Tag Archives: Dead

தமிழக மீனவர் போராட்டமும் அறமும்

டுநீசியாவில் தீக்குளிப்பதால் ட்விட்டர் கூட்டம் நிறைகிறது. பிரதிபலிப்பாக, எகிப்தில் புரட்சி வெடிக்கும் அபாயம் தெரிகிறது. தொடர்ச்சியாக, சூயஸ் கால்வாயில் எண்ணெய்ப் போக்குவரத்து சஞ்சலப்படுவதால், விலைவாசி எகிறுகிறது. அதனால், பெட்ரோல் விலையை விட ஜாஸ்தியான தக்காளி, ஏரோப்ளேனில் உட்காருகிறது. ட்விட்டர் புரட்சியில் சீமானும் தமிழக மீனவருக்காக குதிக்கிறார்.

இதற்கு பட்டாம்பூச்சி விளைவை சந்தேகம் கொள்ள வேண்டாம். கேள்வி இதுதான்:

உங்களுக்கு வாக்களித்து மாற்றம் விளைவதில் நம்பிக்கையா? தன்னார்வலராக தண்டல் எடுத்து கிரியா ஊக்கி செயல்பாட்டில் ஈடுபாடா?

டுனீசியாவில் எகிப்தில் நடப்பது இரண்டாம் வகை. தமிழக மீனவருக்கு நடக்கும் போராட்டம் முதல் வகை. வினவு பதிவு எழுதுவார்; பெயரிலி மறுமொழிக் குரல் எழுப்புவார்; எஸ்.எம்.எஸ் அஞ்சல் மறுஒலிபரப்பு தொடரும்; வைகோ கடிதம் எழுதுவார்; நிருபமா நாவ் சுற்றுலா செல்வார்; பா.ம.க. கூட்டணி வைப்பார் கலைஞர்.

இது நிச்சயமாக பட்டர்ஃப்ளை எஃபக்ட்.

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ -> எனவே 49 ஓ போடு என்னும் ஞாநியும்; ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மாற்று அதிமுக ஜெயலலிதா மட்டுமே என்னும் ‘துகளக்’ சோ இராமசாமியும்; அறம் என்பது கூட முதலாளித்துவத்துவத்தின் இசைக்குதான் என்னும் ஜெயமோகனும் சிறு துரும்பைப் போட்டு இருக்கிறார்கள்.

நான் மிகவும் மதிக்கும் அமெரிக்க விழுமியங்களாக
i) Volunteering
ii) Aspiration
iii) Transparency
சொல்வேன்.

ஒளிக்கற்றை பேரத்தில் எவரெல்லாம் ஈடுபட்டார்கள்? யாருக்கு, எப்பொழுது காசு கொடுத்தார்கள்? ஏன் அவ்வாறு முடிவெடுத்தார்கள்? சட்டத்தை எவ்வாறு மாற்றலாம்? மாறுவதை எப்படி தடுக்கலாம்? – இதெல்லாம் அறிய முடிவது வெளிப்படைத்தன்மை.

எம்.எல்.சி.ஆக, உள்ளூரில் வால் – மார்ட் வராமல் வழிசெய்வது தொடங்கி, அரசாங்க பொக்கீடு பற்றாக்குறை நிவர்த்தி செய்வது வழியாக அடுத்த குடியரசுத் தலைவராவது எங்ஙனம் வரை வளர, உயர ஆசைப்பட வைத்து பாதை காட்டுவது பதவியும் பொறுப்பும் கூடிய மேன்மைத்தன விழைதல்.

அரியணையில் அமர பயமா? பணம் செலவழிக்க இயலாமையா? தன்னார்வலராக, செயல் வீரராக பயணத்தைத் துவங்க வைப்பதோடு, நேர்மைத் திறமும், நெஞ்சில் உரமும் கொண்ட சுத்தமான பயணம் மேற்கொள்ளவைக்கும் தொணடர் வழியில் ஆட்டோவும் வராது; அவப்பெயரும் தராது.

தமிழகத்தில் இயங்கும் புகழ்பெற்ற, கவனிப்பும் பெருமளவில் கிடைக்கும் சிந்தனையாளர் எல்லோருமே நிந்தனையாளராகவோ மந்தையாளராகவோ விளங்குவது இருத்தலிய பிரச்சினை. அப்படி இயங்காத, மூன்று சிந்தனையாளர்களை எடுத்துக் கொள்ளலாம்.

ஊன்றுகோல் ஞாநி

கைத்தடியை பெரும்பாலும் எவரும் விரும்புவதில்லை. மேடையேற சிரமப்படும் எண்பது வயது பாலச்சந்தர், இன்னொருவரின் கையைத் துணைக்கழைக்கிறார். நேரடியாக தள்ளுவண்டிக்கு மாறிவிட்டார் கலைஞர். ஞாநியின் பேச்சுக்களை அதிமுகவும் ரசிக்காது; திமுகவும் விரும்பாது.

உடனடி அரசியல் மட்டுமே ஈடுபாடு என்பதால் செய்தித்தாள் விசிறிகளின் ஹீரோ; மேக்ரோ பார்வையில் அறச்சீற்றம் என்பதால் நடுத்தர வர்க்கத்தின் ஆதர்சம்.

வழிகாட்டி சோ

ரஜினி ரசிகர் முதல் அரசியல் தரகர் வரை அறிவுஜீவியாக தோற்றமளிக்கிறார் ‘துக்ளக்’ சோ. நோ சொல்ல வேண்டிய இடத்தில் so…so…வாக மழுப்பிவிடுவதால் சோ என்பது காரணப்பெயர். வேதம் குறித்துப் பேசுவதால் இவரின் எழுத்தை வேதவாக்காக எடுத்துக் கொள்வோர் பலர்.

கலங்கரை விளக்கம் ஜெயமோகன்

ஞாநியின் மதிப்பீடு சின்ன கோடு என்றால், ஜெமோ, பெரிய கோடாக மேக்ரோ பார்வை. சீனாவையும் தொலை நோக்கலாம். அயன் ராண்டையும் இழுக்கலாம்.

உதாரணத்திற்கு அறம் சிறுகதையில் கூட இரு சாராரின் நியாயம் வெளிப்பட்டிருக்கும்.

