Tag Archives: Jeyamohan

ஜெயமோகனைக் கவர்ந்த தத்துவவியல் புத்தகங்கள்

புத்தக கடையில் ஜெமோ விரும்பி வாசிக்க எடுத்த நூல்களின் பட்டியல்:

1. Confessions of a Philosopher – Bryan Magee

2. If on a winter’s night a traveler – Italo Calvino

3. 2666 – Roberto Bolano

4. Ludwig Wittgenstein: The Duty of Genius – Ray Monk

5. Pragmatism: The Classic Writings – Edited by H S Thayer

6. The Meaning of Truth: William James

7. Evolution and the Founders of Pragmatism: Philip P Wiener

8. The Geography of Thought: Richard E Nisbett

ஜெயமோகன்: ஆளுமைகள் மதிப்பீடுகள்

ஜெயமோகனை சந்தித்த கதை தொடர்கிறது.

நான்: இப்போ எழுதறதில் எதையாவது படிச்சு ரெஃபர் பண்ணுகிற மாதிரி உங்களுக்கு யாராவது இருக்காங்களா? உங்களைக் கவர்ந்தவர்கள்?

“நெறைய பேரு இருக்காங்க. அப்பப்ப சொல்லிடுவேன். உங்களுக்கு அறிமுகமானவர்களில் சேதுபதி அருணாச்சலத்தையும் அரவிந்தன் நீலகண்டனையும் தற்காலத்தின் மிகச் சிறந்த வளரும் எழுத்தாளர்களாக நான் கருதுகிறேன். அந்த வயதில் நான் வாசித்ததை விட, இவர்களின் அகலமும், ஆழமும் நீளமும் அதிகம்.

சொல்லப் போனால், அ.நீ. குறிப்பிடத்தக்க படைப்பாளியாக, தமிழிலக்கிய கர்த்தாவாக வரவேண்டியவர்; வந்திருக்கக் கூடியவர். ஆனால், அவருக்கு அதில் ஆர்வம் இல்லை. அவருடைய முனைப்பெல்லாம், தன்னார்வத் தொண்டில் இருப்பதும் நல்லதே.

சுய உதவிக் குழு, மகளிர் நலன், விவேகானந்தா கேந்திரா என்று அயராது உழைக்கிறார்.

எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் இவர்கள் இருவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

நேசகுமாரை…”

ட்ரெயின் வரும் சத்தத்தில் ஜெயமோகன் உரையாடல் முற்றுப் பெற்று வெங்கட் சாமிநாதனுக்கு தாவிவிட்டது.

“வெங்கட் சாமிநாதனின் நகையுணர்வு மெலிதானது; பிரசித்தி பெற்றது. யாத்ராவில் ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் போடுகிறார்.

‘இந்தப் புத்தகத்தில் 13 வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

  • ஆசிரியர் பெயர்
  • பக்கங்கள்
  • பதிப்பகம்
  • விலை
  • அச்சிட்டவர்
  • புத்தகத் தலைப்பு

இப்படி போகிறது.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ’35 வயதான எந்தக் குடிமகனும் இந்தியக் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு. மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும்!’

இன்றைய அளவிலும் கறாரான கருத்துக்கு சொந்தக்காரர்.

வெ.சா. விமர்சனத்தை தனியாகவும், சொந்த வாழ்க்கையில பிரதிபலன் பார்க்காம உதவறதையும் தனித்தனியா வத்திருந்தார். அவர் நேர்மையாக, கடுமையாக விமர்சித்த பலருக்கு தனிப்பட பலப் பல விஷயங்கள் செய்திருக்கார்.

அதை வெளியில் யாருக்கும் சொன்னதுமில்லை. உதவி பெத்துண்டவங்க சொல்லிதான் எனக்கே தெரியும்!

நீங்க சென்னை வரும்போது அவசியம் சந்திக்க வேண்டிய மனிதர்.”

நான்: அச்சச்சோ… மிஸ் பண்ணிட்டேனே! சுஜாதாவைப் சந்திச்சவங்க சொன்னதில் இருந்து எனக்கு பயம் வந்துடுச்சு.

ஜெயமோகனை சந்தித்த கதை

beto_frota-cashews-Colors-nose-cool-flickr-photos-imagesஇதற்குப் பெயர் சீமான் ஜோக்காம்.

எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்த குறிப்புகளை இயக்குநர் சீமானின் நகைச்சுவையைக் கொண்டு துவங்க வேண்டாம்தான். இருந்தாலும் எங்கேயாவது ஆரம்பிக்க வேண்டுமே!

இன்னொன்றும் இருக்கிறது. ஜெமோ சொன்னதில், என் மனதில் என்ன ஏறி நிலைத்து நிற்கிறது என்பதை இதை வைத்துப் புரிந்து கொள்ளலாம். அல்லது இப்படியும் வைத்துக் கொள்ளலாம். ஜெமோவிற்கு ஆளை எடைபோட்டு எவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும் எனலாம்.

ஏதோ ஒன்று… சங்கதிக்குப் போயிடலாம்.

இது இஞ்சினீயரிங் முடித்துவிட்டு மணிரத்னத்திற்கு அசிஸ்டென்ட் டைரக்டராக போக விரும்பியவனின் கதை. விதி விளையாட, இராம நாராயணனின் உதவி இயக்குநராகிறான்.

பாம்பு சேஸ்.

