Category Archives: Tamil Blog

Mayanti Langer – Indian Cricket Commentators

இந்த உலகக் கோப்பையில் நான் ரசித்த முதல் அம்சம் மயந்தி லங்கர்.

வெறுமனே கவர்ச்சிக்கும், ஊறுகாயாகத் தொட்டுக் கொள்ள பெண் தொகுப்பாளினியும் இருந்த காலகட்டம் காணாமல் போயிருக்கிறது. இவர், “நீயா… நானா?” கோபிநாத் ரகம். தரமான கேள்விகள்; சுனில் கவாஸ்கார் போல் ஒயிலான மிடுக்கு; காதில் வருவதையும் எதிராளி பேசுவதையும் நேரமும் இடமும் அறிந்து முன்னெடுக்கிறார்.

நான் மந்திரா பேடி காலத்தவன். அவர் டி.டி.எல்.ஜே (தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே) படத்தில் நடித்த ஒரே குற்றத்திற்காக, கிரிக்கெட் போட்டிகளிலும் நடுவே வந்து போனார்.

அதற்கும் முந்தைய ஹிந்தி மட்டுமே அரசாண்ட பிஷன் சிங் பேடி, லாலா அமர்நாத், கிஷோர் பேமானி, சுஷில் ஜோஷி போன்றவர்கள் பேச்சைக் கேட்டால், குளக்கரையில் கரையும் காகங்களின் இனிமை புரியவரும். ஹிந்தி தெரிந்திருந்தால் அந்த மொழியை இப்படியாக உபயோகிக்கக் கூடாது என்பதும் தெரியவரும். டிவியின் ஒலியை மொத்தமாகக் குறைத்துவிட்டு, வெறுமனே காட்சியை மட்டும் பார்க்கலாம். அதாவது, இளையராஜா பாடலை ரேடியோவில் ஒலிக்க விடுங்கள். தொலைக்காட்சியில் ஒரு நாள் போட்டி ஓடும்.

ஆங்கில காமெண்டரி எப்பொழுதுமே தேவலாம். நரோத்தம் பூரி போன்றவர்கள் ஜமாய்ப்பார்கள். எனினும், பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களை எந்த இங்கிலீஷ்காரராலும் தொட இயலவில்லை. ரிச்சி பெனாட், டோனி கிரெக் – இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் சரிந்தால் கூட மென்மையாகச் சொல்வார்கள். ஸ்டீவ் வாக் வெளுத்து வாங்கினால் கூட குறைகளைச் சுட்டுவார்கள்.

அதன் பிறகு நிறைய பேர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். ஹர்ஷா போக்ளே, சித்து – இவர்கள் மைக்கை பிடித்த போது எனக்கு கிரிக்கெட் எட்டாத கனியாகி விட்டிருந்தது.

மீண்டும் ஐ.பி.எல். மூலமாக வந்த போது அறிமுகமான பெண் வர்ணனையாளர் மாயாந்தி. லட்சணமாக இருந்தார். இன்னொரு மந்திராவோ என மிரட்சியுடன் அலட்சியமாகக் கேட்டேன். சுனில் கவாஸ்கரின் ஒய்யாரமும் ரவி சாஸ்திரியின் ஆங்கிலப் புலமையும் கவனிக்க வைத்தது. ஆனால், அவரை பின் தொடர வைத்தது — அந்த ஆஸ்திரேலியாக்காரர்களின் வாக்கு வன்மை.

கொஞ்சம் தேடினால், என்னென்னவோ சாதித்து இருக்கிறார் மாயந்தி. எப்பொழுது இருந்தோ அளவளாவுகிறார் லங்கார். எதெதற்கோ நேரடி ஒலிபரப்பாளர் ஆக இருந்திருக்கிறார் லங்கர். கணவன் கூட புகழ் பெற்றவராம். நம்ம 83 ரோஜர் பின்னியின் மகனை மணமுடித்திருக்கிறார்.

சந்தோஷமாக இருந்தது. கிளப் ஆட்டம் போல் இறக்கிவிடப்பட்ட மசாலா பதார்த்தங்கள் இன்று லியோ சிங்கமாக முழுமுதல் திரையையும் காத்திரமாக ஆக்கிரமித்து விவரணையை விவரமாகத் தருவது – புதிய தலைமுறையின் சாதனை.

அஞ்சனி

நல்ல சிறுகதை என்பது நல்ல நாவலைப் போல. முழு வாழ்க்கையையும் உணர்த்தும்.

நியு யார்க்கரில் லாரா (Lara Vapnyar) எழுதிய Siberian Wood அந்த ரகம்.

கதை எதைப் பற்றியது?

அ) திருமணம்; விவாகரத்து; மறுமணம் என்னும் சுழற்சியில் எவ்வாறு சிக்குகிறார்கள்?

I was too focussed on the struggles of motherhood at that age to see the magnitude of suffering that childlessness could cause. I’d spend hours discussing with other young mothers how tied down we felt. It was so much easier to list the hardships of having a child than to pinpoint the things that made it worthwhile. What was it that made it worthwhile, anyway? It was not about being fulfilled, no, though it was about being full—full of care, full of worry, full of affection, full of a love so great and pressing that it was almost indistinguishable from pain, full of something heavy and real that made you feel grounded, rather than weightless. You felt more there. That was precisely what Daria desperately wanted—to feel rooted, securely tied down.

ஆ) அமெரிக்காவில் குடிபுகுவதற்காக காதல் பாவ்லா கல்யாணம் செய்யும் வந்தேறி நிலைமை என்ன?

He was in awe of New York City—the streets, the buildings, the traffic, the people, the energy, the art! The Met was just stunning, especially the wooden sculptures made by the Asmat people. They were breathtakingly complex—it was as if tree roots were growing out of a person’s body, connecting her to her ancestors, who had roots growing out of their bodies, too, connecting them to the deeper past, and it went on and on. It was a brilliant way to show continuity of life, to hint at immortality.

இ) எல்லோருக்கும் பிடித்தமாக இருக்கும் டாரியா (Daria), குழந்தையைப் போன்ற பேரெல்லை இலட்சியக் கனவாக, எவ்வாறு எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்த்து நிராசையை எதிர்கொள்கிறாள்?

Mark thought that there was something silly and artificial about Daria’s fantasies. As if she had no idea what a family was or how it operated but took her clues from children’s picture books.

ஈ) நெகிழ்ந்து வளையும் நாணலையும் நெடிந்து தனித்து நிற்கும் பனை மரத்தையும் கடற்கரையில் பார்ப்போம். வாழ்வில் இணைத்தால்?

She was vegetarian and knew her way around vegetables, often using ingredients that Mark hadn’t even heard of, like kohlrabi or Japanese turnips or chicory.

உ) நிச்சயமின்மையை எண்ணிப் பார்த்து விளையும் பயங்களைக் கண்டு அஞ்சி நடுங்கி எலிவளையத்துக்குள் சிக்குறுகிறோமா? அடுத்த வேளை எங்கு இருப்போம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இன்னொருவருடன் ஓப்பிடாமல் — இலக்கை அடைய உயரப் பறக்கும் பட்டாம்பூச்சியாக பறந்து திரியலாமா?

There was a photo of Daria in the middle of a sea of volcanic ash, kneeling over a puny tree. She had her head cocked to one side, and her self-conscious smile suggested that she knew some people might find her endeavor ridiculous, like that of a child “planting” a stick in the sand. And yet she was doing it anyway. There was something inspiring in her insistence on continuing to try when most people would have given up, in her ability to preserve hope, no matter how absurd it was.

வாரயிறுதி விருந்தில் கதை ஆரம்பிக்கிறது. அந்த சந்திப்பில் நமக்கு கதாமாந்தர்கள் அறிமுகம் ஆகிறார்கள்.

துள்ளலான துவக்கம். தொடர்ந்து வாசிக்க வைக்கும் ஆர்வம். நடுநடுவே அருங்காட்சியக விமர்சனம்; கலையரங்க நையாண்டி; பலான விஷயம்; சுவையான தகவல் சரடு. எல்லாவற்றையும் விட சம்பவங்களினால் கோர்க்கும் லாவகம். இருபதாண்டு கால விஷயங்களை பத்து பக்கங்களில் பசுமையாகத் தரும் சாமர்த்தியம்.

தமிழ்ச் சிறுகதைகளோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

நீதி போதனை இல்லை. “இது மட்டுமே சரி!” என்னும் தீர்ப்புகள் இல்லை. வட்டார வழக்கு ஜாலங்கள் இல்லை. கேள்விகளை எழுப்பி, பக்கத்து வீட்டு மனிதர்களை உணர்த்தி, உக்ரெயின் – ரஷியா போரையும் நினைவிற்குக் கொணர்ந்து, நீண்ட நாள் நினைவில் தங்கும் குணச்சித்திரங்களை சிந்தையில் தேக்கும் ஆக்கம்.

கச்சிதம்.

Invitation for the Sep 16th Event at Boston with Isaikkavi Ramanan

Isaikkavi Ramanan is a prolific poet and writer in Tamil, a composer, and a singer. He has published about 32 books. Notable among them is Sikaram, the biography of the famous movie director, K. Balachandar. His books in English include Chips Down? Chin Up!; Business Mantras, a Pictorial on N. Mahalingam; and A Sublime Sacrament, an interpretation of Hindu marriage rites.

