H1N1 (Swine) Flu? Are you in Danger? Will you die?


Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

பயப்படுணுமா?

எனக்கு பேக்டீரியாவுக்கும் வைரசுக்கும் வித்தியாசம் தெரியாது.

விக்சனரி அகராதிப்படி Bacteria என்றால் நுண்ணுயிரி; Virus என்றால் நோய்க்கிருமி.

ஸ்வைன் காய்ச்சல் என்று இரண்டு மாதம் முன்பு அழைக்கப்பட்டு இன்றளவில் எச்1என்1 என்று ஏதோ அமெரிக்க விசா போல் உருமாற்றம் கண்டிருக்கும் பன்றி ஃப்ளுவிற்கு நீங்கள் பயப்பட வேண்டுமா?

  • நூறு டிகிரி தாண்டும் காய்ச்சல்
  • தொண்டை அரிப்பு
  • ஜலதோஷம், மூக்கடைப்பு

போன்றவை உங்களுக்கு இருந்தால் பன்றிக்காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை அறிய சோதனை செய்யவேண்டும். இந்தியாவில் அந்த சோதனைச் சாலை தற்போதைக்கு இரண்டே இடத்தில்தான் உள்ளது: மும்பை அருகே புனே மற்றும் தலைநகரம் எயிம்ஸ், புது டெல்லி.

உங்களின் சாம்பிள் அங்கே பரிசோதனைக்குச் சென்றபின் 48 மணி நேரம் கழித்தே, உங்களுக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளதா என்பதை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். அதற்குள் பலகீனமானவர் என்றால் இறவனடி போய் சேர்ந்திருப்பார்.

எப்படி வரமால் தடுக்கலாம்?

அமெரிக்க துணை ஜனாதிபதி பிடென் வாக்குப்படி, வாசற்படியைத் தாண்டக் கூடாது. எங்கேயாவது கோவில், கோர்ட்டு, கோயிஞ்சாமி கூட்டம் சென்றாலும் பீடிக்கும்.

வருடாவருடம் அமெரிக்காவில் ஃப்ளூ எனப்படும் காய்ச்சலுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை: முப்பத்தாறாயிரம் என்பார்கள் சிலர் (36,000 Americans died of Flu related causes each year during the 1990’s.). ஆனால், வழுக்கி விழுந்து இறந்தால் கூட மாரடைப்பு என்று வகைப்படுத்தும் வகையறா என்கிறது CDC – Influenza (Flu) | Q & A: 2007-08 Flu Season

  • கை சுத்தம்: டெட்டாலோ, மெடிமிக்ஸொ… சோப் போட்டு கையை அவ்வப்போது அலம்பி சுத்தாமாக்கிக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக எதையாவது உண்பதற்கு முன்.
  • சளி நீக்கி: கைகுட்டை பழைய ஹைதர் காலத்து நாகரிகம். க்ளீனெக்ஸ் போல் பேப்பர் துண்டு கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். தும்மல் வந்தால் அதைப் பயன்படுத்தவும். உடனடியாக குப்பையில் போடவும்.
  • துஷ்டனைக் கண்டால் தூரவிலகு: எவருக்காவது உடம்பு கொதிக்கிறது, காய்ச்சல் என்றால் காத தூரம் ஓடிப் போவிடுங்கள்.
  • அடைந்து கிடக்கவும்: விமானம், இருவுள் பயணம், பேருந்து சவாரி, ஆலயம், அலுவலகம், பள்ளிக்கூடம் போன்ற மூடிய பிரதேசங்களைத் தவிர்க்கவும்.
  • மேலும் விவரங்கள்

சுவாரசியாமான மறுமொழிகளுக்கும் அறிவிப்பும்: பேப்பர் » கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

வயது என்ன?

பின் பதின்வயது, இருபதுகள் என இந்த வைரஸ் இளைஞர்களையே பாதிக்கிறது. இயல்பாக இவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் சிறப்பாக இருக்கும். 50 வயதுகளில் இருப்போரை H1N1 இன்ஃப்ளுயன்சா குறைவாகவே தாக்கியுள்ளது.

தொற்றுநோய் எச்சரிக்கை

உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை நிலையை 5-6 நிலைகளுக்கு உயர்த்தியுள்ளது. 1968 ஆம் ஆன்டுக்குப் பிறகு, ப்ளூ காய்ச்சலுக்காக விடுக்கப்படும் அதிகபட்ச எச்சரிக்கை இது. உலகின் ஒரு பகுதியில் உள்ள இரண்டு நாடுகள், மற்றொரு பகுதியில் ஒரு நாட்டில் நோய் பரவினால் தொற்றுநோய் எச்சரிக்கை விடுக்கப்படும்.