Sylvan_Flickr-Snakes-Green-Rama-Narayanan-Moviesஜிகுஜிகுவென்ற பச்சை சட்டைக்காரனை பாம்பு துரத்தோ துரத்தென்று ஓட்டுகிறது. புல் தடுக்கி சகதியில் விழுந்து விடுகிறான். இது திரைக்கதையில் இல்லை. அம்மன் கோவில் வரை சென்றடைய வேண்டும்.

சட்டை மாற்ற அனுப்பி வைக்கிறார் நெறியாளுநர்.

பார்த்தால், இன்னொரு பச்சை சட்டையைக் காணோம். க்ரூப் டான்சுக்கு வாங்கிய மஞ்சள் இராமராஜன் மட்டுமே நிறைய இருக்கிறது. காஸ்ட்யூம்காரருக்கு இயக்குநர் டெக்னிக் தெரியும். பச்சைக்கு பதிலாக மஞ்சள் போட்டு அனுப்பிவிடுகிறார்.

நம்ம அசிஸ்டென்ட் மணிக்கு இராவணன் ஆக வேண்டியவர். விடுவாரா! கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கன்டினியூட்டி பார்ப்பவர். ‘சுரேகா! சுலேகா!! ஷிமோகா!!!’ என்று கத்தி முறையிடுகிறார்.

இராமநாராயணன் அவரை ஆற்றுப்படுத்தி, கடகடவென்று காட்சியை சுட்டு முடிக்கிறார்.

“என்னங்க இது… இப்படி பண்ணிட்டீங்க? ஆரம்பத்துல துரத்தறப்ப பச்சை கலரு. இப்போ மஞ்சள். சனங்க லாஜிக்கா கேள்வி கேப்பாங்களே! திரும்ப இன்னொரு நாள் ஷூட்டிங் செஞ்சரணும்”

“அதெல்லாம் டப்பிங்கில பார்த்துப்பேன்”. இது இயக்குநர் சொன்னதாக சீமான் சகபாடிகளிடம் சொல்வது.

வெறுத்துப் போன அசிஸ்டென்ட் தன் வேலையைத் துறந்து இமயமலைக்கு செல்லும் வழியில் அக்ஷர்தாமில் ஐமேக்ஸ் பார்த்துவிட்டு, பட ரிலீஸன்று சென்னை திரும்பி விடுகிறார்.

அந்தக் காட்சியில் டைரக்டர் எப்படி சமாளித்தார் என்னும் ஆவல். பார்க்கிறார். அந்த சேஸிங் சீனும் வருகிறது.

பச்சை சட்டை. துரத்தல்.

“டேய்… நீ சட்டை மாத்தினேனா எனக்குத் தெரியாதுன்னு நெனக்கிறியா!? பச்சசட்டக்காரந்தானே நீயு!” பாம்பு பேசிவிட்டது. மஞ்சள் சட்டை துரத்தல் தொடர்கிறது.

இதுதான் சீமானின் ராமநாராயணன் ஜோக் என்று ஜெயமோகனால் சொல்லப்பட்டதின் பாபாக்கம்.

ஜெயமோகன்: சில குறிப்புகள்

இணைய அறிமுகம், சிறுகுறிப்பு, தகவல் கட்டுரை: Jeyamohan Links: Issues, Controversy, Opinions, Interviews, Fiction « Tamil Archives

வார்த்தைகளின் விளிம்பில்: எழுத்து – ஜெயமோகன் – தொடர்

இன்றும் வலைபதிவர்கள் மட்டுமல்லாமல், சமகால எழுத்தாளர்களுக்கும் ஆதர்சம் சுஜாதாதான். அவர் மேம்போக்காகக் கூறிச் சென்ற வாக்கியங்களை, வேதமாகக் கொண்டவர்கள் நாம். இப்போதும் என்னால் அவர் எழுதிய பல போதனைகளை (க்யூவில் நிற்கும்போது புத்தகம் எடுத்துச் செல்லுங்கள்!) நினைவு கூற முடியும். அவர் minimalist திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது.

இப்படிப்பட்ட பெருமைகள் ஜெயமோகனுக்குக் கிடையாது.

குழந்தைகளைப் பற்றி பேசும்போது, ‘அவனோடயும் இவளோடயும் கம்பேர் செய்து பார்க்காதே’ என்போம். சொல்லிவிட்டு, முதல் ரேங்க், கூடப் படிக்கிறவனுக்கு வரும்போது உனக்கு மட்டும் என்ன கேடு? என்றும் தொடர்வோம். எழுத்தாளர்களை ஒப்பிடக் கூடாது. அப்படி சொல்லிவிட்டு, ஜெயமோகனை நான் படித்த வேறு சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்தால்:

