Manushyaputhitan in Ecstasy & Cries due to after-effects


மே 27, 2009 குமுதம் இதழில் இருந்து:

பரவசத்தில் மனுஷ்யபுத்திரன்

‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தின் முக்கியமான பாடலை நீங்கள்தான் எழுதவேண்டும் என்றார் கமல். எனக்கு இன்ப அதிர்ச்சி.

நான் பாடல் எழுதுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அதுவும் கமலஹாசன், மோகன்லால் என இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் அறிமுகம் என்றால் எப்படி இருக்கும்?! அதிர்ஷ்டம் என்றுதான் தோன்றுகிறது.

ஷ்ருதி, அவர் பாடிப் பதிவு செய்த ஒரு சரணத்தைக் கொடுத்து, Manushya-Puthiran-Poets-Tamil-Kavinjar-Kavidhaiபாடலின் இயல்பைப் பற்றிக் கூறினார். ஹிந்தியில் இருந்த அந்த சரணத்தின் அர்த்தம் கூட எனக்குத் தெரியாது. ஆனால், ஷ்ருதி அதைப் பாடிய விதத்தில் வெளிப்படுத்திய ஆழ்ந்த துயரம் மனம் கசியச் செய்தது.

ஷ்ருதியின் அற்புதமான இசையில் கமல் அந்தப் பாடலைப் பாடியபோது எனது வரிகளைத் தாண்டி அது மனதை கரையச் செய்யும் வேறொரு கலைப்படைப்பாக மாறுவதைக் கண்டேன். என் கண்களில் நீர் தளும்பியது.

10 responses to “Manushyaputhitan in Ecstasy & Cries due to after-effects

  • ஸாருக்கு ‘கண்கள் பனித்தனவும்; இதயம் இனித்ததும்’ உயிர் உண்மையாகத் தெரியுமாம் 🙂

 1. என்ன பிராண்டு சோப்புங்ணா இது? நல்லா வாசனையா இருக்கு.

  • ‘மாருகோ மாருகோ… மாருகயி! ஜோருகோ! ஜோருகோ!! ஜோருகயீ!! காசுகோ… பூசுகோ… மாலையில் ஆடிக்கோ! மந்திரம் பாடிக்கோ!!’

 2. sorry to write in english, since i don’t have
  nhm installed in this comp.

  i don’t understand the logic behind your bold and italics and colors, but just for the sake of argument, why didn’t you pose the same criticism on era.murukan? is it because he is a s/w wala, or is it because he writes according your sensibilities?

  i have seen how interviews work. especially in magazines like kumudam and how words get modified/exaggregated. i request you to watch the youtube video of the audio release. manushyaputhiran was so much more dignified than era.mu! i don’t see anything wrong in calling kamal and mohanlal as good actors. and it might sound weird to us that he was in tears when he listened to a song. but it is so much easier to mock a poet, because we feel he is romanticizing pain. but his emotions are his own and so are his tears. if it sounds fake to you, then it is your problem and not his!!

  talking of sycophancy, read the post by era.mu on the song sung by marmayogi and how it felt like a divine voice descending from some primordial depths etc etc.

  finally, a humble request to tamil blogdom to give up on these nitpickings. unless ofcourse, it offers some therapeutic value to get over the drudgery of code- typing and project management.

  regards,
  Arvind

  • அரவிந்த்,

   —why didn’t you pose the same criticism on era.murukan? is it because he is a s/w wala, or is it because he writes according your sensibilities?

   இரா.முருகனின் நேர்காணல் எனக்குக் காணக் கிடைக்கவில்லை. குமுதம்.காம் கூட என் அளவில் காசு விரயம். சென்னையில் இருப்பதால் புரட்ட நேரிட்டது. கண்ணில் பட்டது. பகிர்ந்தேன்.

   அவரை ஏன் சொல்லவில்லை? அதில் ஏன் கருத்துப் பதிவு இடவில்லை? இவரை ஏன் திட்டக் கூடாது போன்ற பொற்கைப் பாண்டியர் குணாதிசயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.