  • நிலை 1-3: பெருமளவு விலங்குகளிடமும் சில மனிதர்களிடமும் பாதிப்பு
  • நிலை 4: மனிதர்களிடையே தொடர்ந்து பரவிக் கொண்டிருப்பது
  • நிலை 5-6 / தொற்றுநோய்: மனிதர்கள் இடையே மிகப் பரவலாகத் தொற்றிய நிலை.
  • உச்சத்துக்குப் பின்: மீண்டும் மீண்டும் தொற்றுவதற்கான வாய்ப்பு
  • தொடர் தொற்றுநோய்: பருவகாலத்துக்கு ஏற்ப நோய் தொற்றுவது.

தடுப்பு மருந்து கிடையாது

இப்போதைக்கு டாமிஃப்லூவைப் போல், தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்பட்டு வருகிறது. ஆனால் இது விரைவிலேயே மருந்துக்கு கட்டுப்படாமல் போகலாம். இன்னும் பயங்கரமானதாக உருமாறலாம்.

தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டாலும் கூட அதன் தடுப்புத் திறன், உரிய பாதுகாப்புத் திறனை பரிசோதிக்க பல்லாண்டு காலம் ஆகும்.

தடுப்பு மருந்து கிடைத்தாலும், வளரும் நாடுகளுக்கு அது போய்ச் சேருமா?

விரைவில் காலத்துக்கு ஏற்ப பரவும் ஃப்லூ காய்ச்சல் உருவாகலாம்.

இதுவரை சேதம்

டபிள்யு.எச்.ஓ அறிக்கைப்படி, 29 நாடுகளில் உள்ள 3,440 ஆய்வுக் கூடங்களில் 48 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது இன்னும் பரவினால், வேறு வைரஸ்களுடன் கலந்து மேலும் அதிகமாகப் பரவி, இன்னும் மோசமான ஒன்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தெளிவாக கணிக்க இயலாததாகவும் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருப்பதாகவும் இந்த வைரஸ் இருக்கிறது என்று வொர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் தெரிவிக்கிறது. எனவே அதன் தற்போதைய வடிவம் பறவை, பன்றி, மனிதர்களின் மரபணுக்களைப் பெற்றுள்ளது.

இது தொற்றுநோயாக மாறலாம்.

ஏன்? எதற்கு? எப்படி?

H1N1-Avian-Bird-Flu-Pigs-Swine-Influenza-Health-Medical-Doctor

சில தகவல் உதவி: இந்தியா டுடே

5 responses to “H1N1 (Swine) Flu? Are you in Danger? Will you die?

  1. பாலா, H1n1 என்று முடிவாக தெரிந்தால் (னேசல் ச்வாப் அனுப்பி, CDC இல் அது நிரூபிக்கப்பட்டால்தான் சொல்கிறார்கள். இந்த பரிசோதனைக்கு அனுப்பும் முறையும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. நியுஜெர்சியில் நிறைய பேருக்கு சுரமிருந்தாலும் பொதுநலத்துறை அனுமதி தந்தால் மட்டுமே CDCக்கு போகும். மற்றபடி இது நார்மல் பிளு சீசன் இல்லை. ஆனாலும் நிறைய பேருக்கு ஃப்ளூ. எனவே குறைந்த எண்ணை வைத்து ஒன்றும் சொல்ல இயலாது. இந்தியா போன்ற நாடுகளில் சாதாரண சுரத்துக்கு மருத்துவமனை செல்ல முடியாதவர்கள் நிறைய. இங்கேயும் டைலினால் போட்டுக்கொண்டு அலுவகம் செல்பவர்கள் உண்டு. இந்த அக்டோபரில் எங்களுக்கு நிறைய வேலை இருக்கும்:) ஒவ்வொருவருக்கும் 4 வாக்சின் என்று போடவேண்டி வரும்

    • நாலு வாக்சின்!!!! (:

      சாதாரணமாக ஊசி போட விரும்பாத நானும், அடுத்த ஃப்ளூ சீஸனில் வாக்ஸின் பாதுகாப்பு போட்டுக் கொள்ள இருக்கிறேன்.

  2. 53 countries have officially reported 15,510 cases of influenza A(H1N1) infection, including 99 deaths. These are confirmed cases, there are many pending probable and possible cases. Many more may not even be sent. Two schools are closed in my County.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.