  1. சுந்தர ராமசாமி: ஜே.ஜே சில குறிப்புகள் போல் path breaking; கூட முதல் வாசிப்பிலேயே புரிந்தாலும், வாசகருக்குக் கிடைக்கும் சுவையில் மயங்கி மீண்டும் வாசிக்க அழைப்பது; இதெல்லாம் ஜெமோ-விடம் எனக்கு கிடைக்கவில்லை.
  2. அசோகமித்திரன்: படிக்க கூடிய சைஸ்; ‘கரைந்த நிழல்கள்’ ஏழ்மையைக் காட்டினாலும் ஆனந்த விகடன் சந்தாதாரர் நெருங்கக் கூடிய மாதிரி போகும். ‘காடு’ மாதிரி முன்னுரைகள் பயமுறுத்தாது.
  3. இந்திரா பார்த்தசாரதி: விஷயம் நிறைய தெரிந்தாலும் ஓவர்-ரைட்டிங் இருக்காது. சட்டு புட்டுனு மேட்டருக்கு வருவார். கதாபாத்திரங்கள் எல்லாமே அறிமுகமானவை என்றாலும் அனைத்தும் நீண்ட நாள் ஒட்டிக் கொண்டு விவாதம் எழுப்பும்.
  4. கௌதம சித்தார்த்தன்: கிராமியக் களம். கிட்டத்தட்ட ஜெயமோகன் சிறுகதை மாதிரி மெதுவான ஆரம்பம் என்றாலும் ஈர்க்கும் கதையமைப்பு; துள்ளல் ஓட்டம்; குறியீடு கொண்டிருந்தாலும் துருத்திக் கொண்டு நிற்காது. அதாவது அதிகம் பேசப்படும் ‘டார்த்தீனியம்‘ மாதிரி இவரும் கலக்கல் படைப்பு பல கொடுத்துள்ளார். ஏனோ, சவுண்ட் விடுவதில்லை.
  5. சுதேசமித்திரன்: ஒரு தேர்ந்த சிறுகதையாசிரியர், எவ்வாறு அடுத்த கட்டமாக நெடுங்கதைக்கு மாறுவது என்பதை இவரிடம் பார்க்கலாம். இரண்டு இலக்கிய ஃபார்ம்களிலும் என் மனதைக் கவர்ந்தவர். இ.பா மாதிரியே தெரிந்த விஷயங்களின் இருண்மையை தெரியாத, யாரும் சொல்லத் துணியாத வகையில், அட்வைஸ் மழையாக்காத விதத்தில் லாவகமாக இடுபவர்.
  6. எஸ் ராமகிருஷ்ணன்: இவருடைய சிறுகதைகள் are much much better presented than his நாவல். நாவல் என்று வந்தால் காப்பியமாக, காவியமாக, பக்கம் பக்கமாக போக வேண்டும் என்பதை ஜெயமோகன் மாதிரி வலுக்கட்டாயமாக வைத்துக் கொண்டிருக்கிராரோ என்னும் சந்தேகம் வரவைப்பவர். At least, ஜெயமோகனாவது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ போன்றவற்றில் அலுக்கவைக்கமாட்டார். ஆனால், ஜெமோவின் ‘லங்கா தகனம்’, ‘பத்ம வியூகம்’ போன்றவற்றை விட இவரின் comparable கதைகள் என்னைக் கவர்ந்தது.
  7. அ. முத்துலிங்கம்: முதல் வாசிப்பிலேயே சொக்குப்பொடி போடுபவர். எதார்த்தத்துடன் வன்முறை காட்டாத அங்கதம் கொடுப்பார். அன்றாட வாழ்வில், மேட்டுக்குடி வாசகர் பார்த்திருக்கக் கூடிய சம்பவங்களைச் சொன்னாலும் சுவாரசியமாகச் சொல்பவர்.
  8. நகுலன்: One of a kind. எழுத்து புரியும்; அணுக முடியும். அனுபவத்திற்கேற்ப, சமயத்திற்கேற்ப அசாத்தியமாகவும் தத்துவமாகவும் அசை போடக் கூடியதாகவும் இருக்கும்.
  9. பாவண்ணன்:எது எழுதினாலும் ‘நன்றாக இருக்கும்’ என்னும் consistency. ஆர்ப்பாட்டமின்மை. அறியாத விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறேன் பார் என்னும் அகம்பாவமின்மை. எழுத்தில் அசோகமித்திரனிடம் பணிவு கலந்த விட்டேற்றித்தனம் தெரியும் என்றால், இவரிடம் அடக்கம் மட்டும் தெளிந்த ஆர்வம் ததும்பும்.
  10. சுஜாதாவைக் குறித்து ஏற்கனவே நிறைய சொல்லியாச்சு.

இப்படி தமிழுக்கு 10 பேர் வைத்துக் கொண்ட மாதிரி நோபல் விருது வென்றவர்களையும், நான் வாசித்த ஆங்கிலப் பெருசுகளான, நய்பால், சல்மான் ருஷ்டி, கோட்ஸி போன்றோருடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஜெயமோகனுக்கேயுரிய தனித்துவ இலக்கிய குணங்கள் என்று பார்த்தால்.

