Tag Archives: Asokamithran

Asokamithiran on Jeyamohan

தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?”

ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக்கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுது வதும் பேசுவதும்… ம்ஹூம்…”

அசோகமித்திரனின் கதைகளில் சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கும். அதையே அவர் நேரடியாக பெயரைக் குறிப்பிட்டு சொல்லி இருந்தால் ஜெயகாந்தன் போல் புகழ் அடைந்திருப்பார். உதாரணத்திற்கு விழா மாலைப் போதில் எடுத்துக் கொள்ளலாம்.

அதில் சொல்லப்பட்டவர்களை அடையாளம் காட்டி ஆங்கிலக் கட்டுரை எழுதி இருக்கலாம். குஷ்வந்த் சிங் மாதிரி கவனம் பெற்றிருப்பார்.

அதை அசோகமித்திரன் விரும்பியதில்லை. அதனால்தான் ‘படைப்புகளைத் தாண்டி எழுதுவதும் பேசுவதும்’ அவருக்கு உவப்பாய் இருக்கவில்லை.

‘செய் அல்லது செய்தவரை சுட்டிக் காட்டு’ விரும்பிகள் ஒரு பக்கம். ‘என் கடன் எழுதி கிடப்பதே’ இன்னொரு பக்கம்.

மெய் பொய்

அசோகமித்திரன்

asokamiththiran-young_solvanam_thanks

புகைப்படம்: சொல்வனம்

பிப்ரவரி மார்ச்சு மாதங்களில் எனக்கு நோய் பிடுங்கித் தின்கிறது. இதுவரை பத்துப் பன்னிரண்டு முறை ஆயிற்று. ஓர் ஆண்டு சுரத்துடன் காலும் நடக்க முடியாமற் போய் முடங்கிக் கிடந்தேன். ஒரு முறை மஞ்சள் காமாலை. எப்போதும் ஆஸ்துமா.

இப்படி நோய்கண்டு படுத்திருக்கும் நாட்களில் அதிகம் எழுத முடிவதில்லை. ஒரு முறை மட்டும் மூன்று சிறுகதைகள் எழுதினேன். அது 1962ஆம் ஆண்டில். டைபாயிடு சுரம். டைபாயிடு என்று கண்டறியக் காலதாமதம் ஏற்பட்டு விட்டது. அதனால் இரு மாதங்கள் படுக்கையோடும் மருந்தோடும் கிடக்க நேர்ந்துவிட்டது.

1961-1962ஆம் ஆண்டுகள் எனக்கு ஒரு திருப்புமுனைக் காலம். உலகமே ஏதோ முடிவுக்கு வந்துவிடுவது போன்ற எண்ணம். இருமுறை வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டேன். இலட்சக்கணக்கில் சில ஜபங்கள் செய்து முடித்திருந்தேன். ஏதோ நாளைக்கே யாரிடமோ கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்கிற பரபரப்பு. அப்போது சுரம் வந்தது. முதலில் நாள் கணக்கில் விடாத அசாத்தியமான தலைவலி. அப்புறம் இதர உபாதைகள். படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது என்கிற நிலை. சுரம் இறங்கிய பிறகும் மூன்று வாரங்களுக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்கக் கூடாது என்றார்கள். அப்போதுதான் அந்த மூன்று கதைகளை எழுதினேன். பரபரப்பு கணிசமாக அடங்கிப் போயிருந்தது. சுரம் வந்து படுத்த படுக்கையாகக் கிடந்திராவிட்டால் ஏதாவது ஏடாகுடமாக நடந்திருக்கக்கூடும்.

ஆனால் அந்த மூன்று கதைகளைச் சுரம் வந்துதான் எழுதியிருக்க வேண்டுமென்பதில்லை. நான் அவற்றைப் பற்றி முன்பே நிறைய யோசித்து வைத்திருந்தேன். ஆனால் கதைகளைப் பொறுத்த வரையில் நாம் எவ்வளவுதான் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாலும் அவை நம் மனதில் ஓர் உருவம் பெறவேண்டும். உருவமும் ஓரளவுக்கு மொழிநடையும் கதைக்குக் கதை மாறும். மாறவேண்டும். உண்மையில் படைப்பிலக்கியத்தில் இந்த உருவம் அமைவது மிகக் கடினமான பகுதி. அதற்காக நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

‘நம்பிக்கை’, ’தப்ப வேண்டியதில்லை’, ‘பிரயாணம்’ ஆகிய இந்த மூன்று கதைகளையும் நான் 1950ஆம் ஆண்டு அளவிலேயே எழுதத் தீர்மானித்து விட்டேன். ஆனால் 1962ல் தான் மூன்றையும் எழுத முடிந்தது. ‘பிரயாணம்’ கதையை முடிக்க இன்னும் கூடச் சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

இப்போது இம்மூன்று கதைகளைப் பரிசீலனை செய்து பார்க்கும்போது எனக்குச் சிலப் பொதுச் சரடுகள் தென்படுகின்றன. மூன்றிலும் ‘நான்’ வருகிறேன். முதலிரண்டில் பார்வையாளனாகவும் கதை சொல்பவனாகவும்; மூன்றாவதில் கதையிலேயே பங்கு பெறுபவனாக. மூன்றிலும் சாதாரண மானிட நிலைக்கு அப்பாற்பட்டதொன்றைத் தேடும் முயற்சி. ‘நம்பிக்கை’ சம்பிரதாயச் சாமியார் ஒருவரை முன் வைத்து எழுதியது. ‘தப்ப முடியாதது’ ஒருவன் தன் செயலாற்றாமையை ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறும் Choiceless awareness நிலை எனத் தனக்குத் தானே ஏமாற்றிக் கொள்வது பற்றியது. மூன்றாவது கதையாகிய ‘பிரயாணம்’ ஹட யோக அப்பியாசங்களினால் சமாதி நிலையை எட்டிய போதிலும் அது சாத்தியமாகாமல் போகுமோ என்ற ஐயத்தை உட்கொண்டது. மூன்றிலும் நோயும் சாவும் வருகின்றன. ஆனால் இவைதான் முக்கிய அம்சங்கள் என்றில்லை.

நோய் என்னும் எண்ணத்தை எளிதில் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. நோய்க்கான அறிகுறிகள் தோன்றினால் கூட மனம் ஏற்றுக்கொள்ள எதிர்க்கிறது. ஆரோக்கியம் என்பதே நாம் ஆரோக்கியமற்றுப் போகும்போதுதான் உணருகிறோம் என்கிறார்கள். ஆனால் ஓர் அடிமன நிலையில் நாம் என்றும் ஆரோக்கியம் பற்றிய நினைப்பு உடையவர்களாக இருப்பதால் தான் நோயை ஏற்க நம்மையறியாமலேயே நம்முள் எதிர்ப்பு ஏற்படுகின்றது. ஆனால் விரைவிலேயே ஒரு சமரசமும் செய்துகொண்டு விடுகிறோம். நோய் பற்றி நாம் அளவு மீறி அலட்டிக் கொள்வதில்லை.

