மற்ற சங்கங்களைப் பார்த்தால் பொறாமையாகவே இருக்கிறது.
இது இன்று, நேற்று அல்ல… பள்ளிக் காலத்தில் துவங்கியது. கல்ச்சுரல்ஸ் நடக்கும்போது ராய்/சென்-களும், நாயர்களும், ரெட்டிகளும், ராவ்களும் எல்லா க்விஸ் போட்டிகளிலும் கடைசி நான்கில் வந்தார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்து வந்தேறியாகிய நான் இருக்கும் குழு தேறவில்லை.
கல்லூரியில் எல்லாப் போட்டிகளிலும் முதலிடம் கேரளத்தவர்கள். மழையையும் ரசிப்பார்கள்; டெல்லிக்கே நேநீரையும் கற்றுத் தருவார்கள்.
மீண்டும் அவர்களின் நிகழ்வுக்கு நடுவராகப் போகும் வாய்ப்பு. எத்தனை சிறப்பாக மாணவர்கள் பேசுகிறார்கள்!
தமிழுக்கென்று நான்கைந்து சங்கங்கள் உண்டு. டெக்கா (DECA), மாடி (MADI), பீ (bee), என்று கண்டதிற்கும் கேட்டதிற்கும் கற்றும் பெற்றும் செல்வார்கள். எனினும், நீமா எனப்படும் NEMA (New England Malayalam Association) விழா பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
நீமா அமைப்பின் மிலிட்டரி நிர்ணயம்: ஜெர்மானிய நேரக் கட்டுப்பாடு என்பது ஐம்பதாண்டு முன்பு உன்னதம்: இன்று நீமா-வின் கால துல்லியம் இன்றைய தங்கப் பதக்கம்.
நடுவர் குழுவில் பன்முகமை: பாலினம், வயது, இனக்குழு, மொழி, மதம், உடல் திறன், பிராந்தியம், குடியேற்ற நிலை
சினேகம் – அன்பிற்கு நான் அடிமை; சேச்சிகளின் பண்பிற்கு நான் அடிமை. தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை.
இன்று அற்புதமான மாலை. பழகிய முகங்கள். பாசமான நட்புகள். பாந்தமான உரையாடல்கள்.
நிறைவான நிகழ்வு.
படத்தில் உள்ள நடிகைகள் யார் என்று கண்டுபிடிப்போருக்கு சிறப்பு பரிசு உண்டு!
பாரதி யார் நாடகம் முடிந்தவுடன் இதை எழுதியிருக்க வேண்டும்! அமரன் படத்தில் ‘அச்சமில்லை! அச்சமில்லை!!’ பார்த்த பிறகாவது பகிர்ந்திருக்க வேண்டும்!! டிச. 11 பிறந்த தினத்திற்காகவாது முடித்திருக்க வேண்டும்.
மனதிலேயே இருப்பதை எப்படி முகநூலிற்கான கவர்ச்சிகரமான பதிவாக்குவது?
அமெரிக்காவில் வசிக்கும் முக்கால்வாசி (நான்கில் மூன்று) பேர் தங்கள் மழலைச் செல்வங்கள் பங்கேற்காவிட்டால் பார்க்க வர மாட்டார்கள் என்னும் அங்கலாய்ப்பு எழக்கூடாது. பாரதியார் பற்றித்தான் எல்லாம் தெரியுமே என்று பாக்கி 25% சதவிகிதத்தினர் ‘பாரதி சின்னப் பயல்’ ஆக தங்களை எண்ணுகிறார்கள் என்னும் விமர்சனம் சொல்லக்கூடாது. ஞாயிறு பின் மதிய வேளையில் – சாப்பிட்டோமா… தூங்கினோமா! என்று ஓய்வு வேளையில் இந்த அரங்கப் புயலைக் கொணர்ந்தோம் என்னும் ஏற்பாட்டு புலம்பல்களைப் பகிரக் கூடாது.