  1. சுஜாதாவிற்கு பின் வெரைட்டி. கேட்டதும் எழுதிக் கொடுக்கும் வேகம். சினிமா, சிறுகதை, சங்க இலக்கியம், பக்தி (ஆன்மிகம்?) சகலமும்!
  2. சுந்தர ராமசாமியிடம் கருத்து கேட்டால் பேசினால் முத்து உதிர்ந்திருமோ என்றுதான் இருக்கிறது. இன்றைய 140 எழுத்து அடக்குமுறை ட்விட்டர் காலத்தில் கூட ஜெயமோகனிடம் சுருக்கமின்மை. இது பெருகி வரும் சிறு பத்திரிகை பதிப்பாளருக்கு வசதி.
  3. சாரு நிவேதிதாவிற்கு எதைப் படிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால், ஜெமோவிற்கு அதைப் படிக்கும் பொறுமையும், வாசித்த பிறகு, takeawaysஐ தன்னுடைய பாணியில், இந்திய கலாச்சார தர்க்கம் கொண்டு விளக்க முடிவது.
  4. அனுபவம். எந்த எழுத்தாளர் இங்கே சாமியார்களுடனும், பிச்சைக்காரர்களுடனும், புத்தகம் வாசிக்கும் பெருமக்களால் இன்ன பிற அசூயை கொண்டு ஒதுக்கப்படுபவர்களுடனும் வாழ்ந்திருந்துவிட்டு எழுத முடிகிறது?
  5. பிற மொழித் தேர்ச்சி: அமெரிக்காவில் இருந்து கொன்டு ஆங்கில இலக்கியங்களையும், மேல்நாட்டு சஞ்சிகைகளையும், அந்த ஊர் ஊடகங்களின் மாற்றுப் பார்வையும் தெரியவரும்போது மனது விசாலமடைகிறது. இதுவெல்லாம், சிறுவனாக இருந்தபோதே கிடைத்த சூழல்.
  6. தொன்மம், மரபு போன்றதெல்லாம் எழுதக்கூடாதவை; taboo போல் தூரம்னா பார்த்த சமயத்தில் அதையெல்லாம் புதுப்பிக்கத் தெரிந்தவர்.
  7. Convention இதுதான். இப்பொழுது இதுதான் in-thing என்பதால் செவ்வியல் outdated; மார்க்சியமும் மாய எதார்த்தமும் மட்டுமே எழுதவேண்டும் என்று peer pressureகளுக்கு உள்ளாகாமல் ட்ரென்ட் செட்டராய் இருப்பது.
  8. நகைச்சுவை இல்லாத ஆக்கம் பிரசங்கியின் உரை; நகைச்சுவை மட்டுமே கொண்ட இலக்கியம் சிரிப்பாக அர்த்தமிழக்கும் அபாயம் உண்டு. இரண்டையும் கலக்கத் தெரிந்தவர்.
  9. தன்னை முன்னிறுத்திக் கொள்வது; ‘விஷ்ணுபுரம்‘ எழுதியபிறகு, என்னைப் போல் பலரும் ‘என்ன இருக்கு இதில!?’ என்று புறந்தள்ளும்போது சினம் தலைக்கேறாமல் விளக்கிப் பேச வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும் பொறுமையும் வாதத்திறமையும் நேரமும் படைப்பூக்கமும் இருக்காது.
  10. ஒரே கதையை விதவிதமாய் எழுதியவர் பலர். வண்ணதாசன், கி.ராஜநாராயணன் உட்பட பலரும் அயற்சி தருபவர்கள். தொகுப்பை வாங்கினால், வருடத்திற்கொன்றாய் படிப்பது உசிதம். ஜெயமோகனிடம் இந்த ரிஸ்க் இல்லை.

அமெரிக்காவில் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா வர திட்டமிட்டிருக்கிறார். அதன் விவரங்கள் இங்கே கிடைக்கும்: http://jeyamohan.in/?p=3304

அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் ஆறு சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

1. பாஸ்டன் / New England – ஜூலை/12/ஞாயிறு – மாலை 6 PM
2. Albany / Upstate New York- ஜூலை/17/வெள்ளி – மாலை 6 PM
3. Niagara Falls/Buffalo – ஜூலை/18/சனி – நண்பகல் 12
4. CT / கனெக்டிகட் – ஜூலை/19/ஞாயிறு – மாலை 2 PM
5. நியூ ஜெர்சி / NJ – ஜூலை/23/வியாழன் – மாலை 6 PM
6. வாஷிங்டன் DC / பால்டிமோர் – ஜூலை/25/சனி – மாலை 6 PM

சந்திப்பு குறித்து மேலும் தகவல் அறிய மறுமொழியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

அவருடன் ஏற்பட்ட அனுபவங்களை எம் கே குமார் விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பதிவு இங்கே: நெஞ்சின் அலைகள்: ஒரு நதியின் கரையில் – எழுத்தாளர் ஜெயமோகனுடன்!

தமிழ் சிறுபத்திரிகைகள்

முதலில் ஜெயமோகனின் பரிந்துரை: Jayamohan » பண்பாட்டை பேசுதல்…

என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்

அடுத்து அவர் சொன்ன சஞ்சிகைகள் மற்றும் விட்டுவிட்ட சிறுபத்திரிகைகளில் இணையத்தில் காசு கொடுத்தோ/கொடுக்காமலோ கிடைப்பதின் பட்டியல் போட்டுவிடுவோம்:

1. Kaalachuvadu :: காலச்சுவடு

2. Uyirmai :: உயிர்மை

3. Amrudha :: அம்ருதா

4. வார்த்தை :: Vaarthai

5. Thamizini :: தமிழினி

6. பத்திரிகைத் தொகுப்பு :: கீற்று

7. Thendral :: தென்றல் (அமெரிக்கா – கலிஃபோர்னியா & நியூ ஜெர்சி)

8. குமுதம் தீராநதி :: Theeranadhi

9. உயிர்நிழல் :: Uyirnizhal tamil exile magazine

10. வடக்கு வாசல் :: vadakku vaasal

11. வல்லினம் – கலை, இலக்கிய இதழ் | Vallinam – Magazine For Arts

12. ஈஷா – காட்டுப்பூ :: Isha Foundation – Isha Kaattu Poo Magazine

13. புதுவிசை :: Pudhuvisai | Art | Culture | Short Story | poem

14. சில சஞ்சிகைகள்; சில குறிப்புக்கள் | டிசே தமிழன்: இரண்டு சஞ்சிகைகள் | DISPASSIONATED DJ