நோய் நிலையை ஏற்க மறுத்த ஒரு மேற்கத்தியர் நினைவு வருகிறது. எர்னஸ்ட் ஹெமிங்வே. 1940களின் இறுதியில் அவர் புகழேணியின் உச்சியில் இருந்தார் — பிரமுகராக, எழுத்தாளராக, போர் வீரராக. அப்போது பிலிப் யங் என்னும் ஓர் இளம் பட்டதாரி டாக்டர் பட்டத்துக்கென (Ernest Hemingway: A Reconsideration – Philip Young – Google Books) ஹெமிங்வே படைப்புகளை ஆராய்ந்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஹெமிங்வேயின் ஆதரவு இருந்திருக்கிறது.

ஆனால் நிலைமை மாறத் தொடங்கியிருந்தது. சுமார் இருபது வருட காலம் அதிகம் பிரபலமடையாமல் ஒதுங்கியிருந்த வில்லியம் ஃபாக்னர் திடீரென்று ஓர் உலக எழுத்தாளராகக் கண்டெடுக்கப்பட்டார். காரணம் மால்கம் கவ்லி என்னும் விமர்சகர் ஃபாக்னரின் பல்வேறு நூல்களிலிருந்து சிறப்பானவற்றைத் தொகுத்து, தொகுப்புக்கு விமர்சன அணிந்துரையும் எழுதி வெளியிட வழி செய்தார். இப்போது ஃபாக்னருக்குக் கிடைத்த கவனம் மற்றெல்லா அமெரிக்க எழுத்தாளர்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டது. அது மட்டுமல்ல. 1949-ஆம் ஆண்டு நோபல் பரிசு ஃபாக்னருக்கு அளிக்கப்பட்டது.

ஹெமிங்வேயுக்கு இன்னொரு அடி. பத்தாண்டுக் காலம் காத்திருந்த அவருடைய வாசகர்களுக்கு அவர் அடுத்து வெளியிட்ட நாவலான ‘அக்ராஸ் தி ரிவர் அண்ட் இண்டு தி ட்ரீஸ்’ கொஞ்சமும் பிடிக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தவர்களெல்லாம் அந்த நாவலை மட்டந்தட்டினார்கள். ‘நியூயார்க்கர்’ பத்திரிகை ஒரு கேலிக் கட்டுரை கூட (The Moods of Ernest Hemingway – The New Yorker) எழுதி வெளியிட்டது. நான் இந்த நாவலைப் படித்தேன். வழக்கமாகவே ஹெமிங்வேயின் கதாநாயகிகள் பலகீனமான வார்ப்புகள் — இதிலும் அப்படித்தான். ஆனால் நாவல் பல இடங்களில், கவிதை நயம் தொனிக்க இருந்தது. அது வரை அவர் அனுபவித்த முக்கியத்துவத்திற்காகவே ஹெமிங்வே பழி வாங்கப்படுவது போலத்தான் தோன்றியது. இந்த வேளையில் பிலிப் யங் ஆராய்ச்சி. பிலிப் யங் அநேகமாக ஹெமிங்வே படைப்புகளையே சார்ந்துதான் அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதியிருந்தார். அதன் முக்கிய சாராம்சம் ஹெமிங்வே 1918ல் பலமாகக் குண்டடிபட்டு படுத்த படுக்கையாகக் கிடந்ததன் அதிர்ச்சி, அவர் படைப்புகள் அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது என்று வாதிட்டிருந்தார். இதை Trauma theory என்று குறிப்பிட்டிருந்தார். இதையும் நான் படித்தேன். மிகவும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருந்தது. திடீரென்று தன் செல்வாக்கு குறைந்திருக்கும் இந்த வேளையில் இந்த Trauma theory மேலும் குழப்பம் விளைந்திருக்கும் என்று ஹெமிங்வேகருதியிருக்க வேண்டும். யங் ஆராய்ச்சிக்குத் தன் ஆதரவைத் தராததோடு யங் டாக்டர் பட்டம் பெறுவதையும் ஹெமிங்வே எதிர்த்தார் என்று யங் குறை கூறியிருக்கிறார்.

இதற்கெல்லாம் மேலாக ஹெமிங்வே உண்மையிலேயே அப்போது நோயுற ஆரம்பித்தார். முதலில் ஏதோ சரும எரிச்சல், அலர்ஜி என்றிருந்தது. இறுதியில் புத்தி தடுமாற்றம் வரை கொண்டு விட்டிருந்தது. எப்படியோ பெரும்பாடுபட்டு அடுத்த நாவலை எழுதி வெளியிட்டார். ‘தி ஓல்ட் மான் அண்ட் தி ஸீ’. ‘அக்ராஸ் தி ரிவர் …’ நாவல் பகிஷ்கரிப்புக்குப் பரிகாரம் செய்வது போல் இப்புது நாவலை எல்லாரும் ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்கள். விமரிசகர்கள் பரிசு, புக் கிளப் தேர்வு, புலிட்ஸர் பரிசு, எல்லாவற்றிற்கும் மேலாக நோபல் பரிசு.

இதெல்லாம் ஏதோ தற்காலிகமாகத்தான் ஹெமிங்வேயுக்கு ஆறுதல் அளித்திருக்க வேண்டும். அவருடைய உடல், மனநிலை தொடர்ந்து பேதமுற்றது. மாதக் கணக்கில் வைத்திய விடுதியில் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. அவர் அந்த ஆண்டுகளில் அவ்வப்போது எழுதிய படைப்பிலக்கிய எழுத்தை அவர் பிரசுரிக்கவில்லை. நோபல் பரிசு பெற்று ஏழாண்டுகளுக்குப் பிறகு, 1961-ஆம் ஆண்டில் மனச்சோர்வையும் நம்பிக்கை வரட்சியையும் தாங்க மாட்டாமல் தற்கொலை செய்துகொண்டு இறந்தார், அவருடைய வாழ்நாளெல்லாம் திடகாத்திரமும் தன்னம்பிக்கையும் சாகசமும் உற்சாகமும் ஒரு சேர இருப்பவர் என்ற தோற்றத்தை நேரடியாகத் தன் படைப்புகள் மூலமாகவும் மறைமுகமாக அவருடைய சாகசச் செயல்கள் பற்றிய செய்திகள் மூலமாகவும் உண்டு பண்ணியிருந்த ஹெமிங்வே இந்த முடிவு அடைந்தது உலகுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

உண்மையில் ஹெமிங்வே அவ்வளவு பீதியடைந்திருக்க வேண்டியதில்லை. அவருக்குப் படைப்பிலக்கியத்தில் ஒரு சாசுவதமான இடம் உண்டு. அவருடைய நாவல்கள் அநேகமாக நிராகரிக்கப்பட்டு விட்டாலும் அவருடைய சிறுகதைகள் இன்றும் சிறப்பான இலக்கியமாகவே கருதப்படுகின்றன, பயிற்றுவிக்கப்படுகின்றன. அவர் படைப்பு பற்றிய பல கண்ணோட்டங்களில் யங் தந்த trauma theoryயும் ஒன்று; இதற்கு அதற்கு மேல் முக்கியத்துவம் இல்லை.