   ‘அந்தக் காலத்திலே’ என்று ரொம்பப் பழசாக இருந்தால் சரி. இன்றைய நிமிடத்திலே என்று புதுசு கண்ணா புதுசாக இருந்தாலும் சரி. ‘கண்டதைச் சொல்வேன்’.

   ‘திமுக குடும்ப அரசியல் செய்கிறது! அதிமுகவிற்கு வாக்களியுங்கள்!’ என்று சொல்வது போல் ஈயத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளை ஒப்புமையை நிறுத்திக் கொள்வது நலம்.

   —i have seen how interviews work. especially in magazines like kumudam and how words get modified/exaggregated.

   எனக்கு அடுத்தவர் மனசுக்குள் பூந்து பார்ப்பது இயலாத செயல். நான் நேர்காணல் எடுத்தவரைக்கும் ஒலிப்பதிவு செய்துள்ளேன். அப்படியே பகிர்ந்து/எழுதி இருக்கிறேன்.

   கொடுத்த பேட்டிகளிலும் திரித்தல் வந்ததென்றால், மறுப்புக் கடிதம் எழுதும் பழக்கம் உண்டு.

   —i request you to watch the youtube video of the audio release.

   உரல், தொடுப்பு, சுட்டி ஏதாச்சும் கொடுங்க…

   —manushyaputhiran was so much more dignified than era.mu! —

   ராஜா 50,000 கோடி அடிச்சாரு; ஆனா அம்மா அஞ்சு கோடிதான் அடிச்சாங்க! எனவே, உங்கள் பொன்னான…

   —but it is so much easier to mock a poet, because we feel he is romanticizing pain. but his emotions are his own and so are his tears. if it sounds fake to you, then it is your problem and not his!!

   என்னோட பிரச்சினைதானே… கலைஞர் உண்ணாவிரதம் இருப்பதும் என்னுடைய பிரச்சினைதானே? போலிக் கலைஞரும் நிஜ நடிகரும்!

   —finally, a humble request to tamil blogdom to give up on these nitpickings. unless ofcourse, it offers some therapeutic value to get over the drudgery of code- typing and project management.

   என்னங்க இது ஸ்டார் விஜய் தேவதர்ஷினி, சன் டிவி விஜய டி இராசேந்தர்ர்ர்ர் அரட்டை அரங்கம்’, கோபிநாத் ‘நீயா? நானா?’, விசுவின் ‘மக்கள் அரங்கம்’, ராஜ் டிவி ‘அகட விகடம்’, எல்லாரையும் நிறுத்த சொல்றீங்களா?!

 3. பாலா,

  for argument sake, ஒரு வாதத்திற்காகத் தான் இரா.முவைப் பற்றிச் சொன்னேன். ‘இவர நொட்ட சொன்னிங்களே, அவர ஏன் சொல்லல’ என்று நான் சொல்லவில்லை. மற்றபடி யார் போலி, யார் நிஜம் போன்ற விவாதத்திற்குள் எல்லாம் நான் வரவில்லை. வேண்டுமென்றால் கீழுள்ள பதிவுகளைப் பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

  http://www.eramurukan.in/tamil/magazines.php
  (பார்க்க, கடைசி பக்கத்தில் உள்ள கட்டுரை “யூனிட்”)


  ஈயத்தைப் பார்த்து இளித்தது பித்தளை என்றம்ு நான் சொல்லவில்லை. நீங்கள் தான் மனுஷ்ய புத்திரன் சொன்னதை உங்கள் கற்பனைக்கேற்ப நீட்டி, முழக்கி, கலரடித்து உள்ளீர்கள் என்று சொல்கிறேன்.