Day: September 16th Sunday
The speech starts at 3 PM
Place: Burlington’s Recreation Center
Address: 61 Center St, Burlington, MA 01803

He has addressed audiences of various age groups in multiple forums on diverse topics, including series on Thirukkural, Bharathiar’s works, Kannadasan’s film songs, and motivational talks. He has anchored and acted in several programs on many popular TV channels relating to social and spiritual themes. He has written a Tamil play Bharathi Yaar? and plays the lead role. He has also dabbled in English theatre and has traveled widely across the globe for his lecture tours in English and Tamil. Besides pursuing his interest in literary works, Mr. Venkateswaran is an avid photographer and a nature enthusiast. He is an ardent pilgrim and has made 35 visits to different parts of the Himalayas so far.

Please join us for his talk and Q&A in Boston.

கவிஞர், பாடகர், எழுத்தாளர், இலக்கிய-ஆன்மீகச் சொற்பொழிவாளர் என்று பல தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் இசைக்கவி ரமணன். 35 முறை இமாலயப் பயணம். ‘கோடுகள் இல்லா உலகம்’, ‘யோகக் குறள்’, ‘ரமணனைக் கேளுங்கள்’, ‘வண்டி போய்க் கொண்டிருக்கிறது’, ‘திருமணம் என்பது’ போன்ற நூல்களின் ஆசிரியர். இயக்குனர் கே.பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்; திருக்குறள் சொற்பொழிவு, ஆன்மீகச் சொற்பொழிவு, தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று பம்பரமாகச் சுழல்பவர்.

அவரின் பேச்சை செப். 16 – ஞாயிறு அன்று பாஸ்டன் பக்கமாக கேட்க வாருங்கள்.

நேரம்: மதியம் மூன்று மணி
ஒருங்கிணைப்பு: Tamil Makkal Mandram, USA
தலைப்பு: கண்ணதாசன் நினைவலைகள் – வசந்த கால நதிகளிலே

இந்த நிகழ்வைத் தவற விடாதீர்கள்! அவசியம் நேரில் வாருங்கள்!!

சொல்வனம் #300

பட்டாவளி

சமீபத்திய தமிழ் எழுத்தாளர்கள் யார்? இப்போதைய காலகட்டத்தில் அவசியம் வாசிக்க வேண்டிய புனைவுகள் என்ன? முக்கிய பதிப்பகங்களில் எந்த நாவல்கள் விமர்சகரின் கவனத்தைக் கோருகின்றன?

யுவன் சந்திரசேகர், சாரு நிவேதிதா, அ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், பா. ராகவன். ஜெயமோகன், இரா. முருகன், அ. முத்துலிங்கம், பாவண்ணன், மாலன் போன்றோர் 2000களில் இணையத்தையும் அச்சையும் கோலோச்சினார்கள். அவர்களைப் போன்றோர் உயிர் எழுத்து, காலச்சுவடு, உயிர்மை, உன்னதம், சொல் புதிது, கல்குதிரை, கலைமகள், கதிர் போன்ற அச்சு இதழ்களிலும் அவரவர் வலையகம் மூலமாகவும் அனுதினமும் கட்டுரையும் கதையும் வெளியிட்டார்கள். இன்றைய இயல், விளக்கு, ஞானபீடம், சாகித்திய அகடெமி, விஷ்ணுபுரம் விருது என்று கவனிப்புகளை அடுத்த தலைமுறையில் எவர் அள்ளப் போகிறார்கள்?

முகவணை

இந்த இதழைத் துவக்கும்போது ஓரிரண்டு பட்டியல்களைக் கொண்டு தயாரித்திருக்க வேண்டும்.

  1. (கவனிக்கப்படாத) சமீபத்திய எழுத்தாளர்கள் பட்டியல்
  2. (அறியப்பெற்ற) சமீபத்திய எழுத்தாளர்கள் பட்டியல்
  3. மேலேயுள்ள இரு பட்டியலில் உள்ளவர்களை அறிமுகம் செய்யக் கூடிய விமர்சகர்கள்
  4. முக்கிய பதிப்பகங்கள் – 2000த்துக்குப் பிறகு எழுந்து வரும் எழுத்தாளர்களை எவர் வெளியிடுகிறார்கள்?
  5. சமீபத்திய சிறுகதைத் தொகுப்புகள்
  6. சமீபத்திய நாவல் நூல்கள்
  7. இளைஞர்களுக்கான விருதுகளின் பட்டியல்
  8. விருதுகளைப் பெற்றவர்கள்
  9. குங்குமம், விகடன் போன்ற வணிக இதழ்களில் முத்திரை சிறுகதை எழுதியவர்கள்
  10. காலச்சுவடு, கல்குதிரை போன்ற இலக்கிய இதழ்களில் கதை எழுதியவர்கள்
  11. இணைய வலையகங்களில் தொடர்ச்சியாக புனைவை அளிப்பவர்கள்

இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை. கைவசம் அவர்களைத் தொகுத்துக் கொண்டால், இந்த இதழில் எவரெவரைத் தவற விட்டோமோ, அவர்களை வரும் வெளியீடுகளில் கவனிக்கலாம். வரும் வாரங்களில் வாசிக்க எடுத்து வைக்கலாம். குறைந்த பட்சம் மற்றவர்களையாவது படிக்குமாறு தூண்டலாம்.

இதுதான் இந்த பட்டியல் பதிவின் குறிக்கோள்

விருதுகள்

விருதுகள் எவ்வளவு இருக்கின்றன? சமீபத்திய ஆண்டுகளில் எவர் அவற்றைப் பெற்றனர்? பு.பி. பேரை வைத்தே மூன்று வெவ்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன (நன்றி: தமிழ் விக்கி)

  1. KRG நாகப்பன் ராஜம்மாள் விருது
  2. அக்கராயன் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் சாதனைப் பெண்மணி விருது
  3. அசோகமித்திரன் விருது
  4. அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை விருது
  5. அமரர் ஜோதிவிநாயகம் நினைவு பரிசு
  6. அமுதன் அடிகள் விருது
  7. அவள் விகடனின் இலக்கிய விருது
  8. அன்றில் வளர் தமிழ் சிறுகதையாளர் விருது
  9. ஆனந்த விகடன் வைர விழா சிறப்புச் சிறுகதை விருது
  10. ஆனந்தாஸ் எம்.பி கலை இலக்கிய விருது
  11. இலக்கிய சிந்தனை விருது (சிறுகதை)
  12. இலக்கியச் சிந்தனை சிறந்த நாவலுக்கான விருது
  13. இலக்கியப்பேராளுமை விருது
  14. இலக்கியவீதி – அன்னம் விருது
  15. இலங்கை – முரசொலி பத்திரிகையின் முதல் பரிசு
  16. இலங்கை தேசிய சாகித்திய மண்டல விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் விருது
  17. இளைஞர் ஆண்டு நாவல் போட்டி
  18. உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது
  19. எம்.வி.வெங்கட்ராம் நூற்றாண்டு நினைவு விருது
  20. எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது
  21. என்.சி.பி.எச். வழங்கும் தொகுதிக்கான விருது
  22. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
  23. ஏலாதி அறக்கட்டளை இலக்கிய விருது
  24. கண்டாவளைப் பிரதேச சபையின் கலாசாரப் பிரிவின் “ஒளிச் சுடர்” விருது
  25. கதா அமைப்பின் சிறந்த சிறுகதைக்கான விருது
  26. கலைஞர் பொற்கிழி விருது
  27. கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது
  28. கவிஞர் வைரமுத்து விருது
  29. களரி அறக்கட்டளை வழங்கும் கு. அழகிரிசாமி நினைவு விருது.
  30. கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் விருது
  31. கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் புனைவு விருது.
  32. கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது
  33. காசியூர் ரங்கம்மாள் விருது
  34. கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் “இலக்கியமணி” பட்டமும் தங்கப் பதக்கமும்
  35. கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது
  36. குமுதம் வெள்ளி விழா கதைப்போட்டி
  37. கொழும்பு கலை இலக்கிய கழகத்தின் விருது
  38. கொழும்பு சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது மற்றும் யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு
  39. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ‘ரங்கம்மாள் நினைவு விருது
  40. சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியின் ‘படைப்பூக்கத் தமிழ் விருது
  41. சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது
  42. சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது –
  43. சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்ட குறுநாவல் போட்டி
  44. சிறுகதைத் தொகுப்பிற்காக: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க ‘புதுமைப்பித்தன் நினைவு விருது’
  45. சிற்பி அறக்கட்டளை விருது
  46. சிற்பி இலக்கிய விருது
  47. சுஜாதா விருது
  48. சுஜாதா-உயிர்மை அறக்கட்டளையின் சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது
  49. செயந்தன் நினைவு கவிதை விருது
  50. சென்னை இலக்கிய திருவிழாவின் சிறந்த எழுத்தாளர் விருது
  51. சென்னை இலக்கிய வீதி வழங்கும் அன்னம் விருது
  52. சென்னை ரோட்டரி சங்க விருது
  53. சேலம் தமிழ்ச் சங்கம் விருது.
  54. சௌமா இலக்கிய விருது
  55. ஞானியின் கோலம் அறக்கட்டளையின் ‘அசோகமித்திரன்’ விருது
  56. டிஸ்கவரி புக் பேலஸ் வழங்கும் பிரபஞ்சன் நினைவு விருது
  57. தஞ்சாவூர் நெருஞ்சி இலக்கிய வட்டத்தின் க நா சு விருது
  58. தஞ்சை பிரகாஷ் கவிதை விருது
  59. தமிழக அரசின் கலைமாமணி விருது
  60. தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது
  61. தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது
  62. தமிழக அரசின் சிறந்த நாவல் விருது
  63. தமிழக அரசு எழுத்தாளர் விருது (திருவள்ளுவர் தினம் – பொங்கல் பண்டிகையை ஒட்டி)
  64. தமிழ் முஸ்லிம் திண்ணை வழங்கும் தோப்பில் முகமது மீரான் நினைவு விருது
  65. தமிழ் வித்தகர் விருது
  66. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் புதுக்கவிதை நூலிற்கான பரிசு
  67. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில விருது
  68. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கும் சிறந்த நாவல் விருது
  69. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாநில விருது
  70. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருது
  71. தி இந்து குழுமத்தின் லிட் ஃபார் லைஃப் (lit for life) விருது
  72. தி க சி இயற்றமிழ் விருது
  73. தி. ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டி
  74. திருச்சி எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் பள்ளி வழங்கும் தமிழ் விருது
  75. திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது
  76. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  77. திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கும் சக்தி விருது
  78. திருமதி. செளந்தரா கைலாசம் அறக்கட்டளை விருது
  79. தேனீ இலக்கியக் கழகம் வழங்கும் ‘கவிச்செம்மல்’ பட்டம்
  80. நியூஜெர்ஸி தமிழ்சங்க விருது
  81. நெய்வேலி புத்தகக் கண்காட்சி வழங்கும் சிறந்த எழுத்தாளர் விருது
  82. நெல்லை இலக்கிய வட்டம் வழங்கும் ’எழுத்துலகச் சிற்பி’ பட்டம்
  83. படைப்பு இலக்கிய விருது
  84. பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது
  85. பாவலர் முத்துசுவாமி விருது
  86. புதுச்சேரி அரசின் சிறந்த நாவலுக்கான விருது
  87. பெரியார் விருது
  88. மத்திய அரசின் பரிசு
  89. மலைச் சொல் விருது
  90. மா அரங்கநாதன் விருது
  91. யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு
  92. யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனது வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இலக்கியப் பணிக்கான கௌரவிப்பு
  93. ரோட்டரி கிங்க்ஸ் ஆப் தஞ்சாவூர் சாதனை இளைஞர் விருது
  94. லில்லி தேவசிகாமணி விருது
  95. வடக்கு – கிழக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு
  96. வடக்கு கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது
  97. வடக்கு மாகாண சபையின் சிறந்த நூல் பரிசு
  98. வடசென்னை தமிழ்ச்சங்கம் இலக்கிய விருது
  99. வரலாற்றுப் புத்தகத்திற்கான ‘தெற்கு எழுத்தாளர் இயக்க விருது’
  100. வல்லினம் விருது
  101. வள்ளுவ பண்பாட்டு மைய விருது
  102. வாழ்நாள் சாதனைக்காக விளக்கு இலக்கிய அமைப்பு வழங்கும் புதுமைப்பித்தன் விருது
  103. விகடன் விருது (ஆண்டுதோறும் – வருட இறுதியில்)
  104. விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கவிஞர் மீரா விருது
  105. விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது
  106. வீரகேசரி – யாழ் இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய கனக.செந்திநாதன் நினைவுப் போட்டி