ஆனால் நோய்வாய்ப்பட்டவர்களின் மனம் எப்படியெல்லாம் செயல்படும் என்று யாரால் நிச்சயமாகக் கூற முடிகிறது? இதில் கலாச்சாரப் பின்னணியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்து இந்திய எழுத்தாளர்கள் யாரும் நோயால் இப்படி நிலை தடுமாறிப் போய் விடவில்லை. நம் மொழியிலேயே கு.ப.ரா., புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி போன்றோர் நெடுங்காலம் நோயால் அவதியுற்றார்கள். சுந்தர ராமசாமியாவது ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார், தான் நோய்வாய்ப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு. ஆனால் இவர்களும் இன்னும் பல இந்திய எழுத்தாளர்களும் தாம் அனுபவிக்க நேர்ந்த நோயை விஸ்தரித்து எழுத வேண்டும் என்ற எண்ணம்கூட கொண்டிருக்கவில்லை. தற்கொலை செய்து கொள்ளவில்லை.

வெகு நுண்ணியமான வகையில் இந்தியக் கலாச்சாரத்தின் மதிப்பீடுகள், முக்கியமாக இந்த உடல், ஜன்மம் பற்றிய மதிப்பீடுதான், நம் இலக்கியத்தில், அதுவும் தற்கால எழுத்தில் கூடச் செயல்படுகிறது என்று கூறத் தோன்றுகிறது. காயமே இது பொய்யடா என்பது அவ்வளவு வேரூன்றியிருக்கிறது.

வெளியான விவரம்: தமிழில் சிறு பத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்

1973 ஏப்ரல் மாதம், மாத இதழாகத் திட்டமிடப்பட்டுத் தோன்றிய சுவடு-வின் ஐந்தாவது இதழ் டிசம்பர் மாதம்தான் வெளிவர முடிந்தது. அந்த இதழ் தனிச் சிறப்பு உடையது. படைப்பாளி லா.ச.ராமாமிருதத்தின் தத்துவத் தேடல்கள் என்ற பேட்டிக் கட்டுரை அதில் வந்தது. அத்துடன் மூன்று பல்கேரியப் படங்கள் பற்றி எஸ். ஏ. ராம் விரிவான கட்டுரை எழுதியிருந்தார்.

சுவடு அந்தக்கால ஆனந்தவிகடன் அளவில் வந்தது. ஆரம்பத்தில் 24 பக்கங்களும், பின்னர் 32 பக்கங்களும் கொண்டிருந்தது. அதன் ஏழாவது இதழ் இரண்டாம் ஆண்டுச் சிறப்பிதழ் என்று 56 பக்கங்களோடு வந்தது. அதில் ஈழத்து இலக்கியங்கள்- ஓர் அறிமுகம் (ஜவாது மரைக்கார் ), மெய்-பொய் (அசோகமித்திரன்), வார்த்தைகளும் வாழ்க்கையும் (மெளனி கதைகள் பற்றி-அகல்யா), ஞானபீடம் பரிசு பெற்ற சச்சிதானந்த ஹீரானந்த வாத்ஸ்யாயன்- ‘ஆக்ஞேய பற்றிய அறிமுகம் (என். ஸ்ரீதரன்), டில்லியில் ஏழாவது உலகத் திரைப்பட விழா ( கலாஸ்ரீ) ஆகிய கட்டுரைகள் உள்ளன. நா. விச்வநாதன் கவிதைகள் – நான்கு பக்கங்கள் மற்றும் புவியரசு, கலாப்ரியா, அபி, கிவி கவிதைகள். சுந்தர ராமசாமி, பா. செயப்பிரகாசம், வா. மூர்த்தி கதைகள் இவற்றுடன் இம்மலர் வெளி வந்திருந்தது.

தொடர்புள்ள பதிவுகள்:

1. எழுத்தாளர் ஜெயமோகன்: அசோகமித்திரனின் ‘பிரயாணம்’

2. ஜெகதீஷ் குமார்: அசோகமித்திரனின் பிரயாணம்

3. Hemingway, Style, and the Art of Emotion – David Wyatt – Google Books

4. William Faulkner on Ernest Hemingway
“He has never been known to use a word that might send a reader to the dictionary.”

5. Ernest Hemingway on William Faulkner
– “Poor Faulkner. Does he really think big emotions come from big words?”
– ‘Have you ever heard of anyone who drank while he worked? You’re thinking of Faulkner. He does sometimes — and I can tell right in the middle of a page when he’s had his first one.’

மூன்று கதைகள்: எஸ்ரா, அமி & ஹபி: மிக மிகச் சிறிய குறிப்புகள்

1. சிறுகதை: நாடக தினம் | காலச்சுவடு: அசோகமித்திரன்

இதே கதையை வேறு எவராவது எழுதியிருந்தால், புது எழுத்தாளர் கொடுத்திருந்தால், வலைப்பதிவர் மின்னஞ்சலாக அனுப்பியிருந்தால் எவரும் பிரசுரித்திருக்க மாட்டார்கள்.

ஃப்ரோசன் பரோட்டாவை மைக்ரோவேவில் வைத்து கொடுத்த மாதிரி வந்திருக்கும் இந்தப் புனைவில், அப்படி என்ன உள்ளே பொதிந்து உள்ளது என்று விளக்கினால், மறைபொருளை வெளிப்படுத்தினால் காலாகாலத்திற்கும் நன்றி சொல்வேன்.

~oOo~

2. உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்

முதல் தடவை வாசித்தால் எளிமையான செய்தியை எழுதியது போல் புரிகிறது.

கதையாக நினைத்து மீண்டும் படித்தால் என்னென்ன புரிகிறது என்று விலாவாரியாக சொல்லமுடியவில்லை. அவசியம் வாசிக்கவேண்டிய வெகு நேர்த்தியான ஆக்கம்.

பிரசங்கி. பெயர் எம். சிறுவர்களுக்கு சாத்தான். இரு வான்கோழி நைவேத்தியம். மகள்களின் மெழுகுவர்த்தி உற்பத்தி. பிச்சைக்கார கடவுள். கனவு நரகம்.

~oOo~

3. ஹரன்பிரசன்னா – வடக்கு வாசல் – “அங்குமிங்குமெங்கும்”

முஸ்தீபு படு ஜோர். முடிவு படு திராபை.