இதை எழுதுவதால் பாஸ்டன் தமிழர் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வரமாட்டார்கள் என்னும் முன் முடிவு. நியு இங்கிலாந்து தமிழ்ச்சங்கமோ; தமிழ் மக்கள் மன்றமோ; மாஸசூஸட்ஸ் தமிழ் அமைப்புகளோ; தமிழ்ப் பள்ளிகளோ; சிஷு பாரதி ஆசிரியர்களோ – எல்லோருமே ‘நல்லா நடக்கட்டும்!’ என வாழ்த்தினார்களே தவிர, நுழைவ்வுச்சீட்டையோ, தங்கள் நண்பர்களையோ, குடும்பத்தினரையோ முடுக்கிவிட்டு அலைகடலென திரளாமல் ஐபிடிவி.யில் அரதப் பழசான ‘கயல்’, ‘இdli சட்னி காபி’ என்று நெடுந்தொடர் பிக் பாஸாக உதாசீனாம் செய்தது பின் விளைவு.
புலம்பல் போதும்.
இரமணன் வந்தார்; Isaikkavi Ramanan நியூ ஜெர்சி தமிழர்கள் அரங்கேறி ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் என துணை நின்றார்கள். தமிழ் மக்கள் மன்ற அறங்காவலர்களும் அமைப்பாளர்களும் நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை கரம் பற்றி கூட நடந்தார்கள்.
நன்றி டி.எம்.எம். Tamil Makkal Mandram, USA பாரதியை எங்களுடன் கர்ஜிக்கவிட்ட இசைக்கவிக்கு நன்றி. பிராட்வே அரங்கை உருவாக்கிய எஸ்.பி. கிரியேஷன்சுக்கு நன்றி. SB Creations / Raman Sbs அவரை பாஸ்டனுக்கு அழைத்து நாடக நடிகர்களை உபசரித்து என் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்ட ரமணனின் மகன் ஆனந்திற்கு அவர் குடும்பத்திற்கும் கோடானுகோடி நன்றி.
சரி…. நாடகம் எப்படி?
இரமணன் எழுதிவிட்டார். இணையத்திலும் கிடைக்கிறது.
அந்த நிகழ்வு முடிந்தவுடன், நம்மவர், என்னிடம் கேட்ட கேள்வி: “வீடியோ கிடைக்குமா?”
இந்த மாதிரி கொண்டாட்டம் எல்லாம் மனதிற்கு விரும்பியவர்களுடன் நேரில் பார்த்து ரசிக்க வேண்டிய நிகழ்ச்சி. தமிழர்கள் எதையும் திருட்டி விசிவி-யில் பார்த்து ரசிப்பவர்கள். அவர்களுக்கு இந்த மனநிலை வாய்க்குமா! அந்த அரங்கிற்குள் பாராதியார் காலத்திற்கு சென்றிருப்பார்களா!? அப்படியே அவரின் எண்ணங்களுக்குள், பாடல்களுக்குள், வசன கவிதைகளுக்குள் தங்களை மீட்டெடுப்பார்களா!
இருநூறு டாலர் கொடுத்து (நியூ யார்க்கில்) லயன் கிங் பார்ப்பார்கள். வேட்டையனுக்கு (ஒருவருக்கு) 28$ கொடுப்பார்கள். இளையராஜாவின் திரைப் பாடல்களை ரஞ்சனி – காயத்ரி பாடினால் ($50) காசு கொடுத்து லயித்துக் கேட்பார்கள்.