இவற்றில் பெரும்பாலானவை தமிழகத்தை முன்வைத்தே வழங்கப்படுபவை. ஈழத் தமிழர்களையும் இலங்கை வாழ் எழுத்தாளர்களின் முக்கியப்படுத்தல்களையும் தனியே பார்க்க வேண்டும்; தேட வேண்டும். இதில் திண்ணை, சொல்வனம், குவிகம், காலம், குருகு, சுவடு, அகழ், அடவி, அழிசி, தன்னறம், பதாகை, தமிழினி போன்ற இணைய இதழ்களின் (மேலும்: List of Online Tamil Magazines and How to Write for them | 10 Hot) அடையாளம் என பரிசோ, போட்டியோ, விருதோ, பட்டமோ, கௌரவங்களோ தராதது சோகமா? இயலாமையா? கும்பலோடு கோவிந்தா போடாத அடையாளத் தனித்துவமா? ‘நானும் ரௌடிதான்’ என்னும் இலக்கிய கௌரவத்தை இழக்கும் பரிதாபமா?

இவை முகாந்திரம். இந்தக் கேள்விகளுக்கு எளிமையான விடை கிடையாது. நாம் சொல்லும் ஆருடங்கள் பலிக்காமல் போகலாம். என் பரிந்துரைகள் உங்களைக் கவராமல் போகலாம். அதை விட அந்த நூல்களும் புதினங்களும் படைப்புகளும் ருசிக்காமல் போகலாம்.

புதிய முகங்கள் – சமீபத்திய எழுத்தாளர்கள்

சமீபத்தில் எழுதத் துவங்கியவர்களில் அதிகம் கவனிப்பைப் பெறாதவர்களில் துவங்குவோம்.

அதிகம கவனம் பெறாத சிறுகதை எழுத்தாளர்களும் நாவல் புனைவாளர்களும் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கடந்த ஐந்தாண்டுகளுக்குள் எழுதத் துவங்கியவர்கள். இவர்களில் சிலர் ரொம்ப காலமாக எழுதுபவர்கள். ஃபேஸ்புக், டிவிட்டர் எக்ஸ், டிக் டாக், இன்ஸ்டாகிராம், பிண்டெரெஸ்ட் என்று சமூக ஊடகங்களில் சர்ச்சையும் நண்பர்களும் அதிகம் இல்லாமல் சற்றே அமைதியாக உருவாக்கும் படைப்பாளிகளின் பட்டியல்.

  1. ‘பரிவை’ சே.குமார்
  2. அகராதி
  3. அசோக்ராஜ்
  4. அண்டனூர் சுரா
  5. அருண் பாண்டியன்
  6. அனுராதா ஆனந்த்
  7. ஆ.ஆனந்தன்
  8. ஆகாசமூர்த்தி
  9. ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
  10. ஆமினா முஹம்மத்
  11. ஆர். சேவியர் ராஜதுரை
  12. ஆர்.நித்யா ஹரி
  13. ஆவுடை
  14. ஆவுடையப்பன் சங்கரன்
  15. ஆழிவண்ணன்
  16. ஆனந்தி ராமகிருஷ்ணன்
  17. இ. ஹேமபிரபா
  18. இதயா ஏசுராஜ்
  19. இமாம் அத்னான்
  20. இரா. சேவியர் ராஜதுரை
  21. இரா. தங்கப்பாண்டியன்
  22. இராதா கிருஷ்ணன்
  23. இலட்சுமண பிரகாசம்
  24. இளங்கோவன் முத்தையா
  25. இளங்கோவன் ஜி.பி.
  26. ஈப்போ ஸ்ரீ
  27. உக்குவளை அக்ரம்
  28. உத்தமன் ராஜா
  29. எஸ். திவாகர்
  30. எஸ்ஸார்சி
  31. ஏ. ஆர். முருகேசன்
  32. க.சி.அம்பிகாவர்ஷினி
  33. க.மூர்த்தி
  34. கணேசகுமாரன்
  35. கணேஷ் ராகவன்
  36. கணேஷ் ராம்
  37. கண்.சதாசிவம்
  38. கயல்
  39. கரன் கார்க்கி
  40. கனகா பாலன்
  41. கனி விஜய்
  42. கனிமொழி.ஜி
  43. காயத்ரி.ஒய்
  44. கார்த்திக் பிரகாசம்
  45. கார்த்திக் ஸ்ரீநிவாஸ்
  46. காளீஸ்வரன்
  47. கிருத்திகா கணேஷ்
  48. கிருஷ்ண ப்ரசாத்
  49. கு. ஜெயபிரகாஷ்
  50. குமரகுரு
  51. கே.உமாபதி
  52. கே.எஸ்.சுதாகர்
  53. கோ. சுனில்ஜோகி
  54. கோமதி ராஜன்
  55. ச.கோ. பிரவீன் ராஜ்
  56. ச.வி.சங்கர்
  57. சக.முத்துக்கண்ணன்
  58. சங்கர்
  59. சங்கர் சதா
  60. சந்தீப்குமார்
  61. சந்தோஷ் மாதேவன்
  62. சந்தோஷ் ராகுல்
  63. சரத்
  64. சாது பட்டு
  65. சாந்தி மாரியப்பன்
  66. சாரதி
  67. சி.வீ.காயத்ரி
  68. சிசுக்கு
  69. சிதம்பரம்
  70. சிவகுமார் முத்தய்யா
  71. சீராளன் ஜெயந்தன்
  72. சுந்தரண்யா
  73. சுப்புராஜ்
  74. சுரேஷ் பரதன்
  75. சுஜித் லெனின்
  76. செல்வசாமியன்
  77. சேகர் சக்திவேல்
  78. சேவியர் ராஜதுரை
  79. சொல் உடையார்
  80. சோ.சுப்புராஜ்
  81. த.அரவிந்தன்
  82. தயாஜி
  83. தர்மு பிரசாத்
  84. தனசேகர் ஏசுபாதம்
  85. தன்ராஜ் மணி
  86. தாமரை பாரதி
  87. தாரிகை
  88. தினேஷ் பாண்டியன்
  89. தீபா நாகராணி
  90. தீபா ஸ்ரீதரன்
  91. தீனதயாளன்
  92. துரை. அறிவழகன்
  93. தெரிசை சிவா
  94. தேவசீமா
  95. தேவராஜ்
  96. தேவிலிங்கம்
  97. நந்தாகுமாரன்
  98. நவநீதன் சுந்தர்ராஜன்
  99. நறுமுகை தேவி
  100. நா. ஞானபாரதி
  101. நா.சிவராஜ்
  102. நித்ய சைதன்யா
  103. நித்வி
  104. நிவேதினி நாகராஜன்
  105. ப. சுடலைமணி
  106. பா. கண்மணி
  107. பா. ரமேஷ்
  108. பா. ராஜா
  109. பாலமுருகன் நெல்லை
  110. பிந்துசாரா
  111. பிரசாத் சுந்தர்
  112. பிரசாத் மனோ
  113. பிரசாத் ரங்கசாமி
  114. பிரசாந்த் வே.
  115. பிரதீப் சிவபெருமான்
  116. பிரதீப் நீலகண்டன்
  117. பிரபு தர்மராஜ்
  118. பிரியா கிருஷ்ணன்
  119. பிருந்தா இளங்கோவன்
  120. புகழின் செல்வன்
  121. போதி
  122. ப்ரசாந்த் கார்த்திக்
  123. ப்ரவீன் ராஜ்
  124. மகாராஜா காமாட்சி
  125. மகேஷ்குமார் செல்வராஜ்
  126. மஞ்சுநாத்
  127. மணிமாலா மதியழகன்
  128. மனோஜ்
  129. மன்னர்மன்னன் குமரன்
  130. மாதவன் பழனியப்பன்
  131. மால்கம்
  132. மாறன். மா
  133. மிதுன் கௌசிக்
  134. முகம்மது ரியாஸ்
  135. முத்தழகு கவியரசன்
  136. முத்துராசா குமார்
  137. மோனிகா மாறன்
  138. மோஹன் ஹரிஹரன்
  139. ரக்‌ஷன் கிருத்திக்
  140. ரமேஷ் கண்ணன்
  141. ரமேஷ் ரக்சன்
  142. ரவிச்சந்திரன் அரவிந்தன்
  143. ராஜா சிவகுமார்
  144. ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
  145. ரெ.விஜயலெட்சுமி
  146. ரெஜி இசக்கியப்பன்
  147. ரேவதி ரவிகாந்த்
  148. லட்சுமிஹர்
  149. லதா ரகுநாதன்
  150. லிவி
  151. வசந்தி முனீஸ்
  152. வளவன்
  153. வாசுதேவன் அருணாசலம்
  154. வாணி ஆனந்த்
  155. வாஸ்தோ
  156. விக்டர் ப்ரின்ஸ்
  157. விக்னேஷ்
  158. வில்லரசன்
  159. விஜயநாகசெ
  160. விஜயராணி மீனாட்சி
  161. விஜய் சுந்தர் வேலன்
  162. விஜய் வேல்துரை
  163. ஜனநேசன்
  164. ஜாபாலன்
  165. ஜார்ஜ் ஜோசப்
  166. ஜி. கார்ல் மார்க்ஸ்
  167. ஜீ. கணேஷ்
  168. ஜெகநாத் நடராஜன்
  169. ஜெகன்மித்ரா
  170. ஜெயந்தி
  171. ஜெயன் கோபாலகிருஷ்ணன்
  172. ஜே.மஞ்சுளாதேவி
  173. ஜேக்கப் மேஷாக்
  174. ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
  175. ஶ்ரீராம் விஸ்வநாதன்
  176. ஷரத்
  177. ஹரிஷ் குணசேகரன்
  178. ஹரீஷ் கணபதி
  179. ஹேமா
  180. ஹேமி கிருஷ்