பதிவு எழுதும்போது பாதியில் ‘limit exceeded’ என்று கழுத்து நெறிப்பது போல் அசௌகரியமான மென்னிப் பிடித்து திருகி விட்டுச் சென்றுவிட்டார்.

வித்தியாசமான நாயகர். பழக்கமான குடும்பம். இலயிக்க வைக்கும் விவரிப்பு. இவ்வளவு இருந்தும் க்ளைமேக்ஸ் கொடுக்கத் தெரியாத பாரதிராஜா படம்.

Writer Dilip Kumar Meet

திலீப்குமார் பாஸ்டன் பக்கம் எட்டிப்பார்த்து பல மாதம் ஆகிவிட்டது. நினைவில் இருப்பதை சேமித்து வைக்கும் முயற்சி.

 • தமிழ் எழுத்தாளன் வெளிநாட்டுக்கு சென்ற சம்பவம்: நடுவராகப் பணியாற்ற அயல்நாடு அழைத்திருக்கிறார்கள். நள்ளிரவில் கிளம்பும் விமானத்தில் பயணம். இரவு பத்து மணிக்கு வரும் தண்ணீர் லாரியில் இரு குடம் நிரப்பி மூன்று மாடிப்படி ஏறி வீட்டில் வைத்துவிட்டுக் கிளம்புவதாக திட்டம். வழக்கம் போல் அரை மணி நேரம் தாமதமாக வராமல் கால் மணிநேரம் மட்டுமே தாமதமாக தண்ணீர் கொடுக்கப்பட்டதால் விமானத்தைப் பிடிக்க முடிந்தது.
 • ஆசான் மௌனி? : நன்றி – (மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்: ஜெயமோகன்) மெளனி மீதான முதல் முக்கிய விமரிசனம் இலக்கிய சிந்தனை அமைப்புக்காக திலீப் குமாரால் எழுதப்பட்டு அன்னம் விடுதூது இதழில் அச்சான கட்டுரைதான். அது பிறகு ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ என்றபேரில் நூலாக வானதி வெளியீடாக வந்தது. மெளனியை மிதமிஞ்சி பாராட்டுபவர்களையும் அவரை முற்றாக நிராகரிப்பவர்களையும் நிராகரிக்கும் திலீப்குமார்:

‘என்னைப்பொறுத்தவரை ஒரு தேர்ந்த வாசகன் இலக்கியத்தை அணுகும்போது பரபரப்புக்கோ புல்லரிப்புக்கோ ஆளாகமாட்டன் என்றே நம்புகிறேன். மாறாக இலக்கியத்தின் வரையறைகளையும் வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான இடைவெளியையும் உணர்ந்தவனாகவே அவன் இருப்பான்’.

 • நண்பன் அசோகமித்திரன்: தான் பார்த்த அன்றாட விஷயத்தை அ.மி. எப்படி மாற்றுப்பார்வை என்னும் நுண்ணிய கவனிப்பு கொண்டு தன் கருத்தை, தன்னுடைய ஆதங்கத்தை, சமூக கோபத்தை கனல் கக்காமல்; அதே சமயம் வீரியம் குறையாமல்; சத்தமாக மட்டும் பேசி அனல் அடிக்காத பேச்சுநடையில் பகிர்ந்த நிகழ்வுகளை சொன்னார். கசப்பு இருக்கும்; ஆனால் கசண்டு போகாத பார்வை.
 • பால்யகாலம்: கரடுமுரடான இளமை அமையாதவர்கள் நல்ல படைப்பாளியாக முடியாது என்னும் என் நம்பிக்கையை திலீப் உறுதி செய்கிறார். பெரும்பணத்தையும் ஏழ்மையையும் சடாரென்று சட்சட்டென்று உடனடியாக அனுபவித்தது; அணா அணாவாக சேர்த்து ஜெயகாந்தனின் ‘ஞானரதம்’ படிக்கும் இலக்கிய தாகம்.
 • திலீப் குமாரின் கோயமுத்தூர்: ஏதோ பேசிய ஞாபகம் இருக்கிறது. சொந்த விஷயமாக இருக்கும்.
 • கணையாழி: கணையாழியில் முதல் கதை வெளியான குதூகலம்; கைக்கு கிட்டிய சன்மானம், வாய்க்கு கிடைக்காத அவஸ்தைகள்; தொகுப்பது, இதழ்களை சேமிப்பது, பிடித்ததை பாதுகாப்பது என்று தொடரும் தமிழ் சேவை என நிறைய பகிர்ந்தார்.
 • ‘க்ரியா’ பதிப்பகமும் ஜி நாகராஜனும்: பேராசிரியர் நாகராஜனின் மதுரைக் காலம், கதை எழுதும் விதம், நாவன்மை, பேச்சு சாமர்த்தியம், சென்னை விஜயங்கள்.
 • நாடகத்தில் அசோக மித்திரன்: அந்த நாடகத்தில் அவரும் துக்கினியூண்டு கதாபாத்திரமாக இருந்திருக்கிறார். ‘பரீக்சா’ குழு நாடகம் முடிந்த அடுத்த நாள் ‘போஸ்ட் மார்ட்டம்’ என்னும் தலைப்பில் அலசல் நடத்தும். பேருந்து நிலையத்தில் அமி.யைப் பார்த்த சகநடிகர், ‘நாளைக்கு போஸ்ட் மார்ட்டம் இருக்கு. வந்துடுங்க!” என்கிறார். ‘நாடகம் இறந்தால், செஞ்சுத்தானே ஆகணும்’, என்று துளிக்கூட சிரிப்பு வராத நகைச்சுவை.
 • ‘மறுப்பதற்கு தைரியம் வேண்டும்’: ‘எதையும் ஒப்புக் கொள்வது சுலபமானது. “பேச வருகிறாயா?” என்றழைத்தவுடன் பிகு செய்து பின் வந்துவிடுவது; “எழுத இயலுமா?” என்றவுடன் கேட்டதை ஆக்கித் தந்துவிடுவது என்பது இயல்பு. கடினமான காரியமல்ல! ஆனால், “செய்ய மாட்டேன்!” என்று புறக்கணித்து ஒதுங்கிவிடுவது அனைவராலும் இயலாது’ என்றார்.
 • கவிதைக்கும் கதைக்கும் உள்ள வித்தியாசம்: தன்னுடைய அனுபவத்தை அப்படியே கொடுப்பது கவிதை என்று சொன்னதாக நினைவு. (சந்திப்பு முடிந்தவுடனேயே எழுதியிருக்க வேண்டும் 😦
 • மொழிபெயர்ப்பு பற்றாக்குறை: ‘தமிழில் வெளியாகியுள்ளதை ஆங்கிலத்தில் மொழியாக்குவது மிக மிகக் குறைவு. இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். நோபல் போன்ற பரிசு இருக்கட்டும். குறைந்தபட்ச கவனிப்பு கிடைக்கவாவது நல்ல மொழிபெயர்ப்புகள் ஆயிரக்கணக்கில் செய்யவேண்டும். எத்தனையோ பொக்கிஷங்களும் எழுத்தாளர்களும் தமிழிலக்கியமும் வெளியே தெரியாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்’.
 • தேடல், அடுத்த புத்தகம், தொடரும் பயணம்: பாரதியாருக்கு முன் எவ்வகையான சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன என்னும் தேடலில் பல புனைவுகளை நூலகம் நூலகமாகத் தேடி கண்டுபிடித்து மொழிபெயர்த்து வருகிறார். 1800களில் துவங்கி இன்று வரையில் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க நூறு சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களை மீண்டும் வாசித்து தொகுத்துவருகிறார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தற்காலத் தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சியை ஆங்கில வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் தற்பொழுது மும்முரமாக இயங்கி வருகிறார்.

