ஜெயமோகன்: ஆளுமைகள் மதிப்பீடுகள்


ஜெயமோகனை சந்தித்த கதை தொடர்கிறது.

நான்: இப்போ எழுதறதில் எதையாவது படிச்சு ரெஃபர் பண்ணுகிற மாதிரி உங்களுக்கு யாராவது இருக்காங்களா? உங்களைக் கவர்ந்தவர்கள்?

“நெறைய பேரு இருக்காங்க. அப்பப்ப சொல்லிடுவேன். உங்களுக்கு அறிமுகமானவர்களில் சேதுபதி அருணாச்சலத்தையும் அரவிந்தன் நீலகண்டனையும் தற்காலத்தின் மிகச் சிறந்த வளரும் எழுத்தாளர்களாக நான் கருதுகிறேன். அந்த வயதில் நான் வாசித்ததை விட, இவர்களின் அகலமும், ஆழமும் நீளமும் அதிகம்.

சொல்லப் போனால், அ.நீ. குறிப்பிடத்தக்க படைப்பாளியாக, தமிழிலக்கிய கர்த்தாவாக வரவேண்டியவர்; வந்திருக்கக் கூடியவர். ஆனால், அவருக்கு அதில் ஆர்வம் இல்லை. அவருடைய முனைப்பெல்லாம், தன்னார்வத் தொண்டில் இருப்பதும் நல்லதே.

சுய உதவிக் குழு, மகளிர் நலன், விவேகானந்தா கேந்திரா என்று அயராது உழைக்கிறார்.

எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் இவர்கள் இருவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

நேசகுமாரை…”

ட்ரெயின் வரும் சத்தத்தில் ஜெயமோகன் உரையாடல் முற்றுப் பெற்று வெங்கட் சாமிநாதனுக்கு தாவிவிட்டது.

“வெங்கட் சாமிநாதனின் நகையுணர்வு மெலிதானது; பிரசித்தி பெற்றது. யாத்ராவில் ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் போடுகிறார்.

‘இந்தப் புத்தகத்தில் 13 வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

  • ஆசிரியர் பெயர்
  • பக்கங்கள்
  • பதிப்பகம்
  • விலை
  • அச்சிட்டவர்
  • புத்தகத் தலைப்பு

இப்படி போகிறது.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ’35 வயதான எந்தக் குடிமகனும் இந்தியக் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு. மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும்!’

இன்றைய அளவிலும் கறாரான கருத்துக்கு சொந்தக்காரர்.

வெ.சா. விமர்சனத்தை தனியாகவும், சொந்த வாழ்க்கையில பிரதிபலன் பார்க்காம உதவறதையும் தனித்தனியா வத்திருந்தார். அவர் நேர்மையாக, கடுமையாக விமர்சித்த பலருக்கு தனிப்பட பலப் பல விஷயங்கள் செய்திருக்கார்.

அதை வெளியில் யாருக்கும் சொன்னதுமில்லை. உதவி பெத்துண்டவங்க சொல்லிதான் எனக்கே தெரியும்!

நீங்க சென்னை வரும்போது அவசியம் சந்திக்க வேண்டிய மனிதர்.”

நான்: அச்சச்சோ… மிஸ் பண்ணிட்டேனே! சுஜாதாவைப் சந்திச்சவங்க சொன்னதில் இருந்து எனக்கு பயம் வந்துடுச்சு.

5 responses to “ஜெயமோகன்: ஆளுமைகள் மதிப்பீடுகள்

  1. சேதுபதியின் ஆங்கில வலைமனை – http://sethuarun.blogspot.com

    அவர் வார்த்தை, தமிழினி, திண்ணை, சொல்வனம் என பலதரப்பட்ட இதழ்களில் எழுதி வருகிறார். இசை தொடர்பான அவர் கட்டுரைகள் நல்ல செறிவாக இருக்கும்..

  2. ‘35 வயதான எந்தக் குடிமகனும் இந்தியக் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு. மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும்!’

    Mu.Metha included this cynical and silly comment in his poetry collection with comments of others. Ve.Sa’s so called humor is based on his arrogance. Mehta survived all this to become one of the most popular poets of all times in Tamil. His books sold like hot cakes. In that he was as popular as Kannadasan was although he did not write film songs at that time.

    Vairamuthu overtook him in the mid eighties. Mehta was not a pretentious, claiming to know-all type of guy.Whereas both JM, and Ve.Sa would fit that category well. If one considers Mehta as a mediocre poet, both Ve.Sa and JM would have to be considered as mediocre critics. Mehta tried his hand in writing songs for films and did well although he did not launch himself as a full time song writer.

    Anyday I would prefer his mediocre poems to the shoddy review/criticism pieces by JM and VeSa. Mehta had no illusions about his poetry nor was arrogance personified in writing.
    ‘நீங்க சென்னை வரும்போது அவசியம் சந்திக்க வேண்டிய மனிதர்’
    god save you 🙂

    • ஐ எம் நாட் காட் 🙂 __/\__

      மேத்தாவின் திரைப்பாடல்களில் எனக்குப் பிடித்தது (அல்லது நினைவில் இருப்பது): ‘தோட்டத்தில பாத்தி கட்டி’ வேலைக்காரன்

      அவரின் கவிதைகளில் அடிக்கடி quoteஇயது:

      ‘தடுமாற வைக்கும் கண்கள்தான் உன் கண்கள்;
      தடம்மாறும் கால்கள் அல்ல என் கால்கள்.’

      என்பது மாதிரி போகும்.

  3. பிங்குபாக்: Writer Jeyamohan visit in America « Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.