  உதாரணமாக, ’நான் பாடல் எழுதுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை’ என்பதை கலர் அடித்துள்ளீர்கள். அதை, ‘எனக்கு சினிமா சேன்ஸ் கிடைக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை.. எல்லா புகழும் கமலுக்கே’ என்பதைப் போல் திரித்து படித்துள்ளீர்கள என்று நினைக்கிறேன். மனுஷ்ய புத்திரன் ‘சினிமா பாடலுக்கும்’ தனக்கும் உள்ள தூரத்தைக் காட்டவே அவ்வாறு சொல்லியிருக்கிறார் என்பது என் புரிதல்.

  ‘நான் ” பாடல் “ எழுதுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை, என்பதில் ‘பாடலில்’ உள்ள அழுத்தம் எழுத்தில் வரவில்லை. வரவும் வராது. non-verbal cues அனைத்தையும் verbalஆக கொண்டு வருவது கடினம். அதிலும், ‘குமுதம்’ என்றால் கேட்கவே வேண்டாம். இதை அறிய உளவியல் தெரிந்திருக்க வேண்டியதில்லலை. சாதாரண பொதுபுத்தி(common sense) போதும். இதை எல்லாம் கணக்கில் கொண்டு, யோசித்து தான் ஒரு விமர்சனத்தை முன் வைக்க வேண்டும். சுடச் சுட செய்திகளுக்குத் தான் நக்கீரனும், இட்லிவடையும் இருக்கிறதே . அதற்கு பாஸ்டன் பாலா எதற்கு?

  காசுக்காக பரணி பாடுகிறார் என்று
  கூச்சப்பாடாமல் மேலுள்ள commentஇல் சொல்லி இருக்கிறீர்கள். உயிர்மையில் எத்தனை பேர் வேளை பார்கிறார்கள் என்று தெரியுமா? அத்தனைப் பேரை மட்டும் வைத்துக் கொண்டு இவ்வளவு புத்தகங்களை, இதழ்களை எப்படி கொண்டு வருகிறார்கள் என்று யோசித்து இருக்கீறீர்களா? இன்றளவும் மனுஷ்ய புத்திரனே கண் வலிக்க proof-reading பார்பார் என்று நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கிறேன். இத்தனை உழைப்புக்குப் பின் வரும் லாபம் தினப்படி வரவு-செலவை கவனிப்பதற்கே சரி. மிஞ்சுவது எதுவும் இல்லை. இப்படி இருக்க காசுக்காக பரணி பாடுகிறார் என்று சொல்வது எனக்கு மிகவும் அறுவெறுப்பாக உள்ளது. அப்படியே பாடினா தான் என்ன என்று உங்களையே திருப்பிக் கேட்க தோன்றுகிற்து!

  யாரையும் விமர்சிக்கவே கூடாது என்று நான் கூறவில்லை. ஆக்கபூர்வமாக விமர்சியுங்கள். ம்னுஷ்ய புத்திரன் இதைப் படித்தால் எவ்வளவு மனவறுத்தப் பட்டிருப்பார். எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு, மூச்சடைத்து ‘உயிர்மையை’ நடத்திக் கொண்டு இருக்கிறோம் என்று அவர் நினைக்கும் படி செய்வது நியாமானது அல்ல என்பது என் அபிப்பிராயம். அல்லது, கவிஞ்ர்களை நான் கண்மூடித் தனமாக பூஜை அறையில் வைத்து வழிபடுகிறேன்
  என்று நீங்கள் நினைத்தால் நான் எதுவும் சொல்வதிற்கில்லை.

  அங்கதமாக எழுத நீங்கள் ஆசைப்படுவது புரிகிறது. நல்ல அங்கததில் உள்ளூர ஆக்கபூர்வமும், சமூக உணர்வும் ஊடாடிய படியே இருக்கும். ‘புயலிலே ஒரு தோணி’ நல்ல உதாரணம்.