அவர்களிடம் எட்டயபுரத்துக்கும் காசிக்கும் புதுச்சேரிக்கும் திருவல்லிக்கேணிக்கும் அழைத்துச் செல்கிறோம் என்றால் – ‘நாங்களே போயிக்கிறோம்!’ என்று ஒதுங்கி விடுகிறார்கள். ’என் பையன்…’, ‘என் மகள்…’, என் குடும்பம் என்று ரத்தமும் சதையுமாக தங்களின் வழித்தோன்றலின் தத்தக்கா பித்தக்கா ஆட்டத்தை ரசிப்பர்வகள், – பாரதிதாசன், சுப்பிரமணியம் சிவா, வ.உ.சி. என்றால் எதற்கு அந்த ஆளையும் அவரின் விழுமியங்களையும் இலட்சியங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்… என ஜகா வாங்குகிறார்கள்.
’பாரதி யார்’ நாடகம் என்பதை விட அனுபவம். பாரதியாரின் வாழ்வு; பாரதியின் நியாயங்கள்; பாரதியின் பாடல்கள்; பாரதியின் சொற்றொடர்கள்; பாரதியின் எண்ணங்கள் – ஏற்கனவே நீங்கள் சீனி. விசுவநாதனாக இருந்தாலும் பாரதியைக் கண் முன்னேக் கொணரும் மகா காவ்யம். ’பாரதி யார்’ அரங்க அனுபவம் என்பது சொல்லால் எழுதப்பட்டு புரிந்து கொள்வது அல்ல. அந்த அரங்கத்தில் பல்வேறு பார்வையாளர்களருடன் ஒருங்கிணைந்து இலட்சியப் பாதையில் பயணிக்க உறுதி மொழி கொள்வது.
சொல்வனம் இதழின் 326வது வெளியீட்டில் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ மூன்றாம் பகுதி வந்திருக்கிறது.
#solvanam பத்திரிகைக்கு நன்றி
ஒரு நாடகம். ஒரு உயர்தனிச் செம்மல் (வார்த்தை உதவி பி.ஏ.கே அவர்கள்) ஒரு பரிந்துரை.
இவை மூன்றுமே ஆழமாகவும் இந்திய தத்துவத்துடனும் வாத்தியார்களின் துணை கொண்டும் எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு எழுத வேண்டும் என்று 326 குறிப்புகள் வரைவோலையாகக் கிடப்பில் இருக்கிறது.
சொ.வ. இதழில் இதை விட மூன்று முக்கியமான ஆக்கங்களும் வெளிவந்துள்ளன: 1. டொரொண்டோ வெங்கட்ரமணன் எழுதிய இருளையும் ஒளியையும் வென்றவன் – ஆதி பகவன் மாதிரி பத்ரியும் வெங்கட்டும்: அவர்கள் முதற்றே பதிவுலகு 2. நிர்மல் எழுதிய பொற்குகை ரகசியம் – சிறுகதைத் தொகுப்பு: வாசிப்பு அனுபவம் – ஆங்கில விஷயங்களுக்கு சாட்ஜிபிடி இருக்கிறது. தமிழ் நூலுக்கு விமர்சனம்/அறிமுகம் கொடுப்பதற்கு சுய சரக்கு தேவை. 3. சிறுகதை சிறப்பிதழ்
Isaikkavi Ramanan is a prolific poet and writer in Tamil, a composer, and a singer. He has published about 32 books. Notable among them is Sikaram, the biography of the famous movie director, K. Balachandar. His books in English include Chips Down? Chin Up!; Business Mantras, a Pictorial on N. Mahalingam; and A Sublime Sacrament, an interpretation of Hindu marriage rites.
Day: September 16th Sunday The speech starts at 3 PM Place: Burlington’s Recreation Center Address: 61 Center St, Burlington, MA 01803
He has addressed audiences of various age groups in multiple forums on diverse topics, including series on Thirukkural, Bharathiar’s works, Kannadasan’s film songs, and motivational talks. He has anchored and acted in several programs on many popular TV channels relating to social and spiritual themes. He has written a Tamil play Bharathi Yaar? and plays the lead role. He has also dabbled in English theatre and has traveled widely across the globe for his lecture tours in English and Tamil. Besides pursuing his interest in literary works, Mr. Venkateswaran is an avid photographer and a nature enthusiast. He is an ardent pilgrim and has made 35 visits to different parts of the Himalayas so far.