சமீபத்திய விகடன் படைப்பாளிகள்

ஆனந்த விகடனுக்கென்று ஒரு சிறப்பு உண்டு. அதில் வரும் சிறுகதைகளும் எழுத்தாளர்களும் பரவலாகப் பலரைச் சென்றடைந்து நெடுங்காலமாக இலக்கிய வானில் ஜொலித்த காலம் ஒன்றுண்டு. இப்போதைய காலகட்டத்தில் அது திரைக்கதைக்கும் சினிமாவுக்குமான வாயிலாகிப் போனாலும் இன்னும் அதில் யார் எழுதுகிறார்கள், எப்படிப்பட்ட படைப்புகளைக் கொணர்கிறார்கள் என்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதையொட்டி விகடன் சிறுகதையாசியர்களின் பட்டியல்:

  1. அய்யப்பன் மகாராஜன்
  2. அரவிந்தன்
  3. ஆர். ஸ்ரீனிவாசன்
  4. இமையாள்
  5. எஸ்.பர்வின் பானு
  6. எஸ்.வி.வேணுகோபாலன்
  7. க.அம்சப்ரியா
  8. கணேசகுமாரன்
  9. கவிதைக்காரன் இளங்கோ
  10. கவிப்பித்தன்
  11. கு.இலக்கியன்
  12. கே.பி.சிவகுமார்
  13. சசி
  14. சிவகுமார் முத்தய்யா
  15. துரை.அறிவழகன்
  16. நர்சிம்
  17. நூருத்தீன்
  18. பாலைவன லாந்தர்
  19. பிரபாகரன் சண்முகநாதன்
  20. பிறைமதி குப்புசாமி
  21. புலியூர் முருகேசன்
  22. ம . காமுத்துரை
  23. மாத்தளை சோமு
  24. ரமணன்.கோ
  25. ராஜேஷ் வைரபாண்டியன்
  26. விஜி முருகநாதன்
  27. ஸ்ரீதர் பாரதி
  28. ஹாசிப் கான்

இதே போல் குங்குமம் இதழில் எழுதியவர்கள், காலச்சுவடு போன்ற சிற்றிதழ்கள், பிற சிறுபத்திரிகைகளில் எழுதியவர்களையும் பட்டியலிடலாம்.

பரவலாக எழுதி கவனிப்பைப் பெற்ற படைப்பாளிகள்

அடுத்ததாக வாசிக்க வேண்டிய படைப்பாளிகளின் பட்டியல் பரிந்துரைகள்.

இவர்களில் பெரும்பாலானோர் பல காலமாக எழுதுபவர்கள். பல விருதுகளை அள்ளியவர்கள். பத்திரிகை நடத்துபவர்கள். பல நூல்களை வெளியிட்டவர்கள். இணையத்தில் அறியப் பெற்றவர்கள். சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்ற மோதிரக்கையால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.