அ) எழுத்தாளரின் ஊதியமும் பதிப்பாளரின் பற்றாக்குறையும்
ஆ) ஊழியர் கை ஓங்குவதும் பதிலுக்கு நடுத்தெருவில் சத்தியாகிரகமும்
இ) விக்கிரமன் பட உச்சகட்ட காட்சி சுபமஸ்து முடிவு

ஆனால், இன்றும் ‘உரிமை பதிப்பகத்தாருக்கே’ என்று போட்டுக் கொள்வதும், எழுதியவரின் பெயருக்கு பதில் விற்கக்கூடியவரின் பெயரை மாற்றிப் போட்டு பெஸ்ட்செல்லர் ஆக்கிக் கொள்வதும், எழுதிய பிரதி ‘பத்திரமாக இருக்கிறது’ என்று சால்ஜாப்பு சொல்லிவிட்டு, கேட்கும்போது தொலைந்து போனதாக சொல்லி விடுவதையும் நேரடியாக எழுதினால், இன்னும் உக்கிரமாக, ஒருதலை பட்சமாகி விடும் என்பதால்… இரு தரப்பையும் நேர்மையாக அணுகும் தர்க்கமுறை தேவைப்படுவதால், ‘புனைவு’ என்னும் வட்டத்துக்குள் சுருண்டுவிடுகிறார்.

நாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு போல் அமெரிக்காவில் கருத்தாளர்களை ஓய்வாக சந்திக்கும் நிகழ்வில் பங்கு கொள்ள பல்லாயிரம் டாலர் செல்வாகும். அவ்வாறு பணம் கறக்காமல், வெகு சல்லிசாக அணுகக் கூடியவராக இருப்பவர். அப்புறம் ஏன் இதை சக்தியாக (power), கொடையாக (wealth), அறிவியக்கமாக (intellectual) மாற்றவில்லை?

ஒரு காலத்தில் காந்தி வழிகாட்டினார். அப்புறம் உதயமூர்த்தி, டாடா, டெண்டுல்கர், அம்பானி, ராகுல் என்று நெடிய பாரம்பரியம் வந்திருக்கிறது. இன்றைய தலைமுறையின் இலட்சிய புருஷர்கள் எவ்விதம்? நிம்மதியை நாடி எங்கே செல்கிறார்? 9 டு 5 ஜோலிகாரர், தன் சிதறுண்ட கவனத்தையும் தவிக்கும் சிந்தையையும் எவ்வாறு நெறியாள்கிறார்?

1. கார்பரேட்/கமண்டல சாமியார் (நித்தியானந்தா, ஜக்கி, சங்கர மடம்)
2. படைப்புலக கர்த்தா (ஜெய மோகன், சாரு, ‘எந்திரன்’ ஷங்கர், பட்டிமன்ற லியோனி)
3. கேளிக்கை (ஃபேஸ்புக், விளையாட்டு, குடி)

இப்பொழுது தமிழ்நாடு மீனவர் கேப்பிடலிசத்தின் செல்லப்பிள்ளை. வெப்சைட் துவங்கலாம். தமிழக மீனவர் ஃபேஸ்புக் சுயவிரும்பிகளின் இலட்சிய வார்த்தை. கவனிப்பு கோரும் விளையாட்டு. குறிக்கோள் இல்லாத சமுதாயத்தின் அளவுகோல்.

தொடர்புள்ள பதிவுகள்:
1. Ethics – India Calling: An Intimate Portrait of a Nation’s Remaking By Anand Giridharadas
2. தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கொல்லப்படுதல்

ஆப்கானிஸ்தான் போர்

Surrender of Afghanistan police force to unarmed Taliban with glee in
Baghlan province :: Full Show: September 29, 2009 | Worldfocus (The segment starts at 11:33)

வீடியோவில் விரிவாக காண்பிப்பதன் செய்தி சுருக்கம்:

அமெரிக்க இராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற போலீஸ்காரர்களையும் போர்வீரர்களையும் நம்ப முடியவில்லை. எழுபது ஆப்கானிஸ்தானிய படைவீரர்கள், வெறும் பத்து பேர் கொண்ட தாலிபானிடம் சரணடைகிறார்கள்.

இத்தனைக்கும் தாலிபேனிடம் இருந்து ஒரு துப்பாக்கி வெடிக்கவில்லை; குண்டு போடப்படவில்லை.

சாதாரணமாக, இந்த மாதிரி சரணாகதிகளுக்கு, கண்ணிவெடி போன்ற குண்டுவெடிப்புகள் காரணமாக இருக்கும். இங்கே அந்த மாதிரி எதுவும் இல்லை. தங்கள் துப்பாக்கி, இன்ன பிற ஆயுதங்களை வெகு சந்தோஷமாக அல்-க்வெய்தாவிடம் கொடுத்துவிட்டு, ஜீப்பில் ஏறி சென்று விடுகிறார்கள்.

இப்பொழுது இந்த திருட்டு வீடியோ வெளிப்பட்டது ஏன்?

1. நிஜமாகவே அல் – கெவெய்தாவிற்கு விசுவாசமானவர்கள். தாலிபான் இட்ட கோட்டைத் தாண்டாதவர்கள்.

2. ஊழல், லஞ்சம் மலிந்த நாடு. சோம்பேறிகள்… பொலிடிகலி கரெக்டாக சொன்னால், உல்லாசபுரிவாசிகள் அபப்டித்தான் பொறுப்பின்றி நடந்துகொள்வார்கள்.

3. ஊரான் வீட்டு அமெரிக்க நெய்; கடைத் தேங்காய்; வழியில் அல்லா. உடைக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் மேலும் படைவீரர்களை அனுப்பி வைக்குமாறு இராணுவத் தளபதி வெளிப்படையாகவும், வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களின் மூலமாகவும் அழுத்தமளித்து வருகிறார். அப்பொழுது, இந்த மாதிரிக் காட்சிகள் வெளியாவதால், உள்ளூர் காவலர்களின் லட்சணம் உலக அரங்கில் அம்பலமாகும்.

