Category Archives: Actors

Hannah Montana & Kamal: Father – Daughter photos

கமல் – சுருதிஹாசன் புகைப்படம் குறித்த விவாதம் அறியாதவர்கள் முதலில் இதை வாசிக்கவும்:
என் பார்வையில்.. – Johan-Paris: கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்…

இப்போது அமெரிக்காவில் புகழ் பெற்ற ஹானா மொன்டானாநாயகி மிலி சைரஸின் சமீபத்திய அப்பா-பெண் புகைப்படம்:
Kamalahasan - Daughter & Father Issues

அது குறித்த சர்ச்சை: Photo no-no controversy – BostonHerald.com

அதே பத்திரிகையில் வெளியாகிய இன்னொரு கலைப்படம்:
miley cyrus Howard Stern

பத்திரிகை பத்தியை வாசிக்க: Miley Knows Best: Entertainment & Culture: vanityfair.com: “Between sold-out concerts, multi-platinum records, and a hit TV series, Hannah Montana star Miley Cyrus has some serious business riding on her 15-year-old shoulders—not to mention paparazzi on her tail and tabloid editors praying for her to pull a Britney.”

சுருக்கமான பின்னணி:

 • ஹானா மொன்டானா‘ பார்த்திரா விட்டால், பள்ளியில் புழு போல் பார்க்கப்படுவதாக என்னுடைய எட்டு வயது மகள் பயப்படும் அளவு புகழ்பெற்ற பதின்ம வயதினருக்கான தொடர்.
 • வழக்கம் போல் இனக்கவர்ச்சி (டேட்டிங்), பாடல் ரசனை, ஆசிரியர் ரகளை என்று டிஸ்னித்தனமாக இருக்கும். அதாவது, தமிழ் கதாநாயகி பாஷையில் சொன்னால், ‘கவர்ச்சிக்கும் புணர்ச்சிக்கும் இடையே உள்ள லஷ்மண் ரேகா’வைத் தாண்டாமல் தொட்டுச் செல்லும்.
 • விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா… நானா‘ போலும் இல்லாமல், சன் தொலைக்காட்சியின் ஜோடிப் பெருத்தம் போலும் இல்லாமல், அதையும் தாண்டி குடும்ப அடிதடிகளை அரங்கேற்றி தற்கொலைகள், மன நல பாதிப்புகள் வரை சம்பந்தப்பட்டவரை இட்டுச் செல்லும் ருசிகரமான நிஜ நாடக நிகழ்ச்சியைத் தொகுத்தளிப்பவர் ‘ஹோவர்ட் ஸ்டெர்ன்‘ (Howard Stern).
 • “The picture disturbs me. It looks like his daughter is his girlfriend. He’s trying to be hot” என்று திருபாட்காஸ்ட் மலர்ந்தருளி இருக்கிறார்.

சிந்தனைவயப்படும் நேரம்:

 • அப்பாவையும் பொண்ணையும் ஃப்ராய்ட்தனமாக பார்ப்பது உலகளாவியது.
 • மகள் நட்சத்திரமாகி விட்டால், ஆதுரமாக புகைப்படம் எடுப்பது உகந்தது அல்ல.
 • புகழ் பெற்றவரை shadenfraude-ஆக குரலெழுப்பினால், பதிவிட சங்கதி கிடைக்கும்.

Cartoons Comics

  பாஸ்டனில் தசாவதாரம்

  ஜூன் ரெண்டாந்தேதி வருதாம்.

  அதுவரை, வாலியின் இந்தப் பாடலை உல்டா செஞ்சுண்டிருங்க… நமச்சிவாய வாழ்க!

  ஓம் நமோ நாராயணாய

  கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
  கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

  எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
  ஐந்தில் எட்டு எண் அறியாது

  அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
  பஞ்ச அட்சரம் பார்க்காது

  ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
  ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்

  (கல்லை மட்டும் கண்டால்)

  இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
  தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

  வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது
  மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது

  இராஜலஷ்மி ராஜ நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
  ஸ்ரீனிவாசன் சேர் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்
  நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
  ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

  (கல்லை மட்டும் கண்டால்)

  நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
  நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

  வீசும் காற்று வந்து விளக்கை அணைக்கும்
  வெண்ணிலாவை அது அணைத்திடுமா?

  கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
  அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?

  சைவம் என்று பார்த்தால தெய்வம் தெரியாது
  தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

  பிரச்சாரப் படங்களும் பிராபல்ய பித்துக்குளிகளும்

  katherine-heigl-picture-2.jpgஇன்னும் ஜூனோ பார்க்கவில்லை.

  ‘Knocked up’ பார்த்து நொந்துபோன நிலையை மீட்பிக்கவாது பார்க்க வேண்டும்.