  • அற்றம்: பெண் ஆசிரியர்கள் (கஜானி குமார், கெளசல்யா, தான்யா, பிரதீபா.தி)
  • மற்றது: ஆசிரியர் – கற்சுறா & ஜெபா
  • கைநாட்டு
  • பறை (முழக்கம் வெளியீடு – பாமரன், தேவகாந்தன், த.சிவதாசன்)
  • தமிழர் தகவல் மாத இதழ்: பத்மநாப ஜயர்
  • அறிதுயில்: ஆசிரியர்: கற்சுறா, மஞ்சலுணா கோமதி, எஸ்.வி.ர·பேல்

15. காலம் – கனடா : ஆசிரியர்: செல்வம் குழு: டேனியல் ஜீவா, மெலிஞ்சிமுத்தன், ந.முரளிதரன்: காலம் – 2009: சில எண்ணங்கள்

16. யுகமாயினி :: Yugamaayini

இன்னும் இருக்கும். சொன்னால் சேர்த்து விடுகிறேன்.

ஜெயமோகனின் முந்தைய இடுகைகள்:

அ) Jayamogan » உயிர் எழுத்து மாத இதழ்: “பல கோணக்களில் படித்து விவாதிக்க வேண்டிய முக்கியமான சிற்றிதழ்.”

ஆ) Jeyamogan அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்

இ) Jeyamohan.com » மாற்றுவெளி: “சென்னைப்பல்கலை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் முயற்சி”

ஈ) Jayamohan.com » ரசனை இதழ்: “நான்குவருடங்களுக்கு முன்பு முத்தையா ஆரம்பித்த இதழான ‘ரசனை’ என்னுடைய நோக்கில் மிக முக்கியமான ஓரு தமிழ் பிரசுரம்.”

உ) Jayamogan.com » தமிழினி ஜூன் 2008 இதழில் கண்மணி குணசேகரனின் நூல்வெளியீட்டுவிழா: “உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, வார்த்தை, தமிழினி என எந்த இதழும் இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக காணவில்லை. இந்தியாவின் எந்த மூலையில் எது நடந்தாலும் குரல்கொடுக்கும் இச்சிற்றிதழ்களுக்கு இந்த விஷயம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை”

ஊ) Tamil Ini magazine » தமிழினி ஐந்தாமிதழ் | Thamizh Ini 2nd Issue » தமிழினி இரண்டாமிதழ் | Thamilini » தமிழினி மாத இதழ்

எ) Uyirmai Magazine by Manushya Puthiran » உயிர்மை இந்த இதழில்…

ஏ) Vaarthai little mag » வார்த்தை

ஐ) ஜூனியர் விகடன் » Junior Vikadan » ஜூவியின் பதினாறாம் பக்கம்

ஒ) Backgrounders on Sol Puthithu Tamil Journal » சொல்புதிது பற்றி…

ஓ) Kaala Chuvadu » காலச்சுவடு நூறாவது இதழ் | Kaalasuvadu » காலச்சுவடுக்கு தடை | On Kanimozhi Karunanidhi » கனிமொழி வணக்கம்

ஔ) Satire » சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை

ஃ) Jayamohan.com » இந்திய இலக்கியம் ஒரு விவாதம்

கொசுறு:

1. ஜயமோகன் » இதழ்களும் மதிப்பீடுகளும் – ஒரு கடிதம்: “நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன?”

2. ஜெயமோஹன் » திரையும் சமரசமும்- ஒரு கடிதம்

3. ஜயமோஹன் » சிலகேள்விகள்

படைப்பின் உச்சம் எது? ‘நான் கடவுள்’படமா! நாக்க முக்க பாடலா?

பாலா & ஜெயமோகனின் பத்து க்ளைமேக்ஸ்‘ என்று எழுதியதற்கு புலவர் விக்கிரமாதித்தன் கடவுளை செல்லமாக அழைத்தது போல் என்னையும் கொஞ்சி மறுமொழி வந்தவுடன் நானும் கடவுள் என்று விளங்கியது.

அன்பே சிவ’மாக கமல் வந்து இன்னும் ‘நீயும் கடவுள்’ என்று நெக்குருகாதது பாக்கி இருக்கு. நெஞ்சை கனக்க செய்வது கமலின் சாமர்த்தியம். மைக்கேல் மூர் மாதிரி டாகுமென்டரி சிதறல் செய்வது பாலா சாமர்த்தியம்.

நிறைய விமர்சனம் படித்து, எல்லாவற்றிலும் கொஞ்சம் பிரசாதமாய் எடுத்து லட்டு விநியோகம் செய்யும் ஆசையுடன் வலைப்பதிவில் கிடைத்த இடுகையெல்லாம் மேய்ந்ததில் பைத்தியக்காரன் (Naan Kadavul: Paithiyakkaran – Metaphors, Symbolism, Balachander Shots, Intentions) பிரித்துப் போட்டிருந்தார்.

குருவி, சிலம்பாட்டம், ஜி போன்ற படங்களை பாலா என்று பெயர் போட்டவர் இயக்கி இருந்தால், பைத்தியக்காரனிடம் இருந்து இன்னும் பல சுவாரசியமான விமர்சனம் கிடைத்திருக்கும். இயக்குநர் பாலாவும் எழுத்தாளர் ஜெயமோகனும் தங்கள் பெயரை அவுட்சோர்ஸ் செய்தால், அழகுள்ளபோதே ஐந்து ஷிஃப்ட் செய்யும் நடிகையாக பணம் பார்க்கலாம். பைத்தியக்காரனும் நுண்மையான டபுள் மீனிங் கொடுப்பார்.