ஒபாமாவும் துணை ஜனாதிபதி பிடெனும் மேலும் மேலும் படை வீரர்களை குவிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆப்கானிஸ்தானே தன்னிறைவை எட்டவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர்கள். கடந்த ஆண்டில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போதே இதை பராக் ஒபாமா வலியுறுத்தி வந்தார்.

இராக்கில் இருந்து முழுமையான படை விலகல். ஆப்கானிஸ்தானில் கொஞ்சம் ஆள் கூட்டப்படும். அதன் பின் முழுமையாக, வெகு சீக்கிரமாகவே அனைவரும் சொந்த நாடு திரும்புவார்கள். இதுதான் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கை.

ஜார்ஜ் புஷ்ஷும் டிக் சேனியும் பதவியிறங்கிய பின் சோகத்தில் ஆழ்ந்த Military Industrial Complexம் இப்பொழுது சுறுசுறுப்பாக இத்தகைய பிரச்சாரங்களில் ஈடுபட விரும்பும்.

Matt-bors-comics-cartoons-graphics-swimsuit-afghan-war-draft-GWB-bush-GOP-dems-reps

தொடர்புள்ள பதிவுகள்:

1. Why We Fight – A Film By Eugene Jarecki :: சண்டக்கோழி அமெரிக்கா

2. Three Books and a Movie

3. Pratap Chatterjee on “Halliburtons Army”

கொசுறு விழியம், பேட்டி:

The AfPak War: Combating Extremism in Afghanistan and Pakistan – washingtonpost.com

செத்தான் பிரபாகரன்

Stars_&_Stripes_Germany-newspapers-skull-women_Hitler_Dead2'Hitler's Skull' Is A Woman's, Say DNA Tests – Yahoo! News UK: A skull long believed to be that of Adolf Hitler actually belonged to a woman, according to an American scientist who has taken DNA samples from it.

அந்தக் காலத்தில் மரபணு சோதனை கிடையாது. எனவே, இதுதான் ஹிட்லரின் பிணம்; இங்குதான் புதைக்கப்பட்டது என்றவுடன் எவரும் அதை எடுத்து வைத்து போஸ்ட் மார்ட்டம் செய்யவில்லை.

ஹிட்லர் என்று சொல்லப்படும் எலும்புக்கூடை எடுத்து 64 ஆண்டுகளுக்குப் பிறகு டி.என்.ஏ. நடத்தினால், அது பெண்ணின் மண்டையோடு என்று தெரியவந்திருக்கிறது.

சரி… அடால்ஃபின் நீண்ட நாள் காதலியின் பிணமாக இருக்கலாம் என்றால் அதுவும் இல்லை. ஹிட்லரின் கடைசி நிமிஷ மனைவியான் ஈவா பிரவுனுக்கு வெறும் முப்பத்திமூன்று வயதுதான். அகழ்வாராயப்பட்ட பிணத்திற்கு நாற்பது ஆகிவிட்டது.

ஜெர்மனியில் ஹிட்லர் இறந்ததற்கு அடையாளமாக அவரின் இந்த மண்டை ஓட்டுப் பகுதியையும், பற்களையும் மட்டுமே ஆதாரமாக நம்பி இருந்தார்கள். அவரின் மோவாய்க்கட்டு மட்டும்தான் ருஷியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மண்டை ஓடு செல்லாது என்றாகி விட்ட தருணத்தில், பற்களை தரமாட்டோம் என்று ரஷியா மறுத்துவிட்டது.

சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி ஹிட்லரும் இறக்கவில்லையா? இன்னும் உயிரோருக்கிறாரா?

போரின் இறுதியில் நமக்குத் தேவை நிம்மதி. செத்தான் கொடுங்கோலன் என்னும் செய்தி. அதைக் கொடுக்கத்தான், தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக சொல்கிறார்களோ?

இதனால்தான் விடுதலைப் புலி ‘பிரபாகரன்’ தன்னுடைய ஹேப்பி பர்த்டே ஆன மாவீரர் நாள் கொண்டாட மீண்டு வருவார் என்று சீமான் சொல்கிறாரோ!

BBC NEWS | Europe | 'Hitler skull' revealed as female

VVIP Security for ex-Ministers in India: Z+ Protection costs

நன்றி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் :: இ-பேப்பர்

HT-Security-Police-Expenses-BJP-ex-ministers-congress-govt-expenditure

மீண்டும் கார்சாய்: ஆப்கானிஸ்தான் தேர்தல் களம்

President Hamid Karzai was photographed by an election worker in Jalalabad, Afghanistan, on Monday as he official registered to stand for reelection. His running mates are seated to his right.

President Hamid Karzai was photographed by an election worker in Jalalabad, Afghanistan, on Monday as he official registered to stand for reelection. His running mates are seated to his right.

  • ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தேர்தல் நடக்கப் போகிறது.
  • தாலிபானிடமிருந்து விடுதலையாகி ஏழு வருடங்கள் கழிந்துவிட்டது; 31 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கரைந்துவிட்டது.
  • நான்கு டஜன் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர். இரு பெண்கள், முன்னாள் கேபினட் அமைச்சர்கள், புத்தம்புதிய அமெரிக்க அடிவருடிகள், கம்யூனிஸ்ட்கள், நமது ஊர் சகுந்தலா தேவி போல் குழந்தை ஜீனியஸ் எல்லாரும் நிற்கிறார்கள்.
  • Simple majority போதாது. 20 சதவிகிதம் வாக்குப் பெற்றுவிட்டு, “தனிப் பெரும்பான்மை எமக்கே! ஆட்சி நமதே!” என்று முழங்க முடியாது. குறைந்தபட்சம் 50% வாக்குகளுக்கு மேல் பெற்றால்தான் வெற்றி. இல்லையென்றால், முதல் இரண்டு இடங்களை வென்ரவர்களுக்குள், மீண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிச்சுற்று வாக்குப் பதிவு நடக்கும்.
  • அங்கும் ஜாதி/இன வாரியாகத்தான் வோட்டு விழுகிறது. பெரும்பான்மை சமூகமான பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர் அமீது கர்சாய்.
  • பதினாறு மில்லியன் பேர் ஏழாயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கப் போகிறார்கள்.
  • வாக்காளருக்கான அடையாள அட்டைப் பதிவை தாலிபான்கள் தடுக்கவில்லை. கடந்த 2004, 2005 தேர்தல்களைப் போலவே இந்த தடவையும் தாலிபானால், தேர்தலுக்கு பிரச்சினை வராது என்கிறார்கள்.
  • எனினும், ஒரு லட்சம் போலீஸ், அதன் மேல் இன்னொரு லட்சம் இராணுவ வீரர்கள், அவர்களின் பாதுகாப்புக்கு மேலும் இன்னொரு லட்சம் வெளிநாட்டு படைவீரர்கள் போட்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து பாதுகாப்பில் பணிபுரிபவர்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்கர்கள்.