தொடர்புள்ள பதிவுகள்:

1. எழுத்தாளர் திலீப்குமார் ஓர் இலக்கியச் சந்திப்பு: பாகிரதி சேஷப்பன்

2. திலீப் குமார்மதுசூதனன் தெ.

3. புத்தக விமர்சனம்: கடவு – திலீப் குமார்: மனுபாரதி

4. அ) சிறுகதை: கடிதம் – திலீப் குமார்

ஆ) கண்ணாடி Thinnai: திலீப் குமார்

5. செய்தி: Thinnai: “திலீப் குமாருக்கு விருது: எஸ். அருண்மொழிநங்கை

6. SAWNET: Book Review: A Place to Live – Contemporary Tamil Short Fiction: “Edited by Dilip Kumar; Penguin India — Review by Vaijayanti Gupta”

7. Book Reviews: The Hindu : Contemporary concerns: “These stories take you on an exciting journey, and you traverse a whole gamut of human experience and emotions that reflect the changing Tamil milieu.'”

8. Buy Dilip’s book: Bagchee.com: A Place to Live: Contemporary Tamil Short Fiction: Books: Dilip Kumar (ed.)Vasantha Surya (tr.): Innumerable strands of ethnic, regional and universal experiences are woven together in this collection of fine short fiction spanning four decades – 1960-1990-in which the short story emerged as the definitive genre of modern Tamil literature. Twenty-nine famous names are represented here-from Rajanarayanan to Paavannan and many others who have encapsulated the joys, sorrows, and peculiar challenges of life in Tamil Nadu.

9. Interview with Dilipkumar:

திலிப் குமார் (47) தீவிர வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். எழுத்து முயற்சிகளில் அசுர வேகம் கொண்டவரல்லர். ஆனால், துவரை ‘மூங்கில் குருத்து’ (1985), ‘மெளனியுடன் கொஞ்ச தூரம்’ (1992), ‘தற்காலத் தமிழ்ச் சிறுகதை’ (ஆங்கிலம்), ‘மொழி பெயர்ப்பு சிறுகதைகள்’ (பதிப்பாசிரியர்) போன்ற தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

என் குடும்ப சூழ்நிலை காரணமாகக் கல்வி வாய்ப்பை 14 வயதிலேயே இழந்தவன். எனக்கு தமிழ், குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய எந்த ஒரு மொழியிலும் சரியான தேர்ச்சி இருக்கவில்லை. வறுமை காரணமாக அடித்தட்டு தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு, தமிழ்மொழி, தமிழ் கலாசாரம் இவற்றின் மீது என்னை ஈடுபாடு கொள்ள வைத்திருக்கிறது. மூன்றாம் வகுப்பு வரை தமிழ் படிக்க நேர்ந்தது. எனது சுய முயற்சியால் தமிழ் மொழியைக் கற்க முற்பட்டேன். ஆனால், எனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை.

பின்னர் நவீன தமிழ் இலக்கியத்தில் படிப்படியாகப் பரிச்சயம் கொள்ள நேர்ந்தது என்பது ஒரு புதிர் மிகுந்த தற்செயல் நிகழ்வுதான். மொழி அறிவு சார்ந்த என் குறைபாடுகளையும் மீறி நான் எழுதுவதற்கு உந்தப்பட்டேன். எனது மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரது கதைகளை அன்று முதன்முதலாக படித்த பொழுது மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானேன். என் அனுபவ உலகத்திற்கும் இவர்கள் தங்கள் கதைகளில் பிரதிபலித்த உலகத்துக்கும் மிகப் பெரிய ஒற்றுமை இருப்பதாக நான் உணர்ந்தேன்.

நான் எழுதத் துணிந்தமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. பொருளாதார காரணங்களினால் எங்கள் சமூகத்தினரிடையே எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருந்த ஒதுக்கம், கல்வி இழப்பு, என் தனிப்பட்ட குறைபாடுகள் இவற்றால் எனக்குள் தோன்றியிருந்த தாழ்வு மனப்பான்மை இந்தப் பின்புலத்திற்கு எதிர்வினையாக என் தனித்துவத்தை அடையாளப்படுத்தக் கூடிய சாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாகவும் எழுத்தை நான் மேற்கொண்டேன்.

ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான தகுதிகள் பல என்னிடம் இல்லை என்பதை நான் உணர்ந்திருந்தேன் என்றாலும் சக மனிதர்கள் மீது உண்மையான பரிவு, தமிழ் வாழ்க்கையின் அன்றைய யதார்த்தங்கள் பற்றிய புரிதல், மனித இயல்பின் வினோதங்கள் குறித்த ஏற்புடைமை, நகைச்சுவை உணர்வு இவற்றின் கலவையான ஒரு பண்பு என்னிடம் இருந்தது. இதைக் கொண்டே நான் என் இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டேன். மற்றபடி எந்த இலக்கியக் கொள்கையோடும் என்னை நான் இணைத்துக் கொண்டு செயல்பட்டதில்லை.

10. ஜெயமோகன் என்ன சொல்கிறார்:

பல்வேறு வடிவங்களில் எழுதிய, பல்வேறு சூழல்களை சித்தரித்த, பல்வேறு தத்துவ நோக்கை வெளிப்படுத்திய படைப்பாளிகளை ஒரேசமயம் நம்மால் பொதுவாக ஏற்கவும் ரசிக்கவும் முடிவது ஏன் என்று வினவும் திலீப் குமார் ‘இவர்களுடைய இலக்கியசெயல்பாடுகளுக்கு பின்னிருந்து இயக்கிய் ஓர் அற இயல்புதான் அது ‘ என்று அதை அடையாளம் காண்கிறார். அதேசமயம் அந்த அற இயல்பு ‘தன்னளவில் தன்மையற்றது ‘ என்று சொல்லி அது அவ்வெழுத்தாளன் செயல்பட்டகாலம் அவனது நோக்கு அவனது படைப்பியல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப அவனுள் முளைப்பது என்றும் சொல்கிறார்.