Please join us for his talk and Q&A in Boston.
கவிஞர், பாடகர், எழுத்தாளர், இலக்கிய-ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்று பல தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் இசைக்கவி ரமணன். 35 முறை இமாலயப் பயணம். ‘கோடுகள் இல்லா உலகம்’, ‘யோகக் குறள்’, ‘ரமணனைக் கேளுங்கள்’, ‘வண்டி போய்க் கொண்டிருக்கிறது’, ‘திருமணம் என்பது’ போன்ற நூல்களின் ஆசிரியர். இயக்குனர் கே.பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்; திருக்குறள் சொற்பொழிவு, ஆன்மீகச் சொற்பொழிவு, தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று பம்பரமாகச் சுழல்பவர்.
அவரின் பேச்சை செப். 16 – ஞாயிறு அன்று பாஸ்டன் பக்கமாக கேட்க வாருங்கள்.
நேரம்: மதியம் மூன்று மணி ஒருங்கிணைப்பு: Tamil Makkal Mandram, USA தலைப்பு: கண்ணதாசன் நினைவலைகள் – வசந்த கால நதிகளிலே
இந்த நிகழ்வைத் தவற விடாதீர்கள்! அவசியம் நேரில் வாருங்கள்!!
அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்தில் யூதர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு கலாச்சார நடுவகங்கள் இருக்கின்றன. அது போல் இந்தியருக்கும் உருவாக்குகிறார்கள்.
அடுத்த தலைமுறையினருக்கு நம்முடைய மூதாதையர் குறித்த விழிப்புணர்வையும் பண்டைய பெருமையையும் எடுத்துரைக்கப் போகிறார்கள்.
இந்து மதத்தினர், இஸ்லாமியர், கிறித்துவர், என நம்பிக்கை சாராமல் அனைவரும் ஒன்றுகூட ஒரு இடம் தேவை.
எப்படி அமைக்கப் போகிறார்கள்?
கோவில்களை நிறைய கட்டி இருக்கிறோம். ஆனால், இது மதம் அல்லாத, சமயம் சாராத முயற்சி.
வட இந்தியர்கள் கூடும் இடம், தமிழர்கள் ஒன்று சேரும் சங்கம் என்றெல்லாம் இருக்கும். இது தெற்காசியருக்கான பொது மையம்.
சிந்து சமவெளி நாகரிகம், சரித்திரம், பண்பாடு, கல்விமுறை, தொழில்நுட்ப வளர்ச்சி, என பன்முகங்களை 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் துவங்கி, இந்தக் கால இன்ஃபோசிஸ் வரை பதிவு செய்து அனைவருக்கும் அறிமுகம் செய்யப் போகிறார்கள்.
நான் இருக்கும் ஊரின் பெயர் பாஸ்டன். இங்கிலாந்தில் இருந்து இந்தப் பெயர் வந்திருக்கிறது.
அமெரிக்காவில் பரங்கியர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ, அந்த இடத்திற்கெல்லாம், தங்களின் சொந்த ஊரின் பெயரையே நாமகரணமிட்டார்கள். இங்கிலாந்தில் உள்ள லண்டன், யார்க், க்ளூஸ்டர், வூர்ஸ்டர் போல், இந்தப் பகுதியிலும் நியு லண்டன், நியு யார்க் என குக்கிராமங்களை அழைத்துக் கொண்டார்கள். இவற்றில் சில ஊர்கள் மூலகர்த்தாவை விட அதிகப் பெயரும் புகழும் பெற்றது. லண்டனில் இருந்து இரண்டரை மணி நேரம் வடக்கில் இருக்கும் அசலை விட அதிகம் பேர் புழங்கும் இடமாக பாஸ்டன் ஆகி இருக்கிறது.
அந்த அசல் பாஸ்டன் பெயர் எப்படி வந்தது?