வேட்பாளர்கள்

Dr. Abdullah in Kabul after filing to run for president.

Dr. Abdullah in Kabul after filing to run for president.

  • ஹமீத் கார்சாய்க்கு துணையாக இரு உதவி ஜனாதிபதிகள் உறுதுணையாக களத்தில் நிற்கிறார்கள்.
    • மில்லியன் கணக்கில் ரூபாய் நோட்டை அச்சிட்டு சொந்தப் புழக்கத்திற்கு பதுக்கிக் கொண்டதால், மந்திரிசபையை விட்டு கல்தா கொடுக்கப்பட்ட மொஹம்மது காசிம் Mohammed Qasim Fahim.
    • முன்னாள் முஜாஹிதீன் முகமது கரீம் Muhammad Karim Khalili
  • அமீது கர்சாயிடம் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அப்துல்லா, அவரிடமிருந்து விலகி சரியான போட்டியாக விளங்குகிறார். எனினும், கர்சாயை தோற்கடிப்பது துர்லபம்.
  • முன்னாள் நிதியமைச்சர் அஷ்ரஃப் கனி (Ashraf Ghani)யும் போட்டியிடுகிறார்.
  • தற்போதைக்கு ரமஜான் பஷர்தோஸ்த் (Ramazan Bashardost) மக்கள் மனதை ஒவ்வொரு வோட்டாக சேமித்து, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
    • தென் சென்னை சிட்டி பாபு மாதிரி மெத்த படித்தவர்.
    • முனைவர்.
    • பிரான்சில் குப்பை கொட்டியவர்.
    • அல் க்வெய்தாவை வீழ்த்திய அமெரிக்காவிற்கு செல்லப்பிள்ளையாக இருந்துகொண்டு, அரசை மொத்தமாக குத்தகை எடுத்து, லஞ்சத்தை அனாயசமாக நிறைவேற்றும் கர்ஸாயின் ஊழல் ராஜாங்கத்தை ஒழிக்கிறேன் என்கிறார்.
    • காந்தியை மேற்கோள் காட்டுகிறார்.
    • புத்தகப் புழு.
    • இணைய தளம் வைத்திருக்கிறார்.
    • 15% சதவிகித மக்களைக் கொண்ட ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்.
    • முன்னாள் மந்திரிசபையில், திட்டத்துறை அமைச்சராக இருந்தபோது தனது சம்பளத்தை தானமாக, தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கியவர்.
    • கறை படிந்த தொண்டு நிறுவனங்களைத் தடை செய்கிறேன் என்று 2000க்கும் மேற்பட்ட ஊழல் என்.ஜி.ஓ.க்களை தடை செய்து, லஞ்ச ஒழிப்பில் அக்கறை காட்டியதால், அமைச்சரவையை விட்டு நீக்கப்பட்டவர்.

அமெரிக்கா

  • தன்னுடைய எதிரிகளை ஹமீது கர்சாய் போட்டுத் தள்ளிவிட்டு, “அமெரிக்கா குண்டு போட்டுச்சு! அதான் செத்துட்டாங்க!” என்று திருட்டுப் பட்டம் கட்டிவிட்டதாக அமெரிக்கா நினைக்கிறது.
  • அமெரிக்காவிற்கு புதிய முகம் தேவை. ஏழாண்டுகளாக கர்சாயைப் பார்த்து ஆப்கானிஸ்தர்களுக்கும் அலுத்துவிட்டது.
  • தொடரும் தாக்குதல்களில், சில அப்பாவிகளும், பல உள்ளூர்வாசிகளும் துர்மரணம் அடைந்த கோபத்தில், தாலிபான் மீண்டும் எழுச்சியடைவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த சமயத்தில், பழைய பெருச்சாளிகளுடன் கூட்டணி அமைத்துள்ள சாமர்த்தியசாலி மீது அச்சம் கலந்த பயம் எழுந்துள்ளது.

அசைக்க முடியாத உப ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு + பணபலம் + பெரும்பான்மை சமூகத்தின் சின்னம் + கடைசி நிமிட அரசியல் பேர வித்தகர் என்பன எல்லாவற்றுக்கும் மேல் சர்வ அதிகாரமும் கொண்டவர் என்பதால் அடுத்த ஐந்தாண்டுக்கு கர்சாயைப் பொறுத்துக்கொள்ள அமெரிக்கா தயார். இந்தத் தேர்தல் அவருக்கு எச்சரிக்கை மணி மட்டுமே.

Murder case in Nigeria: Ken Saro Wiwa and 8 Ogoni people Executed: Blood on Shell’s hands

“Corporations have neither bodies to be punished, nor souls to be condemned, they therefore do as they like”
Edward, First Baron Thurlow 1731-1806

  • நர்மதாவுக்கு மேதா பட்கர் கிடைத்த மாதிரி நைசீரியாவின் ஒகொனி பழங்குடியினருக்கு இராணுவ அரசு இழைக்கும் அராஜகங்களைத் தட்டி கேட்கிறார் கென்.
  • நைஜீரியாவின் எண்ணெய் பிரச்சினைகளை சுட்டிக் காட்டி கென் சாரோ விவா பத்திரிகையில் எழுதுகிறார்.
    1. ஒகோனி பூர்வகுடியினருக்கும் நில உரிமைதாரர்களுக்கும் போதிய நஷ்ட ஈடு கிடைக்காமை: சொந்த வீட்டை விட்டு துரத்தப்படுதல்
    2. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருள்களை கையாளும் வேலை: மாசு கலந்த பணியினால் இளவயது மரணங்கள்.
    3. எண்ணெய்க் கசிவுகள்
    4. விலை உயர்ந்த பெட்ரோலையும் டீசலையும் மட்டும் எடுத்துக் கொண்டு இயற்கை வாயுவை அப்படியே காற்றில் கலப்பது
    5. சுற்றுச்சூழல் நாசம்: மீன் இறப்பு; கடல்வாழ் உயிரினங்களுக்கு குந்தகம்