  1. அ. ரெங்கசாமி
  2. அ.கரீம்
  3. அகரமுதல்வன்
  4. அகரன்
  5. அமர்நாத்
  6. அமல்ராஜ் பிரான்சிஸ்
  7. அமுதா ஆர்த்தி
  8. அரவிந்தன்
  9. அராத்து
  10. அரிசங்கர்
  11. அருணா சிற்றரசு
  12. அருள்செல்வன்
  13. அனார்
  14. அனோஜன் பாலகிருஷ்ணன்
  15. அஜிதன்
  16. ஆசி கந்தராஜா
  17. ஆதவன் தீட்சண்யா
  18. ஆத்மார்த்தி
  19. ஆர்.அபிலாஷ்
  20. இடலாக்குடி அசன்
  21. இந்திரா ராஜமாணிக்கம்
  22. இராகவன் ச.
  23. இராயகிரி சங்கர்
  24. இலட்சுமி சரவணகுமார் 
  25. இளங்கோ
  26. உதயசங்கர்
  27. உமாஜி
  28. எம். எம். நௌஷாத்
  29. எம். தவசி
  30. எம். ரிஷான் ஷெரீப்
  31. எம்.எம். நௌஷாத்
  32. எம்.எம்.தீன்
  33. எம்.கே.குமார்
  34. எம்.கே.மணி
  35. எம்.ஜி.கன்னியப்பன்
  36. எல்.ஜே வயலட்
  37. என். ஸ்ரீராம்
  38. எஸ்.சுரேஷ்
  39. ஏ. ஆர்.முருகன்
  40. ஏக்நாத்
  41. ஏஜே.டானியல்
  42. ஐ.கிருத்திகா
  43. க.கலாமோகன்
  44. க.ராஜீவ் காந்தி
  45. கணேஷ் வெங்கட்ராமன்
  46. கமலதேவி
  47. கலைச்செல்வி
  48. கறுப்பி சுமதி
  49. கனகராஜ் பாலசுப்பிரமணியம்
  50. கா. ரபீக் ராஜா
  51. கா.சிவா
  52. காந்தி முருகன்
  53. கார்த்திக் பாலசுப்ரமணியன்
  54. கார்த்திக் புகழேந்தி
  55. காலத்துகள்
  56. காளிப்ரஸாத்
  57. கிரிதரன் ரா.
  58. குணா கந்தசாமி
  59. குமாரநந்தன்
  60. கே.என். செந்தில்
  61. கே.பாலமுருகன்
  62. கே.ஜே.அசோக்குமார்
  63. கோ.சுனில்ஜோகி
  64. கோ.புண்ணியவான்
  65. கோவர்த்தனன் மணியன் ம.
  66. ச.துரை
  67. சக்கரவர்த்தி
  68. சந்தோஷ் கொளஞ்சி
  69. சப்னாஸ் ஹாசிம்
  70. சரவணன் சந்திரன்
  71. சர்வோத்தமன் சடகோபன்
  72. சாந்தன்
  73. சாம்ராஜ்
  74. சி.எம்.முத்து
  75. சி.சரவணகார்த்திகேயன்
  76. சித்தாந்தன்
  77. சித்துராஜ் பொன்ராஜ்
  78. சித்ரன்
  79. சியாம்
  80. சிவசங்கர் எஸ்.ஜே
  81. சிவநேசன் ந.
  82. சிவபிரசாத்
  83. சிவா கிருஷ்ணமூர்த்தி
  84. சிவானந்தம் நீலகண்டன்
  85. சிவேந்திரன்
  86. சிறில் அலெக்ஸ்
  87. சுகா
  88. சுசித்ரா
  89. சுரேந்திரகுமார்
  90. சுரேஷ் பிரதீப்
  91. சுனீல் கிருஷ்ணன்
  92. சுஷீல்குமார்
  93. செந்தில் ராம்
  94. செந்தில் ஜெகன்நாதன்
  95. செந்தில்குமார். எஸ்.
  96. செந்தில்குமார். ரா.
  97. செந்தூரன் ஈஸ்வரநாதன்
  98. செல்வேந்திரன்
  99. சேனன்
  100. டி.அருள் எழிலன்
  101. தமயந்தி
  102. தருணாதித்தன்
  103. தனா
  104. தாமிரா
  105. தீபு ஹரி
  106. தெய்வீகன் ப.
  107. தேஜூசிவன்
  108. நஞ்சுண்டன்
  109. நட்சத்திரன் செவ்விந்தியன்
  110. நம்பி கிருஷ்ணன் (நகுல்வசன்)
  111. நவீன் ம.
  112. நாகரத்தினம் கிருஷ்ணா
  113. நாச்சியாள் சுகந்தி
  114. நாராயணி கண்ணகி
  115. நிரூபா
  116. நீலாவணை இந்திரா
  117. நெற்கொழுதாசன்
  118. நொயல் நடேசன்
  119. பத்மகுமாரி
  120. பா. அ. ஜயகரன்
  121. பா.திருச்செந்தாழை
  122. பாலகுமார் விஜயராமன்
  123. பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
  124. பாலா கருப்பசாமி
  125. பாலாஜி பிருத்விராஜ்
  126. பாஸ்கர் ஆறுமுகம்
  127. பிரகாஷ் சங்கரன்
  128. பிரவின் குமார்
  129. பெருந்தேவி
  130. பொன்முகலி
  131. பொன் விமலா
  132. போகன் சங்கர்
  133. ம. காமுத்துரை
  134. மயிலன் சின்னப்பன்
  135. மலர்மன்னன் அன்பழகன்
  136. மலர்வதி
  137. மலேசியா ஸ்ரீகாந்தன்
  138. மானசீகன்
  139. மித்ரா அழகுவேல்
  140. மு. குலசேகரன்
  141. மு.ஆனந்தன்
  142. ராம் தங்கம்
  143. ராம்பிரசாத்
  144. ராஜ சுந்தரராஜன்
  145. ராஜகோபாலன் ஜா.
  146. ராஜேஷ் வைரபாண்டியன்
  147. லலிதா ராம்
  148. லால்குடி என். உலகநாதன்
  149. லாவண்யா சுந்தரராஜன்
  150. லெ.ரா.வைரவன்
  151. லோகேஷ் ரகுராமன்
  152. வளன்
  153. வி. அமலா ஸ்டேன்லி
  154. வித்யா அருண்
  155. விலாசினி
  156. விஜய ராவணன்
  157. விஸ்வநாதன் மகாலிங்கம்
  158. விஷால் ராஜா
  159. வீரபாண்டியன்
  160. வெண்பா கீதாயன்
  161. வேதா
  162. றஷ்மி
  163. ஜ. காவ்யா
  164. ஜா.தீபா
  165. ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
  166. ஜீவ கரிகாலன்
  167. ஜே.பி. சாணக்யா
  168. ஜேகே
  169. ஸிந்துஜா
  170. ஸ்ரீதர் நாராயணன்
  171. ஸ்வர்ணா
  172. ஷாராஜ்
  173. ஷான் கருப்பசாமி
  174. ஹரன் பிரசன்னா

சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருதுகள்

அதே போல் கடந்த பத்தாண்டுகளில் சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களின் ஆசிரியர்கள் – மு. ராஜேந்திரன், அம்பை, இமையம், சோ. தர்மன், எஸ். ராமகிருஷ்ணன், இன்குலாப், வண்ணதாசன், ஆ. மாதவன், பூமணி, ஜோ டி குரூஸ், எல்லோருமே கிட்டத்தட்ட 2000களிலேயே கவனிக்கப் பெற்றவர்கள். எனவே, இளம் எழுத்தாளர்களில் கவிதையைத் தவிர்த்து பரிசு பெற்றவர்களின் பட்டியல்:

ஆண்டுநூலாசிரியர்நூல்நூலின் தன்மை
2011எம். தவசிசேவல்கட்டுநாவல்
2012மலர்வதிதோப்புக்காரிநாவல்
2014ஆர்.அபிலாஷ்கால்கள்நாவல்
2015வீரபாண்டியன்பருக்கைநாவல்
2016இலட்சுமி சரவணன் குமார் கானகன்நாவல்
2018சுனில் கிருஷ்ணன் அம்பு படுக்கைசிறுகதைகள்
2021கார்த்திக் பாலசுப்பிரமணியன்நட்சத்திரவாசிகள்நாவல்
2023ராம் தங்கம்திருக்கார்த்தியல்சிறுகதைகள்
சமீபத்தில் விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்:[1]

கணடா தமிழ் இலக்கியத் தோட்டம்-புனைவு விருது

அ. முத்துலிங்கம் இருப்பதாலோ… என்னவோ! கனடா இயல் விருது வழங்கும்போது அதனுடன் கொடுக்கப்படும் விருதுகள் காத்திரமாக முக்கியமானதாக இருக்கின்றன. அவ்வாறு வழங்கப்படும் புனைவிற்கான கௌரவத்தில் எவர் இடம் பெறுகிறார்கள்?

ஆண்டுவிருது பெற்றவர்நூல்
2012கண்மணி குணசேகரன்அஞ்சலை
2013கீரனூர் ஜாகீர் ராஜாஜின்னாவின் டைரி
2014தேவகாந்தன்கனவுச்சிறை
2015ஷோபாசக்திகண்டி வீரன்
2016சயந்தன்ஆதிரை
2017தமிழ்மகன்வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்
2018தீபச்செல்வன்நடுகல்
2020பா. கண்மணிஇடபம்
2021பா. அ. ஐயகரன்பா.அ. ஜயகரன் கதைகள்
2022வேல்முருகன் இளங்கோமன்னார் பொழுதுகள்
கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம்-புனைவு விருதுகள்

கதைத் தொகுப்புகள், நாவல்கள், நெடுங்கதைகள், புனைவுகள் – பட்டியல்

கடைசியாக – என்னுடைய விழைவுப் பட்டியல். எந்த நூல்களை வாங்க நினைக்கிறேன்? வாங்கி வைத்திருந்தாலும் வாசிக்க எடுக்கப் போகிறேன்?

புத்தகப் பரிந்துரைகளை இந்த முறை தர இயலவில்லை. இவ்வளவு நல்ல எழுத்துகள், சுவாரசியமான படைப்புகள், காத்திரமான ஆக்கங்கள் என்று மலைக்க வைக்குமளவு சமீபத்திய இலக்கியகர்த்தாக்கள் தீவிரமாக இயங்குகிறார்கள். அவர்களுக்குள் இந்த நூறு புத்தகங்களை வாங்கிப் படியுங்கள் என்று சொல்வதற்கு நிறைய வாசிப்பு தேவை. சரவணன் மாணிக்கவாசகம் மாதிரி பரவலாகத் தொடர்ந்து அனைத்து புனைவுகளையும் வாசிப்பவர்களின் உதவியும் தேவை. அதை இந்த ஆண்டு இறுதிக்குள்ளாவது முடிக்க வேண்டும். பார்ப்போம்.

உரிமை துறப்புகள்

  • கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள், கவனிப்பு கிடைக்கப் பெறாதவர்கள் என்று பகுத்தது என் தேர்வு. நான் அறிந்த வரையில் பரவலாக வாசகர்களைப் பெற்றவர்களை – கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பட்டியலில் போட்டு இருக்கிறேன்.
  • ஒருவரின் எழுத்துகள் இரண்டு மூன்று தளங்களிலாவது தேர்வு செய்யப்பட்டு வெளியாகி இருந்தால் அவரை கவனிப்பு கிடைக்கப் பெற்றவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டேன்.
  • இவற்றில் எந்தப் பெயர்கள் பல முறை ஒரே பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன என்பதை சுட்டவும் – திருத்திக் கொள்கிறேன்
  • எந்தப் பெயர்கள் பலமுறை ஓரிரண்டு பட்டியல்களில் இடம் பெற்றிருக்கின்றன என்பதையும் சொல்லவும்
  • எழுத்தாளர்களின் பெயர் குழப்பத்தினாலோ, முதலெழுத்தை மாற்றிப் போட்டதாலோ, புனைப்பெயரினாலோ பலமுறை திரும்பத் திரும்ப வந்தவர்களைச் சொல்லவும்
  • தவறுதலாக சிங்கள எழுத்தாளரோ, வேற்றுமொழி எழுத்தாளரோ இடம் பெற்றிருக்கலாம் – சுட்டவும். திருத்துகிறேன்
  • எழுபதுகள், எண்பதுகள், 90களிலேயே பிரகாசிக்க ஆரம்பித்துவிட்டவர்களை தவறுதலாக எங்காவது சேர்த்திருக்கலாம். சொல்லவும். பிழைகளைக் களைகிறேன்
  • முக்கியமாக எந்தப் பெயர்களைத் தவற விட்டிருக்கிறேன்? எந்த எழுத்தாளர்களை அடையாளம் காணாமல் இருக்கிறேன்? அவற்றைப் பகிரவும் – சேர்க்கிறேன்.