செயிண்ட் போடாஃல்ப் நகரம் என்பதுதான் மருவி பாஸ்டன் ஆகி இருக்கிறது. பால்டாஃப் டவுன் (அ) பால்டாஃப் ஸ்டோன் என்பது நாக்கை சுளுக்கெடுக்க, பால் ஸ்டோன் என சுருண்டு, அதுவே… நாளடைவில் பாஸ்தன் என பெயர் பெற்றது.
“ஒரு கல்; ஒரு கண்ணாடி” என்னும் பிரயோகம் கூட இந்த நகரத்தில் இருந்து வந்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் துறவி பால்டாஃப் வைத்தது ஒரு கல். அதைச் சுற்றி வசித்தவர்களால் பாஸ்டன் நகரம் உருவானது. நடுநடுவே போர்ச்சுகீசியர்கள் குடிபுகுந்தார்கள். அப்படி வந்தேறியவர்களை 21ஆம் நூற்றாண்டில் கால்பந்தில் இங்கிலாந்து தோற்றவுடன் பால்டாஃப் stone (கல்) கொண்டு மண்ணின் மைந்தர்கள் விரட்டினார்கள்.
அமெரிக்காவின் பாஸ்டனில் இருந்த ஆதிகுடி என்ன பெயர் கொண்டு அழைத்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
புருயின்ஸ் கெலிப்பார்கள் என்று கணித்தேன். சறுக்கிவிட்டது.
பாஸ்டன் ப்ரூயின்ஸ் அருமையான அணி. பனிச்சறுக்கு ஹாக்கியில் முக்கியமான அணி. இரண்டாண்டுகள் முன்பு கூட உலகக் கோப்பையை வென்ற அணி. இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் அணி.
அவர்கள் ஏன் வெல்வார்கள்?
சாதாரணமாக மிக மிக அற்புதமாக ஆடும் வர்க்கத்தார் கூட நேர் போட்டிகளில் வென்றதாக சரித்திரம் இல்லை. உதாரணத்திற்கு மியாமி ஹீட்ஸ் குழுவை எடுத்துக் கொள்ளலாம். ஏழு போட்டிகள் நடக்கும். மியாமியால் நான்கே போட்டிகளில் எதிரணியை வீழ்த்திவிட முடியும். எனினும், யாருக்காவது அடிபடும்; நடுவர் தீர்ப்பு சாதகமாக அமையாது; குழுத்தலைவர் formல் இருக்கமாட்டார்…
இப்படி ஏதாவது காரணம் சொல்லி கடைசி பந்து வரை டி20 போட்டியை இழுத்தடிப்பது போல் நான்கு மேட்ச்களில் முடிக்க வேண்டியதை ஏழாக்கி முடிப்பார்கள். ஆனால், பாஸ்டன் புரூயின்ஸ் நான்கே போட்டிகளில் ரணகளம் செய்து முன்னேறுகிறார்கள்.
இந்த முறை பாஸ்டன் புருயின்ஸ் வெல்வதற்கு மிக முக்கிய காரணம் பாஸ்டன் குண்டுவெடிப்புகள். ஜார்னேவ் சகோதரர்கள் கைங்கர்யத்தால் சோகமும் இருளும் கவ்விய பிரதேசத்திற்கு இந்த வெற்றி புத்துணர்ச்சி கொடுக்கும்.
கூடைப்பந்தாட்டத்தில் விளையாடும் பாஸ்டன் செல்டிக்ஸ் இப்போதைக்கு வாகை சூட முடியாது. பேஸ்பால் ஆடும் பாஸ்டன் ரெட் சாக்ஸும் அவ்வாறே. பேட்ரியாட்ஸ் போட்டி துவங்க நெடுநாள் உள்ளது. இந்த நிலையில் உள்ளூர் அணிக்கு கொற்றம் கிடைத்தால் நகரத்தில் மாற்றம் கிடைக்கும்.