  மற்றபடி, ஸ்டார் விஜய் தேவதர்ஷினி, சன் டிவி விஜய டி இராசேந்தர்ர்ர்ர் , விஜய் டீவி கோபினாத, ஜெயா டிவி விசு மற்றும் பாஸ்டன் பாலா எல்லாம் ஒன்று என நான் நினைக்கவில்லை. நினைத்திருந்தால் பின்னூட்டம் இட்டிருக்கவே மாட்டேன். அல்லது ‘அரட்டை அரங்கம்’ தான் நீங்கள் நடத்துகிறீர்கள் என்று சொன்னால், அந்தக் கச்சேரிக்கு நான் வரவில்லை.

  அன்புடன்,
  அரவிந்த்

 4. சிறுபத்திரிகைகளைக் கஷ்டப்பட்டு நடத்திய காலமெல்லாம் அந்தக் காலம். இப்போது பல சிறுபத்திரிகைகளிடம் பணம் இருக்கிறது. பதிப்பகம் நடத்துகிறார்கள். தங்களுக்கென்று ஐகன்களும் பிராண்டுகளும் வைத்திருக்கிறார்கள். செலவழிக்கிறார்கள். ஸ்பான்சர் பிடிக்கிறார்கள். வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். திரைப்படங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கிறது. அரசியலில் ஈடுபடுகிறார்கள். பதவி கிடைக்கிறது. பெரிய இடத் தொடர்புகள் கிடைக்கின்றன. கஷ்டப்படுவதாவது!

 5. சாத்தான்,

  ”சிறுபத்திரிகைகள்” என்று பொதுவாக சொல்லாதீர்கள். நான் இங்கு ‘உயிர்மை’ பற்றி specificஆக பேசுகிறேன். Penguin போன்ற பதிப்பகங்களுக்கு இருக்கும் resourcesல் பத்தில் ஒரு பங்கு கூட அவர்களுக்கு இல்லை. இருந்தும் இத்தனை புத்தக்ங்களை, வடிவ நேர்த்தியுடன் கொண்டு வருகிறார்கள். இதை தான் ‘கஷ்டப்பட்டு’ என்று சொன்னேன். நீங்கள் பணத்திலேயே குறியாக இருக்கிறீர்கள் போல!
  அப்படியே அவர்கள் ஸ்பான்சர் புடித்து, பணம் சம்பாரித்தால் தான் என்ன? செல்லப்பா மாதிரி கடைசி வரைக்கும் கஷ்டப்பட்டுட்டுடே இருக்குனுமா? அப்படி இருந்தா கடைசியில ஒரு ‘உச்சு’ கொட்டுவிங்க.. அப்பழுக்கில்லாத, கரைபடியாத மனிதர் அது இதுன்னு சொல்லுவீங்க.. ஒரு பிளாக் அண்ட் வொய்ட் போட்டவ பிரண்ட் பேஜில போடுவீங்க.. சைக்கிள் கேப்ல கொஞ்சம் நொல்லையும் சொல்லுவீங்க.. இதுக்காக ஒருத்தர் பஞ்சத்தில வாடனுமா?
  போங்கய்யா..

 6. ஏம்ப்பு டென்சனாவுறீங்க? நான் பொதுவா சொல்லல. உயிர்மை, காலச்சுவடு, அம்ருதா மாதிரி பத்திரிகைகளைத்தான் குறிப்பிட்டு சொல்றேன். நீங்க சொல்றதெல்லாம் கஷ்டமா? வேலைன்னா கஷ்டம் இல்லாமலா இருக்கும்? ஆட்டோ டிரைவர் டிராஃபிக் பத்திப் புலம்புற மாதிரி இருக்கு. பணக் கஷ்டத்தை நான் ரொமான்டிசைஸ் பண்ணல. அதெல்லாம் இலக்கியவாதிகளோட பழக்கம். சினிமா, அரசியல் தொடர்புகள், பிராண்ட் உருவாக்கம் மூலமா கிடைச்ச வசதிகளை வெச்சு அரைச்ச மாவைத்தானே அரைக்கிறாங்க. நிறைய சொல்லலாம், கட்டுப்படியாகாது. என்பதையே நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.