நான் இது போல் நுட்பமாக அவதானித்து நிறைய எழுதுபவன். சாம்பிளுக்கு: வேர் இஸ் தி பார்ட்ட!?

பெருமாள்முருகனின் நிழல் முற்றம்’ ஆரம்பித்து எல்லோரும் திருட்டு டவுன்லோடிட்டு பார்த்து டெலீட்டிய ஸ்லம்டாக் மில்லியனர் தொட்டு சினிமாவை பார்த்த கதை முதற்கொண்டு இல்லாததையும் இன்னாததையும் கூறல் ஆசை. வயாகரா போட்டவுடன் செயலில் இறங்க வேண்டும். ஆறு வாரம் கழித்து சாந்திமுகூர்த்தம் வைத்துக் கொள்ளக் கூடாது. எனினும், வயாகரா வந்துவிடுகிறேன் என்று வெளிப்படுகிறது இங்கே.

விடுதலை

இந்து மதம் பயமுறுத்தும். ‘உம்மாச்சி கண்ணைக் குத்தும்.’ தற்கொலை தீவிரவாதியானால் இஸ்லாத்தில் மோட்சம். ஃபாதரின் மகளுடன் ஜல்ஸா செய்து பாவ மன்னிப்பு கேட்டாலும் கிடைக்கும்.

ஹிந்துவாக இருந்தால் அன்னியன் வந்து கருட புராணம் தண்டனை கொடுப்பார். ஃபுல்லாகி, பூண்டு ஊறுகாய் ஆகி, புழு ஃப்ரை ஆகி, பறவைக் காய்ச்சல் வரும் ஏழேழு ஜென்மம் உண்டு.

கத்ரீனாவில் அகப்பட்டவருக்கு விடுதலை என்பது நியு யார்க்கில் தஞ்சம் புகல். ஆப்பிரிக்காவில் இன அழித்தொழிப்பில் சிக்கியவருக்கு விடுதலை refugee ஸ்டேட்டஸ்.

பௌத்தத்தின் விடுதலை ‘ஆசை’.

கேபிடலிஸ விடுதலை அப்போதைக்கு பிழைத்துப் போவது; நிஜத்தை விட்டு ஓடிப்போவது; குளிர்ந்தால் பக்கத்துவீட்டு நெருப்பில் கதகதப்பு கோருவது.

கம்யூனிச விடுதலை தலைமைக்கு அடிபணிந்து, கடைநிலை யூனியன் மெம்பராய் உழைத்துக் கொட்டுவது.

இதெல்லாம் படத்தில் இருக்கிறதா என்று அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு வரவேண்டாம். படத்தில் பிச்சைக்காரர் சாஃப்ட்வேர் எஞ்சினியர் போல் கடைநிலை சிப்பந்தி. கொஞ்ச நாள் கழித்து ப்ராஜெக்ட் மேனேஜர் பழனி ஆகிறார். அப்புறம், மேலும் பதவி உயர்வு பெற்று பிச்சைக்காரரை வைத்து பணக்காரர் ஆவது விடுதலை என்கிறார்.

ப்ளாகருக்கு விடுதலை எது? நீண்ட பதிவை பின்னூட்டத்தில் சம்ஹரிப்பது. அகோரிக்கு விடுதலை எது? சம்ஹரிப்பு தனக்கானது என்று சஞ்சரிப்பது.

கொஞ்சம் விளம்பர இடைவேளை: நான் கடவுள் தொடர்பான முந்தைய பதிவுகள்

வாந்தி

மல்டி டாஸ்கிங் கிங் ஆக இருக்கலாம். ஹிந்தி, தமிழ், மலையாளம், ஆங்கிலம் என பன்மொழி பண்டிட் ஆக இருக்கலாம். வெள்ளிக்கிழமை கோவிலுக்கு ராகுகாலத்தில் பல ஃபிகர் வரும். ஆனால், உங்க சைட்டு எதுன்னு புரிஞ்சுண்டு, அதை மட்டும் லுக்கு விடுவீங்க இல்லியா?

சொல்ல வந்ததை மட்டும் சொல்வது கலை. தெரிந்ததை எல்லாம் சொல்வது பல்சுவை இதழ்; வலைப்பதிவு; நாவல்/காவியம். ஆனால், சினிமா அல்ல.

இவரோட இப்பொழுது வந்த இன்னொரு படம் ‘அஞ்சாதே‘. நான்கு ட்ராக்கில் செல்லும்:
1. காவல்துறை
2. நட்பு
3. செல்வந்தச் சிறுமி கடத்தல்
4. காதல்

இப்பொழுது அஞ்சாதேவைப் பார்த்து கைக்கிளை கொண்ட நான் கடவுள் கிளை:
1. வறியவர்
2. காசி அகோரி
3. தாய் – மகன்
4. தெய்வம்

முன்னது கோர்த்த விதத்தினால் சிமெண்டும் மணலும் சரியாகக் கலந்த கலவை.

பீரும் விஸ்கியும் வைனும் கலந்து கட்டி அடிக்கலாம்; தப்பில்லை. ‘நான் கடவுள்’ குளுகுளு பியர் ஏற்றுகிறது. அதற்குப் பிறகு கொனியாக், வைன், வெர்மவுத் என்று சகலத்தையும் சர்பத் போல் கலக்கு கலக்க, எனக்கு மைக்கேல் மூர் இயக்கி, பில் மெஹர் ஹீரோவாக, ஆன் கூல்டர் நாயகியாக நடித்து, ரஷ் லிம்பா வசனம் எழுதிய படம் பார்த்த அஜீரணம்.