Wiwa v Shell: the day of truth? | Kevin Smith | Comment is free | guardian.co.uk: “When oil is extracted, there is often a certain amount of natural gas as well. Instead of pumping this gas back underground or using it to meet the energy needs of local communities, it is cheaper to simply burn off this gas. Although Shell has repeatedly said that it intends to stop burning off gas, the flares are toxic and harmful, which is why they are strictly regulated in countries such as the US or the UK. Such flaring is only cheap when environmental and human costs are not taken into consideration.

According to a recent report by an energy journalist, the amount of gas that is being wastefully flared by oil companies in the Niger Delta is equivalent to one third of the North Sea’s annual gas production. Gas flaring has technically been illegal in Nigeria since 1984, but oil companies including Shell continue this polluting practice with impunity.

The cases aim to hold Shell accountable for human rights violations in Nigeria, including

  1. complicity in summary execution,
  2. crimes against humanity,
  3. torture,
  4. arbitrary arrest and
  5. detention as well as
  6. for requesting, financing and assisting the Nigerian military – which used deadly force to repress opposition to Shell.”

பாஸ்டன் க்ளோப் தலையங்கம்: Ending a Shell game – The Boston Globe

  • பெட்ரோல் நிலங்களை குத்தகை எடுத்திருக்கும் ஷெல் நிறுவனத்திற்கு இவ்விதமான அம்பலப்படுத்தல்கள் ரசிக்கவில்லை.
  • இவற்றைக் குறித்து குரல் கொடுக்கும் சரோ விவா மீது பொய்வழக்கு தொடுக்கிறது மிலிடரி ராஜாங்கம்.
  • இராணுவ அடக்குமுறையில் ஒகோனியர் கொல்லப்படுகிறார்கள்; இவ்வாறான தீர்த்துக்கட்டல்களுக்கு ஷெல் பெட்ரோலியம் காசு தந்து குஷியாக வைத்துக் கொள்கிறது.
  • ஓகோனிஒயர் குறித்து உலக நாளேடுகளுக்கு செய்தி வழங்கிய கென் சாரொ விவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
  • அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு பர்த்தியாக, போராட்டங்களைக் கைவிடுமாறு ஷெல் கார்பரேஷன் பேரம் பேசுகிறது.
  • ஷெல் ஆயில் நிறுவனத்தின் கட்டளைக்கு அடிபணியாததால், மூன்று நாள் பட்டினி போட்டு, முடிவில் கென்னும் அவரின் எட்டு சகாக்களும் இராணுவ அரசினால் கொல்லப்படுகிறார்கள்.
Port Harcourt, the oil capital of Africa is a crowded city plagued by crime where most people live on mud streets without electricity, running water or sewer. Despite producing 2.26 million barrels of oil a day, 60 percent of Nigerians live below the poverty line.

Port Harcourt, the oil capital of Africa is a crowded cityplagued by crime where most people live on mud streets without electricity, running water or sewer. Despite producing 2.26 million barrels of oil a day, 60 percent of Nigerians live below the poverty line.

மேலும் விவரங்களுக்கு: Ken Saro-Wiwa v Shell oil unfurls: how the Guardian covered it | World news | guardian.co.uk

இந்தக் குற்றத்திற்கு பிராயச்சித்தமாக பதினைந்தரை மில்லியன் ($15.5m – £9.6m) டாலர்களை தற்போது ஷெல் நஷ்ட ஈடாக வழங்கவுள்ளது. செய்தி: Shell agrees to pay compensation for execution of Saro-Wiwa and Ogoni protesters | World news | guardian.co.uk

சிகரெட் பிடித்து புற்றுநோய் வந்தவருக்கே பில்லியன் டாலர் அள்ளித் தரும் நாட்டில் 15.5 மில்லியன் மிகவும் குறைந்த தொகை. ஆனால், மேற்கத்திய நிறுவனம் ஆப்பிரிக்க நாட்டில் இழைத்த அநீதிக்கு, அமெரிக்க நீதிமன்றங்களில் வளர்ந்த நாட்டின் தீர்ப்புகள் கொடுக்கலாம் என்பதற்கு முதல் உதாரணமாக இருப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

Shell settlement with Ogoni people stops short of full justice | John Vidal | Environment | guardian.co.uk: “There are thousands more Ogoni who will now want to bring their case to the west to see justice done, as well as other Niger Delta tribes like the Ijaw, the Igbo, the Ibibio and the Itsekiri who also want justice. There have been more than 500 pollution cases against Shell in Nigeria, but few reach court and the company has been able to use the appeal system to delay those that do for many years.

Now the lesson is that justice and reparation can be obtained abroad. A Dutch court will soon hear a case brought against Shell by other Niger Delta villagers following a major oil spill years ago. Meanwhile, in Ecuador, Chevron is about to hear its fate in a massive pollution case that has been going on for nearly 10 years. It’s quite possible the company will be fined more than $4bn.”

போபால் கசிவை எடுத்துக் கொள்வோம். இன்னும் அந்த நிறுவனம் ஜோராக உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலோ, உயிரின் மதிப்பு சில்லறை செல்லாக்காசு. எட்டணாக்களை விட்டெறிந்து விட்டு புதிய பேட்டரி தயாரிக்கப் போய் விட்டார்கள். ஆனால், இந்த ஷெல் நிறுவன நஷ்ட ஈடு, இந்த மாதிரி சரிக்கட்டல் செய்த பழம் பெருச்சாளிகள் வயிற்றில் புளி பேஸ்ட்டை கரைக்க வைத்திருக்கிறது.

