பிரச்சாரப் படங்களும் பிராபல்ய பித்துக்குளிகளும்


katherine-heigl-picture-2.jpgஇன்னும் ஜூனோ பார்க்கவில்லை.

‘Knocked up’ பார்த்து நொந்துபோன நிலையை மீட்பிக்கவாது பார்க்க வேண்டும்.

அமெரிக்காவில் அபார்ஷன் க்ளினிக் வழியாக நடந்து செல்ல, நடுநிசியில் ‘பூத்’ படம் பார்த்த பிறகு தன்னந்தனியாக மார்ச்சுவரிக்கு செல்லுமளவு தைரியம் வேண்டும். எனினும், ‘நாக்ட் அப்’ மாதிரி படங்கள் ஏன் ‘சூப்பர் ஹிட்’ ஆகின்றன என்பதையும் அமெரிக்க குடிமகன்களின் ரசிப்பை அறியவும் புரிந்து கொள்வதற்காக கண்டு களித்தேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைதான்.

பார்த்தது என்னவோ, கேத்தரீன் ஹெகலுக்காக.

அரசல் புரசலாக தொலைக்காட்சி கன்னல் மாற்றும் நிமிடங்களில் “Grey’s Anatomy”-இல் பார்த்தவரை முழுநீள திரைப்படத்தில் கண்குளிர சேவிக்கலாம் என்று எடுத்தேன்.

குஷ்புவை ஒத்த கொள்கை உடையவர் போல.

‘பழனி’ படத்தில் பார்த்த ஓரிரண்டு காட்சிகளில் ‘தமிழ் கலாச்சார பெண்’ போல் நடித்து விட்டு, நிஜத்தில் நேர்மாறாக இருப்பது போல் இவரும் தோன்றி இருந்தார். அங்கே குஷ்பூவிற்கு, கணவனுக்குக் கட்டுப்பட்ட மனைவி வேடம். இங்கே காத்தரினுக்கு, கருக்கலைப்புக்கு ஆதரவான வேடம்.

பெண்கள் திருமணத்திற்கு முன் பாலுறவு வைத்துக்கொள்வது குறித்து, குஷ்பு உண்மைகளை சொல்லியிருந்தார். கேத்தரினின் சக நடிகர் தற்பால்விரும்பிகளைக் குறித்து இழிவாக நக்கலடித்தபோது, வெளிப்படையாக கண்டித்திருந்தார்.

ஆனால், இருவருமே நடிப்பில் அத்தகைய வேடங்களை ஏற்று நடிப்பதிலும், மாறுபட்ட கருத்துக்களை வலியுறுத்தும் திரைப்படங்களை முன்னிறுத்துவதிலும் எத்தகைய சமரசமும் இன்றி இணங்கி அடிபணிகின்றனர்.

வில்லன் வேடம் நிச்சயம் தேவலாம். அல்லது பின்நவீனத்துவ பாஷையில் ‘நல்லவரா/கெட்டவரா’ என்றெல்லாம் தெள்ளத்தெளிவாக விளக்காத பாத்திரத்தேர்வுகளைப் பாராட்டலாம்.

ஆனால், சர்வநிச்சயமாய் பெண்ணடிமைத்தனத்தை முன்னிறுத்தும் குணச்சித்திரங்களை, பணத்திற்காகவோ, புகழுக்காகவோ, தங்களை நிலைப்படுத்தி வாய்ப்புகளைப் பெறுவதற்காகவோ — சிறுபான்மையினரின் குரலுக்காக நிஜ வாழ்க்கையில் வாய்ஸ் கொடுக்கும் இவர்கள் ஏற்று நடித்து, காம்ப்ரமைஸ் செய்து கொண்டது ஏன்?!