  அமெரிக்காவில் அபார்ஷன் க்ளினிக் வழியாக நடந்து செல்ல, நடுநிசியில் ‘பூத்’ படம் பார்த்த பிறகு தன்னந்தனியாக மார்ச்சுவரிக்கு செல்லுமளவு தைரியம் வேண்டும். எனினும், ‘நாக்ட் அப்’ மாதிரி படங்கள் ஏன் ‘சூப்பர் ஹிட்’ ஆகின்றன என்பதையும் அமெரிக்க குடிமகன்களின் ரசிப்பை அறியவும் புரிந்து கொள்வதற்காக கண்டு களித்தேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைதான்.

  பார்த்தது என்னவோ, கேத்தரீன் ஹெகலுக்காக.

  அரசல் புரசலாக தொலைக்காட்சி கன்னல் மாற்றும் நிமிடங்களில் “Grey’s Anatomy”-இல் பார்த்தவரை முழுநீள திரைப்படத்தில் கண்குளிர சேவிக்கலாம் என்று எடுத்தேன்.

  குஷ்புவை ஒத்த கொள்கை உடையவர் போல.

  ‘பழனி’ படத்தில் பார்த்த ஓரிரண்டு காட்சிகளில் ‘தமிழ் கலாச்சார பெண்’ போல் நடித்து விட்டு, நிஜத்தில் நேர்மாறாக இருப்பது போல் இவரும் தோன்றி இருந்தார். அங்கே குஷ்பூவிற்கு, கணவனுக்குக் கட்டுப்பட்ட மனைவி வேடம். இங்கே காத்தரினுக்கு, கருக்கலைப்புக்கு ஆதரவான வேடம்.

  பெண்கள் திருமணத்திற்கு முன் பாலுறவு வைத்துக்கொள்வது குறித்து, குஷ்பு உண்மைகளை சொல்லியிருந்தார். கேத்தரினின் சக நடிகர் தற்பால்விரும்பிகளைக் குறித்து இழிவாக நக்கலடித்தபோது, வெளிப்படையாக கண்டித்திருந்தார்.

  ஆனால், இருவருமே நடிப்பில் அத்தகைய வேடங்களை ஏற்று நடிப்பதிலும், மாறுபட்ட கருத்துக்களை வலியுறுத்தும் திரைப்படங்களை முன்னிறுத்துவதிலும் எத்தகைய சமரசமும் இன்றி இணங்கி அடிபணிகின்றனர்.

  வில்லன் வேடம் நிச்சயம் தேவலாம். அல்லது பின்நவீனத்துவ பாஷையில் ‘நல்லவரா/கெட்டவரா’ என்றெல்லாம் தெள்ளத்தெளிவாக விளக்காத பாத்திரத்தேர்வுகளைப் பாராட்டலாம்.

  ஆனால், சர்வநிச்சயமாய் பெண்ணடிமைத்தனத்தை முன்னிறுத்தும் குணச்சித்திரங்களை, பணத்திற்காகவோ, புகழுக்காகவோ, தங்களை நிலைப்படுத்தி வாய்ப்புகளைப் பெறுவதற்காகவோ — சிறுபான்மையினரின் குரலுக்காக நிஜ வாழ்க்கையில் வாய்ஸ் கொடுக்கும் இவர்கள் ஏற்று நடித்து, காம்ப்ரமைஸ் செய்து கொண்டது ஏன்?!

  சமீபத்தில் ‘வைத்தீஸ்வரன்’ குறித்து சரத்குமார், “திரைப்படத்தில் மறுஜென்மம் இருப்பதாக சொல்வதை என்னுடைய கட்சியின் கொள்கையாக, நம்பிக்கையாக கருதக்கூடாது” என்றிருந்தார். இந்த மாதிரி மூடநம்பிக்கை பிரச்சாரப் படங்களில் ஒரு நிலை, சமத்துவமாக முற்போக்கு கொள்கை இருப்பதாக சொல்லிக் கொண்டு கட்சிக்கு ஒரு நிலை, தனிப்பட்ட வாழ்வில் நக்மாவுக்கு ஒரு நிலை என்று இருப்பது கலைஞனுக்கு அவசியம்.

  இல்லையென்றால் செயமோகன் போல் அதோகதிதான்.

  இது போன்ற படங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு(ரொம்பத்தான்!) தவறான முன்னுதாரணமாக இருந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் கடைசியில் இருந்தது. – மோகன்தாஸ்

  தொடர்பான பத்திகளில் சில:

  1. The A-word is absent | Philadelphia Inquirer | 11/25/2007: “Pregnant characters in recent U.S. films not only don’t discuss abortion, they don’t even say the word.”

  2. Just don’t say the A-word | Features | guardian.co.uk Film: “America’s battle over abortion rights is raging on screen. As a new film plays it for laughs, Cath Clarke looks at how the issue is splitting Hollywood”

  மோகன்தாஸ் பதிவில்

  லின்ட்ஸே லோஹன் மாதிரி இவரும் ஆகிவிடக்கூடாதென்ற ப்ரார்த்தனையும் இருக்கிறது.

  தொடர்ச்சியாக மதி கந்தசாமியின் மறுமொழியும் சுவாரசியமூட்டுகிறது.