இப்போது சித்தர் பாடல் ப்ரேக்:

அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்தும் பனித்துளிபோலாகுமே;
உன்னிதொக் குளழலும் தூமையுள்ளுளே அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. (212)

தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. (49)

சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே. (50)

சிவவாக்கியரின் சிவவாக்கியம் 205வது பாடல்.

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே

அடைவுறுதல்

படம் பார்த்தால் நம்ப வேண்டாம்; மயங்கணும்.

கதையில் லயித்து ஒன்றவேண்டாம்; என்றாவது பிச்சைக்காரரைப் பார்த்தால் ‘வெண்ணிலவே! வெண்ணிலவே!! விண்ணைத்தாண்டி வருவாயா?’னு கனவு கஜோள்ளோடு டூயட்டணும்.

ஆளவந்தான்‘ புத்திசாலித்தனம் வேண்டாம்; ‘தசாவதார‘த்தின் பரபரப்பிலோ வித்தை காட்டலிலோ சொக்கணும்.

ஆவணப்படம் எடுத்தால் கூட ஒன்றவைக்கும் சிரத்தையும் தகவலில் உள்ள துல்லியத்திற்கும் புனைவுலக 70 எம் எம்மில் மினுக்கிட வேணாம்; பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் வாரணம் ஆயிரமின் drug பயன்பாட்டின் வீச்சும் வீரியமாவது தைக்க வேணாமோ?

வேணாம்கிறார் பாலா. ஒத்து ஊதுகிறார் சாரு நிவேதிதா.

எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்: பாலா

நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியவை:

காசியில்: கனவின் கதை: “மணிகர்ணிகா கட்டத்துக்கு”

”சார் பெரிய ரைட்டர்!”

ஆனந்த விகடன் பேட்டி 2007

சினிமாவுக்குப் போன இலக்கியவாதி? திரையும் சமரசமும் – ஒரு கடிதம்

படப்பிடிப்பு: தேனியில்…

‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’

இசை வெளியீடு: சென்னையில்…

நான் கடவுள், கடிதங்கள்

பதில்: இருகேள்விகள்

நாவல் :ஏழாம் உலகம் :கடிதங்கள்

பயணக்குறிப்பு: இந்தியப் பயணம் 17 – வாரணாசி

மற்ற தமிழ்ப்பட வேலை: கதாநாயகன் தேர்வு

கிசுகிசு – எதிர்வினை: ஜூவியின் பதினாறாம் பக்கம்.

முந்தைய பதிவு:
1. “பிச்சைப் பாத்திரம்”

2. வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி

3. Om Siva Om – Vijay Prakash: நான் கடவுள் – இளையராஜா

4. Naan Kadavul – Music

5. நான் கடவுள் – அஹம்ப்ரம்மாஸ்மி

வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி: பாலாவின் ‘நான் கடவுள்’

  • மலையாள வசனங்களை நண்பர் ஷாஜி எழுதினார்
  • ‘ருத்ரன் மிகவும் தனிமையில் இருந்தான். அப்பொழுது கடவுள் கூட அவனிடம் இல்லை. இறைவன் இல்லாதத் தனிமை என்னும் எக்ஸ்பிரெஷனை பாலா விஷுவலாக எடுத்திருக்கிறார்.’
  • அஹம் ப்ரும்மாஸ்மி என்பது பிருகதாரண்ய உபநிடதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதனைப் பிற்காலத்தில் ஆதிசங்கரர் விரித்துரைத்தார்.
  • “நான் முழுமையான வணிகப்படத்திற்கு வசனம் எழுதும் மனநிலையில் இல்லை.”
  • “ஏழாம் உலகம் கொஞ்சம் மைல்டாக சொல்லும் விஷயங்கள் இந்தப் படத்தில் இன்னும் தீவிரமாக காட்சியாக்கப்பட்டிருக்கிறது.”

முழு வீடியோ :: Dialogue Writer Jayamohan On Naan Kadavul

naan-kadavul-bala-arya-pooja-ilaiya-raja-aham-brahmasmi

பிற செவ்வி:

  1. நான் கடவுள் குறித்து நடிகை பூஜா
  2. நடிகர் ஆர்யாவின் நேர்காணல்
  3. கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி :: Nan Kadavul

முந்தைய இடுகை:

1. Om Siva Om – Vijay Prakash: பாடல் வரிகள் & இளையராஜா

2. Naan Kadavul – Music

Naan Kadavul – Music

Music Reviews:

Writer Previews:
jeyamohan.in » Blog Archive » சென்னையில்…: யூகிசேது எல்லார் பேரையும் சொல்லி வழக்கம்போல பாராட்டினார். நவீன இலக்கியம் என்றாலே ஜெயமோகன் தான் என்ற வகையில் அவர் சொன்னபோது இருவர் கைதட்டினார்கள். நான் மகிழ்ச்சி அடைய ஆரம்பிப்பதற்குள் ‘ஜெயமோகன் ஒழிக’ என்று அரங்கில் இருந்து ஒரு குரல் எழுந்தது.