இப்பார்வையினால்தான் ஒரு மார்க்ஸிய எழுத்தாளனும் மார்க்ஸிய எதிர்ப்பு எழுத்தாளனும் தன்னை ஒரேசமயம் வசீகரிப்பதை புரிந்துகொள்ளமுடியும் என்கிறார்.

11. ஞாநி:

எழுத்தாளர் திலீப்குமாருடன் சில மாதங்கள் முன்பு மதிப்பீிடுகள் பற்றிய மிக அந்தரங்கமான நெகிழ்ச்சியான உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது சுமார் பதினைந்தாண்டுகள் முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்ந்தார்.

அவருக்குத் தெரிந்த ஒரு பதிப்பாளர் மிகுந்த பொருட் செலவுடன் வெளியிட்டிருந்த ஒரு வ்ிசேடமான நூலுக்கு தமிழக அரசின் ஒரு துறையிலிருந்து ஆயிரக்கணக்கான பிரதிகளுக்கு ஆர்டர் கிடைக்கிற தருணத்தில், துறை அதிகாரி பதிப்பாளரின் பிரதிநிதியிடம் ஆர்டர் மதிப்பில் பத்து சதவ்ிகிதம் லஞ்சமாக வேண்டும் என்றும், அந்தத்தொகையைக் கொடுத்து விட்டால், மறு கையில் அரசின் காசோலையைப் பெற்றுச் செல்லலாம் என்றும் கூறுக்ிறார்.

பிரதிநிதி தயங்குகிறார். அதிகாரி வியப்படைகிறார். சென்று முதலாளியிடம் சொல்லிக் கேட்டுக் கொண்டு வரச் சொல்கிறார். பிரதிநிதி தன் முதலாளியான பதிப்பாளரிடம் தெரிவிக்கிறார். கடுமையான நிதி நெருக்கடியிலும், அன்புக்குரிய நண்பரின் உடல் நிலைப் பிரச்சினையாலும் துயரப்பட்டுக் கொண்டிருந்த அந்த பதிப்பாளர் அரசுஅதிகாரியின் பேரத்தை மறுத்து விட்டார். பேரத்தை ஏற்றிருந்தால் அத்தனை ஆண்டுகளாக அந்தப் பதிப்பகத்துக்கு ஏற்பட்டிருந்த மொத்தக் கடனும் தீர்ந்துபோய் கணிசமான லாபம் கிட்டியிருக்கும். லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு.

அந்த இழப்பை அந்தப் பதிப்பாளர் பொருட்படுத்தவில்லை. காரணம் தன் பதிப்புத் தொழிலில் தான் வெளியிடும் படைப்புகளின் மதிப்பீடுகளுக்கு விரோதமான வாழ்க்கையை அவர் வாழ விரும்பவில்லை என்பதுதான். இந்த நிகழ்ச்சியை திலீப் குமார் சொல்லும்போதே எங்கள் இருவர் கண்களும் கசிந்தன.

எனவே எது இலக்கியம் ? யார் இலக்கியவாதி ?

12. Tamil Archives: திலீப்குமார்: “கதாவிலாசம்: எஸ்.ராமகிருஷ்ணன் – மாநகர கோடை”

13. கோகுலகண்ணன் (கலிபோர்னியா):

RayarKaapiKlub : Message: Dilip Kumar and Gopi Krishnan திலீப்குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ (தீம்தரிகிட)

இருவருக்கும் பொதுவான களன்: லோ மிடில் க்ளாஸ் வாழ்க்கையின் முரண்கள், நெருக்கடிகள், ஏமாற்றங்கள், கேள்விகள்.

தீம்தரிகிடவில் வெளிவந்த திலீப்பின் கதை மிகவும் முக்கியமானது.

குறிப்பாக இந்து முஸ்லிம் பிரச்சினைகள் பிரம்மாண்டமான பரிமாணம் பெற்றிருக்கையில் இந்தக் கதை வாசகனுக்குள் ஏற்படுத்தும் அதிர்ச்சி சிறிது அல்ல. காரணங்களும், தருக்கங்களும் சிதறி வாழ்க்கை படும் அல்லகோலம், மனிதவாழ்வு எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகள், வெறுமையும் அபத்தமும் கண்முன் தரிசனமாகி கலங்கச்செய்யும் தருணங்கள் – படைப்பாளி இவற்றை கோடிட்டுக் காட்டிவிட்டு போகிறான்.

அவனுடைய எழுத்தின் இறுதிப்புள்ளி வாசகன் மனதில் நிதரிசனமும் புனைவும் சந்தித்து மயங்கி கொந்தளிப்பும் கேள்விகளும் உருவாகும் ஆரம்ப புள்ளியாக உருமாறுகிறது.

ஒரு குமாஸ்தாவின் கதையில் வாழ்வின் அடிப்படைத் தேவைகளையே தீர்க்கமுடியாத நெருக்கடிகளாய் கொண்ட நடுத்தரவயது முஸ்லிம் குமாஸ்தா (வயதான தாய், கால்கள் சூம்பிப்போன தங்கையின் மகன்) அரை டிராயர் அணிந்த ஆரோக்கியமான மதவெறியர்களால் அடித்துக்கொல்லப்படுகிறான்.

14. கடவு (சிறுகதைத் தொகுப்பு):

பவா. செல்லதுரை

சிறு பத்திரிகை உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த பெயர் திலீப்குமார். குறைந்தது 20 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிற சிறுகதைகள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்க்காதவை. தமிழ் வாழ்வு, அது சார்ந்த சிக்கல்கள், தமிழக கிராமங்கள் என்று வாசித்துக் கொண்டிருக்கிற ஒரு வாசகனுக்கு திலீப்குமார், குஜராத்தில் இருந்து சென்னையில் வந்து வாழும் குஜராத்திகள், மார்வாடிகள், செளகார்பேட்டை இதெல்லாம் படிக்க ரொம்பப் புதுசாக இருக்கிறது.

படைப்புகளில் வரும் பெயர்கள்கூட சாரதா பெஹ்ன், ப்ரான் ஜீவன்லால், த்ரம்பக், நட்டு, ஹன்ஸ்ராஜ் என்று நாம் அதிகம் படித்திராத பெயர்கள். ஆனால் சிறுகதைகளில் திலீப்குமார் வேறு வேறு விதமான மன உலகங்களை, மனித துக்கங்களை யாரும் போக அஞ்சும் ஆழங்களுக்குச் சென்று கிண்டலும், கேலியுமாய் நம் கைக்குக் கொண்டு வந்து தருகிறார். பார்க்கிற எவரும் உணரலாம். இது கடலின் ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் என்று.

அவ்வப்போது சிறு பத்திரிகைகளில் படித்த கதைகளை மொத்தமாகப் படிக்க வாய்க்கிறபோது இன்னொரு புது அனுபவம் கூடுகிறது. இத் தொகுப்பிலேயே எனக்கு மிகப் பிடித்த கதையாக நிகழ மறுத்த அற்புதம் என்ற கதையைச் சொல்வேன்.