பழைய கேஸை தூசு தட்டி எடுக்கலாம். எத்தனை பேருக்கு கண்ணு கப்ஸா ஆனது; எவ்வளவு பேருக்கு காலு போச்சு; எம்புட்டு குழந்தைகள் குறைபாடுகளோடு வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றன என்று கணக்கு போட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு போடலாம். இதுவரை ‘நிற்காமல் ஓடுவதற்காக புகழ்பெற்ற மின்கலம்’ போன்ற சொற்றொடர்கள் காணாமல் போய் டௌ கார்ப்போரேஷன் மேல் குற்றப்பத்திரிகையை மக்கள் உயிரை மதிக்கும் நீதிபதிகளிடம் முன் வைக்கலாம்.

அந்த விதத்தில் ஷெல் வழக்கு முக்கிய மைல்கல்.

நிறுவனங்களை சட்டையைப் பிடித்து கேள்வி கேட்பது நல்ல விஷயம். ஆனால், சிலியின் பினாச்சே, இலங்கையின் ராஜபக்சே ஆகியோருக்கு தர்மதேவதையின் கடைக்கண் பார்வை கிடைக்க இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ?

இந்த மாதிரி தலைவர்களைக் கூட விட்டுவிடலாம். இராஜீவ் காந்தி மாதிரி எப்படியாவது வன்மம் தீர்க்கப்பட்டு, ஹிட்லர் மாதிரி சுட்டுக் கொண்டு, மிலோபதான் மாதிரி அனுபவித்து நியாயம் எட்டியாவது பார்க்கலாம்.

ஆனால், இருபதாண்டு முன்பு ஷெல் பங்குதாரராக இருந்து கொண்டு கோடி டாலரை ஊக்கத்தொகையாக பெற்ற CEO யார்? அவருக்கு எடுபிடியாக இருந்து கொண்டு முடிவுகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றிய தலைவர்கள் எவர்? ஷேர் ஏற்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் பரம சௌக்கியமாக கோல்ஃப் விளையாடிக்கொண்டு, சூதாடி காலத்தைக் கழிப்பதை விட்டு விட்டார்களே!

இந்த மாதிரி தொண்டரடி ஆபீசர்களை பொது மேடையில் அரங்கேற்றி, பேஸ்புக் பக்கத்தை அலங்கரித்து, ட்விட்டரில் புரட்சி ஏற்படுத்தும் வரை இரானும் ட்விட்டரும், ஒபாமாவும் இணையமும் என்று அமெரிக்கா குண்டுச்சட்டியில் வலை மேயும்.

Life Is What Happens When You Are Busy Making Other Plans

நான் அமெரிக்கா கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு ஏர் ஃபிரான்ஸ் விமானம் நடுவானில் காணாமல் போனது. என்னை வழியனுப்ப, சொல்லிக் கொள்ள, ஆசீர்வதிக்க வந்த அனைவருமே, ஏனோ இந்த செய்தியை எனக்கு சொன்னார்கள்.

எங்கள் வீட்டிலும் தி ஹிந்து வாங்குகிறார்கள் என்பதை அறிந்திருந்தும் இந்த நிகழ்வை சுட்டிக் காட்டிப் பேச்சைத் துவக்கினார்கள்.

நானும் அவர்களுக்கு அமெரிக்க மாமா கதையை அலுக்காமல் சொல்லி ஆறுதல் அளித்தேன்.

ஹைவேயில் வேகமாகப் போகிறோம். சடாரென்று கொஞ்ச தூரத்தில் போலீஸ் கார் தென்படுகிறது. ஒன்றும் தெரியாத பூனைக்குட்டி போல் இரண்டு அப்பாவி கார்களுக்கு நடுவில் சொருகிக் கொண்டு, பம்மி, பாவனையாகக் கடக்கிறோம்.

அடுத்த பத்து, இருபது மைல்களுக்கு கவலை வேண்டாம். உடனடியாக இன்னொரு காவல்துறை வண்டி இருக்காது. திருப்பத்திற்கொரு போக்குவரத்து காவலர் இருக்கமாட்டார் என்பது விதி அல்ல; சம்சயம்.

அதே போல் காலாண்டுக்கு ஒரு விமான விபரீதம்தான் நிகழும் என்பது ஒருவிதமான மனப்பிராந்தி ப்ராபபிளிடி.

ஆனால் விதி வலியது.

இப்படி நினைத்து வேகமூட்டும்போது, கையுங்களவுமாகப் பிடிக்கப்பட்டு $300 தண்டம் அழுததுண்டு.

அதை விட இந்த அம்மணியின் நிலை பரிதாபமானது

Woman who missed Flight 447 is killed in car crash – Times Online

பிரேசிலில் விடுமுறை. ரொம்பவே உல்லாசமாக இருந்ததாலோ என்னவோ, பாதுகாப்பு பரிசோதனைக்கு தாமதமாக வந்துசேர்ந்து, போய்ச்சேர வேண்டிய விமானத்தைத் தவறவிடுகிறார். மரணத்தையும் தட்டிக் கழிக்கிறார்.

காலன் கைவிடவில்லை.

God’s contingency plan வந்துசேர, சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

சாமர்செட் மாமின் கதையான Appointment in Samarraவை ஸ்ரீகாந்த் பரிந்துரைத்திருந்தார்.

சாமான் வாங்கிவர சந்தைக்கு செல்லும் வேலைக்காரர் அரக்க பரக்க ஓடி வருகிறார்.

‘பெண்ணைக் கண்டேன்… பேயைக் கண்டேன்’

‘ஒழுங்கா சொல்லுடா!’

‘நீ சாவப் போறேன்னு மரணதேவதை சொல்லிடுச்சு. நான் ஓடி ஒளியணும்.’

அந்தக்காலத்தின் அதிகாரபூர்வ நடராஜா சர்வீசுக்கு பதிலாக, தன் குதிரையைக் கொடுத்து வேலைக்காரரை எழுபத்தைந்து மைல் தள்ளியிருக்கும் சமரா நகருக்கு துரிதகரமாக அனுப்பி வைக்கிறார் வியாபாரி.

அப்படியே சந்தைக்கும் சென்று காலதூதரை கண்டுபிடித்து ‘ஏன் சின்னப் பையனை பயமுறுத்தினாய்?’ என்று குறுக்கு விசாரணையும் நடக்கிறது.