மாஸசூஸட்ஸ் மீண்டும் ஊட்டம் கண்டு தலையெடுத்து மீட்சி அடையும் அடையாளமாக புரூயின்ஸ் வெல்வார்கள்.
இன்று மைக்ரோசாஃப்ட் நிரலிகளில் வல்லுநர்களுக்கான அ-கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன். நிறைய கற்றுக் கொடுத்தார்கள். முழுக்க முழுக்க தன்னார்வலர்களின் சொற்பொழிவு.
அம்சமான சனிக்கிழமையன்று காலை ஐந்தரைக்கே எழுந்து ஒண்ணரை மணி நேரம் வண்டியோட்டி வந்து, தொண்டை கிழிய சொல்லிக் கொடுப்பதற்கு கோடி கூலி கேட்டிருக்கலாம். ஆனால், இவர்கள் எல்லோரும் தானாக முன் வந்து நுட்பத்தின் நுட்பம் எல்லாம் செய்முறை விளக்குகிறார்கள்.
ஏன்?
முதல் பிரிவில் மைரோசாப்டிற்காக வேலை பார்ப்பவர்கள். தங்கள் நிறுவனத்தின் புதிய மென்பொருள்களை மார்க்கெடிங் செய்பவர்கள்.
இரண்டாமவர் கன்சல்டிங் துறைக்காரர்கள். தங்களுக்கு கணினித் துறையில் எவ்வளவு தெரியும் என்பதை நாசூக்காக முன்வைக்கிறார்கள். அவர்களின் அனுபவத்தையும் திறமையும் பலருக்கு வெளிப்படுத்த இதை விட சிறந்த அரங்கு கிடைக்காது.
கடைசியாக என்னைப் போன்றோரும் உண்டு. சிலரின் பேச்சைக் கேட்டதும், இவர்களுக்கு, ‘நானே இவரை விட நன்றாக கற்பிப்பேனே’ என்று நம்பிக்கை பிறந்திருக்கும். அல்லது, புத்தம்புதிய விஷயங்களை அறிவதற்கு, அதைக் குறித்து பிரசண்டேஷன் கொடுப்பதுதான் சிறந்த வழியாக கருதுபவர்கள்.
நீச்சலைக் குறித்து கற்றுக் கொடுக்கப்படுவதை விட, கிணற்றுக்குள் குதித்து தத்தளித்து எழுவதை விரும்புபவர்கள்.
பொத்தான் நீக்காத முழுக்கை நீளும் வெளிர் நீல சட்டை. இஸ்திரி கலையாத கருநீல முழுக்கால் சட்டை. அமெரிக்க பொறியியலாளர்களுக்கு போட்டியாக விப்ரோ ஏற்றுமதி செய்யும் நாற்பதாயிர வெள்ளி சமபளத்திற்கு நிறைவான வேலை நல்கும் குந்துரத்தர் போல் தெரியும் நாஞ்சில் நாடன் வந்தார்.
முதல் முறை அமெரிக்க பயணம். ஆனாலும், வரும் வழியில் இரு குடும்பத்தாருக்கு அவர்களுக்கு உரிய விமானத்தை வழி காட்டி, ஆங்கிலம் தெரியாத மூன்று முதல் விஜயத்தாருக்கு படிவங்களை நிரப்பி உதவி வழியனுப்பி, இன்னும் சில சந்தேகப் பேர்வழிகளின் ஐயங்களை நீக்கி வழிநடத்தி தானும் வந்து சேர்ந்தார்.
கம்ப ராமாயணத்தில் குகனுடன் ஐவரானோம் மாதிரி அவர்கள் எல்லோரும் நாஞ்சிலுடன் இணைந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், அவர்களுக்கு தமிழ் தெரிந்திருந்தால், கம்பனின் சுவையை அவர்களின் நுனி நாக்கில் ஏற்றி இருந்திருப்பார்.