‘மீண்டும் மீண்டும் மனப்பிரதேசங்களில் இருந்து அகல மறுத்து அலறுகிறார்கள் திருமதி ஜேம்ஸ்சும், திரு. ஜேம்ஸ்சும்’ கதை இப்படி ஆரம்பிக்கிறது.

‘திருமதி. ஜேம்ஸ் தன் சிறிய பெட்டியுடன் கிளம்பினாள். நான் போகிறேன் என்றாள்.’

‘சிறிது நேரமாக அவளையே கவனித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், என்ன அவ்வளவுதானா? நிஜமாகவா? என்னை விட்டுப் பிரியும்போது உனக்கு சொல்ல வேறு ஒன்றும் இல்லையா என்று கேட்டார்’.

நமக்குப் புரிகிறது. ஒரு கணவனும், மனைவியும் பிரிகிறார்கள். பிரிவு என்கிற ஒரு வார்த்தைக்குள் எத்தனை எத்தனை, துக்கமும், கண்ணீரும், தழும்புகளும், காயங்களும்…

இக்கதை வாசிப்பு எனக்கு உடலெங்கும் தந்த மின்சார அதிர்வுகள், இன்னும் நடுங்குகிறது. வாழ்வு குறித்து பெரும் பயமும், உறவுகள், நண்பர்கள் அற்ற மனித வாழ்வு எத்தனை வெறுமையானது என்றும்… யோசிக்க யோசிக்க… அந் நினைவுக் கயிறுகளை அறுத்துக் கொண்டு பாதுகாப்பான வெளிநோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்.

கதை முழுக்க ஜேம்ஸ் மட்டுமே பேசுகிறார். கதை முடிகிற வரை திருமதி ஜேம்ஸ் ஒன்றும் பேசாமல் மௌனமாக மட்டுமே இருக்கிறாள்.

’25 ஆண்டுகளாக நீடித்த நம் வாழ்க்கையையும், பிணைப்பையும் பொருளற்றதாக்கி விடாதே.

உனக்கு நினைவிருக்கிறதா? திருமணமான மூன்று மாதத்தில் நீ படுத்த படுக்கையாகி விட்டாய். உன் வயிற்றில் அந்தக் கொடூரமான கட்டி வளர்ந்திருந்தது. கோழையும், குருதியும் திரண்டு ஒரு அருவருப்பான பெரிய அழுகிய முட்டையைப்போல்…

உனக்கு தெரியுமோ என்னவோ… அறுவை சிகிச்சைக்கு முன்பாக எத்தனை இரவுகளை நான் உறக்கமின்றிக் கழித்திருக்கிறேன் என்பது… அப்போது நீ என் அருகில் ஒரு குழந்தையைப் போல் கவலையற்று அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பாய். அறுவை சிகிச்சைக்குப் பின் மூன்று வருடங்கள் நாம் உடலுறவு கொள்ள இயலவில்லை. உன் அருகே நான் விரகத்திலும் அதிருப்தியிலும் உறைந்து ஒரு எ·குத் துண்டைப் போல் கிடப்பேன்.’

இப்படிப் போகும் உரையாடல்களை எளிதாகக் கடக்க முடியவில்லை. 25 வருட வாழ்வில் நடந்தவைகள் ஒவ்வொன்றும் கவித்துவமும், தத்துவமுமாய் எழுதப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் கணவன், மனைவியானாலும், அவர்களின் உலகம் வெவ்வேறானது. அவள் உலகம் முதிர்ந்த மலர்களாலும், ஈரக் காக்கைகளாலும், சுண்டெலிகளின் திருட்டுப்பார்வைகளாலும், கர்ப்பிணிப் பல்லிகளாலும் ஆனது.

ஆனால், ஜேம்ஸின் உலகம் இவற்றிற்கெல்லாம் வெகு அப்பால் வேதனையும், தள்ளாட்டமும், ஏமாற்றமும் நிறைந்தது. கதையின் மையம் காலத்திரைக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் வெறுமையில் விழுந்து விடாதே, வயோதிகம் எல்லா அன்பையும் உலர்த்தி விடக்கூடியது என்பதுதான்.

வாழ்வின் ருசியில் ஊறிப் போயிருப்பவர்களுக்குக் கூட இக்கதை வாழ்வின் இன்னொரு கோரப்பற்கள் முளைத்த குரூர முகத்தை ஞாபகப்படுத்துகிறது. அவனை விட்டுப் பிரிய மனமின்றி திருமதி. ஜேம்ஸ் பெட்டியைக் கீழே போடும்போதுதான் நான் ஆசுவாசம் அடைந்தேன்.

‘கடவு’ என்றொரு நீண்ட சிறுகதை. கங்கு பாட்டிதான் இக்கதையின் மைய அச்சு. ஒவ்வொரு முறையும் மரணத்தின் நுழைவாயில் வரை சென்று சாமர்த்தியமாகத் திரும்பி விடுவாள். அந்தக் குடியிருப்பில் அவள் பேசும் கெட்ட வார்த்தை வண்டை வண்டையாக, அழுக்குப் படிந்துதான் வெளிவரும். அதன் பின்னணி நம் மனதை அலற விடுகிறது. குடியிருப்பில் உள்ள ஒரு இளம்பெண் ஒரு நாள் கங்குப் பாட்டியிடம் சொல்கிறாள்.

‘நீ துக்கிரி முண்டையாம், உன் உடம்பும் அழுக்கு, மனசும் அழுக்கு என்கிறாள் என் மாமியார்.’

கங்குப் பாட்டி சொல்கிறாள், ‘என் உடம்பு அழுக்குப் படிந்த உடம்புதான். இந்தியாவில் உள்ள எல்லா ஜாதி நாய்களும் என்னைத் துவம்சம் செய்திருக்கிறார்கள். ஏன் வெள்ளைக்காரன் கூட என் மேல் படுத்திருக்கிறான். மற்றபடி என் மனசைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? மடி, ஆசாரம் பார்த்த இந்த வைஷ்ணவ முண்டையின் வாயில் கதறக் கதற ரம்மும், பிரியாணியும் திணித்துத் திணித்து நாள் கணக்கில் அம்மணக் குண்டியாகவே படுக்க வைத்து…

அக்ரகாரத்தில் பாதுகாப்பாக உடம்பெல்லாம் புடவை சுற்றிக் கொண்டு புருஷனுக்குக் கூட அளவாய்த் திறந்து காட்டிய உன் மாமியாருக்கு எங்கேடி தெரியும், என் மனசைப் பற்றி.’

வெளிப்படுத்துகிற வக்கிரத்தை விட தேக்கி வைக்கிற வக்கிரம்தான் அபாயமானது. கங்குப் பாட்டி தன் இறந்த கால ஒவ்வொரு நிமிட துயரத்தையும் வக்கிரங்களாக வெளிப்படுத்திக்கொண்டே செத்துப் போகிறாள்.