‘இன்னிக்கு ராத்திரி அவனை சமராவில் நான் கொல்லணும். இன்னும் இங்கேயே இருந்தா எப்படி! அதனால்தான் போக வைத்தேன்…’ என்கிறது எமன்.

சின்ன வயதில் இந்த மாதிரி கதையொன்றை இந்து மதக் குறியீடுகளைக் கொண்டு கேட்ட ஞாபகம்…

சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

‘நாளை வருவேன்’ என்று விநாயகரிடம் சனி ஏமாந்ததும், ‘என்றும் பதினாறு’ மார்க்கண்டேயர்களும் தவிர இப்படி துரத்தி செலுத்தப்பட்டவர் எவரேனும் இருக்கிறாரா?

H1N1 (Swine) Flu? Are you in Danger? Will you die?

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

பயப்படுணுமா?

எனக்கு பேக்டீரியாவுக்கும் வைரசுக்கும் வித்தியாசம் தெரியாது.

விக்சனரி அகராதிப்படி Bacteria என்றால் நுண்ணுயிரி; Virus என்றால் நோய்க்கிருமி.

ஸ்வைன் காய்ச்சல் என்று இரண்டு மாதம் முன்பு அழைக்கப்பட்டு இன்றளவில் எச்1என்1 என்று ஏதோ அமெரிக்க விசா போல் உருமாற்றம் கண்டிருக்கும் பன்றி ஃப்ளுவிற்கு நீங்கள் பயப்பட வேண்டுமா?

  • நூறு டிகிரி தாண்டும் காய்ச்சல்
  • தொண்டை அரிப்பு
  • ஜலதோஷம், மூக்கடைப்பு

போன்றவை உங்களுக்கு இருந்தால் பன்றிக்காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை அறிய சோதனை செய்யவேண்டும். இந்தியாவில் அந்த சோதனைச் சாலை தற்போதைக்கு இரண்டே இடத்தில்தான் உள்ளது: மும்பை அருகே புனே மற்றும் தலைநகரம் எயிம்ஸ், புது டெல்லி.

உங்களின் சாம்பிள் அங்கே பரிசோதனைக்குச் சென்றபின் 48 மணி நேரம் கழித்தே, உங்களுக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளதா என்பதை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். அதற்குள் பலகீனமானவர் என்றால் இறவனடி போய் சேர்ந்திருப்பார்.

எப்படி வரமால் தடுக்கலாம்?

அமெரிக்க துணை ஜனாதிபதி பிடென் வாக்குப்படி, வாசற்படியைத் தாண்டக் கூடாது. எங்கேயாவது கோவில், கோர்ட்டு, கோயிஞ்சாமி கூட்டம் சென்றாலும் பீடிக்கும்.

வருடாவருடம் அமெரிக்காவில் ஃப்ளூ எனப்படும் காய்ச்சலுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை: முப்பத்தாறாயிரம் என்பார்கள் சிலர் (36,000 Americans died of Flu related causes each year during the 1990’s.). ஆனால், வழுக்கி விழுந்து இறந்தால் கூட மாரடைப்பு என்று வகைப்படுத்தும் வகையறா என்கிறது CDC – Influenza (Flu) | Q & A: 2007-08 Flu Season

  • கை சுத்தம்: டெட்டாலோ, மெடிமிக்ஸொ… சோப் போட்டு கையை அவ்வப்போது அலம்பி சுத்தாமாக்கிக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக எதையாவது உண்பதற்கு முன்.
  • சளி நீக்கி: கைகுட்டை பழைய ஹைதர் காலத்து நாகரிகம். க்ளீனெக்ஸ் போல் பேப்பர் துண்டு கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். தும்மல் வந்தால் அதைப் பயன்படுத்தவும். உடனடியாக குப்பையில் போடவும்.
  • துஷ்டனைக் கண்டால் தூரவிலகு: எவருக்காவது உடம்பு கொதிக்கிறது, காய்ச்சல் என்றால் காத தூரம் ஓடிப் போவிடுங்கள்.
  • அடைந்து கிடக்கவும்: விமானம், இருவுள் பயணம், பேருந்து சவாரி, ஆலயம், அலுவலகம், பள்ளிக்கூடம் போன்ற மூடிய பிரதேசங்களைத் தவிர்க்கவும்.
  • மேலும் விவரங்கள்

சுவாரசியாமான மறுமொழிகளுக்கும் அறிவிப்பும்: பேப்பர் » கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

வயது என்ன?

பின் பதின்வயது, இருபதுகள் என இந்த வைரஸ் இளைஞர்களையே பாதிக்கிறது. இயல்பாக இவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் சிறப்பாக இருக்கும். 50 வயதுகளில் இருப்போரை H1N1 இன்ஃப்ளுயன்சா குறைவாகவே தாக்கியுள்ளது.

தொற்றுநோய் எச்சரிக்கை

உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை நிலையை 5-6 நிலைகளுக்கு உயர்த்தியுள்ளது. 1968 ஆம் ஆன்டுக்குப் பிறகு, ப்ளூ காய்ச்சலுக்காக விடுக்கப்படும் அதிகபட்ச எச்சரிக்கை இது. உலகின் ஒரு பகுதியில் உள்ள இரண்டு நாடுகள், மற்றொரு பகுதியில் ஒரு நாட்டில் நோய் பரவினால் தொற்றுநோய் எச்சரிக்கை விடுக்கப்படும்.

  • நிலை 1-3: பெருமளவு விலங்குகளிடமும் சில மனிதர்களிடமும் பாதிப்பு
  • நிலை 4: மனிதர்களிடையே தொடர்ந்து பரவிக் கொண்டிருப்பது
  • நிலை 5-6 / தொற்றுநோய்: மனிதர்கள் இடையே மிகப் பரவலாகத் தொற்றிய நிலை.
  • உச்சத்துக்குப் பின்: மீண்டும் மீண்டும் தொற்றுவதற்கான வாய்ப்பு
  • தொடர் தொற்றுநோய்: பருவகாலத்துக்கு ஏற்ப நோய் தொற்றுவது.