சமீபத்தில் ‘வைத்தீஸ்வரன்’ குறித்து சரத்குமார், “திரைப்படத்தில் மறுஜென்மம் இருப்பதாக சொல்வதை என்னுடைய கட்சியின் கொள்கையாக, நம்பிக்கையாக கருதக்கூடாது” என்றிருந்தார். இந்த மாதிரி மூடநம்பிக்கை பிரச்சாரப் படங்களில் ஒரு நிலை, சமத்துவமாக முற்போக்கு கொள்கை இருப்பதாக சொல்லிக் கொண்டு கட்சிக்கு ஒரு நிலை, தனிப்பட்ட வாழ்வில் நக்மாவுக்கு ஒரு நிலை என்று இருப்பது கலைஞனுக்கு அவசியம்.

இல்லையென்றால் செயமோகன் போல் அதோகதிதான்.

இது போன்ற படங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு(ரொம்பத்தான்!) தவறான முன்னுதாரணமாக இருந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் கடைசியில் இருந்தது. – மோகன்தாஸ்

தொடர்பான பத்திகளில் சில:

1. The A-word is absent | Philadelphia Inquirer | 11/25/2007: “Pregnant characters in recent U.S. films not only don’t discuss abortion, they don’t even say the word.”

2. Just don’t say the A-word | Features | guardian.co.uk Film: “America’s battle over abortion rights is raging on screen. As a new film plays it for laughs, Cath Clarke looks at how the issue is splitting Hollywood”

மோகன்தாஸ் பதிவில்

லின்ட்ஸே லோஹன் மாதிரி இவரும் ஆகிவிடக்கூடாதென்ற ப்ரார்த்தனையும் இருக்கிறது.

தொடர்ச்சியாக மதி கந்தசாமியின் மறுமொழியும் சுவாரசியமூட்டுகிறது.

ப்ரிட்னி ஸ்பியர்ஸ் ஆகட்டும்; தமிழ்நாட்டில் அன்றைய குஷ்பு முதல் இன்றைய நயந்தாரா/மீரா ஜாஸ்மின் வரை ஆகட்டும். தும்மினால் செய்தி; இருமினால் புகைப்படம்; விக்கினால் கிசுகிசு என்று புகழ் பெற்றவர்கள் மீது மட்டுமே வெளிச்சம்.

நேற்றைய ‘சவுத் பார்க்’ கார்ட்டூன் பார்த்தபிறகு ஞானோதயம் வலுப்பட்டது 🙂

நீங்களும் இணையத்தில் கண்டுகளிக்கலாம்: Britney’s New Look – When the boys help Britney Spears get to the North Pole, they discover the shocking secret behind her popularity.

உரிமை துறப்பு: இது சிறுவர்களுக்கு உகந்தது அல்ல. கார்ட்டூன் என்றாலும் பதின்ம வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே உகந்தது.

லின்சே லோகனை சுற்றி சுற்றி அடிக்கிறார்கள்; மெல் கிப்ஸன் வாய் குழறுகிறார்; ரஸ்ஸல் க்ரோவ் ஏவுகணைப் பயிற்சியை நவோமி கேம்பெல்லிடம் கற்கிறார். தினமும் அவல் கிடைக்க ஏக்கம்.

The 10 Most Underreported Humanitarian Crises என்கிறார்கள். என்றாலும், அதையெல்லாம் விட்டுவிட்டு, சோபன் பாபு + ஜெயலலிதா, சற்றுமுன்னில் இன்றைய தேதிக்கு என்ன ரஜினி செய்தி இடலாம் என்றுதான் வாழ்க்கையும் வலைப்பதிவும் வம்பும் ஓடுகிறது.

3 responses to “பிரச்சாரப் படங்களும் பிராபல்ய பித்துக்குளிகளும்

  1. She did what?

    As one starlet after another goes off the rails, what kind of example are they setting for American girls? Maybe a good one. Meet a new cultural force: the anti-role model. (By Ty Burr, Boston Globe)

    Talk : Can kids learn from anti-role models?

  2. Pingback: It happens only in India: பத்து அதிசயங்கள் | Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.