நான் இதுவரை தொலைக்காட்சிகளில் தலைகாட்டியதில்லை. அந்த ஊடகம் மேல் அப்படி ஒரு கசப்பு உண்டு. மேலும் அதன் வழியாக ஒன்றும் வாசகர்கள் வரமாட்டார்கள் என்ற எண்ணம். எனக்குத்தெரிந்து தொலைக்காட்சி ஊடகங்களில் பேட்டி கொடுக்காத ஒரே எழுத்தாளன் நான் தான்

Movie Previews:
ராம் சுரேஷ்: நான் கடவுள் – பாலாவின் விகடன் பேட்டி: “பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின் உலகம்.

‘நான் கடவுள்’ படத்தில், ஆர்யா, பூஜாவைத் தவிர, அத்தனை பேரும் புதுமுகங்கள். உடல் வளர்ச்சி இல்லாத, மன வளர்ச்சி இல்லாத மனிதர்கள். அவங்க கையில வசனப் பேப் பரைக் கொடுத்து, ‘பேசுப்பா!’னு படம்பிடிக்க முடியாது. அவங்க ளோட பழகி, அவங்க நம்மோட பழகின்னு ஒவ்வொருத்தரையும் ஒரு குழந்தை போலப் பார்த்துக்கணும். ஆறு மாச ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, இப்போ அவங்க அத்தனை பேரும் என் குடும் பம்.

இன்னொரு பக்கம் காசி சாமி யார்கள். அகோரின்னு சொல்லப் படுகிற, நர மாமிசம் சாப்பிடுற சாமியார்களையும் நடிக்க வெச்சிருக்கேன். இப்படி ஒரு படத்தை உருவாக்குற வலியை, வார்த்தைகளில் புரியவைக்க முடியாது. ஏன்னா, இது வித்தி யாசமான படம்னு சொல்றதே பழைய வார்த்தையாகிப்போச்சு. இது நாம் கருணை காட்டாத, நம்மால் புரிந்துகொள்ளப்படாத, கடைசி மனிதர்களின் உலகம்!'”

Twitter Reviews:

  • நான் கடவுள் ஏழாம் உலகம் தான் – naadodi
  • நான் கடவுள்-ல் இளையராசா ஒரு Mediocre ஆகத் தெரிகிறார் (பாடல்களில் மட்டும்) …மது பாலக்கிருட்டின ணைவிட இ.ராசாவின் ரமண மாலையில் வரும் பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன்…பாடல் பிழிவதோடு மட்டுமல்லாமல் ராசாவின் உச்சரிப்பும் சொக்க வைக்கும் இரு…இரு…அருள்…அருள்..களில் வரும் ரு வின் ஏற்றம் என்னை அசரவைத்திருக்கிறது. இம்மாதிரியான ஏற்ற இறக்கம் ராசாவிற்கு அடுத்தபடியாக கமலகாசனில் பாடல் உச்சரிப்பில் கண்டிருக்கிறேன் (அ) கேட்டிருக்கிறேன். – Potteakadai
  • Naan Kadavul songs reminded me of early 90s Rama.Narayanan movies. Not my cup… maybe I’ll start liking after a few mo re hrs of listening! – dynobuoy
  • நான் கடவுள் – ஹே ராம் கிளாஸை எதிர்பார்ப்பவர்கள் ஒழியக்கடவது. ராஜா kep t it simple. எனவே, complexity எதிர்பார்க்கும் என்னைப்போன்றவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகத்தானிருக்கும். ஆனாலும் ஒன்றிரண்டு பாடல்கள் பிரபலமாகும். ஷ்ரேயா கோஷாலின் குரல் இனிமை. பிச்சை பாத்திரம் – பழைய ராஜாவின் வடிவத்தைவிட ஏமாற்றம்தான். மெது பாலகிருஷ்ணன் சொதப்பல்.- donion
  • ̀நான் கடவுள்’ மிகுந்த ஏமாற்றம்;புதிதாய் ஒரேயொரு சாதாரண பாடல். இனி எந்த இசைக்கொடையும் ராஜாவால் அளிக்க முடியாது என்ற அலுப ்பு மட்டுமே வருகிறது – rozavasanth
  • ராஜா பாடிய ஒரு காற்றில் கொஞ்சம் திறமையான இசைக்கோர்ப்பு. கண்ணில் பார்வை சில முறை கேட்டால் பிடிக்ககூடும். – donion
  • ஒரு பெரிய ரசிகர் கூட்டம் பயித்தியமாய் ராஜா அமைத்து வெளிவரும் இசைக்காக காந்திருந்து, முதல் நாள் ஒரிஜினல் சிடி வாங்கி, பலமுறை கேட்டு கழகக்கண்மணி போல, அற்புதம் மீண்டும் நிகழ்ந்ததாய் சமாதானமும் ஒவ்வொருமுறையும் சொல்லிக்கொள்கிறது – rozavasanth
  • ராஜா தன் ரசிகர்களுக்கு தருவதும் ஒரு அரசியல் தலைவரின் நரம்பு சிலிர்ப்பு தரும் அறிக்கையை போலத் தான் இருக்கிறது. – rozavasanth
  • இனி பாலாவின் திரையாக்கத்தில்தான் இருக்கிறது. – donion
  • ’நான் கடவுள்’ படம் இளையராஜாவுடன் உத்தம் சிங் இணைந்து இசை என்கிறார்களே, இவருக்கு எதற்கு உதவி? தனியே செய்யமுடியாதபடி கடினமான சப்ஜெக்டா? – nchokkan