தடுப்பு மருந்து கிடையாது

இப்போதைக்கு டாமிஃப்லூவைப் போல், தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்பட்டு வருகிறது. ஆனால் இது விரைவிலேயே மருந்துக்கு கட்டுப்படாமல் போகலாம். இன்னும் பயங்கரமானதாக உருமாறலாம்.

தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டாலும் கூட அதன் தடுப்புத் திறன், உரிய பாதுகாப்புத் திறனை பரிசோதிக்க பல்லாண்டு காலம் ஆகும்.

தடுப்பு மருந்து கிடைத்தாலும், வளரும் நாடுகளுக்கு அது போய்ச் சேருமா?

விரைவில் காலத்துக்கு ஏற்ப பரவும் ஃப்லூ காய்ச்சல் உருவாகலாம்.

இதுவரை சேதம்

டபிள்யு.எச்.ஓ அறிக்கைப்படி, 29 நாடுகளில் உள்ள 3,440 ஆய்வுக் கூடங்களில் 48 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது இன்னும் பரவினால், வேறு வைரஸ்களுடன் கலந்து மேலும் அதிகமாகப் பரவி, இன்னும் மோசமான ஒன்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தெளிவாக கணிக்க இயலாததாகவும் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருப்பதாகவும் இந்த வைரஸ் இருக்கிறது என்று வொர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் தெரிவிக்கிறது. எனவே அதன் தற்போதைய வடிவம் பறவை, பன்றி, மனிதர்களின் மரபணுக்களைப் பெற்றுள்ளது.

இது தொற்றுநோயாக மாறலாம்.

ஏன்? எதற்கு? எப்படி?

H1N1-Avian-Bird-Flu-Pigs-Swine-Influenza-Health-Medical-Doctor

சில தகவல் உதவி: இந்தியா டுடே

மை நேம் இஸ்: பிரபாகரன் பாடினார் – நேரடி வலைபரப்பு

Rajni-Kanth-Super-star-rowdy-criminals-billa-cinema-tamil-nadu
மை நேம் இஸ் பிரபாகரன்

வாழ்க்கை எல்லாம்
நானும் தாக்காத சேக்காளி இல்லே
ஓடாத ஊரில்லே ஐயா

நல்ல நண்பன் இல்லையென்றால்
எங்கு போனாலும் விடமாட்டேன்
நானாகத் தொடமாட்டேன் ஐயா

பூப்போன்ற பெண்ணோடு ஆட்டம்
ஆனாலும் சிலர் மீது நோட்டம்
என் வாழ்க்கை அழகான தோட்டம்
இன்பங்கள் என்றாலே மாற்றம்

பொன்னோடும் பொருளோடும் எப்போதும் நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் (நான்) ஓட்டம்
பொன்னோடும் பொருளோடும் எப்போதும் (தமிழ்நாட்டு) நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் (நான்) ஓட்டம்

மை நேம் இஸ் பிரபாகரன்

நீரோட்டம் போலெந்தன் ஆசை
தேரோட்டம் போலெந்தன் வாழ்க்கை
போராட்டம் இல்லாத பாதை
எல்லாமே சுகமான போதை

நான் கொண்டு வந்தேனா நீ கொண்டு வந்தாயா செல்வம்
நாளென்ன பொழுதென்ன நாள்தோறும் விளையாடி வாழ்வோம்
நான் கொண்டு வந்தேனா நீ கொண்டு வந்தாயா செல்வம்
நாளென்ன பொழுதென்ன நாள்தோறும் விளையாடி வாழ்வோம்

மை நேம் இஸ் பிரபாகரன் வாழ்க்கை எல்லாம்
நானும் தாக்காத தொண்டன் இல்லே
போடாத தலைவர் இல்லே ஐயா

நல்ல நண்பன் இல்லையென்றால்
எங்கு போனாலும் விடமாட்டேன்
நானாகத் தொடமாட்டேன் ஐயா

LTTE-Prabakaran-Sri-Lanka-Tamils-Dead-Billa

செயல் பயனற்ற நிலை

ரொம்ப நாளாக கூடவே ஓடுபவர். அன்றும் ஜிம்மில் பைக்கிங் செய்து கொண்டிருந்தார். நான் ஐந்து நிமிடம் ஓடுவதும் நான்கு நிமிடம் நடப்பதுமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தேன். காதில் தற்போதைய ஹிந்தி ரெஹ்மான் ஒலியை மீறி தடால் சப்தம் கேட்டது.

பக்கத்தில் சாதாரணமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர், கீழே விழுந்திருந்தார். 911 அழைத்தார்கள். அங்கே இருந்த எவருக்கும் முதலுதவி தெரியவில்லை.

ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளேயே உயிர் பிரிந்து விட்டது. வயது 44.

அவர் என்னைப் போல் திடீரென்று ஓட வருபவர் அல்ல. பல வருடங்களாக தினசரி வருபவராம்.

மரணம் கண் முன்னே நிகழ்வதை கையாலாகாமல் பார்ப்பது இரண்டாவது தடவை. முதல் தடவை திருச்சானூர் கோவில் வாசற்படியில் அப்பா வழுக்கியபோது பதைபதைத்ததும் ஓடிப்போய் என்னென்னவோ செய்து பார்த்ததும்; சிரார்த்தம் நம்பிக்கையில்லாமல் போடாமல் இருப்பதும்; ‘நான் கூடப் போறேனில்ல! ஒண்ணுத்துக்கும் கவலை வேண்டாம்’ என்று வாக்குறுதி சுக்கலானதும்; வாழ்க்கை மாயை போன்ற அநித்தியங்கள் தோன்றியதும்; செய்த பாவக்கணக்கின் பட்டியலும்; சில இளையராஜா சோகப்பாடல்களும்; கடவுள் நம்பிக்கையும்; கடவுள் வெறுப்பும்; இலட்சிய வேட்கை கொழுந்துவிட்டெறிவதற்கான தாகசாந்தியும்; எதற்காக சின்னச் சின்ன விசயங்களுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்பட்டு வைகிறோம் என எல்லாம் ஒட்டுமொத்தமாய் வந்து போனது.

எதுவும் நிலைத்து இலயிக்கவில்லை.