உசாத்துணை

  1. இலக்கியச் சிந்தனை – சிறந்த சிறுகதைகள் : மாதுமை (viruba.com)
  2. செவ்வியல் – பழம் தின்று கொட்டை போட்ட படைப்பாளிகள் யார்? – சுபமங்களா சிறுகதைகள் – Tamil Wiki
  3. Authors – Adavi Shop | Aadhi Pathippagam
  4. சிறுகதையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  5. சிறுகதை Books – Adavi Shop | Aadhi Pathippagam
  6. படைப்பாளிகள் | அரூ (aroo.space)
  7. பனுவல் – புத்தகங்கள் – சிறுகதைகள் (panuval.com)
  8. சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்களின் பட்டியல்
  9. Category:நாவலாசிரியர்கள் – Tamil Wiki
  10. Category:சிறுகதையாசிரியர்கள் – Tamil Wiki
  11. சமர்ப்பிக்கப்பட்ட சிறுகதை (padaippu.com)
  12. நாவல் போட்டிகள் – Saravanan Manickavasagam.
  13. நேர்காணல்கள் – கனலி (kanali.in)
  14. தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Tamil Short Stories | விகடன் சிறுகதைகள் (vikatan.com)
  15. படி | Snap Judgment (snapjudge.blog)
  16. சிறுகதை Archives – தமிழினி (tamizhini.in)
  17. சிறுகதைகள் Archives – வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு (vasagasalai.com)
  18. சிறுகதை – சொல்வனம் | இதழ் 299 |23 ஜூலை 2023 (solvanam.com)
  19. புதிய கதைகள்- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  20. புதிய வாசல் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  21. புதியவர்களின் கதைகள் – பார்வைகளும் விமர்சனங்களும்[ பின்னூட்ட வசதியுடன்] | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
  22. சிறுகதை – சுவடு (suvadu.in)
  23. சிறுகதை – வல்லினம் (vallinam.com.my)
  24. சிறுகதைகள் – கனலி (kanali.in)
  25. சிறுகதை Archives – யாவரும்.காம் (yaavarum.com)
  26. காலச்சுவடு பதிப்பகம் | Kalachuvadu Publications
  27. சிறுகதைகள் Archives – Page 32 of 39 – வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு (vasagasalai.com)

போர் தொழில் – திரைப்பட விமர்சனம்

அது ஒரு கிராமம். என் அம்மா அந்த வீட்டின் சாவியை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் யூடியுப் கிடையாது. கிடைத்த புத்தகத்தை எல்லாம் வாசித்து முடித்த பின், சுவாரசியமாக தன் பொழுதைப் போக்க சாவிக்கொத்து அகப்பட்டது.

சட்டென்று திரும்பிப் பார்த்தால், சுற்றிலும் குரங்குக் கூட்டம். அவளின் கையில் இருந்த மினுமினுப்பான தகதகப்பைப் பார்த்து இளித்துக் கொண்டிருந்த கூட்டம். அவருக்கு பயமாகி விட்டது. இவ்வளவு பேர் சுற்றி, புடைசூழ ரசிக்கிறார்களே!? இன்னும் விளையாட வேண்டுமா? இதைக் கொடுத்துவிட்டால் பூட்டை எப்படி திறப்போம்… வீட்டிற்குள் எவ்வாறு நுழைவது? இப்படி அகப்பட்டுக் கொண்டோமே… என்று பக்பக்.

இந்தக் கதையை என்னிடம் சொன்னவுடன் ‘போர்த் தொழில்’ படம் நினைவிற்கு வந்தது. குரங்குக் கூட்டம் போல் அந்தப் படத்தைக் கொண்டாடுகிறார்கள். அது தங்கம் அல்ல. ஏதோ, ஒரு சாவி வளையம். இந்தக் குரங்குகளுக்கு நடுவில், “இந்தப் படம் வெறும் இரும்பு.” என்று விளக்கினால் மேலே விழுந்து பிறாண்டி விடுமோ என்னும் படபடப்பு.

எனவே…

‘போர் தொழில்’ அருமையான காலகட்டத்தை இந்தக் கால தலைமுறைக்குச் சொல்லும் படம். ஆங்கிலத்தில், ‘ட்ரூ டிடெக்டிவ்’ (அசல் துப்பறிவாளர் – True Detective) மாதிரி லட்சக்கணக்கில் நல்ல தொடர்களும் படங்களும் இருக்கும்போது, அதை அபாரமான பலகுரல் கலைஞர்களின் தமிழாக்கத்தில் கேட்பதற்கு இது ஒரு மாற்று.

நாலே நாலு பேர் வைத்துக் கொண்டு சிக்கனமான படப்பிடிப்பை எவ்வாறு நடத்துவது? திரைக்கதை ஓட்டைகளை காலகட்டத்தை வைத்து ஒப்பேற்றுவது எப்படி? – சிறப்பாக சொன்னதற்கு வாழ்த்துகள்

குருதிப்புனல் படத்திற்கு பிறகு, ‘பயம்னா என்னன்னு தெரியுமா?’ வசனத்திற்கு அடுத்த பதிப்பு கொடுப்பது:
’பயந்தவன் எல்லாம் கோழை கிடையாது; பயந்து ஓடுறவன் தான் கோழை!’

குணா படத்தில், ’ரோஸி நல்லவதான்… ஆனா தப்பு; அம்மா தப்பு!’, வசனத்தை ஒத்த
‘உங்க வேலைய நீங்க சரியா பார்த்தீங்கன்னா; எங்க வேல கம்மியாகும்.’
அல்லது
‘நம்ம பண்ற வேலை நமக்கு மரியாதைய தேடித்தரும்!’

இதே போல், எல்லா வேலையுமே சிரத்தையாகவும் சிறப்பாகவும் முழுமையான ஈடுபாட்டுடனும் செய்வது சாலச் சிறந்தது. வள்ளுவர் பாதையில்:
‘கொலைகரானுக்கு கொலை ஒரு அடிக்‌ஷன்’

அப்படியானால் – போர்த்தொழில் ஒரு மைல்கல் அல்லவா!?!

நிறைய ஃபேஸ்புக் நண்பர்கள். சமூக ஊடக செல்வாக்காளர் வழி சந்தைப்படுத்தம்; ‘ஜெயிலர்’ போல் அரைத்த மாவை புளிக்காத மாவாகச் சொல்லும் திரள்கூட்டம். வெறும் சாவியை வைடூரியமாக்கும் குரங்குக் கூட்டம்.

சின்ன கல்லு!
பெத்த லாபம்!!

Classical Carnatic Ragas in Tamil Film Music

யூ டியுப் தளத்தின் சிறப்பம்சமே, “உனக்கு இது பிடிக்கலாம்!” என்று தெரியாத எவரோ ஒருவர் – எனக்குத் தெரிந்த தலைப்பில் உரையாடுவதை –> உங்களின் ஓடையில் காண்பிப்பது.

அப்படி தென்பட்டவர் தமிழ்ச்செல்வன் பாரதி.

குரங்கிற்கு எப்படி வாழைப்பழம் விருப்பமோ இளையராஜாவின் பாடல்கள் அப்படி எனக்குப் பிடிக்கும். தமிழ்செல்வன் பாரதி.மாதிரி கர்னாடக சங்கீதம் அறிந்தவர்கள் அதை வேறொரு விதத்தில் ரசிக்கக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

அதாவது ஓவியங்களை எண்ணெய் ஓவியம், வண்ணக்கோல், செயற்கை வண்ணக் கூழ்மங்கள், நீர்வர்ணம், மை ஓவியம், பூச்சு ஓவியம் என்றெல்லாம் வகைப்படுத்துவது போல், இசையையும் ஒழுங்காகக் கற்றுக் கொண்டிருந்தால் இதை இந்த முறையில் தொகுத்திருக்கிறார்கள் என்று அறியலாம். ஏன் அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? எப்படி அந்தப் பூச்சு இந்தத் தருணத்திற்கு பொருந்துகிறது? இதுவரை எவரும் செய்யாத புதுமையை எவ்வாறு புகுத்தியிருக்கிறார்? ஏன் வெறுமனே சாஸ்திரீய முறைப்படி பாடுவது அலுப்பையும் ; அதையே ராஜாவின் எண்ணத்தில் உருவாகும் பாடல் — பிரவாகத்தையும் கொடுக்கிறது?

ஃபாரம் ஹப் (The Forum Hub) என்னும் தளத்தில் பேசியது… தமிழ் ஃபிலிம் மியூசிக், டி.எஃப்.எம் பேஜ் (இப்பொழுது newtfmpage) என்றெல்லாம் கதைத்தது… அங்கே நாற்பது பக்கங்கள் இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் நூறு பதில்களும், பதிவுகளும் இருக்கும். இடையிடையே சில வைரங்கள் ஜ்வலிக்கும். தேடுவது கடினம். சட்டென்று புரியாத சதுஸ்ருதி தைவதம், அந்தர காந்தாரம், பிரமாண ஏகஸ்ருதி என்றெல்லாம் மிரட்டும். சல்லடை போட்டு சலித்து, அந்தப் பகிர்வுகளைக் கோர்வையாகத் தொகுத்து, ஒரேயொரு சினிமாப் பாடலையோ, ஒரு ராகத்தையோ, ஒரு விஷயத்தையோ பற்றி முழுமையாகக் கதை போல் சொல்ல எவராவது கிடைப்பாரா என்று ஏங்க வைத்தாலும் சோளப்பொரி கிடைத்தது.