‘மனம் எனும் தோணி பற்றி’ என்றொரு காதல் கதை. இப்படி ஒரு வார்த்தையில் அடக்குவதை சகல விதத்திலும் மீறும் கதை. கதையின் துவக்கமே உன்னதக் கவிஞன் ஒருவன் தற்கொலை செய்து கொள்ளக் கடற்கரையில் உட்கார்ந்திருக்கிறான். ”கடல் எத்தனை பிரம்மாண்டமும், அழகும், கொந்தளிப்பும் உள்ளடக்கியதாக இருப்பினும் அவனுக்கு இறுதியில் மரணத்தையே நினைவூட்டுகிறது” என்று ஆரம்பிக்கும் கதையில் துளிர்க்கும் ஒவ்வொரு வரியிலும் கிண்டலும், துயரமும் மாறி மாறி வருகிறது. இப்படியான எழுத்து அவ்வளவு எளிதில் யாருக்கும் வாய்ப்பதில்லை.

அந்தக் கவிஞனின் பெயர் ராகுல் கே.நாயக். அவன் ஒரு குஜராத்திக் கவிஞன். வறுமையின் தோழமையை 13 வயதில் இருந்தே அனுபவித்து வருபவன். காலியான வயிற்றில் சுண்டெலி ஓடி அட்டகாசம் செய்வதைப் போல் துவங்கும் பசியின் உக்கிரமான சீண்டலால் சென்னைக்குப் பஸ் ஏறியவன். வழக்கம் போல் நம் சமூகம் உன்னதக் கலைஞர்களுக்குத் தரும் 300 ரூபாய் சம்பளத்துக்கு ஒரு ரெடிமேட் ஜவுளிக்கடையில் விற்பனை குமாஸ்தா வேலையில் சுருங்க மறுக்கிறது அவன் விரிந்த கவிதை உலகம். அக்கடையில் இன்னொரு சேல்ஸ் கேர்ள் ராஜகுமாரி, திடீரென்று அவனைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். இவன் 300 ரூபாய் சம்பளத்தில் அல்லாடினாலும், இவன் உலகம் உன்னதமில்லையா? இவன் பேசுகிறான்

”இதோ பார் ராஜகுமாரி, என் உலகம் வேறு, உன் உலகம் வேறு. நீ ஒரு சாதாரண பெண். நானோ கவிஞன். எனக்குக் காதலில் அப்படி ஒன்றும் நாட்டமில்லை. ஏதோ விதி வசத்தால் நான் இப்படி ஜவுளிக்கடையில் சீரழிகிறேனே தவிர, வாழ்வு பற்றி நான் கொண்டிருக்கும் லட்சியங்கள் மிக உயர்ந்தவை. சிகரங்களை நோக்கிய என் பாய்ச்சலின்போது காதல் என்பது எனக்கு ஒரு சுமையாக மட்டுமே இருக்க முடியும்.”

தவிர உன்னைக் காதலிப்பதில் இன்னொரு சங்கடமும் இருக்கிறது. உனக்கு பயங்கரமாக வியர்க்கிறது. உன் மேல் இருந்து வீசும் வியர்வையில் பூண்டு நாற்றமடிக்கிறது. யாரையாவது காதலிக்கும் முன் வியர்வை நாற்றம் போக்க நீ ஏதாவது ஒரு மருந்து சாப்பிட்டுக் கொள்.’

நீங்கள் இவனுக்காக சிரிப்பீர்களா? அனுதாபப்படுவீர்களா? பெரிய லட்சியங்களை, உன்னதங்களைத் தேக்கி வைத்துக் கொண்டு சினிமா தயாரிப்பாளர்களின் கார் கழுவிக் கொண்டு, பெரிய நடிகனுக்குத் தலைசீவி விட்டுக் கொண்டு, நடிகைக்கு மேக்கப் போட்டு விட்டுக் கொண்டிருக்கும் எண்ணற்ற உன்னதக் கலைஞர்களின் உலகம் வேறு நண்பர்களே… அதைத் திறந்து பார்க்கிற சாவிகள் வலிமையானவை, கிடைப்பதற்கரியவை.

ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, மந்திரவாதியின் கழுத்தில் தொங்கக்கூடியவை. திலீப்குமாரின் பயணம் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி போய் சாவி எடுத்து வந்து அவ்வுலகக் கதவை திறந்து விட்டுத் தன் சக மனிதனுக்குக் காட்டுகிறது. அவ்வுலகம் நமக்கு உன்னதமாகவோ, உருப்படியற்றோ, கசப்பானதாகவோ, வாழ்வின் மொத்த சாரத்தையும் உறிஞ்சி விடக்கூடியதாகவோ இருக்கலாம். அது அவரவருக்கு இந்த வாழ்வு தந்திருக்கும் பிச்சைகளைப் பொறுத்தது.

15. Rumi article – அன்புடன் | Grupos de Google:

தமிழில் மொழிபெயர்ப்புக் கவிதைகள் – நாகூர் ரூமி

உதயன் வாஜ்பாயின் 16 ஹிந்தி கவிதைகளை திலீப்குமார் தமிழில் தந்துள்ளார் (மீட்சி, 32, 1990). காதல் கவிதைகள். நம்முடைய காதல் கவிஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. தூய ரொமான்டிசிஸம் என்பதிலிருந்து எப்படி விடுபடுவது என்று இவை கற்றுக்கொடுக்கின்றன.

சிலிர்க்கும் அவளது தேகத்தில்
அனேக ஸ்பரிசங்களை விதைத்துச் செல்கிறான் அவன்

அந்த இருட்டின் அறைக்குள்
அவள் மெல்ல எழுந்து தேடுகிறாள்
தவறவிட்ட ஒரு காதணியை

ஹிந்தியில் என்ன வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தது என்று அறிந்துகொள்ளும் ஆவலை ஏற்படுத்தும் எளிமையான அதேசமயம் வலிமையான தமிழாக்கம். திலீப்குமாரினதைத் தவிர வேறு மொழிபெயர்ப்புகள் கிடைக்கவில்லை.

16. பிரமிட் சாய்மீரா தியேட்டர்:

“என் சினிமா கனவுகள்!” – எழுத்தாளர் ஞாநி

பத்து நிமிடங்களும் பேசிக்கொண்டே இருக்கும் கணவனாக நீல்சன். ஒரு வார்த்தையும் பேசாத மனைவி பாத்திரத்தில் ரோஹிணி. இந்த மூவரைத் தவிர மற்ற எல்லாருக்கும் – கதாசிரியர் திலீப் குமார், எடிட்டர் சிவமதி, இசையமைப்பாளர் அனில், இயக்குநராகிய நான் என எல்லாருக்கும் இது முதல் படம்.

– ஆனந்த விகடன் டிசம்பர் 26, 2007