நாஞ்சில் நாடனுக்கு நேம் டிராப்பிங் என்றால் பொய்கையாழ்வார், குமரகுருபரர், தேம்பாவணிக்கு உரை எழுதிய புனித *%$#&@+>, சீறாப்புராணத்திற்கு பதம் பிரித்த புண்ணியவான் ஆகியோர்.
இந்த மாதிரி சிறப்பு விருந்தினர்களை வருவித்து விருந்தினராக்குவதற்காக ராஜனுக்கு சிறப்பு நன்றி.
வாசர்களையும் தமிழ் சிந்தனையாளர்களையும் கோர்க்கும் பெருமை திருமலை ராஜனையே சாரும். முன்னதாக ஜெயமோகன் வந்தார். இப்பொழுது நாஞ்சிலார். கிழக்கு கடற்கரை நண்பர்களை ஒருங்கிணைப்பதில் ஆகட்டும்; புதிதாக அணுக நினைப்பவர்களை இயல்பாக்குவதில் ஆகட்டும்; எல்லோரிடமும் நிதி வசூலிப்பது ஆகட்டும்; வாரயிறுதி மட்டுமே கோறுபவர்களிடம் கறாராக பேசுவதில் ஆகட்டும்; விசா நடைமுறைகளை சிக்கலின்றி பெற்றுத் தருவதில் ஆகட்டும்.
ராஜன் இல்லாவிடில் இந்த மாதிரி இயல்பான அன்னியோன்யமான சந்திப்புகள் சாத்தியப்படாது.
என்னை மாதிரி எழுதுவோரை நாஞ்சில் நாடன் அம்பறாத் துணியில் சில்லறையைப் போட்டு வில்லேந்துபவராக வருணிப்பார்.
அதாவது எதிர்த்தாப்பில் இராவணன். ஒரு கணம் தாமதித்தாலும் மோதி பஸ்மமாக்கி விடுவான். அப்பேர்ப்பட்ட அவசரத்தில் விநாடி நேரம் கூட வீணாக்காத இராமன். அம்பறாத்துணியில் அம்பு நிறைந்திருக்க வேண்டும். சரியான அஸ்திரமாக இருக்க வேண்டும். உடனடியாக கையில் வர வேண்டும். விரல்களை பதம் பார்க்காமல், வில்லில் வகையாக ஏறி, வில்லனை வீழ்த்த வேண்டும்.
எழுத்தாளனுக்கு வார்த்தையும் இப்படி சுழல வேண்டும். அவனுடைய அம்பறாத்துணியாகிய மூளையில் சிந்தனை வில்லுக்கேற்ற சொற்கள் சிக்க வேண்டும். எல்லா இடத்திலும் பற்றி, என்று, ஆகவே போன்று தேய்வழக்கு கூடாது.
இது எப்படி சாத்தியம்?
எவர் கர்ம சிரத்தையாக சங்க இலக்கியமும் காப்பியங்களும் கீழ்க்கணக்கையும் வில்லியையும் வாசிக்கிறோம்?
நாஞ்சில் நாடனைப் போல் வாத்தி கிடைத்தால் எவரும் வாசிப்போம்.
நிறுத்தி நிதானமாக கம்பனின் வெண்பாக்களை நினைவு கூர்கிறார். சீதையைத் தேடி வரும் மாயமானைப் போல் கம்பரின் செய்யுளை சொல்லும்போது பளபளப்பாக இருக்கிறது; ஆனால் கைவசம் சிக்காமல், நழுவுகிறது; எனினும் ஆசையாக மனம் உத்வேகம் கொள்ள வைக்கிறது.
நண்பர் பாஸ்டன் வேல்முருகன் ஜென் கதையை அடிக்கடி சொல்வார்:
ஜென் துறவி மாதிரி நானும் மையமாக தலையாட்டி வைத்தேன். இதை யாரும் அவருக்கு சொல்லி விடாதீர்கள்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde