஆனையடியினில் அரும்பாவைகள் (சிறுகதை)
1. சிறுகதை: நாடக தினம் | காலச்சுவடு: அசோகமித்திரன்
இதே கதையை வேறு எவராவது எழுதியிருந்தால், புது எழுத்தாளர் கொடுத்திருந்தால், வலைப்பதிவர் மின்னஞ்சலாக அனுப்பியிருந்தால் எவரும் பிரசுரித்திருக்க மாட்டார்கள்.
ஃப்ரோசன் பரோட்டாவை மைக்ரோவேவில் வைத்து கொடுத்த மாதிரி வந்திருக்கும் இந்தப் புனைவில், அப்படி என்ன உள்ளே பொதிந்து உள்ளது என்று விளக்கினால், மறைபொருளை வெளிப்படுத்தினால் காலாகாலத்திற்கும் நன்றி சொல்வேன்.
~oOo~
2. உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்
முதல் தடவை வாசித்தால் எளிமையான செய்தியை எழுதியது போல் புரிகிறது.
கதையாக நினைத்து மீண்டும் படித்தால் என்னென்ன புரிகிறது என்று விலாவாரியாக சொல்லமுடியவில்லை. அவசியம் வாசிக்கவேண்டிய வெகு நேர்த்தியான ஆக்கம்.
பிரசங்கி. பெயர் எம். சிறுவர்களுக்கு சாத்தான். இரு வான்கோழி நைவேத்தியம். மகள்களின் மெழுகுவர்த்தி உற்பத்தி. பிச்சைக்கார கடவுள். கனவு நரகம்.
~oOo~
3. ஹரன்பிரசன்னா – வடக்கு வாசல் – “அங்குமிங்குமெங்கும்”
முஸ்தீபு படு ஜோர். முடிவு படு திராபை.
பதிவு எழுதும்போது பாதியில் ‘limit exceeded’ என்று கழுத்து நெறிப்பது போல் அசௌகரியமான மென்னிப் பிடித்து திருகி விட்டுச் சென்றுவிட்டார்.
வித்தியாசமான நாயகர். பழக்கமான குடும்பம். இலயிக்க வைக்கும் விவரிப்பு. இவ்வளவு இருந்தும் க்ளைமேக்ஸ் கொடுக்கத் தெரியாத பாரதிராஜா படம்.
Posted in Authors
குறிச்சொல்லிடப்பட்டது Asokamithran, கதை, விமர்சனம், EssRaa, Fiction, Kaalachuvadu, Quick, Ramakrishnan, Reviews, Story, TSI
ஆர். வெங்கடேஷ் சமீபத்தில் எழுதிய கதைகள் கிடைத்தது. வாய்ப்பைத் தவறவிடாமல் விமர்சனம்.
இலகுவான வாசிப்புக்கு ஏற்றவை. வாசகனுக்கு சிரமம் தராத நடை. தற்கால இடங்களும் நகரத்தின் விரிவாக்கங்களும் பின்னணியாக உள்ளது. பதைபதைக்கும் விறுவிறுப்பு கிடைக்காது. சுவாரசியத்திற்கும் பஞ்சமில்லை.
~oOo~
‘நான் விசுவலாகத்தான் இதை விளக்க முடியும்’ என்று மார்க்கரும் போர்டுமாக அலைபவரா நீங்க?
அப்படியானால் சுந்தர் நம்மவன். அசகாயமாக செய்து முடிப்பதை பேச்சில் சூரத்தனம் இல்லாமல் கருமமே தொடர்ச்சியாக காலங்காலமாக நடத்த விதிக்கப்பட்டவன்.
அமெரிக்காவின் திருப்பதியாம் நயாகரா நீர்வீழ்ச்சிப் பயணத்தை நினைவூட்டுகிறார். விச்ராந்தியாக உடற்பயிற்சிக்குப் பின்னுள்ள களைப்புற்று உட்காரும்போது தெய்வம் பிரசன்னமாகி அருள்பாலிக்கிறார்.
~oOo~
‘இதயமே! இதயமே! உன் மௌனம் என்னைக் கொல்லுதே!’ என்று முகாரி தலை ராகம் பாடும் இளசு.
இப்பொழுதைய தலைமுறை ‘அதிரடி’ என்பது அதீதமான கற்பனை. இன்று தாடி வளர்க்காமல், தம்/தண்ணி அடித்து பூச்சி மருந்து அருந்தாமல் மருகும் கல்லூரி மாணவனின் களம்.
தெரிந்த முடிவை நோக்கிய பயணம்: கதையிலும் கதைநாயகனிலும்.
~oOo~
அது யாரு சிம்ரனா? மீனா? மாதுரி தீக்சிட்?
முன்னாள் நடிகை நாடகம் பார்க்கும் கதை. அழுத்தம் குறைவு. சம்பவங்களினால் கோர்க்காமல் விவரிப்பில் வளர்வதால் மனதில் எதுவும் வெண்பஞ்சு snowஆக உரசாமல் பனிக்கட்டியாக இடறுகிறது.
மூன்று கதைகளில் இது கொஞ்சம் ஏமாற்றம் தரும் ஆக்கம்.
~oOo~
வெங்கடேஷ் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி உள்ளதா? அடுத்த கலெக்சன் ரெடி என்று பட்சி சொல்லுகிறது.
என்னைப் போன்ற புதிய எழுத்தாளர்கள, எழுத முயல்பவர்கள் கற்றுக் கொள்ள இந்தக் கதைகளை மனனப் பகுதியாக ஈராறு முறை படிப்பது நலம்.
எவ்வாறு காட்டாறாக துவங்குவது, ஆரம்பித்த வேகத்தை சீராக்குவது, பின்னோக்கி ஃப்ளாஷ்பேக் சொல்லிவிட்டு, அடுத்த காட்சிக்கு கதாசிரியர் சென்றுவிட்டதை எங்ஙனம் உணர்த்துவது, சொற் சிக்கனம், வடிவ நேர்த்தி, என்று சிறுகதையின் சூத்திரங்களைத் தெளிய உதவலாம். இதெல்லாம் சித்திக்காவிட்டாலும் நல்ல கதை படித்த திருப்தி கிட்டும் என்பதற்கு நான் கியாரண்டி.
முந்தைய நான் கடவுள் பதிவு
இளையராஜாவின் இசைக்கூடம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நான் கடவுள். படத்தை ராஜா பார்க்க, ராஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலா. டென்ஷன்…டென்ஷன்… ஒவ்வொரு விரல் நகமாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார் பாலா! படம் முடிந்ததும் விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் போய்விடுகிறார் இசைஞானி. அவ்வளவுதான், பல மணி நேரங்கள் யாரையுமே அவர் சந்திக்கவில்லை பாலா உட்பட!

படத்தை பார்த்து பிரமித்து போயிருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். “சண்டைக்காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் படியாக இருந்ததால் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தோம்.”
“காஞ்சிபுரம் அருகில் குடியிருக்கும் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை உங்களிடம் வளர்ந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோதிடர் சொல்ல, குழந்தையை காசியில் விட்டு விட்டு வருகிறார்கள். அவன் அங்குள்ள சாமியார்களிடம் வளர ஆரம்பிக்கிறான். பாஷையிலிருந்து அனைத்து பழக்க வழக்கங்களையும் சாமியார்களிடம் கற்றுக் கொள்கிறான் சிறுவன். அவனை வாலிப வயதில் மீண்டும் சந்திக்கிறார் அவனது அப்பா. பிள்ளை இப்படி இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் மறுபடியும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். இங்கு வருபவன், குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கிற வில்லன்களுக்கு தானே கடவுளாகி தண்டனை கொடுக்கிறான். இதில் பூஜாவும் குழந்தை பருவத்தில் கடத்தி வரப்பட்டு வில்லன்களால் கண்கள் குருடாக்கப்பட்ட பெண். அவளையும் அந்த கூட்டத்திலிருந்து மீட்கிறான் என்று முடிகிறது கதை. இதில் வருகிற க்ளைமாக்சை நான் சொல்வது தர்மமில்லை” என்று முடித்துக் கொண்டார் அந்த சென்சார் போர்டு உறுப்பினர்.