  ப்ரிட்னி ஸ்பியர்ஸ் ஆகட்டும்; தமிழ்நாட்டில் அன்றைய குஷ்பு முதல் இன்றைய நயந்தாரா/மீரா ஜாஸ்மின் வரை ஆகட்டும். தும்மினால் செய்தி; இருமினால் புகைப்படம்; விக்கினால் கிசுகிசு என்று புகழ் பெற்றவர்கள் மீது மட்டுமே வெளிச்சம்.

  நேற்றைய ‘சவுத் பார்க்’ கார்ட்டூன் பார்த்தபிறகு ஞானோதயம் வலுப்பட்டது 🙂

  நீங்களும் இணையத்தில் கண்டுகளிக்கலாம்: Britney’s New Look – When the boys help Britney Spears get to the North Pole, they discover the shocking secret behind her popularity.

  உரிமை துறப்பு: இது சிறுவர்களுக்கு உகந்தது அல்ல. கார்ட்டூன் என்றாலும் பதின்ம வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே உகந்தது.

  லின்சே லோகனை சுற்றி சுற்றி அடிக்கிறார்கள்; மெல் கிப்ஸன் வாய் குழறுகிறார்; ரஸ்ஸல் க்ரோவ் ஏவுகணைப் பயிற்சியை நவோமி கேம்பெல்லிடம் கற்கிறார். தினமும் அவல் கிடைக்க ஏக்கம்.

  The 10 Most Underreported Humanitarian Crises என்கிறார்கள். என்றாலும், அதையெல்லாம் விட்டுவிட்டு, சோபன் பாபு + ஜெயலலிதா, சற்றுமுன்னில் இன்றைய தேதிக்கு என்ன ரஜினி செய்தி இடலாம் என்றுதான் வாழ்க்கையும் வலைப்பதிவும் வம்பும் ஓடுகிறது.

  Steve Buscemi: Favorite Actors – List

  தூக்கக் கலக்கத்தோடு பட்டியல்.

  1. ஸ்டீவ் புசீமி

  Steve Buscemi - Pencil on newsprint - digitally colored: Um Graphics

  சமீபத்தில் பார்த்தது என்றால் ‘சொப்ரானோஸ்’. வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று ஆரம்பித்து அரை நொடி சறுக்கலில், மீண்டும் அடியாளாக மாறும் குணச்சித்திரம். உழைத்துக் களைக்கும்போது சாதாரண போராட்ட மனிதனின் தோற்றம். தாதா ஆக உருமாற்றம்; பிரமிக்க வைக்கும் ஆளுமை. சொப்ரானோஸ் தொடரின் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் இயக்குவார்கள். இவரும் இயக்கியிருக்கிறார்.

  30 ராக்‘கில் போன வாரம் வந்திருந்தார். நகைச்சுவையும் கைவந்த கலைதான்.

  திரைப்படங்களில் பிக்ஸரின் ‘மான்ஸ்டர்ஸ் இன்க்‘ வில்லன் கதாபாத்திரம் செய்திருக்கிறார்.

  முதல் முதலாக ‘கான் ஏர்‘ படம் மூலமாக எனக்கு அறிமுகமானார். அந்த மசாலப் படத்தின் ஹீரோ/வில்லன்களை மிஞ்சி நினைவில் நின்ற மாந்தராக இருந்தார். அப்புரம் ஃபார்கோ.

  நல்ல மனிதர். செப்டம்பர் 11 -ல் உலக வர்த்தக மையம் வீழ்ந்த அடுத்த நாள். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பதற்காக தன்னார்வலராக வந்திருக்கிறார். அனுதினமும் களத்தில் இறங்கி சுத்தம் செய்வதில், தீயணைப்பு வீரர்களுக்கு உதவுவதில், தன்னை வெளிப்படுத்தாமல் பன்னிரெண்டு மணி நேர ஷிப்ட்களில் வேலை செய்திருக்கிறார்.

  நேர்காணல்: Steve Buscemi (I) | Interviews | Guardian Unlimited Film

  “I don’t tend to think of these characters as losers [I play]. I like the struggles that people have, people who are feeling like they don’t fit into society, because I still sort of feel that way.”

  இதே வரிசையில் இன்னும் சிலரை பட்டியல் மட்டும் போட்டு வைத்து, பிறகு தொடரும் எண்ணத்தில்:

  2. வில்லியம் எச் மேஸி (William H. Macy)

  3. நானா படேகர்

  4. வுடி ஹாரல்ஸன் (Woody Harrelson)

  5. ஷான் பென் (Sean Penn)

  கடைசியாக சிலரைச் சொல்லாமல் இருக்க முடியாது:

  10. டென்சல் வாஷிங்டன் (Denzel Washington)

  9. மைக்கேல் டக்ளஸ் (Michael Douglas)

  8. ஆல் பசினோ (Al Pacino)

  7. ஜான் ட்ரவோல்டா (John Travolta)

  6. டாம் க்ரூஸ் (Tom Cruise)