திரள் சந்தைக்கான புகழ் பெற்ற முயற்சியாக சிக்கில் குருச்சரண் அதை பரவலாகப் பதிவாக்கி எல்லோருக்கும் கொண்டு சென்றார். அவரைப் போல் பலரும் ஏற்கனவே இது மாதிரி நிறைய முயற்சிகளும் எழுத்துகளும் பகிர்வுகளும் தந்திருந்தாலும், எல்லோரும் அறிந்த நபர் – எல்லோருக்குமான பதிவாக ஆக்கியதில் சிக்கில் குருச்சரணுக்கு முக்கிய இடம் உண்டு. ஜனரஞ்சகமாக இருக்கும். சுவாரசியமாக இருக்கும். நன்றாக எடிட் செய்து தொகுக்கப்பட்டிருக்கும். ரொம்ப தொழில்நுட்ப சங்கதிகள் சொல்லி அலுப்பு தட்டாமல், அதே சமயம் டெக்னிகலாக வேண்டும் என்பவர்களுக்கு நிறைய இடம் இருக்கும்.

அவர் வழியில் தமிழ்ச்செல்வன் பாரதி முக்கியமானவர். சிக்கிலார் போல் மேளகர்த்தா ராகம் என்று வகைப்பாடுகளைச் சொன்னாலும், மெட்டுக்கு ஏற்ற வார்த்தைகள், அந்தப் பாடலின் கூட்டிசையில் வீணையும் வயலினும் எவ்வாறு முக்கியமாகிறது என்பதில் மேற்கத்திய சங்கீத நுட்பங்கள், என்று உணர்த்துகிறார். நிரோஷா தாங்க எனக்குத் தெரியும் என்பவருக்கு சரிகமபதநி என்பதில் கடைசியில் வரும் நி என்னும் நிஷாதம் எவ்வாறு இசைஞானியின் பாடல்களில் கையாளப்பட்டிருக்கிறது என்கிறார். எல்லாவற்றையும் காலை நடை, பக்கத்தில் உறங்கும் செல்லப்பிராணிகள் என வித்தியாசமான, நேரடியான, பாசங்கற்ற விதத்தில் தயார் செய்து பரிமாறுகிறார்.

இந்த மாதிரி விஷயமெல்லாம் கேட்க குருகுலத்தில் காலந்தோறும் பணிவிடை செய்யவேண்டும். குருவிற்கு எப்போது உத்வேகம் வருகிறது என்று காத்திருக்க வேண்டும். ஒட்டுக் கேட்க வேண்டும். கேட்டதை இன்னொருவரிடம் சொன்னால், அந்த சீடன் நம்மை விட பிராபல்யம் ஆகி விடுவான் என்று விரித்துரைத்து, சந்தேக நிவர்த்தி செய்து, தெளிவாக்கிக் கொள்ளக் கூட முடியாத சூழலில் இருந்து சுதந்திரமாக எல்லோருக்கும் எல்லாவற்றையும் அள்ளித் தரும் அளவில்லா தகவல் கிடைக்கும் காலத்தில் வாழும் நாம் – கொடுத்து வைத்தவர்கள்.

அதற்கு முன்பே இவற்றையெல்லாம் தமிழிசையில் பாமரனுக்கும் கொண்டு சென்ற பாவலர் ராஜா ஆளுமையைப் புரிந்தவர்கள் பாக்கியசாலிகள்.

IPL, LPL, LTTE, IPKF – T20 and Team Names

பத்து வயதிருக்கும். வீட்டில் எதையும் படிக்கும் சுதந்திரம். அந்த அட்டை கிழிக்கப்பட்ட நூல் வாசிக்கக் கிடைத்தது. ரஜினியின் படமான ‘தர்ம் யுத்தம்’ போல் அந்த 1983 கொலைகாரர்கள், கறுப்பு ஜூலை அராஜகவாதிகள் எல்லோரையும் தீர்த்துக் கட்ட எவராவது பிறக்க மாட்டார்களாக என மனம் துடிதுடிக்க வைத்த புத்தகம். கற்பனையில் பல்வேறு சண்டைகளை எண்ணிப் பார்த்து சமாதானம் அடைவேன்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் நடத்துகிறது. அதற்கான அணிகளின் பெயர்களில் இயக்கங்களின் பெயரைப் போட்டால் எப்படி இருக்கும்!?

இலங்கையில் இருக்கும் தமிழருக்கான சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயக்கங்கள் செயல்பட்டன. ஈழ இயக்கங்களில் புகழ்பெற்றவற்றின் பெயர்கள் (அகரவரிசைப்படி):

1. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எஃப். – Eelam National Democratic Liberation Front (ENDLF))
2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))
3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பிஆர்.எல்.எஃப். – Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))
4. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ் – Eelam Revolutionary Organization of Students (EROS) – ஈ.ஆர்.ஓ.எஸ்.)
5. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ – Liberation Tigers of Tamil Eelam (LTTE) – எல்.ரி.ரி.ஈ.)
6. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (ப்ளாட் (அ) புளொட் – People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) – பி.எல்.ஒ.டி.ஈ.)
7. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலொ (அ) ரெலா – Tamil Eelam Liberation Organization (TELO) – டெலோ)
8. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி. – Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))
9. தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (டுல்ஃப் (அ) ரி.யு.எல்.எப் – Tamil United Liberation Front (TULF) – டி.யு. எல்.எஃப்)

இலங்கை ப்ரீமியர் லீக் எல்.பி.எல் டி20 அணிகளின் பெயர்கள்:

1. Colombo Strikers – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் என்பதற்கு பதில்: கொழும்பு கொமாண்டோக்க‌ள்
2. Dambulla Aura – டம்புல்லா ஆரா என்பதற்கு பதில்: தம்புள்ளை துள்ளர்கள்
3. Galle Titans – கேலே டைட்டன்ஸ் என்பதற்கு பதில்: கல்லே கெரில்லாக்கள்
4. Jaffna Kings – ஜாஃப்னா கிங்ஸ் என்பதற்கு பதில்: யாழ்ப்பாண புலிகள்
5. B-Love Kandy – கண்டி பி-லவ் என்பதற்கு பதில்: கண்டி கழுகுகள்

இன்னும் ஆர்வமாக இலங்கை டிவெண்டி 20 பார்ப்போமோ?

இடஞ்செல்லுகையும் வலம்படுதலும்

நம்ம சாமிகளில் எவரெவர் எந்தக் கையை பெரிதும் பயன்படுத்துகிறார்?

ராஜா ரவி வர்மா போன்ற பெரும்பாலான ஓவியர்கள் வலக்கை பழக்கம் கொண்டவர்களாக இருக்கலாம். ஹிந்து மதத்திலும் சோற்றாங்கை, பீச்சாங்கை என்று வகைப்படுத்தியதால் அனைத்து தெய்வங்களின் ஆயுதங்களும் கருவிகளும் வலப்பக்கத்துக் கைக்கே தரப்படுகிறது. ஒரட்டாங்கையில் கபாலமும் கமண்டலமும் கிடைக்கிறது.

முதலில் எளிதாகக் கண்டுபிடிக்கக் கூடிய இராமர். வலக்கையை ஆதிக்கமாக கொண்டவர். அதனால்தான் இடது தோளின் மேல் அம்பை வைத்திருக்கிறார். அம்பறாத்துணியை வலது தோளின் மீது வலது கைக்கு வாகாக வைத்திருக்கிறார்.

அவரின் எல்லாமுமான அனுமார் – வலதுகையில் கதை. இடது கையில் சஞ்சீவி மலையைத் தூக்கி இருக்கிறார். குரங்கிற்கு இடது, வலது என்றெல்லாம் பாகுபாடு உண்டா! இரண்டும் சரிசமமாக பலம் வாய்ந்தவை. எது இவருடைய ஆதிக்க கையாக இருக்கும்?

ராமரைப் போலவே அய்யப்பன். அதே போல் வில்லையும் அமபுகளையும் வைத்திருக்கிறார்.

ராமர் என்றால் கிருஷ்ணரைச் சொல்ல வேண்டும். சக்கரம் இவரையும் வலதுகையர் ஆக்குகிறது. புல்லாங்குழலை அடுப்பூத மட்டுமே நேரடியாக ஃபிடில் போல் ஊதியதால், வேணுநாதனின் பிடி பிடிபடவில்லை.

அடுத்ததாக சரஸ்வதி. கையில் இருக்கும் வீணையோ, கிடாரோ, தம்பூராவோ – வலதுகைக்காரி ஆக்குகிறது.

முருகரும் கோவணாண்டியாக இருந்தாலும் வலது கையிலேயே வேலைத் தாங்கி இருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் துவக்கத்தில் இவரைச் சொல்லி இருக்க வேண்டும். ஏழாவதாக விநாயகர். வியாசர் சொல்லச் சொல்ல வலது கையால் பாரதத்தை தந்தத்தை உடைத்து எழுதியவர். மோதகம் சாப்பிடுவதற்கு தனியாகத் தும்பிக்கையை கொண்டவர்.

இரண்டு கையும் உபயோகிப்பவர் என்றால் லஷ்மியைச் சொல்லலாம். இரு கையிலும் தாமரை வைத்திருக்கிறார். தங்கப் பொக்கிஷ குடத்தை இடது கையில் வைத்திருக்கிறார். வலக்கை பழக்கம் உள்ளவர்கள் இடக்கையிலேயே பளுவைத் தூக்குவார்கள் என்பதால் இவ்வாறு இருக்கும்.

இவர்களைப் போலவே சிவனும் திரிசூலத்தை வலது கையிலும் தாங்குகிறார். இடக்கையிலும் சில சமயம் கொண்டிருக்கிறார். கால் மாறி ஆடியவர் ஆயிற்றே!

பத்தாவதாக பத்ரகாளி, துர்காதேவி – இவரும் ambidextrous.

எந்தக் கையாக இருந்தால் கை இருந்தால் சரி என்றால் சைவம் எனலாம்.
வலது கை யே சிறந்தது என்றால் அனேகமாக வைணவம் எனலாமா?

இராசாளி – ஜெயிலர்

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு. அந்தக் கழுகைப் போலவே நாலைந்து போலிப் பறவைகள் உண்டு,

கழுகைப் போலவே உலா வரும். Prairie Falcon (Falco mexicanus), Red-Tailed Hawk (Buteo jamaicensis), Turkey Vultures (Cathartes aura), Black Kite (Milvus migrans) என நால்வரை உடனடியாக நினைவு கூறலாம். பருந்து, ராசாளி, கூளி, சுவணம் எனத் தமிழில் சொல்கிறார்கள்.

தூரத்தில் இருந்து பார்த்தால் எல்லாம் பெரிதாக இருக்கிறது. இறக்கையைப் பெரிதாக விரித்து பிரும்மாண்டமாகப் பறக்கிறது. கூகை குழறும் என்பார்கள்; கழுகு வீருடுகிறது என்பார்கள்; இரண்டும் முன்னே பின்னே கேட்காதவருக்கு அனைத்தும் கத்தல் சப்தம்.

உயரப் பறக்கும் கழுகிற்கும் இராஜாளிக்கும் என்ன வித்தியாசம் என்று இப்பொழுது ஏன் ஆராய வேண்டும்?

ஏன் என்றால், தலைவர் ஏதோ கழுகு, காகம் உவமேயம் சொல்லியிருக்கிறார் அல்லவா!?

கங்க பத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்;
கங்க பத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்;
திங்களின் பாதி கோடி, இலக்குவன் தெரிந்து விட்டான்
திங்களின் பாதி கோடி தொடுத்து, அவை அரக்கன் தீர்த்தான்.
6.18.109 (௧௦௯)

–கம்பராமாயணம், நாகபாசப் படலம்–இந்திரஜித், இலக்குவன் போர்.

பொருள்:– இநத்திரஜித், கழுகின்‌ சிறகுகளையுடைய அம்புகள்‌ ஒரு கோடியைக்‌ கைகளால்‌ தொடுத்து விரைந்து எய்தான்‌ ; இளவலாகிய இலக்ஷ்மணனும்‌ கழுகின்‌ சிறகுகளையுடைய ஒரு கோடி அம்புகளைத்‌ தொடுத்து அவ்வம்புகளைத்‌ தடுத்தான்‌ ; அரைச்சந்திரன்‌ போன்ற முகப்பினையுடைய கோடி அம்புகளை இலக்குவன்‌ ஆராய்ந்து இந்திரசித்தின்மேல்‌ விட்டான்‌ ; இந்திரசித்தும்‌ அரைச்சந்திர அம்புகளை கோடி தொடுத்து அவ்வம்புகளை அறுத்தான்‌.

குறிப்பு: – கங்கம்‌ – கழுகு. பத்திரம்‌ – சிறகு. கழுகின்‌ சிறகுகள்‌ பொருந்திய அம்புகள்‌ கங்கபத்திரம்‌ எனப்பட்டன. பாதிமதி போன்‌.ற முகப்பினை உடைய அம்புகள்‌ என்பார்‌, ’திங்களில்‌ பாதி’ என்றார்‌. இதுகாறும்‌ இந்திரசித்து விடுத்த அம்புகளை மட்டுமே அறுத்துக்‌ கொண்டிருந்த இலக்குவன்‌ இப்போது திங்களிற்‌ பாதியை ஒத்த அம்புகளை இந்திரசித்தின்மேல்‌ விடுத்தான்‌ என்றவாறு. தீர்த்தல்‌ – அழித்தல்‌.

விக்ரம் படத்தில் கமல் விதவிதமானத் துப்பாக்கிகளை வைத்து சுட்டுத் தள்ளுவார். அவருக்கு சளைக்காமல் ஜெயிலரில் ரஜினியும் ‘மனிதன்’ போல் ரகரகமாக குண்டு போடுகிறார்.

நடுவில் எதற்கு கம்பராமாயணம் என்று கேட்கிறீர்களா?

1993ல் ’கலைஞன்’ படத்தில் இந்திரஜித் என்னும் கதாபாத்திரத்தில் கலைஞானி நடிக்கிறார். அந்தக் கலைஞன் விக்ரமில் விட்ட அம்புகளை சமாளிக்க இளவல் ஜெயிலரில் எய்கிறார். இதைத்தான் அன்றே கம்பர் பாடியிருக்கிறார். அந்த கங்கபத்ரம் = பின் நுனியில் கழுகின் சிறகுகள் பொருத்தப்பட்ட அம்புகளை (பத்ரம் என்றால் சிறகு) இசை வெளியீட்டு விழாவில் குறிப்பால் உணர்த்துகிறார் இரஜினி.

அதெல்லாம் இருக்கட்டும்? படத்தை ரசித்தேனா? மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறதா? தமிழ் சினிமாவின் மைல் கல்லா? ரஜினியின் நடிப்பிற்கு சிகரமா? அடுத்த ஆர்.ஆர்.ஆர். மாதிரி ஆஸ்காருக்கு அனுப்பலாமா?

அகாடெமி விருதுகளில் புதியத் தலைப்பாக ‘செயற்கையாக தானியங்கியாக உருவாக்கிய உயிர் போன்ற இயக்கம் காட்டும் படங்களுக்கான விருது’ ஒன்றை வழங்கினால், அது நிச்சயம் ஜெயிலருக்குக் கிடைக்கும்!

ஆயக்கல் – Solvanam #300 Issue

சியாமந்தக மணியை உங்களுக்குத் தெரிந்திருக்கும், ஜய்ரொலைட் (Gyrolite, NaCa16(Si23Al)O60(OH)8·14H2O) தெரியுமா?

அருங்காட்சியகத்தில் பார்த்தேன். மஹாராஷ்டிராவின் தானே பகுதியில் பாறைகளுக்குள் தங்கமாக, மலையினுள் மறைந்து சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது.

இது போல் எத்தனை எத்தனை ஆளுமைகள்? இசை ஞானிகள்? எழுத்தாளர்கள்? பேராசிரியர்கள்? பேச்சாளர்கள்?

இவர்களின் சங்கீதத்திலும் புனைவிலும் படைப்பிலும் ஆய்விலும் சிந்தனையிலும் உரையாடலிலும் – அவற்றை மகோன்னதமான செயல்பாட்டில் செழுமையாக்கிய வித்தையையும் அறிந்து தெளிந்து கொள்ள அம்பையின் “துவாரம் மங்கத்தாயாரு” போன்ற சொல்வனம் கட்டுரை உதவுகிறது.

சொல்வனத்தின் இந்த முன்னூறாவது இதழிலும் நிறைய பேர் இவ்வாறான தெரிந்த, தெரியாத பெயர்களையும் சிறுகதையாசிரியர்களையும் நெடுங்கதைகளையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

கமலராகம், பதுமராகம் போன்ற அருங்கல்லான ஜய்ரொலைட் கல்லின் பெயர் – ‘குரொஸ்’ என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘குரொஸ்’ என்றால் முழுமை; வட்டத்தின் பரப்பு – பலம்.

சொல்வனத்தின் பலமே இந்த மாதிரி இரத்தினங்களை அறிமுகம் செய்து, அவர்களின் வாழ்க்கைப் பாதையை உணர்த்தி, ஊன்றுகோல் வழிகாட்டிகளை பரிச்சயப்படுத்தி, தேர்ந்தெடுத்த துறையில் சாதனையை விவரித்து – அவர்களைப் போல் அரிய காரியங்களுக்கு உங்களையும் கிரியா ஊக்கியாக இலட்சியங்களை அடையாளங்காட்டுவது

நான் இப்போதுதான் மே மாதம் வெளியான கட்டுரையே வாசிக்கிறேன். நீங்களாவது 300வது இதழின் ஆக்கங்களை உடனடியாக வாசித்து விடுங்கள்.

இதழ்-300 – சொல்வனம் | இதழ் 300|13 ஆகஸ்ட் 2023 (solvanam.com)

புதிய இதழில் கவனப்படுத்திய எந்தப் படைப்பாளியை நீங்கள் வாசித்திருக்கிறீர்கள்?
எவர்களைத் தவறவிட்டுவிட்டார்கள்?
எந்த கட்டுரைகள் விமர்சனங்களாக இல்லாமல் வெறும் அறிமுகமாக நின்று விட்டது?
அருமைகளையும் பாஷாணங்களையும் சொல்லவும்