நர மாமிசம் சாப்பிடுபவர்களை கொடூரி என்பார்களாம். இந்த கொடூரியாகவும் ஒரு காட்சியில் வருகிறாராம் ஆர்யா. பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஓரிடத்தில் கூடும் கும்பமேளா நிகழ்ச்சியில், எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் கேமிராவோடு ஊடுருவி பல காட்சிகளை எடுத்திருக்கிறார்களாம்.
கடந்த மூன்று வருடங்களாக நான் கடவுளை உருவாக்கி வருகிறார் பாலா. ஆனாலும், படப்பிடிப்பு நடந்தது மொத்தம் 369 நாட்கள்தானாம். பாலா, பூஜா தவிர்த்து படத்தில் 50க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களில் பலர் நிஜமான மன நோயாளிகள். ஊடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். இவர்களை நடிக்க வைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டாராம் பாலா. இதன் காரணமாகவும், பெரிய குளம் ஏரியாவில் எப்போதாவது தலை காட்டும் வெயிலாலும்தான் படப்பிடிப்பு தாமதமானது என்கிறார்கள் யூனிட்டில்.

சரி, முதல் பாரா சஸ்பென்சுக்கு வருவோம். இளையராஜா பாலாவிடம் என்னதான் சொன்னார்? ஒரு முழு நாள் அமைதிக்கு பிறகு அவர் சொன்னது இதுதான். “என்னாலே பேசவே முடியலே. இந்த படத்தை உலகமே கொண்டாட போவுது பாரு…!”

நன்றி: தணிக்கை துறையின் விமர்சனம்
Posted in Movies
குறிச்சொல்லிடப்பட்டது Arya, ஏழாம் உலகம், சினிமா, ஜெயமோகன், திரைப்படம், நான் கடவுள், விமர்சனம், Bala, Cinema, Films, Kadawul, Movies, Naan Kadavul, Pooja, Promos, Reviews, Story
நன்றி: சந்தோஷ் குரு :: கசாகூளம்
எழுத்து விமர்சகர்:
வாசகர்: அபிமானி
சகா: அறிந்தவர்களும் தெரிந்தவர்களும்
அங்கீகாரம்: வெகுசன ரசனை: பிரபல ஊடகமும் சிறுபத்திரிகையும்
புனைவு எழுத்தாளர்: கதைசொல்லி
சமூக சித்திரம்: நடுத்தர வர்க்கம்
ஏன் எழுதுகிறேன்? எப்பொழுது வரை ஆக்கங்கள் தோன்றும்?
எழுத்தினால் ஆய பயன்? கதை என்ன கிழிக்கப் போகிறது? ஏன் படிக்கிறீர்கள்?
காகித மலர்கள்
ஆதவனாகிய நான்
– திசைகள் இதழ், தீபம் கட்டுரைகள், படைப்பாளிகள் உலகம்
இது நேற்று கனவில் நடந்தது. நிஜமாகவே.
“அரிவராசனம் விச்வமோஹனம்”
மின்விளக்கு அணைத்த அகல்விளக்கு இருளில் பஜனை. ஜிப்பாவும் ஜீன்ஸ் பேன்ட்டும் போட்டிருக்கிறேன். ”
ஓம் சக்தி! ஆதிபராசத்தி!!”
ஐயப்ப சாமிமார் கூட்டமா? மேல்மருவத்தூர் வழிபாடா? சந்தேகம் தெளிந்தது.
“ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர”.
என்னிடம் மட்டும்தான் மேல்சட்டை. மற்ற எல்லாரும் திறந்த மார்புடன் தோற்றமளிக்கிறார்கள்.
சர்வமத மையத் தலைவர் என்னை நோக்குகிறார்.
“போலோ ஜெய் ஸ்ரீ சத்ய சாய்பாபாஜி கீ ஜே!”
கனவில் கூட நான் இப்படி எக்குத்தப்பாக வரமாட்டேனே? எப்படி மாட்டிக் கொண்டேன்?
“முதல் முறையா மகனே?”
இல்லை என்பது போல் மேலும் கீழும் தலை ஆடுகிறது.
“நீங்கள்தான் அடுத்த பாபா என்று கடவுள் கை காட்டியுள்ளார். உங்களிடம் இரு ஆரஞ்சிப் பழத்தை ஒப்புவிக்கவும் கட்டளை இட்டுள்ளார். நம்மை வெகு விரைவில் அசுரர்கள் தாக்கவுள்ளனர். அப்போது நாம் ஸ்தம்பித்து நிற்க இந்த முதல் ஆரஞ்ச் உதவும். மனிதர் பிரமை பிடித்தது போல் நிற்பதால் குழம்பிப் போகும் எதிரி சோர்வுற்று ஓய்ந்து போவர். அவர்கள் மறைந்த பின் இரண்டாவது ஆரஞ்சு கொண்டு எம்மை உயிர்ப்பிக்கவும்”.
ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மாதிரி ரம்மியமான குரலில் தேஜஸான சர்ஃப் சால்வை அணிந்தவர் சொல்லிவிட்டு பஜனையில் மூழ்கிவிட்டார்.
நான் அடுத்த பாபா ஆகிவிட்டேனா? கையில் இரண்டு ஆரஞ்சு இருந்தது. பரிசோதித்துப் பார்ப்போமா?
ப்ரொடக்சனுக்கு செல்வதற்கு முன் எந்த சாஃப்ட்வேரையும் டெவலப்மன்ட்டில் சோதனை செய்து விடுவேனே! அதே மாதிரிதானே? ஒரு முறை டெஸ்ட் செய்து ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பார்த்துவிடுவோம்.
முதல் பழத்தை விட்டெறிய எல்லோரும் வீழ்ந்தார்கள். பயந்து போய் உடனடியாக இரண்டாவதையும் போட்டு அனைவரையும் தெளிவித்தேன்.
அதே ஸ்ரீஸ்ரீ; எதிரொலிக்கும் தியானக்குரலில் கடுமை துளிக்கூட இல்லாமல் வருகிறார்.
“என்ன காரியம் செய்தாய் மகனே? இதில் கூடவா நம்பிக்கை இல்லை? என்னிடம் இரு ஜோடி ஆரஞ்சி மட்டுமே உள்ளது. இதுதான் மனிதகுலத்திடம் உள்ள கடைசி காபந்து பழங்கள். இதையாவது பத்திரமாய் வைத்து எம்மை பாதுகாப்பாய்”
வெகு சிரத்தையுடன் இரு கையில் ஒன்றாய் வைத்திருக்கிறேன். காலை பஜனை பிற்பகலிலும் வெகு ஜோராகத் தொடர்கிறது.
என்னைப் பார்த்து அந்தச் சிறுமியும் சிறுவனும் ஓடி வந்தார்கள்.
“சார்! ரொம்பப் பசிக்குது. மயக்கமா வருது. நைவேத்தியம் செய்யாம எதுவுமே கொடுக்க மாட்டேங்கிறாங்க. அந்தப் பழத்தைத் தந்தா வயித்தைக் கிள்ளும் பசி கொஞ்சமாவது தீரும்.”
ஆளுக்கொன்றாக கொடுத்துவிட்டேன். புசித்து விட்டார்கள்.
விழித்துக்கொண்டேன்.